Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engirundho Vandhan
Engirundho Vandhan
Engirundho Vandhan
Ebook178 pages1 hour

Engirundho Vandhan

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

I am basically from Chennai, a Fine Arts graduate from Stella Maris College. Worked in various positions and settled to be a freelance web and print media designer.

Always had a great passion for Thamizh language and music. As an avid reader of all genres of Thamizh writers, it was a natural instinct to get into writing in 2012.

I have written 28 novels, multiple short stories and poetry. I maintain blogs in English and Thamizh.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123702869
Engirundho Vandhan

Read more from Sudha Sadasivam

Related to Engirundho Vandhan

Related ebooks

Reviews for Engirundho Vandhan

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engirundho Vandhan - Sudha Sadasivam

    http://www.pustaka.co.in

    எங்கிருந்தோ வந்தான்

    Engirundho Vandhan

    Author:

    சுதா சதாசிவம்

    Sudha Sadasivam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sudha-sadasivam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் ஒன்று

    அத்தியாயம் இரண்டு

    அத்தியாயம் மூன்று

    அத்தியாயம் நான்கு

    அத்தியாயம் ஐந்து

    அத்தியாயம் ஆறு

    அத்தியாயம் ஏழு

    அத்தியாயம் எட்டு

    அத்தியாயம் ஒன்பது

    அத்தியாயம் பத்து

    அத்தியாயம் பதினொன்று

    அத்தியாயம் பன்னிரண்டு

    அத்தியாயம் பதிமூன்று

    அத்தியாயம் பதினான்கு

    அத்தியாயம் பதினைந்து

    அத்தியாயம் பதினாறு

    அத்தியாயம் பதினேழு

    அத்தியாயம் பதினெட்டு

    அத்தியாயம் பத்தொன்பது

    அத்தியாயம் இருபது

    அத்தியாயம் இருபத்தி ஒன்று

    அத்தியாயம் இருபத்தி இரண்டு

    அத்தியாயம் ஒன்று

    கண்ணன் எனப்படும் கிருஷ்ணன் கண் மூடி தன் காட்டேஜின் கட்டிலில் விழுந்து கிடந்தான். கண்கள் மூடி இருந்தாலும் மனம் விழித்திருந்தது. சஞ்சலப்பட்டு எரிமலையாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

    ‘எப்படி முடிந்தது அவனால், எப்படி அப்படி பேச முடிந்தது..... வாழ்வில் இந்நாள் வரை சின்னச் சின்ன விஷயங்களைக் கூட என்னிடத்தில் ஓடி வந்து பகிர்ந்து கொண்டவனா இன்று அப்படி பேசினான்.... என்ன குறை... எங்கே யார் செய்த குற்றம்.... ஏன் இப்படி எல்லாம்’ என்று பல வினாக்கள் கண்ணனின் மனதில் எழுந்தன.

    கிருஷ்ணன் திலீப் சக்ரவர்த்தியின் மூத்த மகன். அவன் தாய் மதுவந்தி தாய்மையின் மொத்த உருவம். அவர்களின் உயிர் மூச்சு கண்ணன்தான். கிருஷ்ணன் என்று பெயர் சூட்டி இருந்தும் கண்ணா என்றே கொஞ்சி கொஞ்சி அழைப்பர் பெற்றோர். மற்றவர்களுக்கு அவன் கிருஷ்.

    கிருஷ் தன் தந்தையைப்போலவே மிகச் சிறந்த பிசினஸ்மேன். ஊட்டியில் வசித்த இவர்களின் குடும்பச் சொத்தாக பல ஆயிரம் ஏக்கர்கள் நிலபுலங்கள் உண்டு. ‘மிஸ்டி மெடோஸ்’ என்ற தேயிலை எஸ்டேட் மற்றும் ‘கோல்டன் நெஸ்ட்’ எனும் ரிசார்ட் என்று பேரும் புகழுமான குடும்பம். சிறு வயது முதலே இந்த ரிசார்ட் மற்றும் எஸ்டேட் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டான் கிருஷ். அதனால் படிப்பு வெற்றிகரமாக முடிந்ததும் ஹோட்டல் அண்ட் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தான். வெளிநாட்டில் சென்று ஹோட்டல்களின் சிறந்த பராமரிப்பு பற்றி தேர்ச்சி பெற்று வந்தான். தன் பெயரில் கேத்தியில் இருந்த சில ஏக்கர்களில் சின்னதாக தனக்கென கால் பதித்துக்கொள்ள ஒரு ரிசார்ட் துடங்க எண்ணினான். தந்தையிடமே கடனாகப் பணம் வாங்கிக்கொண்டு இருந்த நிலத்தில் உள்ள சின்ன வீட்டை இடித்து மேலும் பக்கத்தில் உள்ள சில நிலங்களை விலைபேசி வாங்கி ரிசார்டை உலக தரத்தில் கட்டி முடித்தான்.

