Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruttu Payale
Thiruttu Payale
Thiruttu Payale
Ebook155 pages1 hour

Thiruttu Payale

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அக்ஷித்-வருணாராணி.

தம்பதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள்.

அக்ஷித்தின் மனைவியாகிய வருணாராணி ஒரு திருமண விழாவிற்காக தாய்நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறாள்.

மனைவி அருகில் இல்லாத தனிமையில், கள்ளக்காதலில் ஈடுபடுகிறான் அக்ஷித். அந்தக் கள்ளக்காதல் அவனை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்த, மனைவிக்கு உண்மை தெரியவரும்போது மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், அவன் படும் அவஸ்தைகளை காட்சிக்குக் காட்சி வருணிப்பதே கதை.

கணவன் எத்தனை கெட்டவனாக இருந்தாலும், நம்பிக்கைத் துரோகியாக இருந்தாலும், இறுதியில் மன்னித்து ஏற்றுக்கொள்வது தானே பெரும்பாலான பெண்களின் இயல்பு.

சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கிய அக்ஷித் திருந்தினானா? வருணா அவனை ஏற்றுக்கொண்டாளா? கதைக்குள் சென்று காண்போம்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134505705
Thiruttu Payale

Read more from Hansika Suga

Related authors

Related to Thiruttu Payale

Related ebooks

Reviews for Thiruttu Payale

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruttu Payale - Hansika Suga

    http://www.pustaka.co.in

    திருட்டுப் பயலே...

    Thiruttu Payale…

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 1

    வெளிநாட்டுப் பாணியில் நவீன தோற்றத்துடன் பரந்து கிடந்த வீடு...! தனிமைப்பட்ட அவ்வீட்டுக்குள் அளப்பறிய காதலுடன் இளமையான இரண்டு ஜீவன்களின் அந்தரங்கக் களியாட்டம்.

    அக்ஷித்... ஓ மை லவ்... வசியம் கலந்த குரலில் அவன் வஜ்ரதேகத்தின் மீது தன் முத்தங்களைப் பரீட்ஷித்தாள் வருணாராணி.

    ராணி... மை டார்லிங்... யூ ஆர் ஸோ பியூட்டிஃபுல்... சூடான குரலில் சொன்னவன், முரட்டு வேகத்தில் அவள் இதழ்களைச் ஸ்பரிசித்தான்.

    ரோஜா இதழ்களைக் கவ்வியதுபோல் என்னவொரு மென்மை...! கன்னத்தில் அழுந்தப் பதிந்த அவன் பற்களின் வேட்கையோடு, முதுகில் வெறித்தனமாக வரியிட்ட பெண்ணின் நகங்கள்...!

    கண்டிப்பா இந்தியாவுக்குப் போய்த்தான் ஆகணுமா ராணி? ஒருநாள் கூட நீயில்லாம என்னால இருக்கமுடியாது... ஆண்மகனின் குரலில் தலைதெறித்துவிடும் காமம்...!

    எனக்கு மட்டும் உங்களை விட்டுப் பிரிந்திருக்க ஆசையா? இந்தத் தலைமுறையில் எங்கள் வகையில் நடக்கும் கடைசித் திருமணம். இனி அடுத்த தலைமுறை வளர்ந்து வரும்வரை பெரிய விசேஷங்களுக்காகக் காத்திருக்க வேண்டியதுதான். நீங்களும் என்னுடனே வரலாமே அக்ஷித்... அலுவலக வேலைப்பளு எப்போதுதான் இல்லை? திருமணத்திற்கு ஒருநாள் முன்புதான் வருவேன் என்ற உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யலாமே...!

    ம்ஹூம்... அது மட்டும் முடியவே முடியாது... இங்கே ஆயிரத்தெட்டு வேலைகள்... ஆனால், அவற்றை எல்லாம் விட இந்த வருணா எனக்கு முக்கியம்... பூவினும் மெல்லிய தேகத்தை தன் வல்லிய கரங்களால் புரட்டிப் போட்டு அவள்மீது முழுமையாக ஆரோகணித்தான்.

    ஆஹ்...! ஆரோக்கிய பலம் போதவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் அணைக்கும் போதெல்லாம் எனக்கு மூச்சு முட்டுகிறது. காதோரம் இரகசியம் பேசினாள்.

    ராணிம்மா... பெண்களின் தேகம் மெல்லிறகைப் போன்றது. ஆனால், எனக்குள் இப்போது கொழுந்துவிட்டு எரியும் தீயில்... அந்த மெல்லிறகு என்னாகுமோ...

