Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mun Anthi Saral Nee...
Mun Anthi Saral Nee...
Mun Anthi Saral Nee...
Ebook401 pages3 hours

Mun Anthi Saral Nee...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

சினிமா உலகத்தில் தடம் பதிக்க நினைக்கும் நாயகன் சூழ்நிலையால் தடம் மாறி காவல்துறையில் சேருகிறான். அச்சம் என்பதே என்னவென்று தெரியாத திருமணத்தில் விருப்பமில்லா நாயகி. நாயகனின் தங்கைக்கு ஒரு பிரச்சனை வர அதைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் நாயகியுடன் ஒரு கல்யாண ஒப்பந்தம் செய்கிறான். அது முன் அந்திச் சாரலாய் அவன் வாழ்க்கையை குளிர்வித்ததா இல்லை கானலாய் கலைந்து போனதா என்பதே கதை.

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134405607
Mun Anthi Saral Nee...

Read more from Latha Baiju

Related to Mun Anthi Saral Nee...

Related ebooks

Reviews for Mun Anthi Saral Nee...

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mun Anthi Saral Nee... - Latha Baiju

    http://www.pustaka.co.in

    முன் அந்திச்சாரல் நீ...

    Mun Anthi Saral Nee…

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ஏவிஎம் ஸ்டுடியோ...

    பிரம்மாண்டமான கட்டிடத்தின் தலையில் பெரிய உலக உருண்டை சுற்றிக் கொண்டிருந்தது. அங்கே ஒவ்வொரு தளத்திலும் ஏதேதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க அந்த இடமே பரபரப்பாய் இருந்தது.

    கண்ணைப் பறிக்கும் விளக்கு வெளிச்சங்களும் அரிதாரம் பூசிய சினிமா தாரங்களும் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருக்க திரையுலகம் சம்பந்தப்பட்ட பல முகங்களும் போலியாய் ஒரு சிரிப்பை பூசிக் கொண்டு உலவிக் கொண்டிருந்தது.

    அதன் ஐந்தாம் தளத்தில் தமிழ்ப்பட ஷூட்டிங்கிற்காய் காவல் நிலையம் செட் போடப்பட்டிருந்தது. காமிராக்கள் காட்சிகளைப் படச்சுருளாய் உள்வாங்கிக் கொள்ள காத்துக் கொண்டிருந்தன. படப்பிடிப்புக்கான தயாரெடுப்புகள் நடந்து கொண்டிருக்க அப்படத்தின் இயக்குனரான வசீகரன் தன் உதவி இயக்குனர்களை விரட்டிக் கொண்டிருந்தான்.

    என்ன ராஜ்... ஆர்டிஸ்ட் எல்லாம் ரெடி தானே... என்ன காட்சின்னு அவுங்களுக்கு சொல்லிக் கொடுத்துட்டியா... கேமரா ரெடிதானே... ஆர்டிஸ்ட்டை பொசிஷன்க்கு வர சொல்லு... என்று பரபரபாய்க் கூறிக் கொண்டிருக்க அந்த உதவி இயக்குனர் எல்லாவற்றுக்கும் தலையாட்டி விட்டு ஓடினான்.

    வசீகரன்...

    உண்மையிலேயே வசீகரமான தோற்றத்தில் நின்றிருந்தான்... ஆறடி உயரத்தில் எலுமிச்சை நிறத்தில் கம்பீரமாய் இருந்தான்... யாருடைய மனதையும் எளிதில் படித்திடும் தீட்சண்யமான கண்கள்... ஏழைத் திருப்பிப் போட்டாற் போல கூர்மையான நாசி...

    அதன் கீழே அழகாய் டிரிம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட அளவான மீசை... எப்போதும் யோசனையில் இருக்கும் முகம்... அழகாய் திருத்தமாய் சிகையை வெட்டி தலைக்கு டைரக்டர் என்று எழுதி இருந்த ஒரு தொப்பியைக் கொடுத்திருந்தான்...

    ஒரு சினிமாவில் ஹீரோவாய் நடிக்கும் சகல தகுதிகளும் இருந்தாலும் அவனுக்கு ஏனோ இயக்குனர் ஆக வேண்டும் என்பதே வாழ்வில் லட்சியமாய் இருந்தது. நடிப்பதை விட நடிக்க வைப்பதே அவனது விருப்பம்... அவன் அழகைக் கண்டு அவனைத் தழுவிச் செல்லும் மஸ்காரா கண்களில் இருந்து தப்புவதே அவனுக்குப் பெரும் பாடாய் இருந்தது.

    வசீகரனின் கண்கள் காமிராவாய் சுழன்று கொண்டிருக்க காமிரா மேனுக்கு அருகில் சென்றான். ஆர்டிஸ்டுகள் பொசிஷனில் இருந்து டயலாக் படித்துக் கொண்டிருக்க ராஜுவை நோக்கி ரெடியா... என்று கேட்டான்.

