Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Solla Pogiraai?
Enna Solla Pogiraai?
Enna Solla Pogiraai?
Ebook358 pages2 hours

Enna Solla Pogiraai?

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஒரு மனிதனுக்கு சந்தேகம் என்னும் பெருநோய் தாக்கினால் அவனைச் சேர்ந்தவர்களை என்ன பாடுபடுத்துவான் என்பதே என்ன சொல்லப் போகிறாய்?

இதற்கு மேல் சொன்னால் கதையின் சுவாரசியம் குறைந்துவிடும்! நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580144006825
Enna Solla Pogiraai?

Read more from Annapurani Dhandapani

Related to Enna Solla Pogiraai?

Related ebooks

Reviews for Enna Solla Pogiraai?

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Solla Pogiraai? - Annapurani Dhandapani

    https://www.pustaka.co.in

    என்ன சொல்ல போகிறாய்?

    Enna Solla Pogiraai?

    Author:

    அன்னபூரணி தண்டபாணி

    Annapurani Dhandapani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/annapurani-dhandapani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ஒண்ணாம் படி எடுத்து

    ஒசந்த பூவா ஓர ஓரமா

    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்

    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்

    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள

    சித்திர கோபுரம் கட்டவே

    சித்திர கோபுரம் கட்டவே

    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

    செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மியின் வெண்கலக் குரல்கள் அந்த ஊடலை ஒலிபெருக்கி (Bluetooth Speaker) வழியாகக் கசிந்து வந்து அந்த அறையின் மூலை முடுக்கெல்லாம் அதிர்ந்து கொண்டிருந்தது.

    வகுப்பறையின் கரும்பலகை அருகே நின்று கொண்டு அந்தப் பாடலுக்கேற்ற அசைவுகளை அவள் ஆடிக் காண்பிக்க,

    ஆறு வயது ஏழு வயது மதிக்கத் தக்க மழலைகள் பத்து பேர் அவளைப் பார்த்து ஆடினார்கள்!

    ம்ஹூம்.. சீமா.. கைய இப்டி வெச்சுக்கோ.. என்று ஒரு குழந்தையின் கையைப் பிடித்து அவள் சரி செய்ய, அந்தக் குழந்தையும் அவள் கூறியது போலவே கையை வைத்துக் கொண்டு அவள் கற்றுத் தந்தபடி ஆட முயன்றது.

    தேஜூ.. கால் இவ்ளோ தூக்க வேணாம்.. அப்றம் கீழ விழுந்துடுவல்ல.. என்று கேட்டுச் சிரித்தாள். குழந்தைகளும் சிரித்தார்கள்.

    அதிதி.. இப்டி.. ஹாங்.. இப்டி..

    ப்ரீத்தி.. குட்.. இப்டிதான்..

    சோனு.. இத பாரு.. இந்த கைய இங்க வெச்சிக்கோ.. ம்.. குட்..

    ஒவ்வொருவரும் ஒழுங்காக ஆடுகிறார்களா என்று தனித் தனியாக கவனித்து சரி செய்து சரியாக ஆட வைத்துக் கொண்டிருந்தாள் அவள்!

    அவள் சிவப்பு இல்லை! அதே நேரத்தில் கருப்பும் இல்லை! அழகான வட்ட முகம்! பிறை போல நெற்றி! வில் போல் புருவங்கள்! கரு வண்டாய் துறு துறு விழிகள்! எடுப்பான எள்ளுப் பூ நாசி! புன்னகை மட்டும் தான் எனக்குச் செய்யத் தெரியும் என்று சொல்லும் படியான அழகான அதரங்கள்! சங்குக் கழுத்து! நீண்ட கரிய கூந்தல்! சராசரியை விட சற்று அதிக உயரம்! இன்னும் கொஞ்சம் எடை கூட்டலாம் என்னும்படியான உடல் வாகு!

    இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள்! நடனம் ஆட வசதியாக துப்பட்டாவை தாவணி போல போட்டு இடுப்பில் இறுகக் கட்டியிருந்தாள்!

