Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veesa Marantha Thendral
Veesa Marantha Thendral
Veesa Marantha Thendral
Ebook96 pages2 hours

Veesa Marantha Thendral

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Indhumathi
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466718
Veesa Marantha Thendral

Read more from Indhumathi

Related to Veesa Marantha Thendral

Related ebooks

Reviews for Veesa Marantha Thendral

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veesa Marantha Thendral - Indhumathi

    1

    ‘வார்டு இன்ஸ்பெக்ஷன்’ முடிந்ததும் தன் அறைக்கு வந்தாள் டாக்டர் நந்தினி.

    ‘ஏர்கண்டிஷன்’ குளிர்ச்சி மனதுக்கு இதமாக இருந்தது. மெதுவாக வெள்ளை கோட்டைக் கழற்றி நாற்காலி மீது போட்டு உட்கார்ந்தாள்.

    ‘இன்டர்காமில்’ பேசி, ஷீலாவை வரச் சொன்னாள்.

    எஸ் டாக்டர்...

    கதவைத் திறந்துகொண்டு ஷீலா உள்ளே வந்தாள்.

    டாக்டர் மேனன்கிட்ட இருந்து அந்த ‘ரிப்போர்ட்’ வந்துடுச்சா?

    ம்... வந்துடுச்சு டாக்டர்! உங்கள் மேஜை மேலேயே வெச்சிருக்கேன். அப்புறம்... டாக்டர் சித்ரா ‘போன்’ பண்ணினாங்களா? கொடைக்கானலில் இருந்து வந்துட்டாங்களாம். நாளைக்கு வர்றதா சொன்னாங்க.

    அப்படியா...? என்று ஷீலாவைப் பார்த்த நந்தினிக்கு அவள் சொன்ன செய்தி சந்தோஷத்தைத் தந்தது.

    அந்த ஒரு வாரமாக டாக்டர் சித்ரா இல்லாமல் அவளின் அத்தனை கேஸ்’களையும் இவளே கவனிக்க வேண்டியதாயிற்று. கொஞ்சம்கூட ஓய்வு இல்லாமல் கடந்து போன வாரம், அது.

    டாக்டர் சித்ரா போன மறுநாளே டாக்டர் சர்மாவும், அவரின் தந்தை இறந்துவிட்டதாகக் கிளம்பிப் போய்விட்டார். அவர் போனபோது ‘டோன்ட் பாதர் டாக்டர். ஐ வில் மானேஜ்’ என்று சொல்லி அனுப்பிய பிறகுதான் அதன் கஷ்டம் தெரிந்தது.

    ஒரு வாரமாக சரியான நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம் இல்லாமல்; ‘வார்டு இன்ஸ்பெக்ஷன்’... நோயாளிகள்- அவர்களின் கேள்விகளுக்கு பதில், ‘ஆபரேஷன்’கள் என்றே அலுத்துப் போயிருந்தது.

    ‘டாக்டர் சித்ரா வந்ததும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு நன்றாகத் தூங்க வேண்டும்! என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

    அப்படியும் ஒரு நாளைக்கு மேல் தூக்கம் வராது. அடுத்த நாளே மனது பரபரக்கும்; ஆஸ்பத்திரியை நினைத்துக்கொள்ளும். நோயாளிகளை... அவர்களுக்குத் தர வேண்டிய மருந்துகளை... ‘ஆபரேஷன்’களை நினைக்கிறபோதே கிளம்பி வந்துவிடத் தோன்றும்.

    அவ்வளவு தூரம் தான் ஐக்கியமாகிப்போனதை நினைத்து அவளே அடிக்கடி சிரித்துக்கொள்வாள்.

    அப்போது அவளது இதழ்களில் தோன்றிய புன்னகையை கவனித்த ஷீலா, ஒரு வாரத்துக்கு அப்புறம் இப்போதான் உங்க முகத்துல சிரிப்பைப் பார்க்கிறேன் டாக்டர் என்று மேனனிடம் இருந்து வந்த ‘ரிப்போர்ட்டை அவளிடம் எடுத்துத் தந்தாள்.

    பிறகு, டாக்டர் சர்மாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கு என்று அதையும் தந்தாள்.

    மேனனின் ‘ரிப்போர்ட்டை’ படித்த பின்... இதை மூணாம் ‘நம்பர் வார்டில்’ இருக்கிற முத்துக்கிருஷ்ணனின் ‘ஃபைலில்’ போட்டுடு. ‘நத்திங் இஸ் ராங் வித் ஹிம்’! நாளைக்கு எதுக்கும் ஒரு ‘பிளட் டெஸ்ட்’ எடுத்து பார்த்துவிட்டு, அவனை ‘டிஸ்சார்ஜ்’ பண்ணிடலாம் என்றாள்.

