Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaigarai Velaiyiley...
Vaigarai Velaiyiley...
Vaigarai Velaiyiley...
Ebook157 pages2 hours

Vaigarai Velaiyiley...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்தர்ப்ப சூழ்நிலையால் மணம் முடித்த வேறுபட்ட இரு மனங்கள்... ‚ வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள்.. அசைபோட்டுத் தான் பாருங்களேன்..‚ இனித்ததா இல்லறம்? வாருங்கள் தெரிந்து கொள்ள‚..

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580151408638
Vaigarai Velaiyiley...

Read more from Kavitha Eswaran

Related to Vaigarai Velaiyiley...

Related ebooks

Reviews for Vaigarai Velaiyiley...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaigarai Velaiyiley... - Kavitha Eswaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வைகறை வேளையிலே...

    Vaigarai Velaiyiley...

    Author:

    கவிதா ஈஸ்வரன்

    Kavitha Eswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavitha-eswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    பிள்ளையார் சன்னதியில் நின்று ஒரு நிமிடம் கண்மூடி பிரார்த்தித்துவிட்டு குனிந்து, தோப்புக் கரணங்களைப் போட்டுவிட்டு, தலையில் குட்டிக் கொண்ட அருந்ததியின் மனதில், மனம் வருந்திக் கூறிய, தன் தாத்தாவின் வார்த்தைகள் மனதில் வந்து போயின!

    கணேசா எப்படியாவது என்னை, தர்மசங்கடமான நினைவிலிருந்து காப்பாற்று இறைவா! என் பொருட்டு என் தாத்தாவின் கவலைக்கு நீதான் மருந்தாக வேண்டும் கணபதியே! என்று உருகி நின்றதும், கண்ணீர் பொத்துக் கொண்டது. மனதில் பிள்ளையார் துதி ஓடிற்று.

    "ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை" என்ற. ‘திருமூலர்’ பாடலை உதடுகள் உச்சரித்தன! அருந்ததி! பெயருக்கேற்ற, பொருத்தமான பெண்ணாகத்தான், அவளின் தாத்தா அவளை வளர்த்திருந்தார்.

    தனது மூன்று வயதிலேயே, தன் நெருங்கிய உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு அழைத்துச் சென்றார் அவரின் தந்தை. டாக்ஸியில், தன் தாயின் மடியிலும் தந்தையின் அருகாமையிலும், அமர்ந்து, முன்புறம் தெரிந்த கண்ணாடி வழியில் உற்சாகம் பீறிட, ஆனந்தமாய் ஆடிக் கொண்டுதான் வந்தாள்.

    அந்த பயங்கரத்தை உணராதவரை!

    ‘ஆம்!’ எதிரில் ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்ட சல்லிக் குவியல் நிரம்பிய பழுதடைந்த அந்த லாரிக்குள்ளேயே, கார் புகுந்துவிட, அந்த விடிகாலைவேளை, அவள் பெற்றோரின் அந்திம வேளையாயிற்று!

    போய் மோதிய வேகத்தில், கார் அப்பளமாய் நொறுங்க, குட்டிக் குழந்தையான இவளை மட்டும் சீட்டின் அடியில் ஒதுக்கித் தள்ளியது ‘விதி!’ சரியாய் இருக்கையின் அடியில் மாட்டிக் கொண்டு என்ன நடந்தது? என்ற விபரம் அறியாத குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து, கார்க்கதவை கடப்பாறையால் நெம்பி எடுத்து குழந்தையை மீட்டனர்.

    அந்த நினைவுகளை மறப்பதற்காகவே, தனது சொந்த ஊரை விடுத்து இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டிக்கு குடி பெயர்ந்தார். அந்த ஊர் அவர்களின் மூதாதையர் ஊரும் கூட... அதுவே நினைவுகளை மறப்பதற்கு மருந்தானது!

    எங்கும் சலசலக்கும் நீர் ஓடைகளையும், காட்டுப் பறவைகளின் கானத்திலும், தன் துயர நினைவுகளை மறந்தனர், தாத்தாவும் பேத்தியும்! எனவே, மிகவும் கவனத்தோடும் அதே சமயம் கண்டிப்பாகவும் வளர்த்தார் சபேசன் அருந்ததியை!