    வேட்கையின் மௌனம் அந்த அறையை வியாபிக்க, காதல் பரிமாற்றங்களின் இரகசியச் சத்தங்கள் காற்றோடு கதை பேசியது.

    மறுநாள் பகல்நேரம்... அந்த சர்வதேச விமான நிலையத்தில்...!

    டேக் கேர் டியர்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ... அவ்வளவு சீக்கிரமாகவே இந்தியாவுக்குப் புறப்பட்டு வாங்க... ஐ வில் பி வெயிட்டிங் ஃபார் யூ... கண்களில் மெல்லிய நீர்ப்படலத்துடன் தன் கணவனிடமிருந்து விடைபெற்றாள் வருணாராணி.

    மனைவியை விட்டுப் பிரிந்திருக்கப் போவது மிகச் சிறிய இடைவெளியே என்றாலும், அக்ஷித்துக்கு அது சற்றே சவாலான விஷயம்...!

    வருணா அவன் வாழ்வில் வந்த தேவதை...! அபிரிமிதமான அழகு, அந்தஸ்து, ஆஸ்தி, கல்விஞானம் என்று எதற்கும் குறைவில்லாதவள்.

    என் பாட்டனுக்கெல்லாம் முப்பாட்டன் என்று ஒருவர் இருந்திருப்பார் அல்லவா...! பரதகண்டத்தின் வடபகுதியை ஆண்ட சக்கரவர்த்தி ஒருவரின் அரசவையில்... அவர்... மிகச் சிறந்த பதவியில் இருந்தாராம்...! இவை எங்கள் குடும்பத்தில் மூதாதையர் வழியாக வந்த செவிவழிச் செய்தி மட்டுமே...! ஆனால், எங்கள் முன்னோர் பற்றி வரலாற்றுக் குறிப்புகளில் எதுவும் இடம் பெறவில்லை...

    பெருமூச்சோடு அவள் தன் பிறந்த வீட்டுப் பெருமையைச் சொல்லும் போதெல்லாம் அவனுக்குள் புரியாத திமிரும், கர்வமும் தலைதூக்கும்.

    வரலாற்றை எழுதியவன் நானாக இருந்தால், நிச்சயம் அந்தப் பாட்டனுக்கெல்லாம் பாட்டனைப் பற்றிச் சிறு குறிப்பேனும் வரைந்திருப்பேன். சிறந்த வழித்தோன்றலின் குணங்கள் அனைத்தும் உன் நடவடிக்கைகளில் தெரிகிறது ராணி. இது இரத்தத்திலேயே ஊறியிருக்கும் விஷயமல்லவா...

    அவளிடம் தன் காதலைத் தெரிவிக்கும் தருணங்களில் தவறாமல் இதையும் சொல்லிவிடுவான்.

    திருமணமாகி சில மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில், வாழ்க்கை தித்திப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. வழக்கமான கணவன்-மனைவி சண்டை சச்சரவுகள் என்று இதுவரை எழவில்லை.

    ஆசை அறுபதுநாள்... மோகம் முப்பது நாள்... அதன்பிறகு தம்பதிகளுக்குள் காதல் குறைந்து அடிதடி மட்டுமே என்றெல்லாம் மற்றவர்கள் பீலா விடுவது சற்று மிகைப்படுத்தலோ?

    தெவிட்டாத காதலுடன் குல்ஃபி ஐஸ்க்ரீம் போல வாழ்க்கை மிகச் சிறப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

    என்.ஆர்.ஐ. மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அடம்பிடித்து திருமணம் செய்து கொண்டாளாம். அவளே அவனிடம் அடிக்கடிச் சொல்லுவாள்.

    மனைவியைப் பற்றி நினைத்துக்கொண்டே வந்தவனின் கவனத்தை அலைபேசி ஈர்த்தது.

    ஷெரீன்... வேர் ஆர் யூ? ஆர்வமானான்.

    உன் வாகனத்தை ஸ்லோ செய்து இடது பக்கம் திரும்பிப் பார்... பதில் வந்தது... குதூகலமான குரலில்...!

    வடிவான தேகம்... குட்டைப்பாவாடை... உடம்போடு ஒட்டிய சட்டை... காதோடு வெட்டப்பட்ட ஐவரி நிறக் கூந்தல்... இருபத்துநான்கு மணிநேரமும் முகத்தில் குடியிருக்கும் புன்னகை... ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு மொழிகளைக் கலந்து கட்டி அடிப்பவள்... இதுதான் ஷெரீன்.

