Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhaiyodu Uravadi
Mazhaiyodu Uravadi
Mazhaiyodu Uravadi
Ebook150 pages1 hour

Mazhaiyodu Uravadi

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

ஒரு மழை நாளில் அன்னை இல்லாக் குழந்தைகளுக்கு அன்னையாய் வந்து சேருகிறாள் நாயகி. நண்பனின் குடும்பத்தை தன் குடும்பமென வாழும் நாயகன் அவளை சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறான். இவர்களுக்குள் உள்ள குடும்பப் பிரச்சனைகளையும் தொடர்பையும் இறுதியில் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை... மழையும் இதில் முக்கிய கதாபாத்திரம் வகிக்கிறது.

Languageதமிழ்
Release dateJul 15, 2020
ISBN6580134405624
Mazhaiyodu Uravadi

Read more from Latha Baiju

Related to Mazhaiyodu Uravadi

Related ebooks

Reviews for Mazhaiyodu Uravadi

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhaiyodu Uravadi - Latha Baiju

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    மழையோடு உறவாடி

    Mazhaiyodu Uravadi

    Author :

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    வானம் பார்த்துக் கண்கள்

    பூத்தபோது பெய்யாமல் மௌனித்து

    வேண்டாத நேரத்தில் சலசலத்து

    சலிப்படையச் செய்கிறாய்…

    மழைநீரில் குளித்து பளபளத்த கறுப்பு நிறத் தார்சாலையில் வெண்ணையாய் வழுக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த சுமோ. காரின் முகப்புக் கண்ணாடியில் விழுந்து சாலையை மறைத்த மழைத்துளிகளை வைபர்பிளேடு இருபுறமும் அழுத்தித் துடைத்து வெளியே தள்ள மங்கலாவதும் தெளிவாவதுமாய் இருந்த சாலையின் வளைவுகளில் கவனமாய் வண்டியைத் திருப்பிக் கொண்டிருந்தான் யதுநந்தன்.

    வெளியே பெய்து கொண்டிருந்த மழையோ காருக்குள் போட்டிருந்த ஏசியோ அவனைக் குளிர்விக்கவில்லை. கடுகடுவென்ற முகம் சிரிப்பைத் தொலைத்திருந்தது.

    உங்களுக்கு எத்தனை சொன்னாலும் கேக்கவே மாட்டிங்கம்மா… அப்படி என்ன பிடிவாதம்… இந்த கொட்டற மழைல போயி உங்க பேரப்பிள்ளைகளுக்கு டிரஸ் வாங்கணும்னு… வயசானா அதுக்குத் தகுந்தபோல நடந்துக்க வேண்டாமா… சிடுசிடுத்தவனை சோர்வுடன் நோக்கி சிரித்தார் அன்னபூரணி.

    இப்ப எதுக்குடா நந்து இப்படிக் குதிக்கறே… அதான் நீயே சொல்லிட்டியே… எனக்கு வயசாயிடுச்சுன்னு… அப்புறம் என்ன… வயசானவங்களுக்கு இதெல்லாம் தானே சந்தோசம்… என் பேரப்பிள்ளைங்க ஆசையா கேட்டு அதைப் பிறந்தநாளுக்குக்கூட வாங்கிக் கொடுக்க முடியலைனா ஒரு எஸ்டேட்டுக்கு எஜமானின்னு சொல்லிக்கறதுல என்ன பெருமை இருக்கு… என்ன… இந்தக் குளிருக்கு என் ஆஸ்துமா பிரச்சனை கொஞ்சம் அதிகமாகும்… அவ்ளோதானே… இதை எல்லாம் பசங்க கைல கொடுத்ததும் அவங்க முகத்துல வர்ற புன்னகைல எனக்கு வர்ற பிரச்னையும் ஓடிப் போயிடாதா… சொல்லும்போதே மூச்சு வாங்கிய அன்னபூரணி நடிகை காஞ்சனாவின் ஜாடையில் கம்பீரமாய் இருந்தார்.

    பார்த்திங்களா… மூச்சுவிட எவ்ளோ சிரமப்படறீங்க… இதெல்லாம் தேவையா உங்களுக்கு… அதுவும் உங்களுக்கு காய்ச்சல் வந்து இப்பதான் சரியாச்சு… இந்த குளிர் சமயத்துல வீட்டுல ஓய்வெடுக்குறதை விட்டுட்டு என்னையும் சேர்த்து அலைய வைக்குறீங்க… உங்களை எல்லாம் திருத்தவே முடியாது… சாலையில் பார்வையைப் பதித்துக்கொண்டே தாயைக் கடிந்துகொண்ட யதுநந்தன் அசப்பில் நடிகர் சூர்யாவைக் கொண்டிருந்தான்… உயரம் மட்டும் சற்று அதிகம்.

