Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Verenna... Verenna... Vendum
Verenna... Verenna... Vendum
Verenna... Verenna... Vendum
Ebook346 pages3 hours

Verenna... Verenna... Vendum

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

கணநேர மௌனத்திற்குப் பின் தன் மெல்லிய உதடுகளை செல்போனில் பதித்தாள். அவள் ஒரு முறை கொடுத்ததைப் பலமுறை திருப்பிக் கொடுத்தான் நிதின். உருகி வழிந்தது அந்த வெண்ணிலவு.

ஆம்..! நிலா-நிதின் காதல்..!

நல்ல கணவன் கிடைத்துவிட்டால் ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேண்டும்? கதைக்குள் பல்வேறு கதாபாத்திரங்கள். பாத்திரப் படைப்பு ஒவ்வொன்றும் ஒருவிதம். கூட்டுக்குடும்பத்தின் கலகலப்பு. ஆங்காங்கே கைகலப்பு. யதார்த்தம் தழுவிய வசனங்கள். நிகழ்காலத்துக்கு ஏற்ற ஜனரஞ்சகமான கதை.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134505718
Verenna... Verenna... Vendum

Read more from Hansika Suga

Related authors

Related to Verenna... Verenna... Vendum

Related ebooks

Reviews for Verenna... Verenna... Vendum

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Verenna... Verenna... Vendum - Hansika Suga

    http://www.pustaka.co.in

    வேறென்ன... வேறென்ன... வேண்டும்

    Verenna... Verenna... Vendum

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 29

    அத்தியாயம் – 30

    அத்தியாயம் – 31

    அத்தியாயம் – 32

    அத்தியாயம் – 33

    அத்தியாயம் – 34

    அத்தியாயம் – 35

    அத்தியாயம் – 1

    "கதை என்னும் கற்பனைத் தேரில் பவனி வரும் எங்கள் ரஞ்சிதாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்"

    அன்றைய தபாலில் வந்திருந்த ஐம்பதாவது வாசகர் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

    எஸ்.எம்.எஸ்., ஈமெயில் வாயிலாக வந்த வாழ்த்துக்கள், அலைபேசி வாழ்த்துக்கள் என்று எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.

    ரஞ்சிதா என்ற புனைபெயரில் தமிழ் நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கும் மனோரஞ்சிதத்திடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தாள் வெண்ணிலா.

    அப்பாவின் நண்பர் தனசேகரன், இங்கு செகரட்டரி வேலை காலியாக இருக்கும் விவரத்தைத் தெரிவித்து அவளை வேலைக்குச் சேர்த்தும் விட்டார்.

    எழுத்தாளர் மனோரஞ்சிதம் அவர்களின் தீவிரமான ரசிகர் தனசேகரன். ரஞ்சிதப் பிரியன் என்று அவராகவே தன் பெயரை மாற்றிக் கொண்டவரும் கூட!!

    எழுத்தாளர் ரஞ்சிதம் வரும் மன்றங்களுக்கு, அவருக்கு முன் இவர் ஆஜராகி விடுவார். அவர் எழுத்துக்களின் மேல் அப்படி ஒரு பற்று, வெறி.

    அவருடைய ஒவ்வொரு நாவல் வெளியாகும்போதும் மறவாமல் போன் செய்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுவார்.

    எழுத்தாளருக்கு வீட்டோடு தங்கும்படி கம்ப்யூட்டர் தெரிந்த பெண் உதவியாளர் தேவை என்ற தகவல் தெரிந்ததும் சற்றும் யோசிக்காமல் வெண்ணிலாவை முன்மொழிந்தார்.