    ம்ம்... ரெடி சார்... என்றான் ராஜு.

    காமிராக்கள் காட்சியை உள்வாங்க தயாராய் நிற்க, காமிரா மேனின் கண்கள் காமிராவுக்குள் புதைந்திருந்தன... காவல் நிலையத்தில் நடக்கின்ற ஒரு காட்சியைப் படமாக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

    ஸ்டார்ட்...

    காமிரா ரோலிங்...

    ஆக்ஷன்...

    என்று வசீகரனின் வாயில் இருந்து ஒவ்வொரு வார்த்தைகளாய் வெளியே வந்ததும் காமிராக்கள் தயாராகின. வெளிச்சத்தை விளக்குகள் வாரி இறைத்தது.

    தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான் ஹீரோ. தொப்பையோடு அமர்ந்திருந்த அந்த அதிகாரியிடம் சென்றான்.

    சார்...

    அப்போது தான் மும்முரமாய் கண்ணை மூடி சுகமாய் காதைக் குடைந்து கொண்டிருந்தவர், மெல்லக் கண் விழித்தார்.

    ஹூம்... என்ன வேணும்... என்றார் அசட்டையாக.

    சார்... என் பேரு முத்து... ஏட்டு ராஜாராம் பையன்... இங்கே கான்ஸ்டபிளா என்னைப் போஸ்ட் பண்ணி இருக்காங்க... என்று ஒரு கவரை நீட்டினான்.

    ஓ... ராஜாராம் பையனா நீ... என்று அவனை யோசனையோடு பார்த்தவர்,

    அதோ... அங்கே ஏட்டையா இருப்பார்... அவரைப் போயிப் பாரு... என்றார்.

    அவன் அவரிடம் செல்ல ஏதோ பைலைப் பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்தார்.

    நீ ராஜாராம் மகன்ல... வாப்பா... ஆர்டர் வந்திருச்சா... இந்த ஸ்டேஷனுக்கு தானே... என்றார் எதிர்ப்பார்த்திருந்தவர் போல.

    உங்களுக்கு அப்பாவைத் தெரியுமா சார்... என்றான் அவன் அதிசயத்துடன்.

    என்னப்பா இப்படிக் கேட்டுட்டே... உன் அப்பாவைத் தெரியாம இருக்குமா... அவருக்கு வேலை என்னவோ வேற ஸ்டேஷன்ல தான்... ஆனாலும் அவரோட நேர்மையும் உத்தியோகத்து மேல அவருக்கு இருந்த விசுவாசமும் எங்க டிபார்ட்மெண்டுக்கே தெரியுமே... நீயும் அவரைப் போல நேர்மையான போலீஸ்னு பேர் வாங்கணும் தம்பி... என்று வாழ்த்தினார்.

    தந்தையின் நினைவில் மனம் நெகிழ்ந்து நின்றிருந்தவனை தோளில் தட்டிக் கொடுத்தவர்,

    உக்காருப்பா... வீட்டுல எல்லாரும் சவுக்கியமா... என்று விசாரித்தார்.

    ம்ம்... எல்லாரும் நல்லாருக்காங்க சார்... இது... எனக்கு இந்த ஸ்டேஷனில் ஜாயின் பண்ண சொல்லி வந்த ஆர்டர்... என்று அந்த காக்கி நிறக் கவரில் இருந்த அரசு ஆர்டரை நீட்டினான்.

    அதை வாங்கிப் பார்த்துவிட்டு சரி... இன்னைக்கே ஜாயின் பண்ணிக்கலாம்... கொஞ்சம் வெயிட் பண்ணு... சப் இன்ஸ்பெக்டர் வரட்டும்... என்றார்.

    அப்போது ஸ்டேஷனுக்குள் புயலாய் நுழைந்தாள் அந்தப் பெண். அழகாய் ஒடிசலாய் இருந்தாலும் அவளது முகமும் பார்வையும் ஒரு அலட்சியத்தைக் கொண்டிருந்தது.

    அவளது நெஞ்சத்தில் குத்தியிருந்த பேட்ஜ் அவளது பெயர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் என்று காட்டியது. அவளைக் கண்டதும் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து அவசரமாய் அவளுக்கு ஒரு சல்யூட் வைக்க அதை தலையாட்டி ஏற்றுக் கொண்டே நடந்தாள்.

    தன் அறைக்குள் செல்லப் போனவள் அங்கே நின்று கொண்டிருந்த புதியவனைக் கண்டதும் ஹூம்... என்று புருவத்தைத் தூக்கினாள் யாரென்ற பாவனையில்.

