Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raththakarai Thaavani
Raththakarai Thaavani
Raththakarai Thaavani
Ebook95 pages33 minutes

Raththakarai Thaavani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466664
Raththakarai Thaavani

Read more from K.G.Jawahar

Related to Raththakarai Thaavani

Related ebooks

Related categories

Reviews for Raththakarai Thaavani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raththakarai Thaavani - K.G.Jawahar

    15

    1

    கவிதாவின் கால்கள் வேகமாக நடைபோட்டன. ஏறக்குறைய ஓட்டமான நடை. அப்படி நடக்கும்போது, காலில் இருந்த வெள்ளிக் கொலுசு ‘ஜலக் ஜலக்’ என்று சப்தித்தது. அந்த ‘ஜலக் ஜலக்’ ஒலி. அந்த ஒலிக்குப் பக்கவாத்யம்போல அவள் இதயம் படக் படக்’ என்று குரல் கொடுத்தது.

    ஆம். கவிதா பயத்தில் இருந்தாள். ஸ்டேஷன் விட்டு இறங்கி குறுக்கு வழியாக வரலாம் என்று நினைத்து இந்தத் தோப்புப் பாதையை தேர்ந்தெடுத்தாள். இது ஒன்றும் புதிய தோட்பல்ல அவளுக்கு சிறுமியாக இருக்கும். போதும், வளர்ந்து தாவணி போடத் தொடங்கியபோதும் தோழிகளுடன் பந்து விளையாடிய அழகான தோப்புதான். ஆனால் நேரம்தான் புதிது.

    இப்படி நடு நிசியில் அவள் தோப்பு வழியே தனியாக வருவதுதான் புதிது! பகலில் ரம்மியமாக இருக்கும் இந்தத் தோப்பு, இரவில் எப்படி பயங்கரமரகத் தோற்றம் தருகிறது என்று வியந்தாள்.

    அதுவும் வெகு நாட்களுக்குப் பிறகு -

    கிராமத்தை விட்டுப் படிப்பு முடிந்த கையோடு, மேல் படிப்புக்காகச் சென்னை வந்தபிறகு, ஒரு வருடம் கழித்து முதல் முதலாக வருகிறாள்.

    வழியில், ரயிலில் குண்டு என்ற வீண் வதந்தியால் ஏகப்பட்ட தாமதம். அகால வேளையில் ஸ்டேஷனில் வந்து நின்றது ரயில், அவளை மட்டும் உதிர்த்துவிட்டு, கார்டு காண்பித்த வெளிறிய பச்சைக் கலர் விளக்கைப் பார்த்ததும் புறப்பட்டுப் போய்விட்டது.

    கவிதா தான் வருவதை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிவிக்கவில்லை திடீரென்று போய் அவர்கள் முன் நின்று, சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று நினைத்தாள்.

    ஆகவே, ஸ்டேஷனுக்கு வண்டி எதுவும் வரவில்லை. இப்படி அகால நேரத்தில் வரும் என்று தெரிந்திருந்தால் ஒழுங்காகச் சொல்லியிருப்பாள்.

    அவளுக்கு அப்பாவிடம் இப்படி ‘சர்ப்பரைஸ்’ விளையாடுவது ரொம்பப் பிடிக்கும். சுந்தரைப் பற்றிக்கூட சர்ப்ரைஸ்தான்.

    எக்மோரில் அவளை வழியனுப்ப வந்திருந்த அவளின் அன்புக் காதலன் சுந்தர், கவிதாவுக்குத் தேர்வடம் சைஸில் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் தந்தபின் சொன்னான்.

    கவி, ஊருக்குப் போய் அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லி விடு. இன்னும் இரண்டு வருடம் கழித்துக் கல்யாணம்-அதுவும் சுந்தருடன்தான்-என்று

    ஏய் ச்சீ, நான் எதைப் பற்றியுமே இப்ப மூச்சுவிடமாட்டேன். இரண்டு வருடம் கழித்து நானே திடுதிப்பென்று அப்பாவுக்கு உன்னை ஸர்ப்ரைஸாக அறிமுகப்படுத்துவேன், என் விருப்பங்களுக்கு இதுவரை குறுக்கே நிற்காத அப்பா, ‘சரி’ போய்த்தொலை என்று என்னை உன்னைப் போன்ற பாழுங்கிணற்றில் தள்ளிவிடுவார்."