    சுற்றும் சோலைவனமாக மாற்றி அமைத்தான். எங்கு பார்க்கினும் பூக்கள் பூத்து குலுங்கும் நந்தவனமாக அழகுடன் திகழ்ந்தது. உள்ளேயே ஸ்பா எனப்படும் உடலுக்கு சொகுசு கொடுக்கும் பார்லர் நிறுவினான். மனதும் உள்ளமும் சுகமாக சொகுசு பட அமர்ந்து ரிலாக்ஸ் செய்ய இது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. யோகா செண்டர் இருந்தது. காலை மாலை நடைபழக என பாதை இருந்தது. சுவையான உணவு உண்ண இரண்டு விதமான உணவு விடுதி அமைத்திருந்தான். பெரிய அலுவலகங்கள் மீடிங்ஸ் நடத்தவென கான்பரன்ஸ் ஹால் மற்றும் பேங்க்வெட் ஹால் இருந்தன. மேலே ஊட்டியில் வியாபாரத்தனம் அதிகமாக ஆக கீழே குன்னூரும் கேத்தியியும் மக்களுக்கு பிடிக்க ஆரம்பித்தன. அதை பயன்படுத்தி சரியான நேரத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் இந்த ரிசார்டை அமைத்து வெற்றிகண்டான் கிருஷ். நாலே வருடங்களில் தந்தையிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திவிட்டான். மிகச் சின்ன வயதில் இத்தனை சாதனைகள் படைத்த மகனை எண்ணி பெற்றோருக்கு பெருமை.

    ஆனால் இன்று இவன் நிலை... இதை எண்ணி பெருமூச்சு விட்டபடி தூங்க முயன்றான். மனம் உறங்க மறுத்தாலும் உடல் அசதி உறங்கச் செய்தது. விடிகாலை எப்போதும் போல விழித்தெழுந்து எங்கே இருக்கிறோம் என்று ஒரு நிமிடன் முழித்து பின் உணர்ந்தான். பல் விளக்கி முகம் கழுவி அறையிலேயே இருந்த கெட்டிலில் சுடு நீர் கொதிக்க வைத்து ரெடிமேட் காபி சர்க்கரை மற்றும் பால் தூள் சேர்த்து காபி செய்து அருந்திவிட்டு தனது ட்ராக் சூட்டில் வெளியே வந்தான். இப்போது பிப்ரவரியே ஆயிருந்தது. அதனால் பனி கிடுகிடுக்க வைத்தது. பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக்கொண்டு நிதான நடையில் ரிசார்டிலேயே நடக்கத் துவங்கினான். கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்க மனம் அலைபாய்ந்தது. முன்தினம் நடந்தவற்றை அசை போட்டது. ஏன் எதற்கு என்று கேள்விகள் மீண்டும் எழுந்து அவனை புரட்டி போட்டன. அந்த எண்ணங்களை கலைத்துவிட்டு சுற்றிலும் இருக்கும் இயற்கை அன்னையின் அழகில் தன்னை மறக்க முயற்சித்தான். பயனும் கண்டான்.

    பனித்துளிகள் கண் சிமிட்ட பலவண்ண மலர்கள் அவனைக் கண்டு புன்னகைத்தன. பச்சை பட்டுடுத்தி மலை அன்னை இரு கை நீட்டி அவனை தழுவிக்கொள்ள மனம் லேசானது. சிலீரென முகத்தில் பட்டுச் சென்ற குளிர் தென்றல் மனதின் சூட்டை தணித்தது. மெல்லத் திரும்பி வந்து குளித்து அலுவலகம் செல்ல தயார் ஆனான்.

