Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana valaiyosai
Kalyana valaiyosai
Kalyana valaiyosai
Ebook148 pages1 hour

Kalyana valaiyosai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாயகன் நாயகியின் தெளிவான நீரோடை போன்ற வாழ்க்கையில் "காகிதக் கப்பலாய் வந்தது, விதி.…‚ விதியின் பிடியிலிருந்து மீண்டு கரை சேர்ந்தனரா?" தெரிந்து கொள்ளப் படியுங்கள்...

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580151407925
Kalyana valaiyosai

Read more from Kavitha Eswaran

Related to Kalyana valaiyosai

Related ebooks

Reviews for Kalyana valaiyosai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana valaiyosai - Kavitha Eswaran

    https://www.pustaka.co.in

    கல்யாண வளையோசை

    Kalyana valaiyosai

    Author:

    கவிதா ஈஸ்வரன்

    Kavitha Eswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavitha-eswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அன்பு என்பது அற்புதமானது...

    பரிவு என்பது பரிசுத்தமானது...

    அந்தப் பெரிய பங்களா விழாக்கோலம் பூண்டிருந்தது... நிறைந்த உறவினர்களும் தெரிந்த நண்பர்களுமாய் அந்த இல்லமே கலகலத்துக் கொண்டிருந்தது.

    அவ்வீடு திருமண வீடாய்த்தான் இல்லையேவொழில் அதற்கு இணையான விழாக்கள் மற்றும் மங்கல நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருந்தன...

    மனோரஞ்சன் விரிந்த புன்னகையோடு வந்தவர்களை வரவேற்று நலம் விசாரித்துக் கொண்டிருக்க, சற்று தள்ளி நின்று கொண்டிருந்த சௌபர்ணிகா தன் தோழிகளிடம் வசமாய் மாட்டிக்கொண்டு தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

    அவர்களின் கேலியாலும், வம்பிலுத்தழிலும் சிக்கிக்கொண்டு தலைநிமிர முடியாமல் நாணத்தால் தலைகவிழ்ந்ததும் முதலிலேயே சிவந்த சதைப்பிடிப்பான கன்னங்கள் மேலும் கன்றின...

    மனோரஞ்சன் - சௌபர்ணிகா திருமணம் முடிந்து இன்றோடு 100 நாள் ஆகிறது. அதைத்தான் இப்படி வெகு விமரிசையாய் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

    சௌபர்ணிகா, இப்படியொரு ஆடம்பரம் தேவையில்லையே என்று கணவனிடம் மறுத்துப் பார்த்தாள்... ஊகூம்... அவன் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாததோடு... அப்போ மாதமாதம் தேவையென்கிறாயா... எனக்கொன்றும் தடையில்லை... நான் தயார் என்றான் பார்வையில் குறும்புடன். அவள் முகம் மேலும் சிவப்பு படர்ந்து அந்திவானம் ஆனது.

    சௌபர்ணிகா சாதாரணமான நடுத்தர குடும்பத்துப் பெண். தந்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தாய் மல்லிகா வீட்டை நிர்வகித்து. சொற்ப நிலத்தின் விவசாயத்தையும் பார்த்துக்கொள்கிறார். கணவர் சிதம்பரம் பணி ஓய்வு பெற்றுவிட்டதும் கொஞ்சம் சுமை குறைந்திருந்தது.

    ஒரே மகள் என்பதாலோ என்னவோ கண்ணுக்கு கண்ணாய் வளர்த்தனர் சௌபர்ணிகாவை. அவள் விருப்பத்துக்கு யாரும் தடைபோட மாட்டார்கள்.

    வணிகவியலில் இளங்கலை படித்து முடித்துவிட்டு மேல்படிப்பைத் தொடர வாய்ப்பளிக்காமல் காலம் அவளை கல்யாணக்கட்டுக்குள் தள்ளியது. கொஞ்சம் சதைப்பிடிப்பான பெண்ணாய் இருந்தபோதும் கடைந்தெடுத்த சிற்பம்போல் அழகாய் அவளை செதுக்கியிருந்தான் பிரும்மன் என்ற சிற்பி.

    மாநிறத்திற்கு கொஞ்சம் கூடுதலான நிறம். ஆனால் ரொம்ப வெளுப்போ - மஞ்சளோ கிடையாது. சிவந்த நிறமும், படபடக்கும் கண்களும், குண்டு குண்டு கன்னங்களுமாய் பார்ப்பவர்களை கவர்வதாய் ஒரு தோற்றம்... இத்தம்பதிகளின் சந்திப்பே அலாதியானது...