    புதுசா வந்திருக்குற கான்ஸ்டபிள் மேடம்... பேரு முத்து... நம்ம ராஜா ராம் சாரோட பையன்... என்று அவனை அறிமுகப் படுத்திவிட்டு, அவனிடம் மெல்லிய குரலில் சல்யூட் வைப்பா... என்றார்.

    அவளைப் பார்த்து இவளா... என்று வியப்புடன் நின்றிருந்தவன், அவர் சொன்னதும்,

    எஸ்... சார்... என்று விறைப்புக்குப் போய் அவசர அவசரமாய் நெற்றிக்கு கையைக் கொண்டு சென்றான்.

    அவன் மனது ச்ச்சே... இந்தத் திமிர் பிடிச்சவ இங்கே தான் சப் இன்ஸ்பெக்டரா இருக்காளா... இவளுக்கெல்லாம் நான் சல்யூட் வைக்குற நிலமை வந்திருச்சே... என்று சுணங்கியது.

    கட்... கட்... இன்னொரு ஷாட் போகலாம்... என்று டென்சனாய் இயக்குனர் வசீகரனின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்ததும் காமிரா அணைந்தது.

    அவனிடம் ஓடி வந்த ராஜூ விடம், என்னய்யா ஹீரோ அவன்... மூஞ்சிய மண்ணு மாதிரி வச்சிட்டு நிக்குறான்... கொஞ்சம் கூட பாவமே மாற மாட்டேங்குது... என்று எரிச்சலோடு கத்தினான்.

    சார்... ஹீரோ புரொட்யூசர் சாருக்கு ரொம்ப வேண்டியவர்ல... அதான் அதிகம் ஒண்ணும் சொல்ல முடியல... என்று தலையைச் சொரிய,

    அதுக்கு... அட... அந்தாளு மூஞ்சில கொஞ்சம் பாவத்தைக் காட்டச் சொல்லு... நீ சொல்லிக் கொடுத்துட்டு அடுத்த டேக் வர சொல்லு... என்று சிடுசிடுத்தான்.

    மறுபடியும் அவர்கள் அதே பொசிஷனுக்கு வர மீண்டும் அதே காட்சியைப் படமாக்கத் தொடங்கினர்.

    ஸ்டார்ட்... காமிரா ரோலிங்... ஏய்... யாரது... இடையில... என்று வசீகரன் கத்த,

    அண்ணா... அண்ணா... எழுந்திரு... எப்படி தான் பகல் நேரத்துல இப்படித் தூங்குவியோ... உறங்கிக் கொண்டிருந்த வசீகரனைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள் அவனது தங்கை வளர்மதி.

    அழகான கனவு தடைபட்ட எரிச்சலில் மீண்டும் போர்வையை இழுத்து முகத்தை மூடப் போனவனை முகத்தில் சொத்தென்று வந்து விழுந்த தண்ணீர் சட்டென்று எழுந்து அமர வைத்தது.

    ச்ச்சே... கனவுல கூட டைரக்டரா இருக்க விட மாட்டேங்குறாங்களே... என்று முகத்தை சுளித்தவன்,

    அம்மா... என்னம்மா இது... எத்தனை தடவை சொல்லி இருக்கேன்... இப்படி மூஞ்சில தண்ணி ஊத்தி எழுப்பாதேன்னு...

    ஆமாண்டா... உன் தங்கச்சி உன்னை அண்ணானு கூப்பிட்டதும் அப்படியே எழுந்து உக்கார்ந்துட்டே பாரு... தண்ணிய ஊத்துனா தானே எந்திரிக்கற... ராத்திரி பூரா கதை எழுதறேன்... கவிதை எழுதறேன்னு விடிய விடிய தூங்காம இருக்க வேண்டியது... காலைல எல்லாரும் எந்திரிக்குற நேரத்துல தூங்க வேண்டியது... என்று அலுத்துக் கொண்டார்.

    ஆ... என அலுப்புடன் கொட்டாவி விட்டவன், இப்போ உனக்கு என்னதான்மா வேணும்... சொல்லு... என்றான்.

    இன்னைக்கு ரேஷன்ல அரிசி பருப்பெல்லாம் போடறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க... போயி பாத்து வாங்கிட்டு வந்திரு... இன்னும் கொஞ்ச நேரம் போச்சுதுன்னா கூட்டமாயிரும்... என்றார்.

    ம்ம்... சரிம்மா... நான் குளிச்சிட்டு வந்திடறேன்... என்றவன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

    சபர்மதி, அரவிந்தன் தம்பதியருக்கு வசீகரன், வளர்மதி அழகான இரு பிள்ளைகள்... வசீகரன் முதுகலைப் படிப்பை முடித்து இரண்டு வருடமாக திரைப்படத் துறையில் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தான். வளர்மதி கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். பிறந்த போதே அழகாய் வசீகரிக்கும் சிரிப்புடன் இருந்தவனுக்கு வசீகரன் எனப் பெயர் வைத்திருந்தனர்.

