Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidinthaal Vibareetham
Vidinthaal Vibareetham
Vidinthaal Vibareetham
Ebook96 pages1 hour

Vidinthaal Vibareetham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466671
Vidinthaal Vibareetham

Read more from K.G.Jawahar

Related authors

Related to Vidinthaal Vibareetham

Related ebooks

Related categories

Reviews for Vidinthaal Vibareetham

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidinthaal Vibareetham - K.G.Jawahar

    11

    1

    ‘அதென்னவோ... ஒரு நாளின் பகல் பொழுதைவிட, - இரவு பொழுதுதான் அதிகம் பேசப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? இரவு என்பது வெப்பமின்றிக் குளுமையாக இருப்பதாலா? பெண் முகம் மாதிரி இருக்கும் நிலவு வருவதாலா? அல்லது நிலா இல்லாத நாட்களில் தங்கள் கொட்டத்தை அதிகமாகக் காட்டும் நட்சத்திரங்கள் ஜொலிப்பதாலா? சில் வண்டு ரீங்கரிக்கும் அமைதியினாலா? அல்லது கிளுகிளுப்பான நேரங்களைக் கூட்டிக் கிளர்ச்சியைத் தூண்டி விடும் தனிமையினாலா? எதனால் இரவுக்கு இத்தனை மவுசு?

    இதெல்லாம்விட, இரவு இன்னொரு வகையிலும் பெயர் பெற்று விளங்குகிறது. ஆம். குற்றங்களைச் சத்தமின்றி புரியக் கைகொடுப்பதல்லவா இரவு! திருட்டா? கொள்ளையா? கற்பழிப்பா? செயின் பறிப்பா...? இரவு கைகோர்த்தல்லவா கம்பெனி கொடுக்கிறது. அதற்குத்தான் இரவு பற்றி இத்தனை பயம். அத்தனை பேச்சு.’ மொட்டை மாடியில், இருட்டுக் கம்பளியில் இருந்த நட்சத்திர பொத்தல்களைப் பார்த்தவாறு, யோசித்தவாறு ஒரு நைந்துபோன தலையணையுடனும், கிழிந்துவிட்டப் பாயுடனும் நிம்மதியாகப் படுத்திருந்தான் பார்த்திபன். செல்லமாக பலர் அவனை அழைப்பது –

    பார்த்தி.

    அவனுக்குத் தூக்கம் வரவில்லை. இரண்டாவது ஆட்டத்தின் இறுதிக் காட்சியில் பார்த்த மலையாளக் காட்சிகள் மனதைப் பிசைந்து கொண்டிருந்தன.

    தெருவில் நிசப்தம். கார்ப்பரேஷனின் விளக்குகள் கண் சிமிட்டிச் சிமிட்டி அலுத்து கடைசியில் கண்மூடிக் கல்லறைக்குப் போய்விட்டதால் இருளின் அராஜகம் இன்னும் அணைகட்டி விட்டிருந்தது.

    பார்த்தி புரண்டான்.

    அந்த நடிகையின் நடிப்பு சூப்பர்.

    பார்த்தி மறுபடி உருண்டான்.

    ஒன்று இரண்டு மூன்று என்று நூறுவரை எண்ணிப் பார்த்தான். ஊஹூம்... தூக்கம் வரவில்லை.

    பேசாமல் கீழே போய் ஏதாவது புத்தகத்தை எடுக்கலாமா? இந்த இரவு நேரத்தில் படிக்க ஏற்ற புத்தகம் இருந்து?

    பரபரப்பில்லாத அமைதியான;

    தத்துவமயமான புத்தகங்கள்...

    அதில் ஏதாவது ஒன்று படித்தால் என்ன?

    அவன் எழுந்தான்.

    அப்போதுதான்...

    ஐயோ... அம்மா... என்னைக் கொல்றாங்களே-- என்ற பெண்ணின் குரல் தீனமாகக் கேட்டு அப்படியே அடங்கியது.

    அந்தப் பெண்ணின் ஓலம் ஒரு கணம் பார்த்திபனை உலுக்கி எடுத்துவிட்டது. அப்படிப்பட்ட ஓலம். வியர்வை இன்ஸ்டண்ட் காப்பி’ போல உடனே வந்தது.

    யாரவள்? எதற்காகக் கத்தினாள்? எங்கிருந்து கத்தினாள்?

    குரலை வைத்துப் பார்த்தால், குமரி என்று யூகிக்க முடிந்தது.

