Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bumber Kuttrangal
Bumber Kuttrangal
Bumber Kuttrangal
Ebook110 pages1 hour

Bumber Kuttrangal

By JDR

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466718
Bumber Kuttrangal

Read more from Jdr

Related to Bumber Kuttrangal

Related ebooks

Related categories

Reviews for Bumber Kuttrangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bumber Kuttrangal - JDR

    1

    சிறைச்சாலையிலிருந்து வெளிப்பட்ட சுப்பிரமணி நாலரை ஆண்டுகளுக்குப் பின் சுதந்திரக் காற்றை சுவாசித்தான்.

    தனது ஆறாண்டு கால சிறைத் தண்டனைக்காக ‘உள்ளே’ போன சுப்பிரமணி ஒன்றரை வருடம் முன்னதாகவே விடுதலையானான்.

    சுப்பிரமணி உனக்கு விடுதலைப்பா...

    புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு சுப்பிரமணி விடுதலை அடைந்தான்.

    என் இனிய வாசகரே, மேலே தரப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் எது இந்த நாவலின் முதல் வாக்கியமாக அமைந்தால் நன்றாக இருக்கும்?

    முதலாவது? மூன்றாவது? இரண்டாவது? அல்லது நான்காவது?

    சரி, எது எப்படியோ, அதிர்ஷ்டகரமான ஒரு புதன் கிழமையில் வானத்துச் சூரியன் கோபப்பட்டு வெப்பத்தை கொப்பளிக்க ஆரம்பித்த பதினோரு மணி சுமாருக்கு இந்த நாவலின் தண்டுவடம் போன்ற பாத்திரமாகிய சுப்பிரமணி எனப்பட்டவன் ஒரு இந்தியனின் ஆகஸ்ட் 15ஐ அனுபவித்தான்.

    எண்பது சதவீத தமிழ்த் திரைப்படங்களின் துவக்கக் காட்சிகளில் நமது பாரத தேசியக் கொடி காட்டப்பட்டு

    மத்திய சிறை- Central Jail எனும் போர்டு காட்டப் பட்டு -

    பெரிய கதவில் ஒரு விக்கட் கேட் காட்டப்பட்டு -

    அதன் முன் பைனட் மாட்டப்பட்ட ரைபிளுடன் ஒரு விறைப்பான கர்க்கிச் சீருடை ஆள் காட்டப்பட்டு –

    விக்கட் கேட் திறப்பது காட்டப்பட்டு--

    இத்தனை ‘காட்டப்பட்டு’க்களுக்குப்பின் - கதாநாயகன் வெளி வருவானே, அதேபோல சுப்பிரமணி வெளி வந்து நின்றான்.

    தனது நுரையீரல்களின் ‘ஆல்வியோலை’ நிறைய காற்றை உள்ளிழுத்து சுதந்திர சுவாசம் செய்தான்.

    கண்களின் எல்லை வரை காட்சி சுகம் அனுபவித்தான்.

    சினிமாவில் வருவதைப்போல அவனை வரவேற்க தொண்டர் கூட்டம் வரவில்லை, காதலி வரவில்லை, நண்பர் கூட்டம் வரவில்லை.

    நின்றபடி பார்வையைச் சுழற்றிய சுப்பிரமணி உடம்பை ஒருமுறை முறித்துவிட்டுக்கொண்டான். தான் நாலரை ஆண்டு வசித்துவந்த சிறைக்கூடத்தை ஒரு பார்வை பார்த்தான்.

    தனக்குத்தானே சிறிய அளவிலான சிரிப்பு ஒன்றைச் சிரித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

    சுப்பிரமணியின் முன் கதையை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆகவே அது –

    சுப்பிரமணி பிறந்து இருபது வருடம் ஆறு மாதம் கழிந்தபின் ஒரு நாள்.

    தனது ஊரான கல்லூரில் பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்தான் சுப்பிரமணி. அவன்கூட சேதுவும் ராமுவும் இருந்தார்கள்.

    திருநெல்வேலி - முக்கூடல் சாலையில் அமைந்திருக்கும் அந்த பஸ் ஸ்டாப் கட்டிடம்தான் இளைஞர்களின் சைட் -கூடம்.

    ஊருக்கு, பள்ளிக்கு மற்றும் தண்ணிக்கு செல்லுகின்ற சகல வயது மகளிரையும் பார்க்க வசதியான இடம் அது. வேலை இல்லாத இந்த இளைஞர்கள் மூவருமே பகல் பொழுதைக் கழிக்க உபயோகிக்கும் இடம் அது.

    சுப்பிரமணி, இப்படியே வெட்டியா பொழுதைக் கழிச்சுக்கிட்டிருந்தா எப்படி? வீட்டுல பெத்த கடமைக்கு ஏதோ சோறு போடறாங்க. மத்தபடி செலவுக்குக் காசு தரமாட்டேங்கறாங்க. கேட்கவும் முடியல... சேது விரக்தியாய் சொன்னான்.