    அவளின் நடன அசைவுகள் அவள் ஒரு கை தேர்ந்த.. இல்லை இல்லை.. கால் தேர்ந்த நடன வித்தகி என்று காட்டும்படி இருந்தது!

    நடன அசைவுகளுக்கேற்ப கண்களும் பேசியது! சில இடங்களில் கொஞ்சியது என்று கூடச் சொல்லலாம்!

    இந்தப் பாட்டுக்கே கண்கள் கொஞ்சினால் அப்ப... . கொஞ்சும் பாடலுக்கு இவள் அபிநயம் பிடித்தால்... பார்ப்பவர் மனதை நிச்சயம் கொள்ளை கொள்ளும்!

    முதல் முறை பார்த்தால் ரொம்ப ஒண்ணும் அழகில்ல.. ஆனாலும் ஏதோ ஒரு புதுமையான அழகிருக்கு இவகிட்ட.. என்று எல்லோருக்குமே எண்ணத் தோன்றும்படியான தோற்றம் கொண்டவள்!

    நளினா!?

    வகுப்பறையின் வாசலிலிருந்து குரல் வர, அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்!

    ப்ராக்டீஸ் முடிஞ்சிதா! கௌம்பலாமா? இவளைப் போல ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்!

    இவள் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,

    இன்னும் ஒரு டென் மினிட்ஸ்.. என்றாள் கெஞ்சலாக!

    சரி! நா அதுக்குள்ள லிஸ்ட் எல்லாத்தையும் எடுத்து வெச்சிடறேன்! இப்பவே ஆஃபீஸ்ல சப்மிட் பண்ணினாதான் ஆனுவல் டேக்குள்ள எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ண முடியும்! என்று கூறிக் கொண்டே அவள் ஓடினாள்!

    இவள் திரும்பவும் குழந்தைகளிடம் கவனம் செலுத்த, மீண்டும் அழைப்பு!

    நளினா மிஸ்?

    இவள் திரும்பிப் பார்த்தாள்.

    பள்ளிக்கூடத்தின் அலுவலக உதவியாளன் (peon) நின்றிருந்தான்.

    என்ன பூங்காவனம்? என்று வெளியே வந்து தன் பெயருக்கேற்றாற் போல் புன்னகையுடன் மென்மையாகக் கேட்டாள்.

    பிரின்சிபால் உங்கள வரச் சொன்னாங்க மிஸ்!

    அப்டியா! பசங்களுக்கு ப்ராக்டீஸ் முடியப் போகுது! பத்து நிமிஷத்தில வந்திடறேன்னு சொல்லுங்க பூங்காவனம்!

    இல்ல... உங்கள உடனே வரச் சொன்னாங்க.. நா வேணும்னா பசங்கள பாத்துக்கறேன்! நீங்க போங்க மிஸ்!

    நடனமாடியதால் அவள் முகத்திலும் கழுத்திலும் பூத்திருந்த வியர்வைத் துளிகளைப் பார்த்துக் கொண்டே கூறினான்.

    அவனுடைய பார்வையின் மாற்றத்தை உணர்ந்தவள்,

    பத்து நிமிஷத்தில வந்திடறேன்னு நா சொன்னதா போய் சொல்லுங்க பூங்காவனம்! என்று முகம் மாறாமல் ஆனால் கடுமையான குரலில் கூறிவிட்டு வகுப்பறைக்குள் வேகமாகச் சென்றாள்!

    அவள் அப்படி ஒன்றும் அழகில்லை... அவளுக்கு யாரும் இணையில்லை ....என்று அவளை நினைத்து ஒரு பெருமூச்சு விட்டு தனக்குள் முணுமுணுத்தபடி போனான் பூங்காவனம்.

    சரி பசங்களா.. இன்னிக்கு ப்ராக்டீஸ் போதும்! நாம நாளைக்கு திருப்பியும் வந்து இதே மாதிரி சூப்பரா ப்ராக்டீஸ் பண்ணுவோம்! சரியா?! என்று புன்னகை முகமாகக் கேட்டபடி துப்பட்டாவை சரியாகப் போட்டுக் கொண்டாள்.