    என் நண்பனோட பொண்ணு மேடம். பேரு வெண்ணிலா. சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. என் நண்பன் ரெயில்வே டிபார்ட்மன்ட்ல வேலை பார்த்தவன் மேடம். இப்ப ஸ்ட்ரோக் வந்து படுத்துருக்கான். நண்பனோட பென்ஷனும், இந்த பொண்ணோட வருமானமும் தான், அவங்க குடும்பத்துக்கு ஒரே வழி. கோவையில ஒரு பிரைவேட் கம்பெனியில நாலு மாசம் வேலை பார்த்துட்டு இருந்தா. என்ன காரணமோ தெரியல? வேலை பிடிக்கலன்னு வந்துட்டா. ரொம்ப நல்ல பொண்ணு மேடம். நாலு ஆம்பளைங்க வேலை பார்க்கற இடத்துல இருக்கறதை விட, இந்த மாதிரி சூழ்நிலையில வேலை பார்க்கறது அவளுக்கும் பாதுகாப்பா இருக்கும். நீங்க சரின்னு சொன்னா நேர்ல கூட்டிட்டு வர்றேன்.

    வெண்ணிலாவைப் பற்றிய தகவல்களை அலைபேசியில் தெரிவித்தார் தனசேகரன். அவளைப் பற்றிய குறிப்புகளை ஈமெயிலாகவும் அனுப்பி வைத்தார்.

    நேரில் வரச் சொல்லி அனுமதி கிடைத்ததும் மறுநாளே தனசேகரனும், வெண்ணிலாவும் ஊட்டி நோக்கி புறப்பட்டார்கள்.

    மனோரஞ்சிதம் அவர்களுக்கு ஊட்டி தான் வாசஸ்தலம். அவருக்கு குழந்தை வரத்தை அளிக்க மறந்துவிட்ட இறைவன், வற்றாத ஜீவநதியாய் கற்பனை ஊற்றையும், எழுத்தாற்றலையும் அள்ளிக் கொடுத்திருந்தான்.

    உதகமண்டலத்தின் ஒரு புகழ்பெற்ற பள்ளியில் அவரது கணவர் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்.

    ஐந்து வருடங்களுக்கு முன்பு ரோட்டில் மழைத்தண்ணீரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பி, அவர் கணவரின் உயிரைக் காவு வாங்கிவிட, தனிமையும், புத்தகங்களும், கதைகளுமே தன் உலகம் என்று வாழப் பழகினார் மனோரஞ்சிதம்.

    அவ்வப்போது சொந்தபந்தங்களின் நினைவு வந்தாலும் அவர் எங்கேயும் செல்ல விரும்புவதில்லை. வயதின் காரணமாக மூட்டுவலி, முதுகுவலி என்று ஒவ்வொன்றாய் ஆரம்பிக்க உதவியாளர் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

    முக்கியமாக அவர் எழுதும் கதைகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்யத் தெரிய வேண்டும்.

    முதல் பார்வையிலேயே ரஞ்சிதத்திற்கு வெண்ணிலாவைப் பிடித்துவிட்டது. இ-மெயிலில் பார்த்த புகைப்படத்தை விட நேரில் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள்.

    துடிப்பான தோற்றம். பெயருக்கேற்றபடி நிலவு போன்ற வட்டமான முகவெட்டு. பேசும் பேச்சிலேயே சுறுசுறுப்பும், கனிவும் தெரிந்தது.

    தன்னோடு தங்கினால் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டியிருக்கும் என்று பட்டியலிட்டார் மனோரஞ்சிதம். எதற்கும் முகம் சுளிக்காமல் ஒப்புக்கொண்டாள் வெண்ணிலா. நிலவில் இருக்கும் களங்கம் போல அந்த நிர்மலமான முகத்திலும் ஏதோ சோகம் தென்படுவதாக அவருக்கு தோன்றியது.

    நாட்கள் மெதுவாக நகர்ந்தோட, வெண்ணிலா மனோரஞ்சிதம் வீட்டில் மட்டும் அல்ல... மனதிலும் குடியேறி விட்டாள்.

