Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbe Unakkaaga
Anbe Unakkaaga
Anbe Unakkaaga
Ebook111 pages37 minutes

Anbe Unakkaaga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466657
Anbe Unakkaaga

Read more from K.G.Jawahar

Related to Anbe Unakkaaga

Related ebooks

Related categories

Reviews for Anbe Unakkaaga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbe Unakkaaga - K.G.Jawahar

    18

    1

    விடாமல் இருமிக்கொண்டு இருந்தான் அவன். சக நோயாளிகள் அவனை வெறுப்புடன் பார்க்கத் துவங்கிவிட்டார்கள். அவர்களைப் பார்த்து, ‘ஸாரி...’ என்ற பாவனையில் ஒரு நிமிடம் இருமலை நிறுத்தினான். பிறகு மறுபடியும் லொக், லொக்.

    டோக்கனை கையில் வைத்து உருட்டிக்கொண்டிருந்த நோயாளிகள், அஸிஸ்டண்டைக் கூப்பிட்டு,

    தம்பி... இந்த ஆளை முதல்ல டாக்டர்கிட்ட அனுப்பிச்சிருப்பா... காண்பிச்சுட்டு போயிறட்டும்... என்று கூட்டணித் தீர்மானம் போட்டு, ஏகமனதாய் சிபாரிசு செய்ய, பையனும் தலையசைத்தான்.

    அந்த இருமல் நோயாளி எல்லோருக்கும் கண்களால் நன்றி சொல்லும் சமயத்தில் உள்ளே இருந்த நோயாளி கன்ஸல்டேஷன் முடிந்து வெளியே போனார்.

    ஸார்... நீங்க போங்க... என்றான் பையன்.

    அந்த ஆள் இருமிக்கொண்டே டாக்டர் அறைக்குள் நுழைந்தான். சில நிமிடங்கள் கழிந்தன... மேலும் சில நிமிடங்கள்.

    அந்த இருமல் நோயாளி கன்ஸல்டேஷன் முடிந்து நிதானமாக வெளியே வந்தான்.

    ரொம்ப தேங்கஸ் தம்பி... டாக்டர் ஐந்து நிமிடம் கழித்து அடுத்த பேஷண்ட்டை அனுப்பச் சொன்னாரு... வரேன்... என்றவன், சரியாக வந்து நின்ற ஆட்டோ ஒன்றில் ஏறிப் பறந்து போக -

    5... 4... 3... 2...1.

    கரெக்டாக அடுக்க நோயாளி வாட்சைப் பார்த்தவாறே ஸ்கிரீனை விலக்கி டாக்டர் அறையில் நுழைகிறார். மறுகணம் -

    ஐயோ... கொலை... கொலை... என்ற பயங்கர ஓலம் உள்ளேயிருந்து வந்தது.

    2

    "யோவ்... தள்ளுய்யா... தள்ளுய்யா...!"- போலீஸ்காரர் கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்தார்.

    பயங்கரம்.

    வயிற்றில் கத்தி இறங்கிய நிலையில், ஸ்டெத் அதற்கு மாலை போல் இருக்க -

    மரணத்தைத் தழுவியிருந்தார் டாக்டர் வர்மா. இளமையான முகம். அரும்பு மீசை. கைராசிக்காரர் என்று பெயர் எடுத்தவரின் மீது கை வைத்துவிட்டுச் சென்றுவிட்டான் ஒருவன்.

    யார்?

    யாருய்யா முதல்ல பார்த்தது? என்றார் இன்ஸ்பெக்டர்.

    அவர் முகம் மெரினா பீச் கலங்கரை விளக்கமாய் மெல்ல ரவுண்ட் அடித்தது. அந்தப் பார்வையைப் பார்த்ததும் பலர் பம்மினர். பயந்தனர்.

    நான் பார்க்கலங்க... நான் பார்க்கலங்க... எல்லோரும் கோரஸாய் கத்தினர்.

    ஐயோ... கொலை கொலை ன்னு கத்தின பேஷண்ட் டோக்கனைப் போட்டுட்டு ஓடிட்டார்யா... இதான் டோக்கன்..."

    கிளினிக் பையன் டோக்களை நீட்டினான். இன்ஸ்பெக்டர் அஸால்டாக அதைப் பார்த்தார்.

    அந்த பேஷண்ட் முகம் யாருக்காவது நினைவிருக்கா...?

    இல்ல...

    இல்லை ஸார்...

    ஐயோ நினைவில்லை ஸார்... -மீண்டும் பதட்டக் குரல்கள்.

    சரி... முதல்ல உள்ள நுழைஞ்சவனை யாராவது நினைவு வெச்சிருக்கீங்களா...? அதாவது கொலைகாரனை!