    எல்லாக் குழந்தைகளும் தலையாட்டிவிட்டு கிளம்பினார்கள். தத்தம் குழந்தைகளை அழைத்துப் போக வந்த பெற்றோரிடம் ஓடிய குழந்தைகளைப் பார்த்து புன்னகைத்தபடியே தன் கைப்பேசியையும், அந்த ஊடலை ஒலிபெருக்கிக் கருவியையும் அணைத்து எடுத்துத் தன் கைப்பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

    மிஸ்... . நாளைக்கும் ரோஸ் கலர் தஸ் போட்டு வாங்க மிஸ்! ஒரு வாண்டு அவளுடைய சுடிதாரைத் தொட்டுச் சொல்ல, நளினா அந்தக் குழந்தையின் உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்து,

    எங்கிட்ட வேற ரோஸ் கலர் ட்ரஸ் இல்லையே.. என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூறினாள்.

    இதைக் கேட்டு அந்தக் குழந்தையின் முகம் சுருங்கிப் போக,

    என்ன செய்யலாம்.. என்று யோசிப்பது போல பாவனை செய்தாள்! பின்னர்,

    நாளைக்கு நீ என்ன கலர் ட்ரஸ் போட்டு வருவ? எனக் கேட்டாள்.

    ப்ளூ கலர்! என்றது குழந்தை!

    ம்.. எங்கிட்ட ப்ளூ கலர் ட்ரஸ் இருக்கு.. நானும் நாளைக்கு ப்ளூ கலர் ட்ரஸ் போட்டு வரேன்.. என்று கண்ணை விரித்து சிரித்தபடி அவள் கூற,

    ஹை.. நம்ம தெண்டு பேதும் மேச்சிங் மேச்சிங்.. ஆமால்ல மிஸ்.. என்றது அவளை விட அதிகமாகக் கண்ணை விரித்து!

    ம்.. ஆமா.. மேச்சிங் மேச்சிங்.. என்று சொல்லி சிரித்தாள் நளினா!

    அந்தக் குழந்தை அவளுடைய கன்னத்தில் பச்சென்று முத்தமொன்றை பரிசாகத் தந்துவிட்டு ஓடிப் போக, நளினா வியந்து புன்னகைத்தபடியே நகர்ந்தாள்.

    இவள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட (staff room) அறைக்குச் சென்று தன்னுடைய அலமாரியைத் திறந்து தன் பொருட்களை எடுத்துக் கொண்டு அதை மீண்டும் கவனமாகப் பூட்டினாள்.

    நளினா! நா லிஸ்டெல்லாம் செக் பண்ணிட்டேன்! ஆஃபீஸ்ல குடுத்திட்டு கிளம்பலாமா? வேற எதாவது வேலை இருக்கா? என்று கேட்டாள் சற்று முன் வந்த நளினாவின் தோழி.

    அவ்ளோதான் ப்ரியா! கிளம்ப வேண்டியதுதான்! நீ ஆஃபீஸ் ரூம் போ! பிரின்சி கூப்பிட்டாங்களாம்! நா என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்!

    பிரின்சி கூப்பிட்டாங்களா.. என்ன விஷயம்?

    தெரில! பாத்துட்டு வரேன்!

    ம்.. சரி! நா இத குடுத்துட்டு பிரின்சி ரூம் வாசல்ல வெய்ட் பண்றேன்! நீ சீக்கிரம் வா! என்று விட்டுப் போனாள் பிரியா!

    நளினா தலைமை ஆசிரியையின் அறை நோக்கி நடந்தாள்.

    முனைவர் எஸ்டெல்லா ஆப்ரகாம் M. Sc., M. Ed., Ph. D.

    Dr. Estella Abraham M. Sc., M. Ed., Ph. D.

    என்று ஆங்கிலத்நிலும் தமிழிலும் பெரியதாக வெள்ளை நிற கதவின் மேல் பொன்னிற எழுத்துக்கள் கொண்ட செந்நிறப் பலகை மின்னியது!

    மெலிதாக இரு முறை தட்டிவிட்டு,

    மே ஐ கம் இன் மேம்? என்று கேட்டுக் கொண்டே உள்ளே எட்டிப் பார்த்தாள் நளினா!