    அழகனான அவனுக்கு நடிக்க சந்தர்பம் கிடைத்தும் அதில் விருப்பமில்லாமல் மற்றவர்களை நடிக்க வைக்கவே ஆசைப்பட்டான்.

    அவனுக்கு திரைப்படத் துறையில் சிறந்தவொரு இயக்குனராக வரவேண்டும் என்பதே ஆசை... ஆனால் குடும்ப சூழல் காரணமாயும் சபர்மதியின் கண்ணீரைக் காண முடியாமலும் தன் ஆசையை மூட்டை கட்டிவிட்டு கிடைத்த போலீஸ் வேலைக்கு செல்ல ஒத்துக் கொண்டான்.

    காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்தன், ஓய்வு பெறுவதற்கு முன்னரே ஒரு விபத்தில் உயிர் துறக்க அழகாய் சென்று கொண்டிருந்த அந்தக் குடும்பம் என்னும் படகில் பெரிய ஓட்டை விழுந்தது. வாரிசான வசீகரனுக்கு காவல் துறையிலேயே கான்ஸ்டபிளாகப் பணி கிடைத்தது.

    குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வசீகரன் வேலைக்கு செல்வது நிர்பந்தமானது... அன்னையின் கண்ணீரும் தங்கையின் எதிர்காலமும் அவனுக்குள் கேள்வியைக் கொடுக்க தன் ஆசையைத் தூக்கி பரணில் போட்டுவிட்டு இதோ... இப்போது ஒவ்வொரு நாளும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டருக்காய் காத்திருக்கிறான்.

    குளித்து முடித்து சாதாரண ஒரு டிஷர்ட்டை அணிந்து வந்தவனைக் கண்டதும் எப்போதும் போல மனம் நிறைந்தது சபர்மதிக்கு.

    என் மகன் எத்தனை அழகாய் கம்பீரமாய் இருக்கிறான்... அவனுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடு ஆண்டவா... என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர் புன்னகையுடன் அவனை நோக்கினார்.

    வாப்பா... சாப்பிட எடுத்து வைக்கறேன்... என்றவர் அடுக்களைக்குள் செல்ல அங்கே வந்தாள் அவனது தங்கை வளர்மதி.

    என்ன அண்ணா... மதியம் லஞ்சுக்கு உனக்கு இட்லிதானா... என்றவள் அவனுக்கு ஒரு கிளாஸில் தண்ணீரை ஜக்கிலிருந்து ஊற்றி வைக்க அவளை நோக்கி சிரித்தவன்,

    என்னடி கிண்டலா... உனக்கு அண்ணன்கிற மரியாதையே இல்லாம போயிருச்சு... என்று அவள் காதைப் பிடித்து செல்லமாய்த் திருகினான்.

    என்ன, இன்னைக்கு வீட்டுல இருக்கே... காலேஜுக்குப் போகலையா... என்று விசாரித்தவனை நோக்கி,

    அய்யோ... அண்ணா... எனக்கு நேத்திருந்தே ஸ்டடி லீவ் ஸ்டார்ட் ஆயிருச்சு... நீ என்ன தான் கவனிக்கறியோ... என்று அலுத்துக் கொண்டாள்.

    ஓ... ஸ்டடி லீவ்னா உக்கார்ந்து படிக்க வேண்டியது தானே... எதுக்கு என்கிட்டே வம்பளந்து கிட்டு இருக்கே... என்றவன் இட்லியை சட்னியில் தோய்த்து வாய்க்குக் கொண்டு போக அவன் கையைப் பற்றி அந்தத் துண்டை தன் வாய்க்குக் கொண்டு சென்றவள்,

    ம்ம்... இதுக்குதான்... என்று சிரித்துக் கொண்டே உள்ளே ஓடி விட்டாள்.

    அவளது செய்கையில் மனம் நெகிழ அவளைப் பற்றிய நினைவில் மென்மையாய் சிரித்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினான்.

    சிறு வயது முதலே அது ஒரு பழக்கம் அவளுக்கு... அண்ணன் சாப்பிடப் போகும்போது அதைப் பறித்து தான் சாப்பிடுவாள்... அண்ணனை ஊட்டச் சொல்லி அடம் பிடிப்பாள்... இருவருக்கும் நான்கு வருட வித்தியாசம் இருந்ததால் பள்ளிப் பருவம் முதலே அது பழக்கமாகி இருந்தது.

