Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathukkul Aarathanai
Manathukkul Aarathanai
Manathukkul Aarathanai
Ebook213 pages1 hour

Manathukkul Aarathanai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Prema
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466626
Manathukkul Aarathanai

Read more from R.Prema

Related to Manathukkul Aarathanai

Related ebooks

Reviews for Manathukkul Aarathanai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathukkul Aarathanai - R.Prema

    40

    1

    கோவில்கள் நிறைந்த கும்பகோணம் ஊர். அதுமட்டுமா? டிகிரி காஃபிக்கு பிரசித்தமான ஊர். மாசி மகம் அன்று கும்பமேளா நடைபெறும். பித்தளை பாத்திரங்களுக்கும், வெற்றிலைகளுக்கும் புகழ்பெற்ற ஊர். சுற்றிலும் சுவாமி மலை, தஞ்சாவூர் போன்ற பிரபலமான கோயில்கள் நிறைந்த ஊர். இன்ஜினியரிங், ஆர்ட் காலேஜும் உள்ளது.

    ஊரின் உள்ளே பலதரப்பட்ட மக்களும், வசித்து வந்தார்கள் அந்த பெரிய தெருவின், இருபக்கங்களிலும் வீடுகளும், கடைகளும் கலந்து இருந்தன. மெயின் ரோட்டிலிருந்து சற்றே விலகி 1 கி.மீ தூரத்தில் உள்ள தெருவில் பல சாதியினரும் கலந்து வீடுகட்டி வசித்து வந்தார்கள். ஒருவருக்கொருவர் ஒத்தும், உதவியும் வாழ்ந்து வந்தார்கள். எல்லாருமே பழைய கால கட்டிடமாகவே விளங்கியது.

    அந்த தெருவின் நடுவில் இருந்தது அந்த பெரிய வீடு, சிலபேர் அந்த வீட்டை பெரிய வீடென்றும் சில பேர் போஸ்ட்மாஸ்டர் வீடு என்றும் அடையாளம் கூறுவார்கள். இப்போ அந்த நிலைமை மாறி தலைமையாசிரியர் சபாபதி வீடு என்று குறிப்பிடுகிறார்கள்.

    சபாபதி அங்குள்ள அரசாங்க பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவரது அப்பா சுப்பையா போஸ்ட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர். தன்னுடைய இரண்டு பெண்களையும் பக்கத்தில் உள்ள கிராமத்தில் மணமுடித்து கொடுத்துவிட்டு, மகன் சபாபதியின் குடும்பத்தோடு தங்கியிருந்தார். அவரது மனைவி, சென்ற வருடம் தான், இவ்வுலகில் வாழ்ந்தது போதும் என்று வானுலகை எட்டிவிட்டார்.

    சுப்பையா மகன் சபாபதி, மருமகள் கோமதி, பேரன் வெங்கட்ராமன், பேத்திகள் உமா, பவானி ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு பேரக்குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் அதுவும் பேரன் வெங்கட்ராமன் மீது அளவு கடந்த பிரியம்.

    பேரன் வெங்கட்ராமன், பொறியியல் கல்லூரியில், கணினி பொறியாளராக கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தான். பேத்திகள் பி.ஏ. பொருளாதாரம் 2ஆம் ஆண்டும், பவானி +2ஆம் படித்துக் கெண்டு இருந்தார்கள். சுப்பையா பேரனை வெங்கி என்று அழைப்பார்.

    மருமகள் கோமதியும், மாமனாரை தகப்பனார் போலவே எண்ணி நடத்தி வந்தார். வீடு பெரிய வீடு, பின்னால் காய்கறி தோட்டம், மாட்டுக் கொட்டில், வெற்றிலை கொடிக்கால் என பசுமைக்கும், வேலைகளுக்கும் குறைவில்லை. மாடுகளை பராமரிக்கவும், தோட்ட வேலைக்கும் என்று வேலையாட்களும் இருந்தனர்.