    யா.. நளினா.. மை கேர்ள்.. ப்ளீஸ் கம் இன்! என்று கூறி வாய் நிறைய சிரிப்புடன் அவளை வரவேற்றார் பள்ளியின் பிரின்சிபால் எஸ்டெல்லா!

    ஆங்கிலோ இந்தியப் பெண்ணான அவர் வெள்ளை நிறத்தில் கொஞ்சம் குண்டாக இருந்தார். வெள்ளை நிற ரவிக்கையுடன் சாம்பல் நிறத்தில் கஞ்சி போட்ட பருத்தி சேலையை மடிப்பு கலையாமல் அணிந்திருந்த பாங்கு அவருக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுத்தது! கழுத்தில் மெலிதாய் ஒரு மணி மாலை! அதன் நடுவில் ஒரு சிலுவை டாலர்! காதில் மிகச் சின்னதாய் ஒரு காதணி! சால்ட் அன் பெப்பராக மாறிவிட்டிருந்த முடிக்கு, பாய்கட் செய்திருந்த தலையலங்காரமும் கண்களில் அணிந்திருந்த பவர் கண்ணாடியும் அவர் முகத்துக்கு மிகப் பொருத்தமாகவே இருந்தது! முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் அவருடைய வயது எழுபதுக்கு மேல் இருக்கலாம் என்று கூறினாலும் அந்த சுருக்கங்களுக்கும் அவருடைய சிரிப்புக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல ஐந்து வயது குழந்தையாய் இருந்தது அவருடைய மலர்ந்த சிரிப்பு!

    என்ன கூப்பிட்டீங்கன்னு பூங்காவனம் வந்து சொன்னாரு..

    எஸ் நளினா! நீ ஏதோ பேங்க் லோனுக்கு அப்ளை பண்ணியிருக்கன்னு சொன்னியே!? என்று அவர் ஆரம்பிக்கும் போதே நளினாவின் முகம் மலர்ந்தது! அதற்கு மாறாகக் கண்கள் குளம் கட்டியது!

    எஸ் மேம்!

    ப்ராஞ்ச் மேனேஜர் கிட்ட உன்னப்பத்தி சொல்லியிருக்கேன்! என்னால என்ன உதவி பண்ண முடியுமோ அதப் பண்றேன்னு சொல்லியிருக்கார்! நீ உடனே அவரப் போய்ப் பாரு! கண்டிப்பா நீ எதிர் பாக்கறது நடக்கும்! என்றார் அவர்.

    ரொம்ப தேங்க்ஸ் மேம்! சாமி மாதிரி உதவி செஞ்சிருக்கீங்க.. எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியல.. என்று அவருடைய கையைப் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

    ஹே.. சில்லி கேர்ள்! நா சாமியில்ல.. ஒன்லி ஹீ இஸ் அவர் லார்ட்! டோன் க்ரை! என்று அங்கே மாட்டப்பட்டிருந்த இயேசு கிருத்துவின் படத்தைக் காட்டி தன் நெஞ்சில் சிலுவைக் குறி போட்டுக் கொண்டார் எஸ்டெல்லா!

    நளினா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு,

    இன்னிக்கே போய் பாக்கவா மேம்! இப்ப அவர பாக்க முடியுமா? என்று கேட்டாள்.

    ஆமா.. இப்பவே போய்ப் பாரு! என்றார் கனிவான குரலில்!

    தேங்க்யூ மேம்! தேங்க்யூ சோ மச்! என்று அவருக்கு இதயத்திலிருந்து நன்றி கூறிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள்!

    காட் ப்ளஸ் யூ மை சைல்ட்! என்று கூறியவர் அவளுக்காக அந்த இறைவனிடம் தன் வேண்டுதலை வைக்கவும் மறக்கவில்லை!

    வெளியே வந்தவளின் கலங்கிய கண்களைப் பார்த்த பிரியா, குழம்பினாள்!