    குட்மார்னிங் மேடம். உங்களுக்கு ஏலக்காய் டீ என்று அறைக்குள் நுழைந்தவளை ஏறிட்டுப் பார்த்தார்.

    ஊட்டி குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் ஏழு மணிக்கே குளித்து முடித்து தோட்டத்து மலரைப் போல பளிச்சென்று இருந்தாள் வெண்ணிலா.

    கருநீல நிற சூரிதாரும், வெள்ளை நிற துப்பட்டாவும் அவள் நிறத்திற்கு மிகவும் எடுப்பாய் இருந்தது.

    தனக்கும் ஒரு பெண் குழந்தை இருந்திருந்தால் இப்படித்தான் இருப்பாளோ என்று நினைத்துக் கொண்டார்.

    கெய்சர் ஆன் பண்ணியிருக்கேன் மேடம். நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் செடிகளுக்கு தண்ணி ஊத்திட்டு டிபன் ரெடி பண்றேன்.

    நிலா... இன்னைக்கு டிபன் இன்னொரு ஆளுக்கு ஆகற மாதிரி சேர்த்துச் செய்யணுமே. என்னுடைய அண்ணன் மகன் ஊர்ல இருந்து வர்றான். மிஞ்சிப் போனா ஒருநாள்.. இல்லேன்னா இரண்டுநாள் அவன் இஷ்டம் போல இங்கே தங்கிட்டுப் போவான். அதுக்கு மேல அவனுக்குத் தங்கவும் நேரம் இருக்காது. நீ கீழே ரூம்ல இருக்கறதால, இந்த முறை அவனை மாடியில தங்கிக்க சொல்றேன். உனக்கு எதுவும் சங்கடம் இல்லையே?

    ஐயோ... என்ன மேடம்? இது உங்க வீடு. வர்றவங்க உங்க உறவுக்காரங்க. என்னோட சம்மதம் எதுக்கு மேடம்? வர்றவங்களுக்கு என்ன பிடிக்கும்-ன்னு சொன்னா அதையே டிபனா பண்ணிடுவேன்.

    அவனுக்கு சப்பாத்தி, பட்டாணி குருமான்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் ஊட்டி ஸ்வீட் பட்டாணி பச்சையாவே சாப்பிடுவான்.

    ஸ்வீட் பட்டாணி.. வீட்ல ஸ்டாக் இல்லையே மேடம். ஜஸ்ட் டென் மினிட்ஸ். பக்கத்து தெருவுல மாரியண்ணன் கடையில வாங்கிட்டு வந்துடறேன். லஞ்சுக்கும் வெஜிடபிள்ஸ் போதாது. மொத்தமா வாங்கிட்டு வந்துடறேன். நான் வந்த பிறகு நீங்க குளிக்கப் போங்க.

    ரஞ்சிதத்திற்கு முழங்காலில் இருந்து பாதம்வரை நீலகிரித் தைலம் அழுத்தமாய் தேய்த்துவிட்டு பையை எடுத்துக்கொண்டு வேகமாக நடை போட்டாள் வெண்ணிலா.

    வேலையில் சேர்ந்த இந்த இரண்டு மாதத்தில் ஊட்டியில் எது எங்கே கிடைக்கும் என்று ஓரளவு அத்துப்படியாகி இருந்தது.

    ரஞ்சிதத்திற்கு மூட்டுவலி அதிகமாக இருந்ததால் அவரை முடிந்த அளவு ஓய்வுக் கொள்ளச் செய்துவிட்டு, நிலா அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டுச் செய்வாள். வாங்கும் சம்பளத்திற்கு அதிகமாகவே வேலை செய்கிறாளே என்று ரஞ்சிதத்திற்கு மனம் அடித்துக் கொள்ளும்.

    பச்சைப்பட்டாணி, காலிபிளவர், பட்டைபீன்ஸ், வயலட் கோஸ், தக்காளி, கறிவேப்பிலை, புதினா, எக்ஸ்ட்ரா பால் பாக்கெட் என்று மொத்தமாக வாங்கிக்கொண்டு வந்தபோது அரைமணி நேரம் ஆகியிருந்தது.