    காலைலேர்ந்து ஒரு சிகரெட்டுக்காக வாய் மசமசங்குதுடா. சாயங்காலம் இவ்ளோ நேரம் ஆயாச்சு. அரை சிகரெட்டுக்குக்கூட வழியில்ல பாரு... என்றான் ராமு

    சுப்பிரமணி பதில் பேசாமல் யோசனையில் இருந்தான்.

    என்ன சுப்பிரமணி யோசனை?

    பணம் இல்லாம நாம படுற கஷ்டத்தை யோசிச்சுப் பார்த்தேன். இந்த உலகத்துல பணம் முக்கியம் ராமு... பணம் இல்லாதவன் பிணம்னு சொல்லுவாங்க... நாமகூட நடைப்பிணமாத்தானே அலையறோம்?

    எப்படியாவது பணம் சம்பாதிக்கணும்ப்பா... சுப்பிரமணி நீதான் ஒரு வழி சொல்லேன்...

    ம்ச்... என்றான் சுப்பிரமணி. பிறகு தொடர்ந்தான்.

    நமக்கு ஏதாவது வேலை கிடைக்கணும். அது இப்போதைக்கு கிடைக்கிறதா இல்ல. ஏதாவது லாட்டரி விழணும். அதுக்கு நமக்கு அதிர்ஷ்டம் போதாது... அதிர்ஷ்டம் இருந்தா நாம இப்படி லோலோன்னு அலைவமா? எங்கேயாவது போய் கொள்... ள்... ளை...

    சுப்பிரமணியின் பேச்சுத் துண்டிக்கப்பட்டது. அவனது பார்வை சாலையில் போய்க்கொண்டிருந்த மஞ்சுளாமீது விழுந்தது.

    மஞ்சுளா நீங்கள் நினைக்கிறமாதிரி இளமையில் ஊஞ்சலாடுபவள் இல்லை. வயதில் அரைசதம் போட முயற்சித்துக் கொண்டிருப்பவள். அவ்வூர் பள்ளியின் ஆசிரியை. கணவன் வங்கி மேலாளர். ஆகவே கொழுத்த. பணம் படைத்தவள். பணக் கொழுப்பு கழுத்தில் கொத்துக் கொத்தாகக் கிடந்த தங்க நகைகளில் வழிந்தது.

    சுப்பிரமணியின் பார்வை அந்த நகைகளின்மீது விழுந்தது.

    சேது, ஒரு பொம்பளை எவ்வளவு நகை கழுத்தில் போடலாம்?

    மஞ்சுளா டீச்சரைச் சொல்றியா, அவளுக்கென்ன. கழுத்துல போட்டிருக்கிறது தவிர, வீட்டுல வேற வச்சிருக்கிறதா கேள்வி...

    அவளுக்கு எத்தனை புள்ளைங்க?

    ஒரே ஒரு பையன். அவனும் வேலைக்கு போயாச்சு...

    அப்புறம் எதுக்கு இந்தக் கிழவிக்கு நகை நட்டு எல்லாம்?

    நீ என்ன சொல்ற சுப்பிரமணி?

    கொத்துக் கொத்தா கழுத்துல நகை போட்டிருக்கிறாளே, அதுல ஒரு செயின், ஒரே ஒரு செயின் நமக்கு தந்தா போதுமே...

    திருடச் சொல்றியா?

    முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே...

    சுப்பிரமணீ...

    அட பயப்படாதீங்கப்பா... சும்மாவே இருக்கிறோம். இப்படி விபரீத விளையாட்டு ஒண்ணு விளையாண்டு பார்ப்போமே... நீங்க பயந்தா நா தனி ஆளா செஞ்சுக் காட்டுறேன்...

    சுப்பிரமணி... விளையாட்டுக்கு பேசறயா அல்லது நிஜமாவே சொல்றியா?

    நிஜம், நிஜம். நூறு சதவீத நிஜம். இப்படி எக்கச் சக்கமா நகை போட்டுகிட்டு திரியற அவ, ஒரே ஒரு செயினை இழக்கிறதால குறைஞ்சு போயிடமாட்டா... நா செஞ்சு காட்டறேன் பாருங்க...

    கொஞ்சம் தயங்கிவிட்டு, சேதுவும் ராமுவும் தலை ஆட்டினார்கள்.

    அன்றிலிருந்து சுப்பிரமணி, சேது, ராமு மூவரும் ஒருவர் மாறி ஒருவராக மஞ்சுளாவை பின் தொடர்ந்தார்கள். அவள் வழக்கமாக வீட்டிலிருந்து புறப்படும் நேரம், வழக்கமான பஸ், அவள் போகும், வரும் பாதைகள் எல்லாம் கணக்கிட்டார்கள்.

    ஒரு வார கண்காணிப்புக்குப் பின் -

    சேது, ராமு... திட்டம் தயார்... என்றான் சுப்பிரமணி. இடம் அதே பஸ் ஸ்டாப் கட்டிடம்.

    சொல்லு சுப்பிரமணி...

    "இந்த டீச்சர் காலைல ஏழே முக்காலுக்குப் பழவூர்ல இருக்கிற தன்னோட வீட்டுல புறப்படுது. எட்டேகால் கணபதி பஸ் புடிச்சு கல்லூர்ல

    Enjoying the preview?
    Page 1 of 1