    அங்கு செல்லும் முன் ரெஸ்டாரண்டிற்குச் சென்றான். ரிசார்ட்டின் முதலாளி அங்கே உணவு உண்ண வந்திருப்பது கண்டு அனைத்துச் சிப்பந்திகளுக்கும் சந்தோஷம். முகம் மலர்ந்து வரவேற்றனர். ஒரு தலை அசைப்போடு அவனும் மலர்ந்த முகமாய் உள்ளே வந்து அமர்ந்தான்.

    என்ன கொண்டு வரட்டும் சார்? என்றான் அவன் உதவியாள் முத்து. காண்டினெண்டல் ஆர் இண்டியன் சார்? என்று கேட்டான்.

    இண்டியன் என்றான் ஒகே என்று சென்று சுடச் சுட மசால் தோசையும், வடையுமாக கொண்டு வந்தான். கூடவே பெரிய க்ளாஸ் நிறைய பிரெஷாக செய்திருந்த ஆரஞ் ஜூசும். வேண்டா வெறுப்பாக சாப்பிட அமர்ந்தவனுக்கு சுவையான சூடான அந்த உணவு மற்றும் அன்பான உபசரிப்பு மனமும் வயிறும் நிறைந்தது. சாப்பிட சாப்பிட பசி அறிந்தான். சாப்பிட்டுவிட்டு தலைமை சமையல்காரரிடம் போய் பாராட்டினான்.... அவருக்கு வாயெல்லாம் பல் முகமெல்லாம் புன்னகை..... முதலாளி தன் உணவை வேலையை பாராட்டினால் போதாதா ஒருவனுக்கு. அனைவரிடமும் புன்னகையுடன் ஒரு தலை அசைப்பில் விடைபெற்று உள்ளேயே இருந்த தன் ஆபிசை அடைந்தான். மனம் அடங்க மறுத்தாலும் தன் பணியில் தன்னை மூழ்கடித்துக்கொண்டான்.

    மே ஐ கம் இன்? என்று கதவு லேசாக தட்டப்பட. எஸ் என்றான். அனிதா உள்ளே நுழைந்தாள். எப்போதும் போல பளீரென்ற அவளது சிரிப்புடன் குட் மார்னிங் கிருஷ் என்றாள். அனிதா கிரிஷின் செயலாளர் மற்றும் அந்த ரிசார்ட்டின் ‘கம்யுநிகேஷன் இன்சார்ஜ்’. அனைத்து பெரிய புக்கிங்சும் இவென்ட்சும் அவளைத் தாண்டியே செல்ல வேண்டும்.... ஏற்பாடுகள் அவள் சொல்படி நடக்கும்..... அதற்கு முழு தகுதியும் உடையவளும் கூட..... அதற்கேற்ற படிப்பு உழைப்பு என்று உயர்ந்திருந்தாள். ஊட்டியிலே பிறந்து வளர்ந்தவள்தான்.... அவளது தந்தை பிரிகேடியர் சுப்பிரமணியம் வெல்லிங்டனில் முக்கிய ராணுவ பதவி வகித்து ரிடையர் ஆனவர். ஒரு மகள் ஒரு மகன் மட்டுமே.

    அனிதாவிற்கு விஷ் செய்துவிட்டு அனிதா இரண்டு முக்கிய மெயில்ஸ் உன் பார்வைக்கு என அனுப்பி இருக்கிறேன்..... இன்னிக்கே கவனிச்சுடு என்றான்.