    கேட் அருகே மாருதி வெர்ஸா நின்றிருக்க, உள்ளே ரஞ்சிதத்தின் பேச்சு சத்தம் கேட்டது.

    வாசலில் செருப்பை விட்டுவிட்டு உள்ளே நுழைந்தவள், சோபாவில் உட்கார்ந்து இருந்தவனைப் பார்த்து ஆயிரம் வோல்ட் மின்சாரத்தால் அடிவாங்கியவள் போல் கிறுகிறுத்துப் போனாள்.

    இவன் எப்படி... இங்கே?

    பூமிப்பந்து தாறுமாறாக சுழலும் போல இருந்தது. கீழே விழுந்துவிடாமல் இருக்க அருகில் இருந்த கதவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் நிலா.

    வாம்மா வெண்ணிலா. இவன் தான் என் அண்ணன் மகன் நிதின்குமார். கோவையில ராஜபிரபாத் க்ரூப்ஸ்-ன்னு கேள்விப்பட்டு இருப்பியே. அந்தக் குடும்பத்துல மூணாவது வாரிசு. நிதின் கண்ணா...! புதுசா ஒரு செகரட்டரி அப்பாயின்ட் பண்ணதா சொன்னேனே..! அந்தப் பொண்ணு இவதான். பேரு வெண்ணிலா.

    சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்தாரோ என்னும்படி அவளை எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் நிதின்.

    நடுங்கும் விரல்களோடு அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள். நெருப்புத்தணலாய் தகித்த அவன் பார்வையின் உஷ்ணத்தைத் தாங்கமுடியாமல் விடுவிடுவென்று உள்ளே சென்றாள் வெண்ணிலா.

    யாரை இனி பார்க்கவே கூடாது என்று நினைத்திருந்தாளோ அவனே ரஞ்சிதத்தின் மருமகனாக வந்து உட்கார்ந்து இருப்பான் என்று அவளுக்கு ஜோசியமா தெரியும்?

    மனம் படபடவென்று அடித்துக்கொள்ள குருமாவுக்குத் தேவையான பட்டாணியை உரிக்கத் தொடங்கினாள். கை சொன்ன பேச்சைக் கேட்க மறுத்து அடிக்கடி தவறவிட்டது.

    நிலா... நான் குளிச்சிட்டு வர்றேன். அவனுக்கு காபி போட்டுக் கொடும்மா. அவனுக்கு டீ பிடிக்காது. என்று சொல்லிவிட்டு குளியலறை நோக்கிச் சென்றார் ரஞ்சிதம்.

    ஐயோ காபியா? அவன் முன்னே எப்படிப் போய் நிற்பது?

    பாலை அடுப்பில் வைத்துச் சூடுபடுத்தினாள். காபி எந்தப் பக்குவத்தில் இருந்தால் அவனுக்குப் பிடிக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

    ஜீனி டப்பாவை எடுக்கும்போது கை நடுங்க, கீழே விழ இருந்த டப்பாவை அவளருகே நீண்ட கரம் தாங்கிப் பிடித்தது.

    அவன்தான்...! சமையலறைக்கே வந்துவிட்டான். நிலாவுக்கு அவனைத் திரும்பிப் பார்க்கவே பயமாக இருந்தது.

    இங்க வந்து சமையல்காரி வேலை பார்க்கத்தான் என்கிட்ட சொல்லாம ஓடி வந்துட்டயா?

    அவனது ஆத்திரமான குரல் காதருகே கேட்க ஒரு கணம் கண்களை மூடித் திறந்தாள் வெண்ணிலா.

    பால் கிண்ணத்தை துணி கொண்டு எடுக்கச் சென்றவளின் கையை அவன் இறுக்கமாய்ப் பிடிக்க மணிக்கட்டே இறுகிவிடும் போல வலித்தது.