    அண்ணன் சாப்பிடும்போது அவள் இருந்தால் ஒரு வாயாவது அவளுக்குக் கொடுத்துவிட வேண்டும்... அவள் செய்ததைப் பார்த்துக் கொண்டே அடுக்களையில் இருந்து வந்த சபர்மதி, அவளைத் திட்டினார்.

    இந்தப் பெண்ணுக்கு எத்தனை சொன்னாலும் இன்னும் அந்தப் பழக்கம் போகவில்லையே... ரெண்டு பேரும் வளர்ந்தாச்சு... பாக்குறவங்க என்ன நினைப்பாங்க... என்னதான் அண்ணன் தங்கச்சின்னாலும் ஒரு ஒதுக்கம் வேண்டாமா... இன்னும் சின்னப் புள்ளைங்கன்னே நினைப்பு அவளுக்கு... என்றார்.

    அம்மா விடுங்கம்மா... எவ்ளோ வளர்ந்தாலும் அவ என் தங்கச்சி தானே... நான் அவளுக்கு அண்ணன் தானே... பாக்குறவங்க கண்ணுல குறையோட பார்த்தா அதுக்கு நாம பொறுப்பாக முடியாது... அவ எப்பவும் எனக்கு குழந்தை மாதிரி தான்... சரி நீங்க ரேஷன் கார்டும் பையும் எடுத்திட்டு வாங்க... நான் போயிட்டு வந்திடறேன்... என்றவன் எழுந்து கை கழுக சென்றான்.

    மகனின் பேச்சிலேயே மகள் மீது அவன் வைத்திருக்கும் பாசம் புரிய கண்கள் பனித்தது அந்த அன்னைக்கு...

    என் அண்ணனோட குணம் அப்படியே என் மகனுக்குக் கிடைச்சிருக்கு... என்னை என் அண்ணன் கிட்டே இருந்து பிரிச்ச போல இவுங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடாதே கடவுளே... என்று வேண்டிக் கொண்டே கார்டை எடுக்க சென்றார்.

    சார்... போஸ்ட்... வாசலில் தபால்காரரின் குரலைக் கேட்டு எட்டிப் பார்த்தான் வசீகரன்.

    சபர்மதியும் வளர்மதியும் வெகுநாளாய்க் காத்திருந்த அந்தக் குரல் கேட்டதும் வெளியே ஓடி வந்தனர்.

    தம்பி... உங்களுக்கு தான் ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு... வேலைக்கான ஆர்டர் போலிருக்கு... என்று சந்தோஷமாய்க் கூறியவர் அந்தக் காக்கி நிற அரசுக் கவரை அவன் கையில் கொடுக்க அதை அன்னையிடம் கொடுத்துவிட்டு தபால்காரர் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.

    அதை சந்தோஷத்துடன் பார்த்திருந்தனர் சபர்மதியும் வளர்மதியும்.

    ***

    ஹாஸினி...

    கீழே கேட்ட அன்னையின் குரலைக் கேட்டு கண்ணாடிக்கு முன்னே நின்றிருந்த ஹாஸினி திரும்பினாள்.

    அப்போது தான் மலர்ந்திட்ட புதிய பூ போல புத்துணர்வோடு கூடிய அழகான முகம்... திருத்தப்பட்ட புருவமும் அளவான மூக்கும் சிறிய இதழ்கள் சிரிக்கையில் எட்டிப் பார்க்கும் சின்ன பல் வரிசையும் காதில் அசைந்தாடும் தங்க வளையமும் வயதுக்கே உரிய வனப்பான உடல்வாகும் பார்ப்பவர் கண்களை ஒரு நிமிடம் அவளை உற்று நோக்க வைத்தே நகரும்...

    முன் நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றையில் ஒரு அலட்சியம் தெரிய அழகாய் இரு பக்கமும் குதிரை வால் போட்டிருந்தாள். ஜீன்ஸூம் டாப்பும் அணிந்திருந்தவள் வாயில் பபிள் கம்மை மென்று கொண்டிருந்தாள்.

    கட் ஷூவில் காலை நுழைத்தவள் கீழே வந்தாள்.

    டக்... டக்... என ஷூ சப்திக்க நடந்து வந்தவளை கீழே டைனிங் ஹாலில் காத்திருந்த ராஜேஸ்வரி பார்த்துக் கொண்டிருந்தார்.

    குட் மார்னிங் மாம்... நாற்காலியை இழுத்துப் போட்டு அமரப் போனவளை முறைத்தவர்,

    முதல்ல வாயில் இருக்கிற அந்த பபிள் கம்மைத் துப்பிட்டு வா... எப்போ பார்த்தாலும் மாடு மாதிரி எதையாவது வாயில போட்டு மென்னுட்டு... என்று அவர் கடிந்து கொள்ள, அவளது முகம் வாடியது.