    ஹே.. அழுதியா என்ன? ஆச்சர்யமா இருக்கு.. அதிர்ச்சியாவும் இருக்கு.. நம்ம மேம் தனியா கூப்பிட்டு திட்றாங்களா.. அப்டி என்னடீ தப்பு பண்ணின.. என்று பிரியா கேட்க,

    ஐயியோ.. நம்ம மேம் போய் திட்டுவாங்களா.. பேங்க் லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தேன்ல.. அதான்.. மேம் அந்த மேனேஜர் கிட்ட எனக்காக ரெகமண்ட் பண்ணியிருக்காங்களாம்! உடனே என்ன போய் அந்த மேனேஜரை பாக்க சொன்னாங்க!

    ஏய்.. இது ரொம்ப நல்ல விஷயம்ப்பா.. நீ கிளம்பு! சீக்ரம் போ.. ஆல் தி பெஸ்ட்!

    தேங்க்ஸ்ப்பா! நா கிளம்பறேன்! என்று விட்டு ஓட்டமும் நடையுமாக பள்ளியின் வாசல் நோக்கி நடந்தாள்!

    என்னா பிரியா மிஸ்.. நளினா மிஸ் ஏன் இப்டி வேகமா ஓடறாங்க.. நா வேணும்னா அவங்கள என் வண்டியில ட்ராப் பண்ணவா.. என்று கேட்டபடி அலுவலக உதவியாளன் பூங்காவனம் பிரியா அருகில் வந்தான்.

    அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! அவ ஆட்டோல போய்க்குவா... என்று தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு கூறினாள் பிரியா.

    அப்ப சரி.. நீங்க வாங்க.. நா உங்கள ட்ராப் பண்றேன்.. என்று அவன் இளிக்க,

    எனக்கு கால் இருக்கு! நா நடந்து போய்க்குவேன்.. நீங்க உங்க வேலைய பாருங்க... என்று தன் பல்லைக் கடித்துக் கொண்டு கூறிவிட்டு விறு விறுவென நடந்தாள்.

    ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட.. மேனி என்னாகும்.. என்று வேண்டுமென்றே இவளருகில் வந்து பாடிவிட்டுப் போனான் அவன்!

    மொதல்ல பிரின்சி கிட்ட சொல்லி இந்தாள வேலைய விட்டு தூக்க வெக்கணும்! இடியட்! என்று தனக்குள் கூறிக் கொண்டே நடந்தாள் பிரியா!

    அந்த மேனேஜர் எப்டியும் பெரியவராதான் இருப்பார்! என் கஷ்டத்த எடுத்து சொன்னா கண்டிப்பா ஒத்துக்குவாரு.. மேடம் வேற நமக்காக பேசியிருக்காங்க.. கண்டிப்பா ஒத்துக்குவாரு.. ஒத்துக்கணும்.. கடவுளே! அந்த மேனேஜர் லோன் சேங்ஷன் பண்ணிடனும்.. ப்ளீஸ்.. நா உன்னதான் மலை மாதிரி நம்பியிருக்கேன்..

    நளினா மனதிற்குள் சிந்தனை செய்தபடியே ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தாள்!

    தான் வேலை செய்யும் பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கு நளினா சென்று சேரும் போது அரை மணி நேரம் கடந்திருந்தது!

    இவள் வங்கி மேலாளர் அறை வாசலில் நின்று ஒரு முறை இழுத்து மூச்சு விட்டுவிட்டு, தன் மனதில் இறைவனை வேண்டியபடியே உள்ளே செல்ல அனுமதி கேட்டாள்.

    உள்ள வாங்க.. என்ற அனுமதிக் குரல் கேட்க, அவள் உள்ளே நுழைந்தாள்.

    அந்த மேலாளர் இவள் நினைத்ததற்கு மாறாக இளைஞனாகத் தெரிந்தான்! நிறைய படித்துவிட்டு இந்தப் பதவிக்கு நேரடியாக வந்திருக்க வேண்டும்!