    சாலையோரமிருந்து அவனைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தாள் ஷெரீன். அந்நாட்டின் போக்குவரத்து விதிகளை மதித்து மெல்ல தன் வண்டியை ஓரம்கட்டி அவளை அதில் ஏற்றிக்கொண்டான்.

    ஊப்ஸ்... நாம் இருவரும் சந்தித்து எத்தனை நாட்களாகிவிட்டது... தொலைந்த சந்தோஷம் திரும்பக் கிடைத்த தினுசாய் கேட்டாள்.

    ‘ஆம்... நாம் சந்தித்து நாட்களாகித்தான் விட்டது...’ முணுமுணுத்தான்.

    உன் புதுமனைவி ஊருக்குப் போகிறாள் என்ற தகவல் கிடைத்ததுமே புறப்பட்டு வந்துவிட்டேன் பார்த்தாயா?

    ஆனால், நான் பழைய அக்ஷித் இல்லை... ஒரு தோழியாக மட்டுமே உன்னை வரவேற்க முடியும்.

    காருக்குள் எக்கோ அடிக்கும் அளவுக்குச் சிரித்தாள் ஷெரீன். கவர்ச்சியான உடையில் கலசங்கள் குலுங்கின.

    பொய் சொல்கிறாய்... உன் உள்ளத்தின் கபடநாடகத்தை உன் கண்கள் காட்டுகிறதே...! இத்தாலி ஃப்ளைட்டில் செல்ல இருந்தவளை வேலை மெனக்கெட்டு அழைத்தவன் நீ...! உன் மனைவி ஊருக்குச் செல்லும் தகவலை நான் உன்னிடம் கேட்டேனா? நீயாகத் தானே அழைத்துச் சொன்னாய்... இதற்கு அர்த்தம் என்னவோ?

    அவன் காதோரக் கேசத்தில் தன் கை விரல்களை நுழைத்துக் கேட்டாள் ஷெரீன். சொர்க்கத்தில் மிதப்பது போல் இருந்தது. இந்தப் பெண்ணின் அருகாமையில் ஏதோ ஒரு வசியம்...!

    பெண்களை ஏமாற்றுவது என்பது சர்க்கஸ் வித்தை போன்றது...! கரணம் தப்பினால் மரணம்...! அவளிடம் தோற்றுவிட்ட தொனியில் செல்லமாக அலுத்துக்கொண்டான்.

    ஹா... ஹா... என்றாவது ஒருநாள் கரணம் தப்பி நீ உன் புதுமனைவியிடம் மாட்டிக் கொள்ளத்தான் போகிறாய்... அன்றைக்கு இருக்கிறது வேடிக்கை... மீண்டும் குலுங்கிச் சிரித்தாள்.

    அந்தச் சிரிப்பில் தன் வசமிழந்து பார்த்தான். அவளுக்கும் புன்னகை மறைந்து, கண்களில் வேறென்னவோ தொக்கி நின்றது.

    தாகமாக இருக்கிறது... சீக்கிரம் வீட்டுக்குப் போ... அவள் உதடுகள் தாபத்துடன் முணுமுணுக்க... அவனுடைய வேகம் பேய்த்தனமாய் அதிகரிக்க... ஐயகோ... போக்குவரத்து நெரிசல்களைத் தாண்டிப் பறந்து செல்வதற்கு இது ரதம் அல்லவே...!

    வெளிநாட்டுச் சாலைப் போக்குவரத்து...! சட்டதிட்டங்களை மதித்துத்தானே ஆகவேண்டும்.

    அலைக்கழித்த உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டுவர, உதடுகளை அழுந்தக் கடித்துக்கொண்டான். மௌனமாய் சாலையை வெறித்தாள் ஷெரீன்.

    வீடு வந்து சேர்ந்தார்கள். உஷ்ணம் கலந்த ஒரு பெருமூச்சோடு அக்ஷித்தின் வீட்டுக்குள் கால் வைத்தாள் ஷெரீன். ஏதோதோ எண்ணங்கள் அலைபாய, அவற்றை வலுக்கட்டாயமாகப் புறந்தள்ள முயன்றாள்.

    உள்ளே வந்த சில நிமிடங்களில் காபிமேக்கரின் அருகே இரண்டு கோப்பைகளைக் கொலு வைத்தான்.

    என்ன பண்ணப்போறே...

    பார்த்தா தெரியல... அவள் தோளின் வளமான பகுதியில் கைவைத்துத் தன்னருகே இழுத்துக்கொண்டான்.

    "ஸ்டுப்பிட்... இந்த மாதிரி மூட்ல வழக்கமா நாம

    Enjoying the preview?
    Page 1 of 1