    காலை 5 மணிக்கெல்லாம் பால்கறந்து விடுவார்கள். கூட்டுறவு சொஸைட்டியிலிருந்து பால் வாங்கி கொண்டு போவார்கள். அம்மாவுக்கு உதவியாக பிள்ளைகளும் சீக்கிரம் எழுந்துவிடுவார்கள். சுப்பையாவும் எல்லா வேலைகளிலும் தானும் ஈடுபட்டு செய்வார். பக்கத்திலுள்ள வாசக சாலைக்கு சென்று, பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் ஒன்று விடாமல் படித்துவிட்டு வருவார். அவர்கள் குடும்பம் பிறர்க்கு உதவும் குடும்பம். சபாபதியும், பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் எடுப்பார். ஞாயிற்றுக் கிழமை காலை வேளை எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது ‘காலிங்பெல்’ அடிக்கும் ஓசை கேட்டது.

    2

    காலிங்பெல் சத்தம் கேட்டு, யாரது? என்றவாறு தாத்தா எழுந்து வந்தார். அவர் பின்னாலே நமது கதையின் நாயகன் வெங்கட்டும் எழுந்து வந்தான். வெங்கட்ராமனை வெங்கட் என்றே அழைப்போம். வெளியே நின்றிருந்தவனைப் பார்த்து இருவரும் அட ஆனந்தனா வாப்பா உள்ளே என்று அழைத்து அவனையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தனர்.

    ஆனந்தன் வேறுயாருமில்லை, தாத்தா சுப்பையாவின் தம்பி பேரன். இரண்டு தெரு தள்ளி இருந்தார்கள். ஆனந்தன் எப்போதும் கலகலப்பாக பேசுபவன் அன்று ஒரு மாதிரியாய் இருந்தான். கண்கள் இலேசாக கலங்கியிருந்தது. இதைக் கவனித்த வெங்கட் அவனைத் தனியே அழைத்து வந்தான்.

    இந்த இடத்தில் ஆனந்தனின் குடும்பத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும். ஆனந்தனின் அப்பாவுக்கு பூர்வீகச் சொத்தாக வீடும், தோட்டமும் இருந்தது. தோட்டத்திலிருந்து நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனந்தனின் அப்பா, கனகவேலும், அம்மா கஸ்தூரியும் நல்ல உழைப்பாளிகள், ஆனந்தனுக்கு கற்பகம் என்று ஒரு தங்கை இருந்தாள். கனகவேலிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. வருகிற வருமானத்தில் பாதிக்கு மேல் சீட்டாடி தொலைத்துவிடுவார். இதனால் குடும்பத்தில் கொஞ்சம், கொஞ்சமாக வறுமை நுழைய ஆரம்பித்தது.

    ஆனந்தன் +2 முடித்த கையோடு, பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பொறியாளராக சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். எதுவும் அவசரத் தேவை என்றால் அவர்களுக்கு வெங்கட் வீட்டிலுள்ளவர்கள் உதவி செய்தனர். அது மட்டுமில்லாது அந்த தெருவில் உள்ளவர்களும் எந்த உதவி வேண்டுமானாலும் அவர்களிடம்தான் கேட்பார்கள். வெங்கட் குடும்பத்தினரும், தங்களால் முடிந்த வரை எல்லாருக்கும் உதவி செய்தனர்.

    கோமதி அம்மாவுக்கு கொஞ்சம் பாட்டி வைத்தியம் தெரியும். அதனால் யாராவது ஒருவர் உதவி கேட்டு வந்த வண்ணம் இருப்பார்கள்.

    தனியே கூட்டி வந்த ஆனந்தனிடம், வெங்கட் என்னவென்று கேட்க, தயங்கியவாறே, ஆனந்தன் இந்த வருடம் பரீட்சைக்கும் பணம் கட்ட வேண்டும். இந்த வருடத்துடன் என் படிப்பு முடிகிறது. அப்பா பணம் இல்லை என்று சொல்லிவிட்டார். உங்களுக்குத்தான் என் குடும்பத்தைப் பற்றி நன்கு தெரியுமே! என்றான் கூச்சத்துடன்.

    வெங்கட் அவன் தோளில் கைபோட்டு அணைத்தவாறு, என்னிடம் கேட்பதற்கு ஏன் கூச்சப்படுகிறாய்? நானும் உனக்கு அண்ணன் முறைதானே! கவலைப்படாமல் போ! நான் சாயந்திரம் வாசகசாலைக்கு வருவேன். அங்கு வந்து பணத்தை வாங்கிக் கொள். என்று தைரியம் கூறி அனுப்பினான்.