    ஏய், என்ன உளறல் கூடுது? கொஞ்சம் நாக்கைக் கண்டிச்சு வை, என்றவன் செல்லமாக அவள் தலையில் குட்டினான்.

    அப்போது மணியடித்தது.

    ஏய், பெட்டியில் ஏறு. வண்டி கிளம்பப் போகுது. போய் எனக்கு ஒரு எஸ்.டி.டி, போட்ரு. சரியா? ஜாக்கிரதை.

    சரி,

    அவள் ஏறிக் கொண்டாள். ரயில் மெல்ல கிளம்பியது. வந்த மக்கள் பின்னேறினார்கள். டாட்டாக்களும், கண்ணீர்த் துளிகளும் விசும்புதல்களும்... ரயில் பெட்டியின் கடைசி முதுகைப் பார்த்தபின் கரைந்து போயின.

    பிரயாணம் இனிமையாய்த்தான் ஆரம்பித்தது.

    ஆனால் திருச்சிக்கு வரும்போது குண்டு புரளி.

    வண்டி செம லேட்.

    பயணம் கசந்தது. அதுவும் இப்போது இரவின் தனிமையில் நடந்து... ஓடி... மகா கசப்பு.

    அவள் பயத்துக்குக் காரணம் –

    பின்னால் சற்று தள்ளிக் கேட்ட காலடியோசை.

    இலைகளைக் கிழித்துக்கொண்டு தோப்பின் இடையில் எட்டிப் பார்க்கும் விவஸ்தை கெட்ட நிலா. அந்த வெளிச்சத்தில் அவளால் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை...

    நன்றாகத் திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது

    ஆனால் நிச்சயமாகத் தெரிந்தது.

    யாரோ தொடர்கிறார்கள். கவிதா சுந்தரை நினைத்துக் கொண்டாள்.

    ‘அடப் பாவி சுந்தர், நீயும் என்னுடன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே... ‘

    சில சமயங்களில் சில சூழ்நிலைகளில் மனது சாத்தியமில்லாத விஷயங்களைக் கற்பனை பண்ணித் திருப்தி அடைகிறது. அதைப்போலத்தான் கவிதாவின் இந்த நினைப்பும்...

    இன்னும் பத்து நிமிடங்கள் நடந்தால்-தோப்பு முடியும். மேலத் தெரு வந்துவிடும்.

    கோபுரம் மாதிரி கம்பீரமாகத் தெரியும் மாடி வீடு, ‘அன்பு இல்லம்’ அவள் வீடு.

    அதைப் பார்த்ததும் தெம்பு வந்துவிடாதா!

    அவள் நடையில் வேகம் படுவேகமாகியது.

    சரக்... சரக்... ஜலக்... ஜலக்...

    திடீரென்று தரைக்காற்று. சருகுகளை விரட்டி அடித்து விண்ணில் எழும்பியது. கவிதாவின் கேசம் பறந்தது. புடவைத் தலைப்பு சினிமாத்திரை மாதிரி விரிந்து நின்றது. முகத்தில் அடித்த காற்று அவள் வேகத்தைக் குறைத்தது. என்னமாய்க் காற்று!

    ஏன் இந்தத் திடீர்ச் சூறாவளி!

    அவளுக்குப் பயம் விளிம்பில் இருந்தது. வானத்தைப் பார்த்தாள். நிலவும், நட்சத்திரங்களும் இந்திரலோகத்தில் செகண்ட் ஷோ பார்க்கப் போய்விட்டன போலும். எதையும் காணோம்.

    காற்று நிற்கவில்லை.

    அவள் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பை - அவளை இழுத்த மாதிரி இருந்தது. கனத்தது.

    அப்பா எதிரே வரமாட்டாரா?

    மாமா திடீரென்று தோன்றி, ‘என்னம்மா கவிதா இந்த நேரத்துல?’ என்று பையை வாங்கிக் கொள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1