    ப்ளீஸ் விடுங்க நிதின். என்று அவன் பக்கம் திரும்பாமலேயே மெல்லிய குரலில் கூறினாள் வெண்ணிலா.

    இதைப் பாருடா. என்னோட பேர் கூட ஞாபகம் இருக்கா? மொத்தமா நீ எனக்கு தண்ணி தெளிச்சிட்டதா நினைச்சேன். ஏன்...டி என்கிட்ட சொல்லாம வேலைய விட்டுப் போனே?

    அன்பு மிகுதியானாலும், கோபம் மிகுதியானாலும் டி போட்டுத்தான் பேசுவான். மறுபடியும் டி போட்டுப் பேசுங்களேன் என்று அவளே கேட்டு வாங்கி ரசித்தச் சுவைத்த காலம் உண்டு.

    நிலாவின் முகத்தை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பினான் நிதின். அவனைப் பார்க்க மறுத்து கண்களை இறுக மூடியிருந்தாள். மூடிய கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

    எதுக்கு இந்த நீலிக்கண்ணீர்? நிலா நிலான்னு உன்னையே சுத்தி வந்தவனை எட்டி உதைச்சிட்டு இந்தப் பாசாங்கு எதுக்கு?

    வார்த்தைகள் அமிலமாய் கொட்டியது. சொற்களின் வலியைத் தாங்கிக்கொண்டு அவனுக்கு காபி கலந்து கொடுத்தாள். கை மட்டும் தான் அவனை நோக்கி நீண்டதே தவிர பார்வை அவன் முகத்தை சந்திக்கவில்லை.

    நீ கொடுக்கறதை நம்பி குடிக்கறதை விட நல்லபாம்பு விஷத்தைக் குடிச்சிட்டு போகலாம். அவள் கண்முன்னே காபியை சிங்கில் கொட்டினான் நிதின்.

    துடித்துப்போய் நிமிர்ந்து பார்த்தாள் நிலா.

    உன் உதடுபட்டால் ருசியாக இருக்கும் என்று கோப்பையை வேண்டுமென்றே அவள் உதட்டில் அழுத்திவிட்டுப் பருகியவன்...! இன்று அவள் கலந்த காபி விஷமாமே?

    பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் சட்டென்று சமையல்கட்டில் இருந்து வெளியேறி ஹாலுக்குச் சென்றான் நிதின்.

    பருகாமலே காலியான காபி தம்ளர்களை சின்க்கில் போட்டுவிட்டு சப்பாத்திக்குத் தேவையான மாவை பேசினில் பிசைந்து மூடி வைத்தாள் நிலா.

    கைகள் பரபரவென்று குருமாவுக்குத் தேவையானதை எடுத்து வைக்க நினைவுச் சக்கரம் தன் போக்கில் சுழன்று அவனை முதன்முதலாக சந்தித்த நாளை திரைப்படக் காட்சியாக கண் முன்னே கொண்டு வந்தது.

    அத்தியாயம் - 2

    சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். கோவை ASR திருமண மண்டபம். மாடிப்படியின் வளைவுகளில் ஏறிக் கொண்டிருந்தான் நிதின். திடீரென்று ஐம்பது கிலோ பூக்குவியல் தன் மீது மழையாய் வந்து பொழியும் என்று சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.

    அன்று பட்டுப்புடவை கட்டும்போதே வெண்ணிலாவுக்கு சற்று பயமாகத் தான் இருந்தது. எந்நேரமும் சுரிதாரில் இருந்தே பழக்கம்.