    3

    சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள சுப்ரமணியம் தெருவில் உள்ள ஒரு வீட்டில், மனோகரனும், அவன் மனைவி வாஸந்தியும், மகள் காயத்ரியும் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தனர். மனோகரன் தனியார் சிட்பெண்ட் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிகின்றான். மனைவி வாஸந்தி அருகிலுள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கின்றாள். மகள் காயத்ரியும் அதே பள்ளியில் +1 படித்து வருகிறாள். சிறு குடும்பம், மகிழ்ச்சி நிறைந்த குடும்பம். ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது டெலிபோன் மணி அழைக்கவே மனோகரன் எழுந்து சென்று போனை எடுத்தான், மறுமுனையில் அவனது நண்பன் சேகர் தான் பேசினான். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள்.

    தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறேன்

    இதோ நான் புறப்பட்டு வருகிறேன். பயப்படாமல் தைரியமாக இரு, எந்த மருத்துவமனை? என்ற விவரம் கேட்டு தன் மனைவியிடம் கூறினான்.

    அவளும் பாவம் அந்த அண்ணா! நீங்கள் உடனே புறப்படுங்கள் அந்த அண்ணா மட்டும் உதவி செய்யாவிட்டால் நாம் இன்று இந்த அளவுக்கு முன்னேறியிருப்போமா? அவரும், அவர் குடும்பமும் நன்றாக இருக்கணும். என்று மனதார வாழ்த்தினாள்.

    நீ சொல்வது சரிதான் என்றவன் தன் பைக்கை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

    மனோகரனின் நினைவுகளோ பின்நோக்கிச் சென்றன. மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் மனோகரனின் வீடு இருந்தது. அவனது அப்பா நாராயணன் கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்து வந்தார். பழைய வீடுகளை வாங்கி, அதை புதுபித்து அதிக விலைக்கு விற்பது. இப்படியாக தொழில் செய்து வந்தார். அவருக்கு ஜெய்ஹிந்த் புத்திலிருந்து பத்து வீடுகளின் வாடகைப் பணமும் வந்து கொண்டிருந்தது. மனோகரனுக்கு அம்மா இல்லை. எல்லாமே அப்பா தான். அப்பாவுடன் ஒரு கணக்குப் பிள்ளை எப்போதும் கூடவே இருப்பார். அப்பாவை பற்றிய எல்லா விஷயங்களும் அவருக்கு அத்துப்படி. மனோகரனும் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து முடித்து விட்டு அப்பாவுக்கு துணையாக தொழிலை கவனித்துக் கொண்டிருந்தான்.

    ஒரு மாதம் வாடகைப் பணம் வர தாமதமாகி விடவே, அதை வசூலிக்கும் பொறுப்பை மனோகரனிடம் விட்டார். அவன் அப்பா மனோகரனும் கடமையே கண்ணாக வேலை செய்து வந்தான்.

    வழக்கம் போல் அந்த மாதமும் வாடகை வசூல் செய்ய போன இடத்தில் ஒரு வீட்டில் வாஸந்தியை சந்தித்தான். பார்த்ததும் அவனுக்கு பிடித்துவிட்டது. வாஸந்தி பார்ப்பதற்கு நல்ல அழகாகவே இருந்தாள். அவனும் ஆள் நன்றாகவே இருந்தான். வாஸந்திக்கு அப்பா, அம்மா இருவரும் இல்லை. அண்ணன் செந்திலும், அவன் மனைவி ராதிகாவும் தான். அண்ணன் செந்தில் மதுரையில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்ப்பதற்காகவும், அவன் மனைவி பிரசவத்திற்காக தாய்வீடு போய் இருப்பதாகவும், வாஸந்தி டீச்சர் டிரெயினிங் முடித்துவிட்டு, போன மாதம் தான் ஊருக்கு வந்திருப்பதாகவும் தெரிந்து கொண்டான்.

    மாதங்கள் சென்றன. செந்தில் இல்லாத நேரமாக பார்த்து, வாஸந்தியிடம் வாடகை கேட்கச் செல்வான். இப்படியாக அவர்களுக்கு நட்பு உண்டாகிற சூழ்நிலை ஏற்பட்டது. அதுவே மெல்ல மெல்ல நேசமாக மாறியது. அவனுடைய சிந்தனையை கலைப்பது போல், ஒரு ஆட்டோக்காரன் அவனை திட்டிவிட்டுப் போனான். அதற்குள் மருத்துவமனையும் வந்துவிட்டது.