    என் ஸ்வீட் மம்மி... நோ டென்ஷன்... இப்போவே துப்பிட்டு வரேன்... என்றவள் அதைத் துப்பிவிட்டு வந்தாள்.

    என்ன இன்னைக்கு டியூட்டி இல்லியா... அன் யூனிபார்ம்ல கிளம்பி இருக்கே... என்றவர்,

    ராமு... சின்னம்மாவுக்கு சாப்பிட எடுத்து வை... என்றார் அங்கே நின்று கொண்டிருந்த நடுத்தர வயசுள்ள ஒரு பணியாளிடம். அவளது தட்டில் பஞ்சு போன்ற மெத்தென்ற இட்லியை வைத்து வேறு இரு கிண்ணத்தில் சாம்பாரும் சட்னியும் ஊற்றினார்.

    ஒவ்... இன்னைக்கும் இந்த இட்லி தானா... ஏன்... ராமு... கொஞ்சம் வித்தியாசமா ஏதும் டிரை பண்ண மாட்டியா... எப்போ பார்த்தாலும் இட்லி, தோசைன்னு... நான்சென்ஸ்... என்றவள் அன்னையின் பார்வையைக் கண்டதும் பேசாமல் இரண்டு இட்லியை உள்ளே தள்ளத் தொடங்கினாள்.

    நான் தான் இட்லி செய்ய சொன்னேன்... என்ற ராஜேஸ்வரி,

    ராமு... அவளுக்கு பால் எடுத்திட்டு வா... என்றார்.

    மம்மி... ப்ளீஸ்... மம்மி... எனக்கு பால் பிடிக்கலை... வேண்டாம்... நான் வேணும்னா ஜூஸ் குடிச்சுக்கறேன்... என்றவளை அடுத்த வார்த்தை பேச விடாமல் அவள் முன்னால் பால் கிளாசை நீட்டினார். ஒன்றும் பேசாமல் அதை வாங்கி மருந்தைக் குடிப்பது போலக் கண்ணை மூடிக் குடித்துவிட்டு எழுந்து கை கழுகப் போனாள் ஹாஸினி.

    ராமு... மதியம் சமையலுக்கு நான் சொன்ன மாதிரி எல்லாத்தையும் செய்திடு... இன்னைக்கு கொஞ்சம் புது ரோஜா செடி எல்லாம் நர்சரியில் இருந்து கொண்டு வர சொல்லி இருக்கேன்... நம்ம பாலுகிட்டே பார்த்து வாங்கி வைக்க சொல்லிடு... நான் கிளம்பறேன்... என்றார்.

    சரிங்கம்மா... நான் பார்த்துக்கறேன்... என்று அவர் தலையாட்டவும்,

    ம்ம்... ஓகே... சங்கர்... வண்டியை ரெடி பண்ணு... கிளம்பலாம்... என்றார் அங்கே அவருக்காய் முன்னில் காத்துக் கொண்டிருந்த டிரைவரிடம்.

    ஓகே மேடம்... என்றவன் வாசலில் கம்பீரமாய் நின்றிருந்த வெள்ளை நிற ஆடி காரின் அருகே சென்றான்.

    தன் அறைக்கு சென்ற ராஜேஸ்வரி அங்கிருந்த தன் பேகை சரி பார்த்து டிரஸ்ஸிங் டேபிளில் வைத்திருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். சற்று தடித்த கம்பீரமான உருவம்... வட்டமான முகத்தில் வெறும் திருநீறு மட்டுமே இருந்தது. ஊடுருவும் தீட்சண்யமான கண்கள்... அழகான முகத்தை அதிகாரம் என்னும் முகமூடியால் மறைத்திருந்தார்.

    மகளின் சிறு வயதிலேயே கணவர் மகேஸ்வரன் மூளையில் கட்டி வந்து வெகுவாய் சிரமப்பட உடுமலைக்கு அருகில் இருந்த கயிறு பிரிக்கும் தொழிற்சாலைகளையும் ஜவுளிக் கடை மற்றும் நிலபுலன்களையும் விற்றுவிட்டு கோவையில் மருத்துவத்திற்காய் குடியேறினர்.

    அங்கே பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இரண்டை கட்டி விட்டு ஒரு தளத்தில் மட்டும் தங்களுக்கு ஒரு துணிக் கடையைத் தொடங்கி இருந்தனர். அதன் மேற்பார்வை மட்டுமே ராஜேஸ்வரிக்கு இருந்தது. காம்ப்ளக்ஸில் கடையை வாடகைக்கு விட்டதில் கிடைத்த வருமானமும் அந்த துணிக்கடையின் வருமானமும் அவர்களை செல்வந்தர் வரிசையில் சேர்த்து விட்டிருந்தது.

