Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeyindri Naanillai
Neeyindri Naanillai
Neeyindri Naanillai
Ebook105 pages1 hour

Neeyindri Naanillai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Indhumathi
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466763
Neeyindri Naanillai

Read more from Indhumathi

Related to Neeyindri Naanillai

Related ebooks

Reviews for Neeyindri Naanillai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeyindri Naanillai - Indhumathi

    1

    லஸ் கார்னரின் நடைபாதை ஓரமாகச் சாலையைக் கடக்கக் காத்துக் கொண்டு நின்றாள் சரயு. கிட்டத்தட்டக் கால்மணி நேரமாகியும் எதிர்ப்பக்கம் போக முடியவில்லை அவளால். முன் மாலைப் பொழுதிலேயே இப்படிப்பட்ட போக்குவரத்தா என நினைத்துக் கொண்டாள். ஆபீஸ் விடுகிற நேரமானால் இன்னமும் கூட்டம் அதிகமாக்கும் என்றுதான் சற்று முன்னதாகவே கிளம்பி வந்திருந்தாள். பகலில் அயர்வோடு படுத்துத் தூங்கின அம்மாவை எழுப்பிக் காப்பி தரச் சொல்லிக் குடித்துவிட்டு மூன்றரை மணிக்கெல்லாம் கிளம்பினாள். கிளம்புகிறபோதே சுள்ளென்று வெய்யில் உறைக்கத்தான் செய்தது. மென்மையான மேனியில் அனலாக அடித்தது. பொன்னிற உடம்பிற்கு அந்த முன்மாலை வெய்யில்கூட அதிகம் என்றுதான் பட்டது. ஆனாலும் வேறு வழி இல்லை. போய்த்தான் ஆக வேண்டும் என்பதனால் கிளம்பினாள். ரிக்ஷா, ஆட்டோ எதிலாவது போனால் வெய்யிலைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் வாகனங்கள் வைத்துக்கொண்டு கடைக்குப் போகிற வசதியற்ற காரணத்தினால் நடை வாகனத்தில் கிளம்பினாள்.

    அவளுக்கு வெய்யிலில் நடப்பது ஒத்துக் கொள்ளாது. சிறிது வெய்யில் பட்ட உடனேயே உடல் சிவந்து போகும். திட்டுத் திட்டாய்ச் சிவக்கும். அரிக்கத் தொடங்கும். டாக்டர், வெய்யில் அலர்ஜி என்றார். கூடுமானவரை வெய்யிலைத் தவிர்க்கச் சொன்னார். எப்படித் தவிர்ப்பது என்பதுதான் அவளுக்குத் தெரியவில்லை. வேண்டுமானால் கையில் குடை கொண்டு போகலாம். ஆனால், துணிப்பை, ஒயர் கூடை என கையில் எதையும் தூக்கிக் கொண்டு போக அவளுக்குப் பிடிக்காது. தன் வயதை ஒத்த எந்தப் பெண்ணும் இவைகளைத் தூக்கிக்கொண்டு போகாததை இவள் கவனித்திருக்கிறாள்.

    கல்லூரிக்குப் போனபோது அம்மா டிபன் கட்டி டப்பாவில் போட்டு அவளிடம் தருவாள்.

    டப்பாவெல்லாம் வேண்டாம்மா... என்றால் அம்மா முணுமுணுப்பாள்.

    ஏண்டி... டப்பா கொண்டு போறதில் என்ன வெட்கம்?

    போம்மா... நான் ஒருத்திதான் காலேஜுக்கு டிபன் பாக்ஸைத் தூக்கிட்டுப் போறேன். என் கிளாஸ்ல எல்லாரும் கலாட்டா பண்றாங்க.

    ஏன்... மற்றவங்கள்ளாம் என்ன கொண்டு வராங்க?

    பணம் கொண்டு வராங்க... காண்டீன்ல சாப்பிட...

    சட்டென்று சாரதாம்பாளின் தலை குனியும். கண்களிலும், முகத்திலும் வருத்தம் ஓடி வந்து கவிழ்ந்து கொள்ளும். ஒருநாள்கூட, இந்தா... காண்டீனில் சாப்பிடு... என அவளிடம் ஒரு பத்து ரூபாய்த் தாளை நீட்ட முடியாத தன் நிலைமையை நொந்து கொள்வாள். கல்லூரியில் பி.ஏ. கடைசி வருடம் படிக்கிற பெண்ணிற்கு நல்லதாக நான்கு புடவைகள்கூட எடுத்துத் தர முடியவில்லை.