    கிராமம் ஒன்றுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்த பெண்களை அனுப்பியது இவர்களின் கல்லூரி...

    அங்கு சென்று சுத்தம் பற்றி விழிப்புணர்வு - சுகாதாரமாய் எப்படி வாழ்வது - வருமுன் காப்பது போன்றவற்றில் எப்படி செயல்பட்டு நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று அம்மக்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர் இவளும் - இவளின் தோழிகளும்.

    அதோடு மரங்களின் அவசியம் பற்றியும் - அதனை நட்டு வளர்ப்பதற்கு தேவையான வழிமுறைகளையும் சொன்னார்கள். இவர்களின் கல்லூரியின் சார்பில் 500 மரக்கன்றுகளை வழங்கியிருந்தது கல்லூரியின் நிர்வாகம். அதைப் பராமரிக்க கிராமத்து பெரியவர் தோட்டத்தில் மொத்தமாய் வைக்கப்பட்டு செடி நடும்போது அதை அங்கிருந்து எடுத்து வந்து நட்டுக் கொள்வது என்றும் முடிவாயிற்று.

    முந்தைய நாள் இரவே ஒரு வாகனத்தில் மரக்கன்றுகள் எல்லாம் அனுப்பிவைக்கப்பட்டது. எல்லோரும் குழிதோண்டும் முயற்சியிலும் தோண்டுபவர்க்கு உதவிசெய்து கொண்டும் இருந்தார்கள். இவளும் அவர்களோடு வந்து இணைய கல்லூரிப் பேராசிரியர் அம்மா சௌபர்ணிகா... அவர்கள் அதை செய்துகொண்டு இருப்பதற்குள் நீ சென்று சில மரக்கன்றுகளை எடுத்துவா... என்று சிறு வண்டிபோல் இருந்த நாற்காலி போல் வடிவம் கொண்ட கருவியைத் தந்தார்.

    இவளும் தயங்கியவாறே தன் தோழிகளை துணைக்குவருமாறு கண்ணால் சைகை செய்ய, அந்தப் பேராசிரியர் இதற்கெல்லாம் துணை எதற்கு...? இதோ அங்கு தெரிகிறதே பெரிய கதவு... அதுதான் தோட்டம். எதையும் தனித்து செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்... அப்போதுதான் எதிர்காலத்தில் ஏற்படும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மால் தடுமாறாமல் இருக்க முடியும் என்றார் கறார் குரலில்...

    முகத்தில் சுனக்கத்துடன் வேறு வழியின்றி அதைத் தள்ளிக் கொண்டு நகர்ந்தாள்... எதிரே கம்பீரமாய் நீல வண்ணம் கொண்ட இரும்பு கதவு தெரிந்தது... இவள் சென்று அழைப்புமணியை அழுத்த, ஒரு நடுத்தரப் பெண்மணி கதவைத் திறந்துவிட்டு வாம்மா... என்று அழைத்தவாறே முன்பு நடந்தார்.

    இவர்கள் வருவது முன்கூட்டியே தெரியும் என்பதால் இவளுக்கு அவர்களிடம் அதிக விளக்கம் தேவையிருக்கவில்லை. இவளும் பின்னால் பூனைக்குட்டிபோல் தயங்கித்தயங்கி நடந்தாள். யார் வீட்டிற்கும் தனியாய் போய் பழக்கமில்லாததால் இன்று ரொம்பவே தர்மசங்கடமாய் இருந்தது.

    வாம்மா என்னம்மா இப்படி தயங்கறே...? ரொம்ப பயம்... இப்படி எல்லாம் இருந்தால் இந்தக் காலத்தில் பிழைக்க முடியாதும்மா... படிப்பு மட்டும் போதாது..... கொஞ்சம் வாய் சவடால் வேண்டும்... என்றார் ஊர் பெரியவர் ராமலிங்கம்.

    சிரித்தவாறே அவருக்கு வணக்கம் கூறிவிட்டு ரெண்டு அடி எடுத்து வைத்திருப்பாள். எங்கிருந்தோ அதிவேகமாய் ஓடி வந்த கறுப்பு நிற நாய் அவள்மேல் தாவிப் பாய்ந்தது. சகலமும் நின்றுவிட்டது சௌபர்ணிகாவுக்கு. இன்று நாம் தொலைந்தோம் என்று நினைத்தவாறே அம்மா... காப்பாற்றுங்க!, காப்பாற்றுங்க! என்று கத்தியவாறே அந்தம்மாவிடம் ஓடிச் சென்றவள் ஒரே தாவலாய் அவர்களை தாவியணைத்துக்கொண்டாள்.