    ஞாபகம் இல்லீங்க. ஆனா... சதா இருமல். நோஞ்சான் உடம்பு. டி.பி போல...- என்றார் ஒரு பெரியவர்.

    ம்... சற்று விலகுங்க...

    இன்ஸ்பெக்டர் குனிந்து லேட் டாக்டர் வர்மாவைப் பார்த்தார். பாவம். பலரின் ஆயுளை நீட்டித்த இவரின் ஆயுள் டப்பென அகாலமாய் அம்பேலாகிவிட்டது.

    நோட்டம் விட்டார்.

    ஷெல்ஃப் நிறைய புத்தகங்கள். மனித உடம்பின் தலை முதல் பாதம் வரையிலான படங்கள். பிளாஸ்டிக் மண்டை ஓடு ஒன்று. மற்றபடி மேஜையில் நிறைய மாத்திரைகள், மருந்துகள். - வெள்ளை முயல்குட்டி மாதிரி ஃபோன் ஒன்று மரஸ்டூலில் இருந்தது.

    நெருங்கி ரிஸீவரை எடுத்தார்.

    செத்திருந்தது!

    ‘அட... இது என்ன...?’ என்பது போல ரிஸீவரைப் பார்க்கையில் அறுந்து விழுந்த அரணாக்கயிறு மாதிரி ஒயர் தொங்கிக்கொண்டிருந்தது.

    இன்ஸ்பெக்டர் சுறுசுறுப்பானார்.

    வந்தவன் பலே ஆள்தான்.

    டெலிஃபோன் ஒயரைக்கூட அறுத்துவிட்டுச் சென்றிருக்கிறானே பாவி!

    கிளினிக் அறையை விட்டு வெளியே வந்தபோது கூட்டம் மேலும் தீவிரமாகி இருந்தது...

    அதே சமயம் ஆம்புலன்ஸும் கைரேகை நிபுணரும், புகைப்படக்காரரும் வந்து சேர்ந்தனர்...

    வேலைகள் மளமளவென்று முடிந்தன.

    மிரண்டு போயிருந்த கிளினிக் பையனிடம் கேட்டார்:

    டாக்டர் முகவரி என்னப்பா?

    நம்பர் இருபத்தினாலு, மூணாவது கிராஸ், முதல் தெரு, பெஸண்ட் நகர்...

    போன்?

    சொன்னான்.

    குறித்துக் கொண்டார்.

    வர்மாவின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டப்போது, ஐயோ..., அடடா..., ராசா... போன்ற அனுதாபக் குரல்கள் விண்ணைப் பிளந்தன.

    சில கிழவிகள் வாய் பொத்தி அழுதார்கள்.

    ஒரு பெண் தன் குழந்தையின் கண்களைக் கைகளால் பக்கென்று பொத்தினாள்.

    பயம். பயம்.

    தம்பி...! என்றார் இன்ஸ்பெக்டர். கிளினிக் பையனிடம்.

    என்ன ஸார்?

    உன் வீட்டு முகவரி சொல்லு...!

    ஐயோ எதுக்கு ஸார்?

    அட சொல்றான்னா?

    நம்பர் ஏழு, மேலத்தெரு, திருவான்மியூர்

    நான் சொல்ற வரைக்கும் நீ எங்கும் வெளியூர் போயிராத... என்ன?

    சரி... ஸார்...-நடுங்கிக்கொண்டே பதிலளித்தான். அவன்.

    பெயர் என்னடா? கேட்க மறந்துட்டேன்

    ரவி

    ரவி... நாளைக்காலைல நீ கிளினிக்கு வந்து உட்கார்ர...

    ஸார்...

    சொல்றத செய்டா...

    சரி ஸார்...- பீதியில் உறைந்து வந்தது பதில்.

    தடயங்கள் அத்தனையும் பதிவு செய்யப்பட்ட பிறகு, கிளினிக் பூட்டப்பட்டது.

    இரவு நடுநிசிக்கு மேலே இருக்கும்...

    தன் துக்கினியூண்டு அறையில் தூக்கம் வராமல் நடந்து முடிந்த கொலையைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்த ரவியின் கவனத்தை ஈர்த்தது அந்தக் குரல்...!

    லொக்... லொக்...

    தூக்கிவாரிப் போட்டு எழுந்தான்.

    உடம்பு வியர்த்தது.

    அதே குரல்.

    அதே லொக் லொக்.

    அறையில் இருந்து வெளியே வந்தான்.

    மொட்டை மாடி. நீண்ட கைப்பிடிச் சுவர். கீழே

    Enjoying the preview?
    Page 1 of 1