    இளைஞனாயிருந்தாலும் அவனுடைய முகம் கடினமாகவே இருந்ததாக நளினாவுக்குத் தோன்றியது! அவன் முகத்திலிருந்து அவன் எப்படிப்பட்டவன் என்று கண்டுபிடிக்க நளினாவால் முடியவில்லை! அல்லது அந்த வித்தை நளினாவுக்குத் தெரியவில்லை எனலாம்!

    ஐயோ! இவ்ளோ சின்னவரா இருக்காரே.. இவரால என் கஷ்டத்த புரிஞ்சிக்க முடியுமா? என்று நினைத்து தவித்தாள் நளினா!

    உக்காருங்க! உக்காந்து சொல்லுங்க! என்றான் அவன் செயற்கையாக வரவழைத்த புன்னகையுடன்!

    அவள் நாற்காலியின் நுனியில் அமர்ந்து கொண்டு மிக மெல்லிய குரலில் கூறினாள்.

    ம்.. நா லோன் அப்ளிகேஷன் போட்டிருக்கேன்.. பர்சனல் லோன்..

    டீடெய்ல்ஸ் குடுங்க.. என்று கேட்க, அவள் அது சம்மந்தமான விவரங்களை அவனிடம் கொடுத்தாள்.

    அவள் கொடுத்த விவரங்களை வைத்து அவளுடைய கடன் விண்ணப்பத்தை தன் மேஜை மேலிருந்த காகிதக் கட்டிலிருந்து தேடி எடுத்தான்!

    அவன் அதை பார்க்கும் போதே,

    எஸ்டெல்லா மேம் கூட இதப் பத்தி உங்க கிட்ட பேசினேன்னு சொன்னாங்க.. என்றாள்.

    எந்த எஸ்டெல்லா.. என்றான் தன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு!

    எங்க ஸ்கூல் ப்ரின்சிபால், டாக்டர் எஸ்டெல்லா ஆப்ரகாம்! என்றாள் அவசரமாக!

    அவன் சிறிது யோசித்துவிட்டு,

    ஓ.. யா.. ஐ ரிமெம்பர்! என்றான் அவன் அசிரத்தையாய்!

    அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கவும் அவனுடைய மேஜையிலிருந்த தொலைபேசிக் கருவி சிணுங்கியது!

    அவன் தன் கையால் ஒரு நிமிடம் என்பது போல இவளிடம் சைகை செய்துவிட்டு சிணுங்கிய தொலைபேசியை எடுத்துத் தன் காதுக்குக் கொடுத்தான்!

    முருகா.. ப்ளீஸ்.. என்று மனதுக்குள் இறைவனை நளினா வேண்டத் தொடங்கினாள்.

    முழுதாக ஐந்து நிமிடங்களை அந்த தொலைபேசி அழைப்பு உறிஞ்சியிருந்தது! தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் இவளுடைய கடன் விண்ணப்பப் படிவத்தை பார்க்கலானான்.

    முழுதும் பார்த்து முடித்ததும், இவளிடம் கேள்விக் கேட்டான்!

    எதுக்குமா லோன் அப்ளை பண்ணியிருக்கீங்க? வீட்டு உபயோகப் பொருள் எதாவது வாங்கப் போறீங்களா?

    இல்ல சார்.. வந்து.. அவள் இழு்தாள்.

    அவன் தன் கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்தான்.

    ம்.. சொல்லுங்க..

    எங்க அம்மாவோட ட்ரீட்மென்ட்டுக்காக.. என்றாள் நளினா!

    ப்ராப்பர்டி எதாவது இருக்கா?

    இல்ல சார்!

    யாராவது உங்களுக்காக ஷ்யூரிட்டி போடுவாங்களா?

    அது..

    இங்க பாருங்க மிஸ்! நீங்க கேட்டிருக்கறது பெரிய தொகை! இது மாதிரி ஹயூஜ் அமௌன்ட்க்கு கண்டிப்பா யாராவது ஒருத்தரோட ஷ்யூரிட்டி வேணும்.. இல்லன்னா ப்ராப்பர்டி கேப்போம்.. இதான் பேங்க் ரூல்ஸ்! அது இல்லன்னா என்னால எதுவும் பண்ண முடியாது!

