Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maya Nenjam
Maya Nenjam
Maya Nenjam
Ebook120 pages50 minutes

Maya Nenjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரஞ்சன் ஒரு ஆடிட்டர். கடந்த நாலு வருடங்களாக ஊர்மிளாவை தேடி அலைகிறான். எதிர்பாரதவிதமாக ஊர்மிளா பணிபுரியும் கம்பெனியில் ஆடிட்டிங் பார்க்க சம்மதிக்கிறான். இருவரும் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரைக்கொருவர் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இருவரின் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்ன? ஏன் இப்போது அதிர்ச்சியடைகிறார்கள்? இருவரும் இணைந்து பணிபுரிய இயலுமா? வாசியுங்கள்...

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580106007244
Maya Nenjam

Read more from Jaisakthi

Related to Maya Nenjam

Related ebooks

Reviews for Maya Nenjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maya Nenjam - Jaisakthi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாய நெஞ்சம்

    Maya Nenjam

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 1

    நல்ல வேளை டைமுக்கு வந்துட்டீங்க பிரார்த்தனா என்று வரவேற்றார். எப்பொழுதுமே அவளுடன் அலுவலக பஸ்ஸில் வருகிற அலுவலக தோழி பிரேமா.

    ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. எங்க ஆபிஸ் பஸ்ஸை மிஸ் பண்ணிடுவோமான்னு நினைச்சேன் என்றாள் ஊர்மிளா. அதானே நீங்க லேட்டா வர்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்றார் பிரேமா.

    அந்த நேரத்தில் கண்ணு தெரியாத சிறுமி ஒருத்தி சாலையின் அந்தப் புறத்திலே நின்று கொண்டிருந்தாள். ஊர்மிளா வேக வேகமாக ஓடிப் போய் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு கிராஸ் செய்து இந்தப் பக்கம் கொண்டு வந்து விட்டாள்.

    அப்படி அழைத்துக் கொண்டு வரும் பொழுதே தங்களுக்கான பஸ் வருகிறதா என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். நல்ல வேளை வரவில்லை. சிறுமி அந்தப் பக்கம் விட்டு விட்டு எங்க போகணும்மா என்றாள்.

    ஸ்கூல் பஸ் வரும் ஆண்டி தினமும் எங்க அண்ணன் வருவாங்க இன்னைக்கு அவங்க வர முடியலை. பரவாயில்லைம்மா இங்கே நில்லு என்று சொல்லி விட்டு திரும்பவும். அவர்கள் அலுவலக பஸ் வந்து விட்டது.

    ஊர்மிளாவும், பிரேமாவும் ஏறிக் கொண்டார்கள். அப்படி ஏறும் பொழுது அவள் எதேர்ச்சையாக பார்வையை இந்தப் புறத்திலே திருப்பினாள். ஒரு கணம் திகைத்துப் போனாள்.

    ரஞ்சன் வண்டியிலே வந்து கொண்டிருந்தான். லேட்டஸ் பைக்கில் கம்பீரமாக அமர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தான். இவன் எங்கே இந்த ஊரிலே என்று திகைத்துக் கொண்டே நின்றவளை பிரேமா ஒரு தட்டு தட்டி ஊர்மிளா உள்ள ஏறுங்க என்றாள்.

    உடனே தன்னை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு உள்ளே ஏறினாள் ஊர்மிளா. ரஞ்சன் அவளைப் பார்த்து விட்டான் என்பது தெரிந்தது. சட்டென்று தன் பைக்கை திருப்பிக் கொண்டு அந்த அலுவலக வண்டியை பின் தொடர்ந்து வருவதும் தெரிந்தது. ஊர்மிலாவுக்கு படபடப்பாக போய் விட்டது.

    இதென்னடா வம்பாப் போச்சு என்று கலக்கமாகப் போய்விட்டது. உடனே இரண்டு கைகளையும் மடியின் மேல் வைத்துக் கோர்த்துக் கொண்டு வழக்கமாக சொல்லுகிற பிரார்த்தனைகளையெல்லாம் சொல்லி முடித்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்த பிரேமா அதைக் கவனித்துக் கொண்டே வந்தவள் என்னாச்சு ஊர்மிளா என்று கேட்டாள்.

    ம்... ஒண்ணும் ஒண்ணுமில்லை என்றாள் ஊர்மிளா அவசரமாக. இல்லை பஸ்ஸில் ஏறும் பொழுதுதான் பார்த்தீங்களோ வேண்டாதவங்களோ அப்படிங்கற மாதிரிதான் டென்ஷனா இருக்கீங்க என்றாள். ஆமாம் எங்க குடும்பத்துக்கு ஆகாத ஒருத்தங்க முறைச்சுட்டே போனாங்க என்றாள் ஊர்மிளா கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு.

    விடுங்க விடுங்க நம்ம ஜனங்களுக்கு பசிச்சாலும் பொறாமைதான் கேர் பண்ணிக்காதீங்க ரிலாக்ஸ் என்றாள் பிரேமா. மேலும் கஷ்டப்பட்டு மனதைத் திருத்திக் கொள்ள முயற்சித்தாள். ஆனால் ரஞ்சன் வண்டி பின்னாலே வருவது அவளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

    அரை மணி நேர பயணத்தில் அவர்களது அலுவலகம் வந்து விட்டது. இறங்கினாள் ஒரு வேளை அவன் வந்து வழக்கம் போல ஏதாவது ஏடாகூடமாக பேசினாள் என்ன செய்வது. தானே சமாளிக்க வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டவளாக திரும்பிப் பார்த்தாள். ரஞ்சன் வந்து கொண்டிருந்தான். பிரேமா நீங்க போங்க எங்க பேமிலி பிரண்டு ஒருத்தர் வர்றாரு நான் ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு வரேன் என்று பிரேமாவை அனுப்பி விட்டாள்.