    இன்று மணப்பெண் ப்ரியாவின் தோழிகள் அனைவரும் ஒன்றுபோல புடவை கட்டுவது என்று தீர்மானம் ஆகியிருக்க,

    வேறுவழியில்லாமல் அப்படிச் சொருகி, இப்படிச் சொருகி, அவளை, இவளை உதவிக்கு அழைத்து ஒரு வழியாக கட்டி முடித்து கீழே இறங்கி வந்தபோது, அலைபேசியை அறையிலேயே மறந்துவிட்டு வந்தது ஞாபகம் வந்தது.

    தோழிகள் கல்யாண மேடைக்குச் சென்றுவிட, வெண்ணிலா தன் அலைபேசியை எடுப்பதற்காக மீண்டும் தன் அறைக்குச் சென்றுவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

    சற்றும் எதிர்பாராத வகையில் புடவையின் சரிகை கால் நகத்தில் சிக்கி நிலை தடுமாறி விழவைத்தது.

    ஆ..ஆஆ என்று கத்திக்கொண்டே படியில் ஸ்கேட்டிங் விட்டவளை எதிரே வந்தவன் அழகாய்த் தாங்கிக்கொண்டான்.

    அவன் அப்படித் தாங்கி இருக்காவிடின், விழுந்த வேகத்தில் நிலாவுக்கு நான்கு பற்களாவது காணாமல் போயிருக்கும்.

    முஹூர்த்தநேரம் என்பதால் அத்தனை பேரும் திருமண அரங்கில் குழுமி இருந்தார்கள். மாடிப்படிகளும், அறைகளும் வெறிச்சோடிக் கிடந்தன.

    மாப்பிள்ளைக்கு தரவேண்டிய பரிசுக் காசோலையை மறந்து போய் சூட்கேசிலேயே வைத்துவிட்டான் நிதின்.

    அதை எடுப்பதற்காக வந்தபோது இப்படியொரு சுகமான அனுபவம்.... அழகிய பெண் என்னும் ரோஜாக் குவியல் அவன் மேல் வந்து விழுந்தது. அப்படி ஒரு தேவதையை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட யாருக்கு மனசு வரும்?

    என்ன நடந்தது என்று புரிந்து அவளாக அவனிடமிருந்து விலகும் வரை அவன் அவசரப்....பட...வே இல்லை.

    தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவன் அணைப்பில் இருந்து விலகியவள் சாரி சார்... புடவை தடுக்கிடுச்சு. மிஸ்டேக் இஸ் மைன். தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ். என்று கண்கள் சுருங்க அவனிடம் மன்னிப்புக் கேட்டாள்.

    அவள் கேட்ட விதமே சிறு குழந்தை ப்ளீஸ்... ப்ளீஸ்... என்று கெஞ்சுவது போல இருந்தது.

    நான் உங்க புடவைக்கும், இந்த மாடிப்படிக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா மன்னிப்பு கேட்கறீங்க.

    அழகாய் சிரித்துவிட்டு அவன் நான்கே தாவலில் படிகளைக் கடந்து ஏறினான். மேலே நிமிர்ந்து பார்த்தவள் அவன் போய்விட்டதை அறிந்து லேசாகப் புடவையை உயர்த்தி கால் கட்டைவிரலைப் பார்க்க அங்கே நகம் அரைகுறையாய் உடைந்து ரத்தக்கறை தென்பட்டது.

    வலி தாங்காமல் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்தவளை அடிபட்டு இருக்கா? என்ற குரல் கலைக்க.... அவனேதான்!!

    போய்விட்டான் என்று நினைத்தவன் மேல்படியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். அதற்கும் சேர்த்துத் தலையில் கைவைத்துக் கொண்டாள் வெண்ணிலா.

    யா...! நகம் தாறுமாறா உடைஞ்சு போச்சு. லைட்டா ப்ளீட் ஆகுது. ஒரு ரெண்டு நிமிஷத்துல சரி ஆயிடும். என்று வலியைத் தாங்கிக்கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

    அந்தப் புன்னகைப் பூவை ரசித்தவன் சரேலென்று விலகிச் செல்ல, மெதுவாக எழுந்து படி இறங்கினாள் வெண்ணிலா. ஓரிரு படிகள் மட்டுமே இறங்கிய தருவாயில் மீண்டும் ஷூவின் ஒலி கேட்க, அவனைத் தவிர வேறு யாராய் இருக்க முடியும்?