    ஹூக்கும்… என்னைத் திருத்துறதுக்கு நான் என்ன எக்ஸாம் பேப்பரா… வழியப் பார்த்து வண்டி ஓட்டுடா பையா… சொன்னவரை முறைத்தவன், இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை… என்னமோ பண்ணிட்டுப் போங்க… முகத்தைத் திருப்பிக் கொண்டான் அவன். சிரித்துக்கொண்டே சாலையில் பார்வையைப் பதித்தவருக்கு கவலையாய் இருந்தது.

    ‘என்ன இது… இந்த மழை… மதிய நேரத்திலும் இப்படி அசுரத்தனமாய் பெய்து கொண்டிருக்கிறது… பருவத்தில் பெய்யாமல் பருவம் தவறிப் பெய்யும் மழை எல்லாருக்கும் பாதிப்பைத்தானே தரும்… இப்போதே இரவு தொடங்கியதுபோல் இருட்டிக்கொண்டு நிக்கிறதே…’ யோசித்தவருக்கு பேரக்குழந்தைகளின் நினைவு வரவும், டேய் நந்தா… குழந்தைங்க என்ன பண்ணுறாங்களோ… செவ்வந்தியை ஒரு வழி பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கறேன்… அவர்களின் குறும்புத்தனம் நினைவு வரவும் மெல்ல சிரித்துக் கொண்டவர் கேட்க, அவனோ அமைதியாய் இருந்தான்.

    என்னடா… வாயில கொழுக்கட்டை ஏதானும் அடைச்சு வச்சிருக்கியா என்ன… பதிலைக் காணோம்… கேட்டவரை முறைத்தவன், ஹூக்கும்… வயசான குழந்தையே சொன்ன பேச்சைக் கேக்கமாட்டேங்குது… இதுல சின்னப் பசங்களை சொல்லி என்னாகப் போகுது… இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தான் அவன்.

    ஏண்டா… எப்பப் பார்த்தாலும் இப்படி கஜினி சூர்யா மாதிரி உர்ருன்னே முகத்தை வச்சுட்டு இருக்கே… நீ சிரிச்சேன்னா ஆதவன் சூர்யாபோல அழகாருப்பே தெரியுமா… மனக்கண்ணில் பழைய ஜாலியான யதுநந்தன் மின்னலடிக்க பெருமூச்சுவிட்டார். அவருக்கு பதில் சொல்லாமல் பாதையில் கவனமாய் இருந்தவன் மழையில் வேகமாய் வண்டியை செலுத்த முடியாமல் மெதுவாய் சென்று கொண்டிருந்தான். அன்னபூரணியும் அமைதியாய் பழைய நினைவுகளுடன் மழையை வெறிக்க ஆரம்பித்தார்.

    அவருக்கு இப்போதெல்லாம் ஆஸ்துமா தொந்தரவு சற்று அதிகமாய் இருப்பதால் முன்போல எல்லா இடத்துக்கும் நேரம் காலம் பார்க்காமல் செல்ல முடிவதில்லை. காய்ச்சலில் படுத்து எழுந்தவர் அடுத்தநாள் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாளைக் கொண்டாட, வேண்டிய பொருட்களை வாங்க சென்றே ஆகவேண்டுமென்று பிடிவாதம் பிடித்து காலையில் குளித்து கிளம்ப அன்று டிரைவர் ராசு விடுமுறையில் சென்றிருந்ததால் நந்தனே வழியில்லாமல் அவருடன் கிளம்பினான். இரண்டு மணிநேரப் பயணத்தில் டவுனுக்கு சென்று வேண்டிய பொருட்களை வாங்கிவிட்டு திரும்பும்போது அவருக்கு மூச்சுத்திணறல் வரவும், கடுப்பானவன் புலம்பிக்கொண்டே வந்தான்.

    மழை நிற்காமல் பெய்து கொண்டிருந்ததால் மதிய நேரத்திலும் சாலை வெறிச்சென்று கிடந்தது. வண்டி சீராய் சென்று கொண்டிருக்க சாலையில் கண்ணைப் பதித்திருந்தவன் கண்ணில் ஒரு பெண் கையை ஆட்டிக்கொண்டே ஓடிவருவது விழுந்தது. மழையில் நனைந்து தொப்பலாகி உடலோடு ஒட்டியிருந்த சேலை அவளது அபாய வளைவுகளை அப்பட்டமாய் எதிரொலிக்க மழையைப் பொருட்படுத்தாது யாருக்கோ பயந்து திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடி வந்தவளைக் கண்டு அதிர்ந்துபோன அன்னபூரணி, டேய் நந்தா அங்க பாரு… என்றார் பதட்டத்துடன்.

