Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vandhuvidu Vasavi..
Vandhuvidu Vasavi..
Vandhuvidu Vasavi..
Ebook145 pages3 hours

Vandhuvidu Vasavi..

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறகடிக்கும் பட்டாம்பூச்சிபோல் அகிலனின் மனதில் நுழைந்தவள் வாசவி. இவர்களுடைய காதல் கைகூடியதா? யார் அந்த அஸ்வத்? வாசவிக்கும், அஸ்வத்துக்கும் என்ன தொடர்பு? அகிலனின் காதல் டைட்டானிக்போல் மாறுமா? வாருங்கள் வாசித்துப் பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580166809897
Vandhuvidu Vasavi..

Read more from V. Usha

Related to Vandhuvidu Vasavi..

Related ebooks

Reviews for Vandhuvidu Vasavi..

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vandhuvidu Vasavi.. - V. Usha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வந்துவிடு வாசவி..

    Vandhuvidu Vasavi..

    Author:

    வி. உஷா

    V. Usha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-usha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    "மன்னுயிரைக் கொன்று வதைத்து

    உண்டு உழலாமல் தன்னுயிர் போல்

    எண்ணித் தவமுடிப்பது எக்காலம்?

    உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்

    புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்?"

    சித்தர் பாடல்களை புன்னகையுடன் வாசித்துக் கொண்டிருந்த வாசவிக்கு, அப்பாவின் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருந்த காபியின் மணம், நாவின் ருசியைத் தட்டி எழுப்பியது.

    இந்தாமா. என்று அடுத்த கணம் அப்பா காபிக் கோப்பையுடன் எதிரில் வந்து உட்கார்ந்தார்.

    தாங்க் யூ அப்பா. என்று அவள் ஆசையாக வாங்கிக் கொண்டாள்.

    சித்தர் பாடல்களின் தமிழ் என்னை மறக்கச் செய்யும் எப்போதும். ஆனால், உங்கள் காபி என்னை போதைக்கே அடிமையாக்கிவிடும். போலிருக்கிறதே அப்பா... என்று சிரித்தாள்.

    அது என் கைவண்ணம் இல்லே அம்மா... காபி பௌடரின் மகிமை... என்று பெருமிதத்துடன் சொல்லியபடி ஒரு மிடறு விழுங்கினார் அப்பா.

    ம் இன்றைய காபியில் கூடுதலா ஒரு ஸ்பெஷல் இருக்கும்மா, வாசவி. என்ன? கண்டுபிடி பார்க்கலாம்.

    கண்களை மூடிக்கொண்டு அவள் கோப்பையை இதழ்களுக்கருகே கொண்டு சென்றாள். அடடா! என்ன மணம் இது! காபிதான். ஆனால், இதில் வழக்கமான மணத்தைவிட அதிகமாக இருக்கிறது. புத்துணர்வின் மணமா? மண்வாசனையா? என்ன இது? அற்புதம்!

    எப்படி? கண்டுபிடிச்சியா ஏதாவது? என்று சிரித்தார் அப்பா.

    சரியரகத் தெரியலே அப்பா. ஆனா, இது வழக்கமான நம்ம கும்பகோணம் டிகிரி காபி இல்லே. ஏதோ ஒரு புது விஷயம் இருக்கு.

    கரெக்ட். என்னன்னு யோசி பார்க்கலாம் என்று சிறுவனைப் போல அதே சிரிப்புடன் சொன்னார் அப்பா.

    அதான் தெரியலையே. மண்ணோட மணமா... பால் வாசனையா, காபிக் கொட்டைகளோட புத்துணர்வுத் தன்மையா? மை குட்னெஸ். இது வேறெ லெவல் காபிப்பா... என்று மனதாரப் பாராட்டினாள் அவள்.

    ரொம்ப கரெக்ட்ம்மா... இது எங்க எம்.டி. எஸ்டேட்டுல விளைஞ்ச காபிப் பொடி. எம்.டி. சார் புதுசா சிக்மகளூர்ல் ஒரு காபி எஸ்டேட் வாங்கி இருக்கார். முதல் பாக்கெட்டை எனக்குக் கொடுத்தார். சுந்தரம், இதை வாசவிக்குப் போட்டுக் கொடுங்க. அவ என்ன சொல்றாள்னு கேட்டுகிட்டு வந்து சொல்லுங்கன்னு சொன்னார்."

    ஓ... அப்படியா விஷயம்? சூப்பர்ப்பா… அருமையா இருக்கு காபி. அதுலயும் ஒரு சொட்டுகூட தண்ணீர் கலக்காமல் பால் காய்ச்சி நீங்க போடற காபி இல்லையா? சும்மா கலக்கலோ கலக்கல் உலகத்தரமான காபினு நான் சொன்னேன்னு சொல்லிடுங்கப்பா..."

    கண்டிப்பா. என்று மலர்ச்சியுடன் எழுந்தார் அப்பா.

    இன்னிக்கு சமையலும் வேற லெவல்தான் தெரியுமா? குடமிளகாய் உசிலி, பூசணிக்காய் மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம். போதுமாம்மா?