    வெயிட்... அப்படியே நடந்தா உடைஞ்ச நகத்துல மறுபடியும் புடவை சிக்கிகிட்டே இருக்கும். ஒவ்வொரு முறை நீங்க விழும்போதும் உங்களைத் தாங்க இந்த நிதின் வருவானா? உட்காருங்க... நகத்தைக் கட் பண்ணிட்டு காயத்துக்கு மருந்து போட்டுட்டு போங்க.

    நெயில்கட்டரை அவளிடம் நீட்டினான். கால் கட்டைவிரலை தொட்ட வேகத்தில் வலி உயிர்போக ஸ்ஸ்ஸ் என்று குரல் கொடுத்தாள் வெண்ணிலா.

    ஐ வில் ஹெல்ப் யூ வெடுக்கென்று கட்டரை வாங்கி அவனே அவள் பாதங்களைத் தொட, இல்ல வேண்டாம் என்று பாதங்களை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

    ஹலோ... பார்த்தா படிச்ச பொண்ணா இருக்கீங்க. ஒரு பிரெண்டுக்கு அடிபட்டா செய்யமாட்டோமா? அந்த மாதிரி நினைச்சுக்கோங்க. நீங்க பிகு பண்ணிக்கிட்டு இருந்தா அங்க முஹூர்த்தமே முடிஞ்சிடும்.

    வலுக்கட்டாயமாக அவள் பாதத்தை இழுத்துப் பிடித்து பஞ்சினால் ரத்தத்தை துடைத்துவிட்டு நகத்தை சீராக்கினான் நிதின். பல்லைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்துக் கொண்டாள் வெண்ணிலா.

    மனசுக்குள்ள தாமரைப்..பூ பூக்கணுமே? திடீர்..ன்னு மழை பெய்யற மாதிரி இருக்குமே? சுத்தியும் நாலு பொண்ணுங்க ஓடுவாங்களே?

    என்ன சொல்றீங்க? என்ன தாமரைப்பூ? என்ன மழை? புரியாமல் கேட்டவளை ஒரு நிமிடம் குறும்பாக உற்றுப் பார்த்தான்.

    சினிமால இந்த மாதிரி ஒரு அழகான ஹீரோ... ஹீரோயினைத் தொட்டவுடனே... பூ பூக்கற மாதிரி, சில்லுன்னு மழை பெய்யற மாதிரி ஏதாவது ஷாட் வைப்பாங்களே... அந்த மாதிரி ஏதாவது மனசுக்குள்ள.....

    சிரித்துக்கொண்டே அவள் காயத்தின் மீது மருந்துப்பொடி தூவியவனை முறைத்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

    ஹலோ மிஸ்டர் ரவுசுராஜா... இங்க வலி உச்சந்தலை வரைக்கும் நச்சுநச்சுன்னு அடிக்குது. மழையாவது, பூவாவது? ஆனா நல்லா காமெடி பண்றீங்க சார். சந்தடி சாக்குல அழகான ஹீரோன்னு உங்களை நீங்களே சொல்லிகிட்டீங்களே. அதைச் சொன்னேன். ஆர் யூ எ மெடிகல் ப்ராக்டீஷனர்? முதலுதவி சமாசாரம் எல்லாம் கையிலேயே வெச்சிருக்கீங்க.

    உங்க பேர் என்னன்னு சொன்னா நான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றேன். அவளைச் சீண்டிப் பார்த்தான் நிதின்.

