Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indruvarai Kanavan
Indruvarai Kanavan
Indruvarai Kanavan
Ebook70 pages1 hour

Indruvarai Kanavan

By JDR

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466534
Indruvarai Kanavan

Read more from Jdr

Related to Indruvarai Kanavan

Related ebooks

Related categories

Reviews for Indruvarai Kanavan

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indruvarai Kanavan - JDR

    13

    1

    சேவல் கூவிற்று. பறவைகள் கீச்கீச் என ‘ஹலோ’ சொல்லிக் கொண்டன. கலப்பை, கமலை, காளை மாடுகள் சகிதம் விவசாயிகள் தோட்டம் துரவு நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

    சூரிய உதயத்துக்கு முன்னதாக ஒரு மெல்லிய வெளிச்சம் பரவியிருந்தது. அருணாசலம் விழித்தான். சோம்பல் முறித்தான். பாயிலிருந்து எழுந்து வாசலுக்கு வந்தான். வேப்பமரத்திலிருந்து குச்சி ஒடித்து அவன் பல்துலக்க ஆரம்பித்தபோது எதிர்வீட்டு மனோன்மணி வாசல் தெளிக்க வந்தாள்.

    அருணாசலத்திற்கு வெறுப்பாக இருந்தது. தினமும் அவன் ‘சைட்’ விட அவனுக்குக் கிடைத்த ஒரே பிகர் அவள் தான்.

    சரியான நாட்டுக்கட்டை. கறுத்த நிறம், வட்டமுகம், பற்றான உடல், திமிர்த்த உடற்கட்டு, இவனுக்காகவே அவள் சிரிக்கும் அசட்டு வழிசலுடன் கூடிய சிரிப்பு. இவை எதுவுமே அவனுக்குப் பிடிப்பதில்லை. இவளை விட்டால் வேறு பிகர்களும் அந்த ஏரியாவில் இல்லை.

    முன்பு தேவி என்றொரு பிகர் இருந்தது. டக்கர் பிகர். மனோன்மணியைத் தேடி அடிக்கடி அவள் வருவாள். நல்ல கலர், கிராமியத் தோற்றத்தைத் தாண்டி அவளிடம் ஒரு ஸ்டைலான கவர்ச்சி இருக்கும். அளவான அளவுகளுடன் கட்டான உடல் அவளுக்கு. அந்த அழகிய நாதபுரம் கிராமத்தின் விடலைப் பையன்கள் அனைவருக்கும் அவள்தான் கனவுக் கன்னி. அவளுக்கு இவன்மேல் சிறிது ஆர்வம் உண்டு.

    அவள் பட்டணத்தில் படித்தாள். நர்ஸிங் கோர்ஸ் முடித்துவிட்டு, மெட்ராஸில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். அவள் போன பிறகு அந்தக் கிராமமே சகாரா ஆகிவிட்டதாக உணர்ந்தார்கள் விடலைகள். அதன் பிறகு சகிப்புத் தன்மையுடன் மனோன்மணி, பொன்னுத்தாய், கோமதி, செவ்வந்தி, சரசு என்ற ரீதியில் கிராமத்துக் கட்டைகளைத்தான் ஜொள்ளுவிட முடிந்தது அவர்களால்.

    அருணாசலம் பழைய நினைவுகளுடன் ஒரு பெருமூச்சு விட்டான். மனோன்மணி வாசல் பெருக்கிவிட்டுக் கோலம்போட ஆரம்பித்திருந்தாள்.

    அருணாசலம் பல் துலக்கியபடியே கம்மாக்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அங்கே அவனது நண்பர்கள் இருந்தார்கள். எல்லாருமே விடலைப் பையன்கள்...

    வாடா அருணாசலம்... மனோன்மணி தரிசனம் முடிஞ்சதா? மாசானம் கேட்டான்.

    யூ நோ இங்லீஷ்? நோ. பட் ஐ நோ. இங்லீஷ்... ஐ இஸ் ஸ்டடீட் இன் காலேஜ் ஆப் சிட்டி. ஐ குட் எஜுகேஷன் பினிஷ்ட் இன் திஸ் வில்லேஜ். பட் யூ நாட். அன்டர்ஸ்டாண்ட்?

    எதுக்குடா அருணாசலம், எங்களை இங்லீஷ்ல வையற?

    வையலடா முண்டம். நான் பேசற நாலு இங்லீஷ் வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சுக்க முடியல உங்களால. நீங்க எல்லாம் பேச வந்திட்டீங்க.

    சரி, இங்லீஷ்ல என்னதான் சொன்ன?

    உங்களுக்கெல்லாம் இங்லீஷ் தெரியுமாடா? தெரியாது. ஆனா எனக்கு இங்லீஷ் தெரியும். நான் பட்டணத்துல இருக்கிற காலேஜ்ல படிச்சவன். இந்த கிராமத்துலயே நல்ல படிப்பு படிச்சிருக்கேன். ஆனா நீங்க அப்படி இல்லை. புரியுதா? அப்படின்னு சொன்னேன்.

    ஓஹோ.

    என்னதான் சொல்லு, இந்த கிராமத்துல இருக்கிற நமக்கெல்லாம் விதிச்சது, இந்தக் கம்மாக்கரை, வயக்காடு, ஆலமரம், வேலங்குச்சி, கிராமத்துக் கட்டைங்க. இதெல்லாம்தான்.

    உங்களுக்கு வேணுனா அப்படி இருக்கலாம். ஆனா இந்த அருணாசலத்தோட தலைவிதி அப்படி இல்லை.

    என்னடா சொல்றே?

    நான் பட்டணம் போகப்போறேன்டா. மெட்ராஸ்க்கு.

    மெட்ராஸ்க்கா? நெசமாவாடா?

    "ம்... மெட்ராஸ்க்குத்தான் போகப்போறேன். அங்க இந்த மாதிரி நாட்டுக்கட்டைங்க கிடையாது. நவநாகரீக நங்கையர்தான். இங்க மாதிரி பொம்பளைப்புள்ளைங்க பதினாறு முழம் சேலையைச் சுத்திக்கிட்டுத் திரியமாட்டாங்க. சல்வார் கம்மீஸ், சுடிதார், மிடி இன்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1