    வெகு காலம் மருத்துவ உதவியோடு படுக்கையில் கஷ்டப் பட்டாலும் தொழிலைப் பற்றி நுணுக்கங்களை எல்லாம் மனைவிக்கு சொல்லிக் கொடுத்தார். யாரையும் நம்பாதே... நீயே நம் தொழிலைப் பாத்துக் கொள்... எல்லோரிடமும் சற்று எட்டி நின்று பழகு... போலி சொந்தங்களை அருகில் வர விடாதே... என்று சொல்லி அவர் மனதில் உருவேற்றியிருந்தார்.

    அவர் சொல்படியே ராஜேஸ்வரியும் அவர் மறைவுக்குப் பிறகு வீடு நிறைத்தும் இருந்த பணியாட்களிடமும் கடையில் இருந்த பணியாளர்களிடமும் எப்போதும் அதிகாரம் காட்டி... ஒட்டிக் கொள்ள வந்த உறவுகளையும் சற்று எட்டியே நிறுத்தியிருந்தார்.

    தொழிலையும் புரிந்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். மகளை சுதந்திரமாய் வளர்த்திருந்தாலும் தன் கட்டுப் பாட்டிலேயே வைத்திருந்தார். கணவர் இறந்தபிறகு சொத்தைக் குறிவைத்து நெருங்கி வந்த சொந்தங்களை சிரிப்பை மறந்த முகத்தோடு விரட்டியடித்தார்.

    சிறு வயதில் கணவனை இழந்து நின்றவளைத் தவறான எண்ணத்தோடு ஒவ்வொருத்தரும் நெருங்கி வர, கண்ணில் தீ கக்கும் பார்வையோடு கண்டிப்பும் கறாருமான முகத்தை கவசமாக்கியவர் அதையே நிரந்தரமாக்கிக் கொண்டார். கையில் பேகுடன் வெளியே வந்தவர், சின்னம்மா எங்கே... என்றார் ராமுவிடம்.

    பேக் எடுத்திட்டு வரேன்னு மேல போனாங்கம்மா... என்றார் அவர். மேலே நோக்கி ஹாஸினி... என்று அவர் குரல் கொடுக்க கையில் சின்ன பேகுடன் வண்டி சாவியோடு இறங்கி வந்தாள் மகள்.

    காற்றில் அசைந்தாடும் கூந்தலை ஸ்டைலாய் கையில் ஒதுக்கியவள், மாம்... எனக்கு மதியம் சாப்பாட்டுக்கு வர முடியாது... கொண்டு வர சொல்லிடுங்க... நான் கிளம்பறேன்... என்றாள்.

    ம்ம்... பார்த்து பத்திரமா போ... என்றார் அக்கறையுள்ள அன்னையாய்.

    ஓகே மம்மி... டேக் கேர்... பை... என்றவள் அன்னையின் கன்னத்தில் மெல்லத் தன் இதழைப் பதித்துவிட்டு வெளியே நடந்தாள். செல்லும் மகளையே பார்த்திருந்த ராஜேஸ்வரி ஏதோ யோசித்துக் கொண்டே வாசலுக்கு நடந்தார்.

    அன்னையின் அதிகாரத்தையும் கண்டிப்பையும் மட்டுமே கண்டு வளர்ந்தவள் ஹாஸினி. அவரது முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் நேசத்தை அவளால் கண்டு கொள்ள முடிந்தது. பணத்திமிரும், ஆணவமும், தான் என்ற அகந்தையும் அவளுக்குள் நிறையவே இருந்தாலும் அவள் தோற்றுப் போவது அவள் அன்னையிடம் மட்டுமே...

    ஏனோ அவள் அன்னையின் வார்த்தையை அவளால் மீறவே முடிந்ததில்லை... சிறு வயது முதலே தனக்குக் கீழே உள்ள அனைவரும் தனக்கு சேவகம் செய்பவர்கள் என்னும் எண்ணம் அவளுக்குள் நிறைந்திருந்தது.

    தன் கறுப்பு வண்ண யமஹா பைக்கை ஒரே உதையில் உயிர்ப்பித்த ஹாஸினி, ஹெல்மெட்டை தலைக்குக் கொடுத்து ஆக்சிலேட்டரை முறுக்கினாள். வண்டி சீறிக் கொண்டு கேட்டுக்கு வெளியே சென்று சாலையில் கலந்தது.

    சுடுகின்ற நிலவாய் அவள்...

    சுடாத சூரியனாய் அவன்...

    உறைகின்ற பனியாய் அவள்...

    ஓடுகின்ற நதியாய் அவன்...

    சுழன்றடிக்கும் சுனாமி அவள்...

    சுகமாய் வீசும் தென்றல் அவன்...