    உடம்பு தன்னிச்சையாய் கடகடவென்று ஆடிக்கொண்டு இருந்தது. மூடிய கண்களை அவள் திறக்கவே இல்லை.

    அம்மா இங்கு பாரும்மா... ஒன்றும் இல்லைம்மா. அது செல்லமாய் வந்து தொற்றிக்கொள்ளுமே தவிர கடிக்கிற நாய் இல்லை... பிடிச்சுக் கட்டியாச்சு... பாரும்மா... கண்ணைத் திற என்னைவிடும்மா... என்றார் பெரியவரின் மனைவி மங்களம்.

    அப்பாடி... ஒரு வழியாய் கண்களை திறந்து பார்த்தாள். நாயைக் காணவில்லை. தூரத்தில் குரைப்புச் சத்தம் கேட்டது. அப்போதும் உடம்பு நடுங்கிக்கொண்டே இருக்க, பெரியவரும் எழுந்து உதவிக்கு வர ஒரு வழியாய் பிறகுதான் அந்தம்மாவை விடுவித்தாள். எப்படி நாய் ஓடி வந்தது? கட்டித்தானே வைத்திருந்தோம்... பெரியவர். மனோதான் அவிழ்த்துவிட்டிருப்பான் - பெரியம்மா. என்னம்மா...? இங்கே ஒரு நாடகமே நடந்திருச்சுபோல... ஜான்சி ராணிக்கு தங்கையோ நீங்கள்...? உங்களின் வீரம் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன்...! அதுதான் கேட்டேன்... என்றான் புதியவன்.

    இவளுக்குப் பயமே முற்றும் விலகாத நிலையில் ஏதும்சொல்லத் தோன்றாமல் மிரள மிரள விழித்தாள்.

    அம்மா... கண்ணுரெண்டும் வெளில வந்து விழுந்துடப் போகுது... எடுத்து ஒட்டிக்கொள்வதற்குள் இதோ காக்கா வந்து கொத்திட்டுப் போயிடும். எதற்கும் சொல்லிவை... என்றான், கேலிச்சிரிப்புடன்.

    டேய் போடா... எப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு. பாவம்டா இந்தப் பொண்ணு... ரொம்பவே பயந்துடுச்சு... இதில் நீவேற கலாட்டாப் பண்ணாதே என்றார் கனிவுடன் மங்களம்.

    இவன் எங்களுக்கு முதல் பையன்... மூத்தமகன்... இளையவன் இன்னும் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறான். இவன் திருப்பூரில் பனியன் பின்னலாடை நிறுவனம் வைத்துள்ளான். வெளிநாட்டுக்கெல்லாம் இவனிடமிருந்துதான் போகும். பெயர் மனோரஞ்சன்... நாங்கள் செல்லமாய் மனோ என்று கூப்பிடுவோம் என்றார் பெரியவர். முதுகலை மேலாண்மை படித்துள்ளான் என்றார்.

    ஏம்பா... முடிச்சுட்டீங்களா... இல்லை என்னைப் பற்றி என்று குறிப்பும் எழுதித் தரவேண்டுமா? இல்லை ஜாதகம் ஏதாவது...? என்று கிண்டலடித்தவன் கண்களில் அலுப்பு தெரிந்தது.

    எத்தனை முறைதான் சொல்வது? வெளியாட்களிடம் நம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேசாதீர்கள் என்று சொன்னால் கேட்டால்தானே... என்று முணுமுணுப்புடன் உள்ளே சென்றுவிட்டான் மனோரஞ்சன்.

    சௌபர்ணிகாவுக்கு கோபம் பொங்கியது... "நான் எவ்வளவு பயந்துபோய் நிற்கிறேன்... இதில் கேலிப்பேச்சு வேறு... கண்கள் கொஞ்சம் பெரியன... என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு கொஞ்சம்கூட மனதில் வருத்தமே இல்லாமல் போகிறான்... அடுத்தவர்களை மனக்கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல்... அதோடு வெளியாட்களிடம் என்னவோ இவர்களின் சொத்து பற்றி கணக்கு காட்டிவிட்டதுபோல் பெரியவரை குறை

    Enjoying the preview?
    Page 1 of 1