Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagin Sirippu
Azhagin Sirippu
Azhagin Sirippu
Ebook116 pages38 minutes

Azhagin Sirippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Prema
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466626
Azhagin Sirippu

Read more from R.Prema

Related to Azhagin Sirippu

Related ebooks

Reviews for Azhagin Sirippu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagin Sirippu - R.Prema

    24

    1

    கதிரவன் தன் கடமையை முடித்து, மறுவீடு சென்றுவிட, அந்த இடத்தை நிரப்புவது போன்று மதி தன் கடமையை செய்து கொண்டிருந்தது. பால்போல் வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது. அந்த முன்னிரவு வேளையில் அந்த கிணற்றடியில் கடகடவென செகடைகள் உருளும் சப்தமும், கிணற்று நீரினுள்ளே - வாளிகள் மோதும் சத்தமும், இறைக்கும் நீரை குடங்களில் ஊற்றுகிற சத்தங்களையும் மீறி அங்கு தண்ணீர் எடுக்க வந்த குமரிப் பெண்களின் சிரிப்பு சத்தமும், பேச்சுக் குரலும் கேட்டது.

    ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்தது அந்தக் கிணறு. வீட்டில் இப்போது யாரும் குடியிருக்கவில்லை. பூட்டிக் கிடந்தது. அந்த கிணற்றுத் தண்ணீரே அந்த தெருவில் உள்ளவர்களுக்கு அட்சய பாத்திரமாக இருந்தது. அதை தோற்றுவித்தவரின் மனம் போல அந்த நீரின் சுவையும், வற்றாத தன்மையும் கொண்டு விளங்கியது. அந்தத் தெரு பெண்கள், பகலில் தண்ணீர் எடுக்க வருவதில்லை. இரவில்தான் அக்கம் பக்கத்து பெண்களுடன் சேர்ந்த கூட்டமாக வருவார்கள்.

    அன்றைய பெண்களின் பேச்சு அந்த தெருவில் நடுநாயகமாக இருக்கும் பெரிய வீட்டைப் பற்றி இருந்தது. அந்த பெரிய வீட்டிற்கு தர்மவான் வீடு என்ற ஒரு காரணப் பெயரும் இருந்தது. அந்த வீட்டிலுள்ள முந்தைய தலைமுறையினரும் இப்பொழுதுள்ள தலைமுறையினரும் சரி, தர்மம் செய்வதில் தாராளமாக இருந்தார்கள். அதனால் அந்த வீட்டிற்கு தர்மவான் வீடு என்ற பெயர் நிலைத்தது.

    அந்த பெரிய வீட்டின் பெரியவர் சொக்கலிங்கத்தின் பேத்தி துர்கா. கல்லூரி மேற்படிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறாள். அவள் பேரழகியாக இருந்தாள். நல்ல எலுமிச்சை நிறத்தில், நல்ல உயரத்துடன், நீண்ட கூந்தல் அலை அலையாக விரிய கயலையொத்த விழிகளும், எடுப்பான நாசியும், குவிந்த இதழ்களும் கொண்டு, பார்ப்பவர்களை ஒரு கணம் ஸ்தம்பிக்க செய்யும் வகையில் இருந்தாள்.

    கிணற்றடியில் அவளை பற்றித்தான் பேச்சு போய்க் கொண்டிருந்தது.

    ஏண்டி, அந்தப் பெண் ரொம்ப அழகாமே, நீ பார்த்திருக்கியா? என்று ஒருத்தி கேட்க, இன்னொருவளோ,

    ஏண்டி தெரியாத மாதிரி கேட்கிறே. நானும் உன்னைப்போல வீட்டிலேயே இருப்பவள் என்று கூறினாள்.

    அதில் எல்லாப் பெண்களுக்கும் பெரியவளான பூங்கோதை, இந்தப் பெண்ணுக்கு வரப் போறவன் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான். காசு, நகை எதுவுமே வேண்டாம், பெண்ணை கொடுத்தால் போதும் என்று சொல்வான்.

    பின்ன என்ன நம்மை போன்றவர்களுக்குத்தான் கல்யாணம் என்பது பெரிய விஷயம் - என்று ஆளுக்கொரு விதமாக பேசி பெருமூச்சு விட்டனர்.

    இன்று நேற்றல்ல, இங்கு வந்து தண்ணீர் எடுப்பவர்களின் நிறை, குறையான பேச்சுகளை எல்லாம் எவ்வித சலனமுமில்லாமல் அந்த கிணறு கேட்டுக் கொண்டிருந்தது.

    அந்த பெண்களில் ஒருத்தி சொன்னாள், என்ன அழகு, படிப்பு, பணம் இருந்தென்ன. பாவம் அந்த பெண்ணுக்கு பெற்றோர் இல்லையே என்று வருத்தத்துடன் சொல்ல, ஆமாம் என்றனர்.