    இத்தனைக்கும் அவள் ஒரே பெண் தான். அவளுக்குக் கீழே தங்கை, தம்பி என்று யாருமில்லை. அவளுக்கு மூன்று வயதிருக்கும்போது தொழிற்சாலை விலத்தில் அவளுடைய அப்பா மரணமடையாதிருந்தால் ஒருவேளை தம்பி, தங்கைகள் என இருந்திருக்கக் கூடும். வீட்டில் இவ்வளவு வறுமை இல்லாதிருந்திருக்கக் கூடும். அவளது அப்பாவின் மரணத்திற்குப் பின் கிடைத்த தொகையான அறுபதாயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கிற வட்டிப் பணத்தில் இரண்டு முழு ஜீவன்கள் வாழ்ந்தாக வேண்டும். வீட்டு வாடகை, மளிகை சாமான், பால், காப்பிப்பொடி என எல்லாம் போக அவளை வளர்த்துப் படிக்க வைக்க மிகுந்த பாடுபட்டிருக்கிறாள் அம்மா. இரவு ஒரு மணி, இரண்டு மணி எனத் தையல் இயந்திரத்தினடியில் உட்கார்ந்திருக்கிறாள்.

    அம்மாவின் தையல் வேலைதான் அவளை பி.ஏ. வரை படிக்க வைத்தது. படித்து முடித்த பின் அம்மா அவளை மேலே படிக்கச் சொல்லி வற்புறுத்தினாள்.

    இந்தக் காலத்துல வெறும் பி.ஏ.க்கு என்ன மதிப்பிருக்கு சரயு...? எந்த வேலை கிடைக்கும்? அதனால மேலே படி. எம்.ஏ. முடிச்சியானால் ஏதாவது ஸ்கூல்ல டீச்சர் வேலை கிடைக்கும். நிம்மதியான உத்யோகமாக இருக்கும்... என்றாள்.

    ஆனால் இவள் மறுத்து விட்டாள்.

    வேணாம்மா. இந்த பி.ஏ. படிப்பிற்கும், ஷார்ட்ஹாண்ட் டைப்ரைட்டிங் ஹயருக்குமே நல்ல உத்தியோகம் கிடைக்கும். என்னால தேடிக்க முடியும். கவலைப்படாதே... இதுக்கு மேலே உன்னைத் தையல் மிஷினடியில் இன்னொரு மிஷினாகத் தேய விடறதில் எனக்கு இஷ்டமில்லைம்மா... இனிமேல் நீ எந்த வேலையும் செய்யக்கூடாது. நான் சம்பாதிச்சுப் போடறேன். நீ நிம்மதியா உட்கார்ந்து சாப்பிடு... என்ன?

    அன்றிலிருந்து சரயு வேலை தேட ஆரம்பித்தாள். ‘வாண்டட்’ காலம் தவறாமல் பார்த்து எழுதி போட்டாள். போஸ்டல் ஆர்டருக்கும், விண்ணப்பத்தாள்களுக்குமே நிறைய பணம் செலவாயிற்று.

    ‘நல்ல இடத்தில், நல்ல மனிதர்களுக்கிடையில் கௌரவமான வேலையே கிடைக்காதோ...’ என அவள் நம்பிக்கை இழந்த தருணத்தில் தான் இந்த வேலை அவளுக்குக் கிடைத்தது. அப்பாவின் நண்பரான சாம்பமூர்த்தி மாமா வாங்கித் தந்தார்.

    "அம்மா சரயு... பெரிய கம்பெனிம்மா... டி.வி.எஸ்., சிம்சன், ஈசன் மாதிரி நல்ல கம்பெனி. கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் பலராமனை எனக்கு ரொம்ப வருஷமாப் பழக்கம். 1948லேருந்து நாங்க ரெண்டு பேரும் கிளப்புல ஒண்ணா சீட்டு விளையாடுவோம். அப்போ அவனும் என்னை மாதிரி ஒரு சாதாரண கிளார்க்தான். வேலையை உதறிட்டு சொந்தக் கால்ல நிற்கணும்னு ஏதோ வியாபாரம் ஆரம்பிச்சான். அதிர்ஷ்டமும், கடவுள் அனுக்கிரகமும் அவன் பக்கம் இருந்தது. இன்னிக்கு ஏழெட்டு கம்பெனி அவன் பேர்ல இருக்கு...

    இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன் தெரியுமா சரயு...? பலராமன்கிட்ட சொல்லி அவன் கம்பெனி எதுலயாவது உனக்கு வேலை போட்டுத்தரச் சொல்றேன். போறியாம்மா...?"

    என்ன மாமா கேள்வி இது...? கரும்பு தின்னக் கூலியா கேட்கப் போகிறேன்?

    இல்லம்மா... முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு தோணித்து. நீயும் ஆறு மாசமாக வேலைக்காக அலையறது தெரியும். பலராமன் அத்யந்த சினேகிதன் தான். ஆனால் இதுவரை எனக்கோ, மத்தவாளுக்கோ உதவின்னு போய் நின்னதில்லை. தேவைன்னு கை நீட்டினதில்லை...

    இப்போ எனக்காகப் போய் நிற்கப் போறீங்களா மாமா...?

    "நிற்கலாம்னுதான் நினைக்கிறேன். உனக்காக நிற்கறதில் தப்பு இல்லேன்னு படறது.

    Enjoying the preview?
    Page 1 of 1