    காற்றை நிறுத்த

    யோசிப்பவள் அவள்…

    காற்றின் போக்கில்

    பறந்து செல்பவன் அவன்...

    எதிரெதிர் துருவங்கள் ரெண்டும்

    இணைந்திடுமோ இல்வாழ்வில்...

    கசப்பும் இனிப்பும் சேர்ந்தால்

    புது சுவைதான் தோன்றிடுமோ...

    வெற்றிடமாய் இருக்கும்

    அவள் மனதில் நீலமேக

    வண்ணம் நிரப்பிடும்

    வானமாய் அவன் மாறுவானா...

    வெண் பஞ்சு மேகங்களால்

    மனதை லேசாக்கி

    மிதக்க வைக்கும் கார்வண்ண

    வித்தை அறிந்தவனா...

    சாரலில் சிலிர்க்குமோ பெண் நிலவு...

    2

    பஸ் நிறுத்தத்திற்கு சற்றுத் தள்ளி பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினாள் ஹாஸினி. முடியை கட்டாமல் விரித்து விட்டிருந்தாள். கண்ணுக்கு கூலர் அணிந்திருந்தாள்.

    வண்டியை அங்கிருந்த பெட்டிக்கடையின் முன்பு ஓரமாய் நிறுத்தி அவரிடம் ஜாடை காட்டிவிட்டு சற்றுத் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.

    காலை நேரமாதலால் ஒவ்வொருவரும் பலவித அவசரத்தில் இருக்க பணிக்கு செல்பவர்களும் பள்ளி, கல்லூரிக்கு செல்லுபவர்களுமாய் அந்தப் பேருந்து நிறுத்தம் நிறைந்திருந்தது.

    புத்தம் புது ரோஜாக்களாய் இளம் பெண்கள் மலர்ச்சியுடன் இருக்க ரோஜாவைத் தாலாட்டும் தென்றலாய் தழுவிச் சென்றது காளையரின் கண்கள்.

    ஒரு பேருந்து வந்து நிற்க அதில் முண்டியடித்து திக்கிக் கொண்டு ஏறினர். அவர்களுடன் ஹாஸினியும் ஏறினாள். பேருந்தின் நடுவில் பெண்களை உரசிக் கொண்டு சில இளைஞர்கள் நின்றிருக்க அவர்களை நோக்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தாள்.

    பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்தில் நிற்கும் போதும் வளைவில் திரும்பும் போதும் அவர்கள் ஒன்றும் அறியாத போல பெண்களை உரசிக் கொண்டிருக்க பெண்கள் நெளிந்து கொண்டிருந்தனர்.

    அதில் ஒருத்தன் வேண்டுமென்றே ஒரு வளைவில் ஒரு பெண்ணின் மீது விழ அவனது கைகள் அவள் தேகத்தில் தொடக் கூடாத இடங்களைத் தொட்டுச் சென்றது.

    அதில் அந்தப் பெண் முகம் சிவக்க கூனிக் குறுகி அவனைத் தள்ளிவிட்டாள். அவன் தடுமாறி விழப் போனவன் அவளிடம் சண்டைக்கு வந்தான்.

    என்னம்மா... இது என்ன உன் அப்பன் வூட்டு வண்டின்னு நினைச்சியா... பஸ்சுல வந்தா அப்படித்தான் தெரியாம மேல படும்... உன் மேல படக் கூடாதுன்னா எதுக்கு பஸ்சுல வரே... தனியா வண்டி வச்சு வர வேண்டியது தானே... என்னமோ பெரிய பத்தினியாட்டம் தள்ளி விடறே... என்று கத்தினான்.

    அவனது குரலையும் கோபத்தையும் கண்டு அந்தப் பெண் நடுங்கிப் போனாலும் அவனை எதிர்க்கத் தயங்கவில்லை.

    என்ன... ரொம்ப தான் நல்லவன் மாதிரி கத்தறே... நானும் ரொம்ப நேரமா பொறுத்துப் பொறுத்துப் பாக்கறேன்... என்னமோ மேல சாஞ்சுகிட்டே வரே... உனக்கும் கூடப் பொறந்தவங்கல்லாம் இல்லியா... என்றாள் கண்ணீருடன்.

    அதைக் கண்டதும் அவர்கள் அருகில் வந்த ஹாஸினி, என்ன ஆச்சு... என்றாள்.

    அந்தப் பெண் நடந்ததைக் கூற அவனை முறைத்தவளை நோக்கி இளித்தான் அவன்.

    "நீ என்ன பெரிய நாட்டாமையா... பஞ்சாயத்து பண்ண வந்து நிக்கறே... உனக்கும் ஆசையா இருந்தா சொல்லு... உன்னையும் கொஞ்ச நேரம் உரசிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1