    தன்னைப் பற்றி ஊருக்குள் நடக்கும் பேச்சைப் பற்றி எதுவும் தெரியாத துர்கா, தன் தாத்தாவுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள். பாட்டி பரமேஸ்வரி உடல்நிலை சரியில்லாது படுத்திருந்தாள். தனக்கு சாப்பாடு பரிமாறிய பேத்தியை நிமிர்ந்து பார்த்தவரின் கண்களில் கவலை தோன்றியது.

    தாத்தாவின் கண்களில் கவலையை கண்ட துர்கா, என்ன தாத்தா? என்னைப் பற்றி மீண்டும் கவலைப்பட ஆரம்பித்து விட்டீர்களா? என்று கேலியாக கேட்டாள்.

    ஆமாம்மா, உன்னை ஒரு நல்லவன் கையில் ஒப்படைக்கணுமே, அதுவரை இந்த கிழவன் உயிர் தரிக்கணுமே என்ற கவலைதான்.

    போங்க தாத்தா, உங்களுக்கெனன வயசாகிட்டது. நீங்க இரண்டு பேரும், நூறு வயது வரை ஆரோக்கியமா இருப்பீங்க என்று பேச்சை மாற்றினாள். அவர் கவலை அது மட்டுமில்லையே... வேறொரு கவலையும் அவரது மனத்தையும் அரித்து கொண்டிருந்தது. அதை அவளிடம் எப்படி சொல்ல முடியும்? அவர் மனம் பரிதவித்தது.

    2

    சென்னை புறநகர் பகுதியில் அந்த கட்டிடத்தில் மேல்மாடியில் வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தன. வெளியே தீனா எலக்ட்டிரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் என்னும் பெயர்ப் பலகை மாட்டப்பட்டிருந்தது. அந்த கம்பெனியின் முதலாளி, பெரியசாமி, ஐ.ஐ.டி.யில் இன்ஜீனியரிங் படித்தவர். படித்து முடித்ததும் ஒரு பெரிய எலக்ட்டிரிக்கல் கம்பெனியில் வேலை பார்த்தவர். ஏட்டுக்கல்வியும், அனுபவக் கல்வியும் ஒன்றுசேர மின்சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை தன்னுடைய ஒரே மகனான தீனதயாளனின் பெயரில் துவக்கி நடத்தி வந்தார். இப்போது மேலே கட்டிடத்தை விரிவுபடுத்த கொண்டிருந்தார். அவரது தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்கள் தரமுள்ளதாகவும், நீண்ட நாள் உழைக்கக் கூடியதாகவும் இருந்ததால், அவரது கம்பெனி பொருட்களுக்கே தேவையும், கிராக்கியும் அதிகமாக இருக்கவே கம்பெனியை விரிவுபடுத்துவதற்காக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அவரது மனைவி பார்வதியும், மகன் தீனதயாளனும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

    தீனாவும் அப்பாவுக்கு உதவியாக இருக்கும் விதமாக பொறியியல் துறையில் பட்ட மேற்படிப்பு படித்திருந்தான். ஆள் பார்ப்பதற்கு சற்று நிறம் குறைவாக இருந்தாலும் நல்ல உயரமாகவும், களை பொருந்திய முகமுமாக நன்றாகவே இருந்தான். அவனுடன் கல்லூரியில் படித்த நண்பன் தருணுக்கும், தன் கம்பெனியிலே ஒரு நல்ல வேலை போட்டுக் கொடுத்திருந்தான்.

    கல்லூரியில் படிக்கும் காலங்களில் அவனை சுற்றி சுற்றி வந்தாள் நர்மதா. தீனாவும் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவள் தான் விரும்புவதாக கூறினாள். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவனது முகம் முழுவதுமே காயங்கள் ஏற்பட்டு தழும்பாக இருந்தது. இதை ஏதோ போதாத காலம் என்று இருக்கும்போது, தீனாவுக்கு சிக்கன்பாக்ஸ் என்று சொல்லப்படுகின்ற அம்மைநோயும் தாக்கியது.

    எனவே முகம் முழுவதும் தழும்புகளாகவும், குழிகளாகவும் இருந்தது. இதன்பிறகு நர்மதா அவனை விட்டு சிறிது சிறிதாக விலகி, முற்றிலுமாக விலகிவிட்டாள். தீனா அவளை விரும்பாவிட்டாலும் அவளின் அந்த செய்கையால் மனவருத்தம் அடைந்தான். புற அழகை பார்த்து மயங்கியவள் என அறிந்ததும் சற்று வருத்தம் ஏற்பட்டாலும், அதை பெரிதாக எடுக்கவில்லை. தருண் தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தான்.

    இது நடந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில், சிறிது சிறிதாக மனம் தேறி வந்தான் தீனா.

    சொக்கலிங்கத்தின் வீடு. துர்கா தன்னுடன் கல்லூரியில் படித்த தோழிக்கு திருமணம் என்று தாத்தா, பாட்டியிடம் சொல்லிவிட்டு மதுரைக்கு வந்திருந்தாள். மீனாட்சியம்மன் கோயிலில் திருமணம். பக்கத்திலே மண்டபம் அமர்த்தியிருந்தார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1