    அவன் அப்படி ஒரு காட்சியே கண்ணில் படாததுபோல இறுகிய முகத்துடன் அதே வேகத்தில் வண்டியைவிட, டேய்… வண்டிய நிறுத்துடா… அந்தப் பொண்ணுக்கு ஏதோ பிரச்சனை போலருக்கு… என்று அவன் தோளில் கோபத்துடன் தட்டினார். அதற்குள் அவளைத் துரத்திக்கொண்டே இரண்டு ஆண்கள் ஓடிவருவது தெரிந்ததும் அவள் இன்னும் வேகமாய் காரை நோக்கி ஓடிவந்தாள்.

    இரண்டு கைகளையும் உதவி கேட்டு ஆட்டிக்கொண்டே ஹெல்ப்… என்று கத்துவது காருக்குள் இருந்தே அறிய முடிந்தது. அவளை அந்த ஆண்கள் துரத்துவதை உணர்ந்துகொண்ட அன்னபூரணி, நந்தா… வண்டியை நிறுத்து… என்று கத்தவும், அம்மா… இந்த மாதிரி ஆளுங்களை நம்ப முடியாது… ரோட்டுல ஒரு வண்டி இல்லை… இவங்க நம்மை ஏமாத்திப் பணம் பறிக்கப் போடுற நாடகமாக்கூட இருக்கலாம்… யாரையும் நம்ப முடியாது… சமய சந்தர்ப்பம் புரியாமல் நாட்டு நடப்பைப் பேசியவன் மீது எரிச்சலானவர், நீ இரக்கமே இல்லாம இப்படியே இரு… முதல்ல வண்டியை நிறுத்து… நான் அந்தப் பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு பார்த்துக்கறேன்… கோபத்தோடு கத்தியவர் கார் கதவைத் திறக்கப் போக ஆட்டோலாக் ஓபன் ஆக மறுத்தது.

    ரௌடிகள் இவர்கள் காரைப் பார்த்ததும் மெல்ல வேகத்தைக் குறைத்து அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு அவளைப் பிடிக்க ஓடி வர, அவர்களைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தவள் சேலையில் கால் தடுக்கி சாலையில் குப்புற விழுவதைக் கண்ட அன்னபூரணி, அய்யய்யோ… அந்தப் பொண்ணு அவனுங்ககிட்ட மாட்டிக்கப் போறாடா… என்று கத்த, அவனுக்குள்ளும் பரவிய பதட்டத்தில் சரேலென்று காரைத் திறந்து இறங்கினான். வேகமாய் விண்ணிலிருந்து இறங்கிய மழைத்துளிகள் பாதியில் தடைபட்டு அவனை சடசடவென்று நனைக்கத் தொடங்கின. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் ஒருத்தன் திடீரென்று காட்சியில் என்ட்ரி கொடுத்ததைக் கண்ட அந்த ரௌடிகள் சற்று நிதானித்து பின்வாங்கினர்.

    அவன் வேகமாய் அந்தப் பெண்ணிடம் செல்ல, ரௌடிகள், அவர்களுக்குள் ஏதோ சொல்லிக்கொண்டு திரும்பி ஓடி மறைந்தனர். அதற்குள் அன்னபூரணி அங்கே ஓடிவந்து அவளிடம், என்னாச்சுமா… உன்னை எதுக்கு அவங்க துரத்துறாங்க… என்றார் பதட்டத்துடன். கீழே விழுந்து கிடந்தவள் மெல்ல தலையைத் தூக்கி அவர்களைக் காட்டி, அ… அவங்க… எ…ன்னை… என்று திக்கித்திணறிக் கூற, புரியாமல் விழித்தனர். அவளது உடல் பயத்தில் பருந்திடம் சிக்கிய கோழிக்குஞ்சாய் நடுங்கிக் கொண்டிருந்தது. சேலை விலகிய மார்புகள் வேகவேகமாய் விம்மித் தணிய நெற்றியில் சின்னக் கோடாய் இரத்தத் துளிகள் மழைத் துளியோடு கலந்து கன்னத்தில் முத்தமிட்டு இறங்கின. அவளது முகத்தைக் கண்டவருக்கு சட்டென்று தனது சிறுவயது நினைவில் வந்தது.

    யோசனையுடன் அவளைப் பார்த்துக்கொண்டே நடுங்கிய கையை

    Enjoying the preview?
    Page 1 of 1