    4

    மனோகரன் போன போது, குழந்தை கண் விழிக்காது படுத்திருந்தாள். டாக்டரிடம் போய் பேசிப்பார்த்ததில், உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. பயம் வேண்டாம். ஆனால் காய்ச்சல் கணமாக குறைந்தது 3 நாட்களாகும். அதுவரை காய்ச்சல் வந்து, வந்து போகும். என்றார்.

    அதைக் கேட்டு ஒருவாறு நிம்மதி ஏற்பட்டது.

    மனோகரனும் ஆறுதல் கூறினான்.

    வாஸந்தியும் மறுநாள் மருத்துவமனைக்கு வந்து உதவியாக இருந்தாள். டாக்டர் கூறியது போல் 3 நாட்களில் காய்ச்சல் சரியாக குழந்தை ஷாலினியை வீட்டுக்கு கூட்டி வந்தனர். ஷாலினி காயத்ரியைவிட 5 வயது சின்னவள். 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நாட்கள் நகர்ந்தன. சேகரின் மாமனார் திடீரென இறந்துவிடிவே, அவரின் தொழில், வீடு இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு சேகருக்கு வந்தது. சேகரின் மனைவி சித்ரா அவள் அப்பாவுக்கு ஒரே பெண். எனவே சேகர் தன் குடும்பத்துடன் புனே செல்ல வேண்டியதாயிற்று. தன் நண்பனின் குடும்பத்தை இரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு மனோகரன் குடும்பத்துடன் வீடு திரும்பினான். இரயில் புனே நோக்கி போக, மனோகரன் நினைவுகள் பின்னோக்கி போயின.

    வாஸந்தியுடன் ஏற்பட்ட நட்பு நேசமாக மாறியதும், அப்பாவிடம் விஷயத்தை சொல்ல பூகம்பம் வெடித்தது. மனோகரனும், சமாதானமாகவும், கோபமாகவும் பேசிப் பார்த்தான். ஒன்றும் பலிக்கவில்லை.

    வாஸந்தியின் வீட்டிலும் இதே நிலைமைதான். பின் மனோகரனும் வாஸந்தியும் சேர்ந்து பேசி, சென்னைக்கு சென்று, அங்கு மனோகரனின் நண்பன் சேகர் மூலம், வேலை, வீடு தேடிக்கொள்வதோடு, அங்கேயே பதிவுத் திருமணம் பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

    தங்களுடைய முடிவை நண்பன் சேகருக்குச் சொல்ல, அவன் தைரியம் சொன்னான். சொன்னதோடு நில்லாமல், சென்னை வந்த அவர்களுக்கு ஒரே வாரத்தில் வீடு, வேலை, கல்யாணம் என்று எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்தான்.

    இவர்கள் சென்னை வந்து சில ஆண்டுகள் கழித்தபிறகு தான் சேகர் திருமணம் செய்து கொண்டான். அவன் மனைவி சித்ராவும் நன்கு பழகவே குடும்ப நண்பர்களாகிவிட்டார்கள்.

    மனோகரனும் இடையில் அப்பாவுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கூறினான். அவன் அப்பா சமாதானமாகவில்லை. வாஸந்தியின் அண்ணனும், அண்ணியும் இனிமேல் எங்கள் முகத்தில் விழிக்காதே! என்று கூறிவிட்டனர்.

    அந்த நேரத்தில் சேகர்தான் ஆறுதலாயிருந்தான். சேகர் குடும்பம் பிரிந்து போனது மனோகரனின் குடும்பத்திற்கு, பெரிய இழப்பாகவே இருந்தது. எந்த கவலையையும் மாற்றும் சக்தி காலத்துக்கு உண்டல்லவா!

    5

    வெங்கட் சொன்னது போல் வாசகசாலைக்குச் சென்று ஆனந்தன் இடம் பணம் கொடுத்தான். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள், மாதங்கள் ஆகின. ஆனந்தன் DME முடித்தான்.

    வெங்கட்டும் கடைசி வருட படிப்பை முடிக்கும் நேரம் காம்பஸ் இண்டர்வியூவில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சென்னையில் ரூம் எடுத்து தங்கி வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1