    வெண்ணிலா... பூசநட்சத்திரம்... கடகராசி... சொந்தஊர் உடுமலைப்பேட்டை... இப்போ வந்த ஊர் கோவை என்னும் கோயம்புத்தூர்... ப்ரியா என்னும் தோழியின் திருமணத்திற்காக...! போதுமா... இன்னும் ஏதாவது தெரியணுமா? அவன் போக்கிலேயே பதிலடி கொடுத்தாள்.

    ஒரு நிமிடம் அவளைத் திகைப்பாய் பார்த்தவன் சட்டென்று சுதாரித்துக் கொண்டான்.

    வெண்ணிலா... சூப்பர்ப் நேம்... ஆனா பேருக்கும், பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கு... நிலான்னாலே குளுமை, அமைதின்னு சொல்லுவாங்க. இங்க வானிலை அறிக்கை மின்னலுடன் கூடிய மழையா?

    என்னைப் பற்றிக் கேட்டீங்க இல்ல? நான் பொள்ளாச்சில ஒரு ப்ரைவேட் காலேஜ் லெக்சரர். ப்ளஸ் பாஸ்கெட் பால் ப்ளேயர்...! டிஸ்ட்ரிக்ட் டீம் அண்ட் சம்டைம் ஸ்டேட் டீம்ல விளையாடறது உண்டு. இன்னைக்கு டிஸ்ட்ரிக்ட் டீம் மேட்சுக்காக திருச்சி போகணும். மணமகன் என்னோட க்ளோஸ் பிரெண்ட். அவன் மேரேஜ் அடென்ட் பண்ணாம போனா சும்மா விடுவானா? என்னை மாதிரி ப்ளேயர்ஸ் எப்பவும் இந்த மாதிரி கிட் கையில வெச்சிருப்போம். ஓகே மேடம். யூ ஆர் ஆல்ரைட் நௌ. இப்போ முஹூர்த்த நேரம் நெருங்கியாச்சு. உங்களுக்கு கால்கட்டும் போட்டாச்சு.

    கடைசியில் அவன் விஷமத்தனமாக முடிக்க ஒரு கணம் திடுக்கிட்டுப் போய் பார்த்தாள் வெண்ணிலா.

    பேச்சில் நான் எப்படி... என்பதுபோல அவன் புருவங்களை உயர்த்த அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள். வசீகரிக்கும் அந்த புன்னகையில் தன் வசமிழந்து நின்றான் நிதின்.

    இனி மேட்ச் விளையாடுன மாதிரி தான் என்று அவன் தன் நெஞ்சைத் தடவிக் கொள்ள மீண்டும் கலகலப்பாய் சிரித்தாள்.

    அவன் கை கழுவிக்கொண்டு வர திருமண அரங்கிற்கு இருவரும் இணைந்தே நடந்தார்கள். அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டான் நிதின்.

    எந்த காலேஜ்?  என்ன படிக்கிறீங்க?

    யூஜியோட ஸ்டாப் பண்ணிட்டேன் சார். வேலை தேடணும். வீட்டுச் சூழ்நிலை அப்படி..! அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்து படுத்துருக்கார். பென்ஷன் மட்டும் தான் வருது. ஸோ அட் பிரசன்ட் ஐ நீட் எ ஜாப்..! நாளைக்கு இந்த ஊர்லயே ஒரு இன்டர்வ்யூ இருக்கு. பெரிய கம்பெனி.... ராஜப்ரபாத் க்ரூப்ஸ் கேள்விப்பட்டு இருப்பீங்களே...! அவங்க கன்சர்ன் தான். உக்கடம் பிராஞ்ச்...! ஆனா வேலை கிடைக்கறது தான் சந்தேகம். சலிப்போடு சொன்னாள் நிலா.

    இவ்வளவு அவநம்பிக்கை ஏனோ?

    "செகரட்டரி போஸ்ட் வேகன்சி சார். கூட்டம் அலைமோதும். நான் இப்போ தான் டிகிரி முடிச்சிருக்கேன் சார். இதுவரைக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1