    என்ன மாதிரியான அலறல்! பார்த்தி சட்டென்று வாட்சைப் பார்த்தான். பச்சைநிற ரேடியம் வாட்ச் கையும், காலும் பரப்பியவாறு இரண்டு என்றது. அட, இவ்வளவு நேரமாகிவிட்டதா?

    பார்த்திக்கு பரபரப்புக் குறையவில்லை. இந்தப் பயங்கர அலறல் கேட்டும் யாரும் முழிக்காதது அவனுக்கு வியப்பாக இருந்தது. யாருக்கும் உண்மையிலேயே கேட்கவில்லையா? அல்லது கேட்டும் கேட்காதது மாதிரி இருக்கிறார்களா?

    அவனுக்குக் குழப்பமாய் இருந்தது

    தான் கேட்டது பிரமையோ? அந்த மலையாளப் படத்தில்கூட வில்லன் அந்த இரண்டாவது ஹீரோயினை ஸ்லோமோஷனில் துரத்திப் பிடித்து, அதைவிட ஸ்லோமோஷனல் அவளின் மைதா மாவு மடிப்பு வயிற்றில் கத்தியை இறக்கியபோது, இப்படித்தான் கூச்சலிட்டாள்.

    அதனுடைய பிரமைதானோ!

    இல்லை. இது நிஜம். கேட்டது சத்தியம். அதுவும் பக்கத்தில் வெகு பக்கத்தில் எங்கோதான்.

    பார்த்தி எழுந்தான். மொட்டை மாடி சிலுசிலுப்பும் நட்சத்திர ஒளி பளபளப்பும் மறந்தான். தடதடவென்று இறங்கிப் பார்த்தான்.

    இறங்கி, தன் அறைக்கு வந்தானேயொழிய, என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு வீர சாகசங்கள் செய்து பழக்கமில்லை. தெருவில் பெண்களைக் கண்டால்கூட ஒதுங்கிவிடுவான். எந்தப் பெண்ணாவது தப்பித் தவறி ‘டைம் ப்ளீஸ் ஸார்’ என்று கேட்டுவிட்டால்கூட கைகால் நடுங்கி, நடுங்குகிற நடுங்கலில் வாட்சே நின்று போகும் அத்தனை சாது.

    ஆனால் இந்தக் குரல்... அபயக்குரல் கம் அபாயக்குரல்! அவனுக்குள் எதையோ செய்தது. கதவைத் திறந்து தெருவில் இறங்கத் தீர்மானித்...

    ‘தடால்!’

    பின்னாடி ஏதோ சத்தம். பார்த்திபனுக்கு திடுக்கிட்டது பின்னாடி யார்? அல்லது பூனை ஏதேனுமா? எதுவோ சத்தம். உஷார். உஷார்! ‘பார்த்தி... உன் வீட்டின் பின் கட்டில் ஏதோ சத்தம்...’

    அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. கூடத்திற்கு வந்தான். விளக்கைப் போட்டான். குபீரென்ற வெளிச்சம் பார்த்து, பல்லி மிரண்டு ஓடியது. அதன் வாயில் ஒரு கொழுத்த கரப்பான் பூச்சி டிஸ்கோ ஆடிக் கொண்டிருந்தது.

    கூடத்தில் விழுந்த வெளிச்சத்தால், பின் கட்டில் மறுபடியும் ஏதோ சத்தம்.

    பார்த்தி திடுக்கிட்டான்.

    யாரோ இருக்கிறார்கள். பின் முற்றத்தில் யாரோ யாரோ...

    லேசாக நடுங்கினான். கால்கள் ஆணி அடித்தன.

    கூடத்தை அடுத்த பின்கட்டின் விளக்கைப் போடலாமா? அல்லது நைஸாக நடந்து இருளில் சென்று என்னவென்று பார்க்கலாமா? என்ன செய்யலாம்?

    பார்த்தி யோசித்தான். ‘நினைப்பதற்கு நேரமில்லை. உடனே இயங்கு,’ என்று தலையில் உள்ள தலைமைச் செயலகம் (தாங்ஸ் சுஜாதா!) உத்தரவிட்டது. கையில் ஓர் இரும்புக் குழலை எடுத்துக் கொண்டான். அடுப்பூதும் குழல்! இருக்கட்டுமே என்று. விளக்கைப் போடாமல் -

    மெள்ளச் சென்று கூடத்து விளக்கையும் அணைத்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1