    நளபாகம் அப்பா... வேறென்ன வேணும்? ஆனா, ராத்திரிக்கு டின்னர் நான்தான் பண்ணுவேன். ஆலு ரொட்டி வித் தக்காளி குருமா... ஓகேயாப்பா?

    தாராளமா கண்ணு... உன் கை பக்குவம் கேட்கணுமா? சரி, நான் கொஞ்சம் சீக்கிரமா கெளம்பறேன். நீ யூனிவர்சிடி வேலை இருக்கா?

    ஆமாம்ப்பா... பி.ஹெச்டி பத்தி நிறைய பேச வேண்டியிருக்குப்பா. தமிழ் ஹெச்.ஓ.டி. ஆறுமுகம் சார் இன்னிக்கு வரச் சொல்லியிருக்கார்.

    ஏம்மா? என்றார் அப்பா, சிறிது ஆச்சரியத்துடன்.

    எம்.பில் முடிச்சு யூனிவர்சிட்டிலயே முதல் இடத்துக்கு வந்துட்ட... இது போதாதாம்மா? இன்னும் படிக்கணுமா? கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம் இல்லையா, மூளைக்கு?"

    அடடா... அப்படி ஒண்ணும் நான் மூளையை கசக்கிப் பிழிஞ்சுடலேப்பா. ஆர்வம்பா. அவ்வளவுதான்! தமிழ் மேல தீராத ஆர்வம். அதுவும் நீங்க உண்டாக்கிய ஆர்வம்... வேற ஒண்ணும் இல்லேப்பா...

    உன் விருப்பம் அம்மா... ஆனால், ஒரு விஷயம் மறந்துவிடக் கூடாது. எதுவும் சரியான காலத்தில் நடந்துடணும். அதுதான் நல்லது. இன்னும் ரெண்டு வருடம் உனக்கு டயம் தர்றேன். பிறகு கல்யாணம்தான் சரியா?

    சரிப்பா... தாங்க்ஸ்ப்பா... என்று அவள் புன்னகைக்க, அப்பாவும் புன்னகை மாறாமல் குளிக்கக் கிளம்பினார்.

    அப்பா!

    எவ்வளவு நம்பிக்கை என்மீது!

    பூவின் மேல் வந்து வலிக்காமல் விழும் பனித்துளிபோல என்ன அன்பு அப்பா இது?

    வாழ்வின் இருப்பை அர்த்தமாக்கித் தரும் உங்கள் பேரன்புக்கு நான் என்ன செய்வேன் அப்பா, பதிலுக்கு இதையே திருப்பித் தருவதை தவிர?

    அம்மாவின் புகைப்படம் தேடி கண்கள் விரைந்தன.

    வட்ட முகம்... கனிவு விழிகள்... ஒற்றை மூக்குத்தி... அழகின் சிரிப்பு. அம்மா! போம்மா... இப்படிப்பட்ட கணவனுடன் வாழக் கொடுத்து வைக்காமல் போனாயே... பாவம்!

    எழுந்தாள்.

    "காடும் மலையுமடி...

    அகப்பேய் கடுந்தவம் ஆனால் என் வீடும் வெளியாமோ... அகப்பேய் மெய்யாக வேண்டாவோ"

    உள்ளே சித்தர் பாடல் ஓடிக்கொண்டே இருந்தது.

    அப்பாவின் சமையலை ருசித்து உண்டுவிட்டு பல்கலைக்கழகம் கிளம்பினாள்.

    காலம் ஏதேதோ திட்டங்களுடன் காத்துக் கொண்டிருந்தது.

    2

    எல்லையற்ற கடலின் பரிசுத்தமான நீலத்தை வெறுமையான விழிகளுடன் பார்த்தவாறு இருந்தான் அவன்.

    உலகம் முழுக்க பரவியிருக்கும் கடல்.

    கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள். கடலுக்குக் கீழே மலைகள், பள்ளத்தாக்குகள், விநோத ஜீவன்கள். பூமியின் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கை ஆக்கிரமித்திருக்கும் கடல்!

    தினம் இதைப் பார்க்கிறான். படகு ஓட்டுகிறான். பயணம் செய்கிறான்.

    தாயின் நிபந்தனையற்ற அன்பைப்போல அவனிடம் தன்மையாக இருக்கிறது இந்தக் கடல், பேசாத எவ்வளவோ விஷயங்களைப் பேசுகிறது. கவலையை விடு. அமைதியாக இரு. இதுவும் கடந்து போகும் என்று இதுவரை எத்தனையோ தடவை சொல்லிவிட்டது.

    அகிலன்... என்னப்பா இது? வா வீட்டுக்குப் போகலாம்... என்ற நாகுவின் குரல் எங்கோ நாடு கடந்து கேட்பதைப் போலிருந்தது அவனுக்கு.

    கால்களை மெல்ல வந்து அடிக்கும் பச்சை இளநீல அலைகளைத் தொட்டுக்கொண்டு வந்து நாகு எதிரில் நின்றான். ஒரு எம்பு எம்பி படகில் குதித்து வந்து உட்கார்ந்தான்.

    "இரவெல்லாம் வீட்டுக்கு வரலே நீ அகிலன்... இப்பத்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1