    கொஞ்சம் மனசு வைங்க சார்! உங்க உதவியால எங்கம்மாவுக்கு நல்ல ட்ரீட்மென்ட் கிடைக்கும் சார்! நா மாசா மாசம் கரெக்ட்டா ட்யூ கட்டிடுவேன் சார்..

    இல்லங்க.. இது என்னால முடியாதுங்க..

    ரொம்ப நம்பிக்கையா வந்திருக்கேன் சார்! எஸ்டெல்லா மேம் கூட நீங்க கண்டிப்பா உதவி பண்றதா சொன்னீங்கன்னு சொன்னாங்க..

    உங்களுக்காக உங்க மேடம் ஷ்யூரிட்டி போடறதா இருந்தா இப்பவே உங்க லோன் அப்ளிகேஷன சேங்ஷன் பண்ணி தரேன்!

    அவங்க..

    உங்களுக்காக சிபாரிசு பண்ற அவங்களே உங்களுக்கு உதவி பண்லன்னா.. உங்கள யாருன்னே தெரியாத நா எப்டிங்க உதவி செய்ய முடியும்! ?!? என்றான் அவன் முகம் மாறாமல்!

    அவள் முகம் விழுந்துவிட்டது! இதோ விழப் போகிறது என்னும்படியாக கண்கள் குளம் கட்டிவிட, அவள் அழாமல் இருப்பதற்காக மிகவும் முயன்றாள்! அப்படியும் ஒரு துளி கண்ணீர் வெளியே வந்தே விட்டது!

    தேங்க்யூ சார்! அன்ட் சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்! என்று கரம் குவித்துவிட்டு எழுந்து வெளியே வந்தாள்!

    இவளுடைய வருந்திய முகத்தைப் பார்த்தவனுக்கு மனம் ஒரு நொடி இளகவே செய்தது! ஆனால் தன்னால் இதற்கு எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டான்!

    வெளியில் வந்த நளினா அங்கே போடப்பட்டிருந்த காத்திருப்போர் இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்! தன் கைகளைக் கொண்டு தன் முகத்தை மூடிக் கொண்டு விசும்பினாள்!

    வெளியில் போனவளையே பார்த்தபடி இருந்தான் அவன்! இவள் அழுவதைப் பார்த்தவனுக்கு கடுப்பாக இருந்தது! இப்டி அழுது சீன் போட்டா ஆச்சா? இவ பெரிசா ரகளை பண்றதுக்கு முன்னால இவள இங்கேந்து வெளிய போக சொல்லணும் என்று நினைத்தபடி யாரையோ அழைக்க முற்பட்டான்! ஆனால் அவள் அதற்குள் சுதாரித்துக் கொண்டாள் போல! சில நிமிடங்களில் அவளே எழுந்து வங்கியை விட்டு வெளியே போய்விட்டாள்!

    ஹப்பாடா.. என்று பெரு மூச்சு விட்டுத் தன்னை சமன் செய்து கொண்டு தன் வேலையில் மூழ்கினான்!

    வெளியில் வந்த நளினா மெதுவாகத் தன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்!

    விஜி.. இந்த பேங்க்லயும் என் லோன் அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆயிடுச்சுப்பா.. இப்ப என்ன பண்ணப் போறேன்னு புரியல.. நீதான் எப்பவும் போல எனக்கு வழி காட்டணும்.. ப்ளீஸ்.. நா திரும்பத் திரும்ப உன்னையே தொந்திரவு பண்றேன்ல.. நா வேற என்னடீ பண்ண முடியும்.. உன்ன விட்டா எனக்கு இந்த உலகத்தில யாருடீ இருக்கா.. எனக்கு தைரியம் சொல்லுடீ.. இந்த சங்கடத்தையும் நா சரியா ஹேண்டில் பண்ணிடுவேன்ல.. நீ என் கூடவே இருக்கன்ற தைரியத்திலதாண்டீ நானும் நடமாடிகிட்டு இருக்கேன்.. சீக்கிரம் வாடி.. உன்ன பாக்கணும்.. உன் மடியில படுத்து ஒரு மூச்சு அழணும்டீ.. எப்ப வருவடீ.. விஜீ.. ப்ளீஸ்.. சீக்கிரம் வாடி..