    எஸ் கிருஷ் என்று அவளும் உடனே அமர்ந்து தன் கணினியில் அதை பார்வையிட்டாள். இரு பெரும் கம்பனிகளிடமிருந்து சில தேதிகள் கேட்டு அப்போது இங்கே அறைகள் மற்றும் பேங்க்வெட் ஹால்ஸ் மற்ற ஏற்பாடுகள் செய்ய முடியுமா என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    ஒன்று கம்பனியின் விற்பனை கிளைகளின் வருடாந்திர மாநாடு... இன்னொன்று கம்பனியின் வருடாந்திர ஜெனரல் பாடி மீட்டிங். இரண்டு தேதிகளையும் சரி பார்த்து நமக்கு ஒத்துக்க முடியுமான்னு கண்டு சொல்லு.... அதன்படி பதில் அனுப்பலாம் என்றான்.

    அதன்படி செக் செய்ய எஸ் கிருஷ் இதுவரை புக் ஆகலை.... அதனால நாம ப்ளாக் செய்யலாம்... ஏற்பாடு பண்ணீடலாம் என்றாள்.

    ஒகே தென், அதன்படி அவங்களுக்கு பதில் தந்துடு அனிதா..... கூடவே இவங்களுக்கு இருபத்தி ஐந்து அறைகளும் அவங்களுக்கு அறுபது அறைகளும் புக் பண்ணரதால பாதிக்குப் பாதி அட்வான்ஸ் பேமெண்ட் தந்துடணும்னு ஸ்ட்ரிக்டா எழுதிடு அனிதா என்றான்.

    சரி என்று அதன்படி மெயில் தயார் செய்து அவன் பார்வைக்கு டிராப்ட் அனுப்பினாள். அதை சரிபார்த்து குட் அனுப்பீடு என்றான்.

    அவசர வேலைகள் முடிந்ததும் அவனுக்கு டீ எடுத்துக்கொண்டு அவனெதிரே வந்து அமர்ந்தாள்.

    கிருஷ் என்றாள். கணினியில் கண் பதித்திருந்தான் ஆனால் அவன் மனம் அதில் லயித்திருக்கவில்லை என்று உணர்ந்தாள். கிருஷ் என்றாள் மீண்டும் யா அனிதா என்றான் தலை நிமிர்த்தி.

    ஆர் யு ஒகே? என்று கேட்டாள்.

    ம்ம் என்றான்.

    இல்லை, நீங்க நார்மலா இல்லை..... ஏதோ பெரிய பிரச்சனை போல.... உங்க முகத்தில என்றும் இருக்கும் மலர்ச்சி இல்லை... உங்க கண்ணில ஒரு ஒளி இருக்கும் அதுவும் இன்னிக்கி மிஸ்ஸிங் என்றாள் கவலையுடன்.

    அனிதா அங்கே வேலை செய்ய வந்து இந்த நான்கு வருடங்களில் அவனை நன்கு புரிந்து வைத்திருந்தாள். செயலாளராக இருந்தது மீறி நல்ல நட்பு உருவானது. அவளிடம் எல்லாமும் பகிர்ந்து கொள்வான் கிருஷ். அந்த நிலை சமீபத்தில்தான் மாறி காதலாக கனிந்திருந்தது. சினிமா காதல்போல இருவரும் உராய்ந்துகொண்டு டுயட் பாடவில்லை.... ஐ லவ் யு கூறிக்கொள்ளவில்லை, எனினும் ஒருவர் மீது ஒருவர் ஈடுபாடும் அன்பும் அக்கறையும் கொண்டுள்ளதை இருவரும் அறிந்துதான் இருந்தனர்.

    எஸ் அனி, நிறைய விஷயம் இருக்கு..... உன்கிட்ட ஷேர் பண்ணிக்காம பின்ன யாரோட டா... ஆனா இப்போ இல்லை..... மாலையில மீட் பண்ணி அதைப்பற்றி பேசுவோம்..... இப்போ மதியம் நடக்கவிருக்கும் மீட்டிங்குக்கு தயார் பண்ணிக்கணும் என்றான்.

    வேலை நேரத்தில் அதுவே அவனுக்கு உயிர் மூச்சு. அதை அறிந்தவள் அவனுக்கு வேண்டிய பாயின்ட்சை எடுத்து தயார் நிலையில் வைத்தாள்.

    மதியம் உணவு நேரமானது.

    சாப்பிடலாம் கிருஷ் என்றாள்.

    "இல்லை அனி

    Enjoying the preview?
    Page 1 of 1