    வா வா நான் எதற்கும் தயராக இருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டதைப் போல அவர்களுடைய அந்த பெரிய அலுவலக கட்டிடத்தின் காம்பவுண்டுக்கு முன்னாலே இருந்த பஸ் ஸ்டாப்பிலே நின்று கொண்டிருந்தாள். ரஞ்சன் வேகமாக வந்து பைக்கை நிறுத்தி விட்டு அவளை நோக்கி வந்தான்.

    தாங்க்ஸ் ஊர்மிளா வெயிட் பண்ணினதுக்கு என்றான். நான் ஒண்ணும் உங்க கிட்ட பேசனுங்கறதுக்காக வெயிட் பண்ணலை. உங்கள வான் பண்றதுக்காகத்தான் வெயிட் பண்ணேன் என்றாள். எப்படியோ வெயிட் பண்ணியே தாங்க்ஸ் என்றான்.

    வண்டி இத்தனை நாளா கண்ணுல படலை இப்ப வந்திருக்கீங்க என்றாள் எரிச்சலாக. இத்தனை நாளா கண்ணுல படலைன்னெல்லாம் இல்லை. நான் கொஞ்சம் ஆபீஸ் வேலையா அப்பப்ப வெளியூர் எல்லாம் போயிடுவேன் நீ இங்க வேலை செய்யறது தெரியலை எங்கெங்கோ தேடினேன் என்றான்.

    எதுக்கு தேடணும் ஏதோ இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் அது பொறுக்கலையாக்கும் என்றாள். ரொம்ப ஒரு பெருமூச்சு விட்டாள். ப்ளீஸ் ஊர்மிளா ஏன் இப்படி பட்டாசு மாதிரி பொரியற என்றான்.

    இதோ பாருங்க ரஞ்சன் இனிமேல் உங்ககிட்ட ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு நான் எப்பவோ சொல்லியாச்சு நாலு வருஷமா நானுண்டு என் பொழப்புண்டுன்னு பார்த்துட்டு இருக்கேன். நீங்க எதுக்காக மறுபடியும் என் லைப்ல தலையிடறீங்க என்றாள்.

    ரஞ்ச ஒரு பெருமூச்சு விட்டான். என்ன பண்றது பாலும் மனசு கேட்க மாட்டேங்குதே என்றான். பாலும் மனசுன்னு சொன்னீங்களே அது கரெக்ட் உங்க மனசு பாலும் மனசுதான் அதுல தான் இந்த மாதிரி சிக்கல் எல்லாம் வரும் எனக்கு ஆனா இனிமே அதுக்கெல்லாம் நேரம் இல்லை. நான் இப்ப இந்த கம்பெனியில நல்ல பொசிஷன்ல இருக்கேன் தயவு செய்து என் பின்னாடி எல்லாம் வந்து பெயரைக் கெடுக்காதீங்க என்றாள் ஊர்மிளா.

    இல்லை ஊர்மிளா நான் அப்படியெல்லாம் நினைச்சு வரலை எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு நான் உங்கிட்ட பேசணும் என்றாள். முடிஞ்சு போச்சுங்க உங்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை நீங்களே கெடுத்துக்கிட்டீங்க இது துணியில்லை கிழிஞ்சு போனா தைக்கறதுக்கு. இது சிந்தின பாலு அதை மறுபடியும் எடுக்க முடியாதுங்க என்றாள்.

    அவன் முகத்தல் லேசான சிரிப்பு தோன்றியது. இப்பவும் உதாரணம் சொல்றதெல்லாம் விடலை. கோபத்தில் கூட உதாரணம் சொல்ற என்றான். அவன் கண்கள் மின்னின.

    அதே மாதிரியே ஒரு கணம் அந்த சிரிப்பாள் அவள் ஈர்க்கப்பட்டு திணறினாள். அவன் கண்களை ஒரு நிமிடம் தன்னை மறந்து பார்த்தாள். எப்படி அந்தக் கண்கள் எந்தக் குற்றமும் இல்லாத உணர்ச்சியோட உலகத்திலேயே நான்தான் உண்மையானவங்கற மாதிரி பார்க்கறது என்று கோபம் பொங்கியது.

    அவன் குறும்பாக சிரித்தான். ம்ஹ§ம் என்று கணைத்தான். ரொம்ப ஒண்ணும் பெரிசா நினைக்க வேண்டாம். எப்படி இப்படி பச்சைப் புள்ளை மாதிரி முகத்தை வச்சுக்கறீங்கன்னுதான் யோசிச்சேன் என்றாள்.

    அவன் ஒரு விதமாக சிரித்தான். சிரித்து விட்டு ஓகே ஊர்மிளா ஒரே ஒரு நாள் ஒரு மாசம் ஆகறது. அதுக்கப்புறம் நீ என்ன முடிவெடுத்தாலும் சரி என்றான்.

    அவள் வேதனையுடன் அவனைப் பார்த்தாள். இதோ பாருங்க ரஞ்சன் நான் எல்லாத்தையும் மறந்துட்டு இப்பதான் நிம்மதியா இருக்கேன். எதுக்காக நீங்க வந்து இப்ப

    Enjoying the preview?
    Page 1 of 1