    சுற்றியுள்ளோர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற உணர்வின்றி அழுதபடியே நடந்து கொண்டிருந்தாள்!

    கண்களில் ஏனடி கார்காலம்?

    கன்னங்களில் இந்த நீர்க்கோலம்?

    தனிமைத் துயரம் சிலகாலம்!

    இனிதாய் மலரும் எதிர்காலம்!

    - என்ன சொல்லப் போகிறாய்?

    2

    அழகான பூ ஒன்று மலர்வது போல அவள் தன் கண்களை மெல்ல மெல்ல விரித்தாள்! கையருகில் தட்டுப்பட்ட கைப்பேசியில் மணி பார்க்க, காலை ஐந்தரை என்றது கைப்பேசி!

    அஞ்சரையாயிடுச்சா.. என்று தனக்குள் கேட்டுக் கொண்டே அவசரமாக எழுந்தாள்!

    வேக வேகமாக எழுந்து ஓடிப்போய் தன்னுடைய பற்குச்சியைத் (toothbrush) தேடி அதில் பற்பசையை (toothpaste) இட்டு நிரப்பிக் கொண்டு தன்னுடைய அறையிலிருந்த பால்கனிக்கு ஓடினாள்!

    எதைப் பார்த்தாளோ, ஒரு நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்டாள்! ஹப்பாடா.. இன்னும் வரல.. என்று நினைத்துக் கொண்டு மெதுவாகத் தன் பல்லுக்கு வலிக்குமோ கையிலிருக்கும் அந்த பற்குச்சிக்கு வலிக்குமோ என்று எண்ணும்படியாகப் பல் தேய்த்தபடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்!

    புலர்ந்தும் புலராத வானில் வெண் பஞ்சு மேகங்கள் மெதுவாக மிதந்து கொண்டிருக்க, காக்கைகளும் புறாக்களும் மற்றும் பெயர் தெரியாத சின்ன சின்னப் பறவைகளும் சத்தமிட்டபடி யாருக்காகவோ காத்திருப்பது போல அங்கிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களின் மாடியில் ஆங்காங்கே அமர்ந்திருந்தன!

    பக்கத்துக் குடியிருப்பிலிருந்து மைதிலியின் இனிமையான குரல் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கத் தொடங்கி மொட்டை மாடியிலிருந்து பின்னணி இசை போல அந்தப் பிரதேசம் முழுக்க ஒலிக்க, மைதிலியின் குரலுக்கு அந்தப் பறவைகளின் கீச்சுக் கீச்சுக் குரல்கள் சந்தமிசைப்பதைப் போலிருந்தது!

    மைதிலியின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் பறவைகள் எல்லாம் தன் சிறகுகளை விரித்துப் படபடத்தன!

    மஞ்சள் பூசிய முகமும் நெற்றி நிறைய குங்குமமும் காய்ந்தும் காயாமலும் இருக்கும் ஈரக் கூந்தலின் நுனி முடிச்சும் அதில் சிறிய மல்லிச் சரமும் மெலிந்த தேகத்தில் பழையதாய் இருந்தாலும் சுத்தாமாகத் துவைக்கப்பட்ட சுங்குடிப் புடவையும் மாறாத புன்னகையுடன் எப்போதும் எதாவது பாடலை முணுமுணுப்பதும் மைதிலியின் அடையாளங்கள்!

    பாடிக் கொண்டே மைதிலி, பறவைகளுக்காகத் தன் புடவைத் தலைப்பில் முடிந்து எடுத்து வந்திருந்த தானியங்களை தரையில் இரைத்தாள்!

    பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் பறந்து வந்து அவள் இரைத்த தானியங்களைக் கொத்த ஆரம்பிக்க, ஏதோ வேடந்தாங்கலே அந்த மொட்டை மாடிக்கு வந்தது போலிருந்தது காவ்யாவுக்கு!

    காவ்யாவின் மனமும் அந்தப் பறவைகளைப் போலவே சிறகடித்துப் படபடத்தது போலிருந்தது!

    பறவைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1