Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ethanai Kodi Inbam
Ethanai Kodi Inbam
Ethanai Kodi Inbam
Ebook68 pages24 minutes

Ethanai Kodi Inbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் முதியவர். இளமைக்காலத்துடன் தன் முக்கியத்துவம் போய்விட்டது என்று சுய அனுதாபத்தில் இருப்பவர். வீட்டு நபர்களாலேயே ஓரம் கட்டப்பட்டவர். வாழ்வின் எல்லைக்கு சென்று விட்டோம் என்று தினம் மனதிற்குள் அழுபவர். ஆனால் ஒரே ஒரு காலை வேளை அவருடைய உணர்வுகளை மாற்றி விடுகிறது. உற்சாகமாக உணர வைக்கிறது. குடும்பத்தினர் இடையே கூட புது அன்பை தரிசிக்க வைக்கிறது. அது எப்படி? சிறுகதையை வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580166810825
Ethanai Kodi Inbam

Read more from V. Usha

Related authors

Related to Ethanai Kodi Inbam

Related ebooks

Reviews for Ethanai Kodi Inbam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ethanai Kodi Inbam - V. Usha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எத்தனை கோடி இன்பம்

    Ethanai Kodi Inbam

    Author:

    வி. உஷா

    V. Usha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-usha

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அவளுக்கு யாரும் இணையில்லை

    எட்டுத் திசையும் வெளிச்சம்

    எண்ணங்கள் இனிது

    எத்தனை கோடி இன்பம்

    எல்லாம் பெண்ணே உன்னாலே

    ஏழரை ஆண்டு தவம்

    ஓய்வுக்காலம்

    அணிந்துரை

    நம் பால்ய காலங்களில் ஆங்காங்கே இருக்கும் வெற்றிடங்களை இ ட்டு நிரப்ப வந்தவையே கதைகள். கதை சொல்வதும், கதை சொல்ல கேட்பதும் காலம் காலமாக நமது பண்பாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றன. மனித மனங்களை பண்படுத்துகிற உயர்ந்த எண்ணங்களை விதைக்கவும், ஆகாயத்தில் பறக்கும் கற்பனைகளை வளர்க்கவும் இந்த கதைகளை உதவி வருகின்றன.

    இலக்கியங்களும் செய்யுள்களும் பாமர மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வந்த காலத்தில் கர்ண பரம்பரை கதைகளே பெரிய செல்வங்களாக இருந்தன.

    எழுத யத்தனித்த முதல் காலத்திலேயே என் சிறுகதைகள் ஏதோ ஒரு மெல்லிறகாக வாசகரை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்று உறுதி கொண்டேன். எதார்த்த வாழ்வின் இயல்பான மனிதர்களே என் கதை மாந்தர்கள்.

    நீங்களும் நானும் வாழ்வில் சந்திக்கிற எளிய மனிதர்களும் வாழ்வியல் சம்பவங்களுமே என் சிறுகதைகள். காதல் உறவு பிரிவு தோழமை நேசம் என்று தினம் அலைக்கழிக்கபடும் உணர்வுகள்.

    அவை சாந்தமடைகிற.

    சந்தர்ப்பங்கள்.

    மறுபடி மேல் எழுகிற வேறு வேறு காலங்கள். இவையே என் கதைகள். வாசியுங்கள் வாசித்து விட்டு மனம் பகிருங்கள்.

    வி. உஷா

    சிறுகதை 1

    அவளுக்கு யாரும் இணையில்லை

    மெல்லிய சாரல் முடிந்து இளம் வெயில் தலை தூக்கிய அந்த புதிய நாள் அழகாக இருந்தது.

    இங்கேயும் சூரிய உதயம் ரொம்ப அழகா இருக்கு ராகினி... பாறை மேல் உட்கார்ந்து முதல் கீற்று பாக்கும்போது ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு... மிஸ் யூ... ஆஷிகிட்ட சொல்லு, அப்பாக்கு பாண்டி வேலை இன்னிக்கு முடிஞ்சுடும், நாளைக்கு வீட்டுல இருப்பேன்னு... ஹாவ் அ குட் டே என்று அருணன் இதமாகப் பேசியது இன்னும் நாளின் வசீகரத்தைக் கூட்டியது.

    என்ன மேடம் சமைக்கட்டும்? என்று கேட்ட வேதாவிடம் சுண்டைக்காய் குழம்பு, கீரை, காரட் பொரியல் என்று சொல்லிவிட்டு எழுந்தேன்.

    ஹாய் அம்மா ... குட் மார்னிங் என்று ஆஷிவி வந்தாள்.

    கலைந்த முடியும் பளீர் முகமும் சிரித்த இதழ்களும் ஏதோ ஓவியம் ஒன்று உயிர் பெற்று நடந்து வந்த மாதிரி இருந்தது.

    குட் மார்னிங் கண்ணா... நல்லா தூங்கினியா?

    ஆமாம்மா... செம்ம தூக்கம்... அதுவும் இப்போ பிராக்டிஸ் வேறே போய்கிட்டிருக்கா காலேஜ் டே நிகழ்ச்சிக்கு? பாட்டு, டான்ஸ் பிராக்டிஸ்... கை கால் எல்லாம் நல்ல ஒர்க் அவுட்... அம்மா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்

    சொல்லுடா

    என் கிளாஸ்மேட் கவிநிலா இருக்காளே, தெரியும்தானே?

    ஆமாம்... சொல்லியிருக்கே... கல்லூரி விடுதில தங்கி படிக்கிற கிராமத்துப் பொண்ணு... கரெக்டா?

    அவளேதான்... நாலு நாளா ரொம்ப அப்செட்டா இருக்கா... பேச்சு, சிரிப்பு, சாப்பாடு, தூக்கம்னு எல்லாமே குறைஞ்சு போய் பித்து பிடிச்ச மாதிரி இருக்கா... நாங்க பிந்து, யாமினி, கலை எல்லாருமே கவனிச்சு கேட்டோம்... ஒண்ணுமில்லே ஒண்ணுமில்லேன்னு சொல்றா... இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வரச் சொல்லட்டுமா அம்மா? பாவம்... இடம் மாற்றம் அவளுக்கு மன மாற்றம் தரும் இல்லையா?

    "அதுக்கென்ன கண்ணா... கூட்டிகிட்டு வா... ராத்திரி தங்கட்டும்... நாளைக்கு பீச் வாக், செம்பருத்தி சூப்,

    Enjoying the preview?
    Page 1 of 1