    ஓ.கே. டாக்டர்.

    டாக்டர் மாதவன் கிளம்பிட்டாரா?

    இன்னும் இல்லை. எட்டு மணிக்கு ‘எம்.எல்.ஏ.’ ஒருத்தரின் ‘அப்பாய்ன்ட்மென்ட்’ இருக்கு.

    மணி எப்பவோ எட்டு ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்.

    ஷீலா தன் கடிகாரத்தில் மணி பார்த்து, இன்னும் பத்து நிமிஷம் இருக்கு டாக்டர் என்றாள்.

    சரி! நீ போ... மறக்காம மேனன் ‘ரிப்போர்ட்’டை ‘ஃபைல்’ பண்ணிடு ஷீலா. எனக்கு டாக்டர் மாதவனோடு கொஞ்சம் பேசணும். அந்த எம்.எல்.ஏ. வர்றதுக்கு முன் பார்த்துடணும். அதற்குள் நீ தயாராகிடு... நான் வந்ததும் கிளம்பிடலாம்.

    ஷீலா சரி! என்று சொல்லிவிட்டுப் போனதும் ஜன்னல்களை மூடி, மேசை ‘டிராயர்’களைப் பூட்டிக்கொண்டு அறையில் இருந்து வெளியில் வந்தாள் நந்தினி.

    மாதவன் அறையில் தனியாகத்தான் உட்கார்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும் கம் இன் என்று புன்னகையுடன் உள்ளே வரச் சொன்னார்.

    நந்தினி எதிரில் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டாள். எம்.எல்.ஏ. வர்றதுக்கு முன்னால உங்களைப் பார்த்துட்டுப் போகணும்ன்னு வந்தேன் என்றாள்.

    திங்கட்கிழமை அமெரிக்கா போறாராம். அதற்குள் ‘கம்ப்ளீட் செக் அப்’ பண்ணிடணும்ன்னு கேட்டார். காலையில் வரச் சொன்னேன். அவர், ‘எட்டு மணிக்கு வர்றேனே? காலையில வேலை இருக்கு’ன்னார். ‘சரி’ன்னு சொல்லிட்டேன்.

    நாளைக்கு டாக்டர் சித்ரா வந்துடுறார்.

    ம்... தெரியும்! அவர்கிட்ட இருந்து போன்’ வந்ததா ஷீலா இப்பதான் சொன்னா. சர்மாகூட கடிதம் போட்டிருக்கிறார். அவங்க அப்பாவுக்கு ‘ஹார்ட் அட்டாக்’காம். அவர் வர்றதுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல ஆகும் போல இருக்கு.

    எனக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். எந்த நேரத்திலும் ‘லட்டர்’ போடணும்ன்னு நினைச்சிக்கிட்டே இருப்பார் போல.

    அவர் செய்ய இருந்த ‘ஆபரேஷன்’ ஒண்ணை நீங்கதான் செஞ்சீங்கன்னு நினைக்கிறேன்.

    ஆமா... டாக்டர் சிவகுமாரும், நானும்தான் செய்தோம்.

    ஆபரேஷனுக்குப் பிறகு ‘வார்டு இன்ஸ்பெக்ஷனை’ முடிச்சிட்டு வந்ததும்தான் டாக்டர் சர்மாவின் கடிதத்தைத் தந்தாள் ஷீலா. நான் பிரிக்கலை. வீட்டுக்குப் போய் படிச்சிக்கலாம்ன்னு விட்டுவிட்டேன். இன்னிக்கு எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. டாக்டர் சித்ரா வரப் போகிறாள்ன்னு தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.

    அவங்க வந்ததும் நீங்க ‘லீவு’ எடுக்கப் போறீங்களா?

    நிச்சயமா ரெண்டு நாள் எடுத்துடுவேன்.

    ஒரு வாரம் எடுத்துக்கறது...

    வீட்டில் உட்கார்ந்து என்ன செய்யப் போறேன்? ரெண்டாவது நாளே போரடிக்க ஆரம்பிச்சிடும். அப்புறம் ‘பேஷண்ட்ஸ் முகத்தைப் பார்க்கலேன்னா தூக்கமே வராம போயிடும்.

    நான் பெங்களூர் போறேன். ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கிட்டு நீங்களும் வாங்களேன். காலையிலதான் என் மனைவியையும், மகளையும் அங்கே அனுப்பினேன். இப்போ தன் தங்கையோடு அரட்டை அடிச்சிக்கிட்டிருப்பா.

    "அதான் தைரியமாக எம்.எல்.ஏ.வுக்கு ‘அப்பாய்ன்ட்மென்ட்’

    Enjoying the preview?
    Page 1 of 1