    குழந்தையை தூங்கச் செய்யும் வேளையிலும், உணவு ஊட்டும் நேரத்திலும், பக்திக் கதைகளைக் கூறுவது வழக்கமாயிற்று!

    எனவே, அருந்ததியும் பக்தி நிறைந்தும், நெறிமுறைகளுக்கு உட்பட்டும் வாழக் கற்றுக்கொண்டாள்.

    பள்ளி இறுதிவரை முடித்துவிட்டு தொலைதூரக் கல்வியில், ‘ஆங்கிலப் புலவர்’ இளங்கலை முடித்து விட்டிருந்தாள். பள்ளிக்குச் செல்வது என்பது மிகச் சிரமமாக இருந்தது.

    பேருந்துகள் மலைக்கிராமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காததால், வெகு சில மட்டுமே வந்து போயின!

    விடுதியில் தங்கிப் படிக்க அனுப்ப தாத்தாவுக்கு மட்டும் அல்லாமல், பேத்திக்கும் விருப்பம் இல்லை. ‘தாயில்லாப் பெண்ணுக்கு தலையெல்லாம் அறிவு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, தாத்தாவின் குறிப்பறிந்து தன்னால் இயன்றவரை சிரமம் இன்றி பார்த்துக் கொண்டாள், அருந்ததி!

    மாலை நேரங்களில் மலர்களைப் பறிப்பதும், தோட்டத்தைப் பராமரிப்பதும் மலர்களை தொடுத்து, மாலையில் அருகில் இருக்கும் ‘ஆதிகேசவப் பெருமாள்’ கோயிலுக்குக் கொடுப்பதும் தன் பெற்றோர் படத்துக்கு சூட்டுவதும் அவளது அன்றாட வேலைகளில் ஒன்றாகிப் போனது.

    தாத்தா, மாதம் ஒரு முறை தோட்டத்தை, செடிகளை சீராக்கி ஒழுங்குபடுத்த, பேத்தி உற்சாகத்துடன் குழாய் இணைத்து நீர் பாய்ச்சுவாள்!

    கொஞ்ச நாட்களாகவே, தாத்தாவுக்கு மரண பயம் வந்து விட்டது. தான், இறந்து விடுவோம், என்பதற்காக அல்ல! தான் இறப்பதற்குள் பேத்தியை நல்ல வரனுக்கு மணமுடித்துவிடத் துடித்துக் கொண்டிருந்தார். எப்போது பார்த்தாலும், ஜாதகக் கட்டுடனும் பேத்தியின் புகைப்படமுமாய் தரகர்களை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார். அருந்ததி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே, வாயிலில் நுழையவும், கார் ஒன்று கிளம்பிப் போனது!

    தன் வீட்டின் முன் கார்! யாராய் இருக்கும்? என்ற யோசனையுடன் தாத்தா, என்று அழைத்தவாறே உள்ளே புகுந்தாள். யார் தாத்தா வந்தது? என்றாள்.

    பக்கத்து எஸ்டேட்டைச் சேர்ந்தவர்கள் தான்!

    நாளை, செல்வரத்தினம் பேரனுக்கு பெண் பார்க்கப் போகிறார்களாம்! அதற்கு என்னையும் வரச் சொல்கிறார்கள் அம்மா! என்றார்.

    போய் வருவதுதானே!

    ஊரில் எல்லோருக்கும் நடக்கும் இந்த வைபவம் நம் வீட்டில் எனவும், இடைமறித்த அருந்ததி,

    தாத்தா ஆரம்பித்து விட்டீர்களா புராணத்தை என்றாள் சிரிப்புடன்.

    என்னம்மா! எப்போது பார்த்தாலும் உனக்கு விளையாட்டுத்தான் போ! நீ தினமும் மாலை சாத்தும் பெருமாளுக்கு மனம் இரங்கவில்லையா? பகவானே நீதான் வழிகாட்டணும் என்றார்.

    அருந்ததியும் விடாமல், தாத்தா எதிர்பார்த்துச் செய்வது பலனளிக்காது. அதற்குப் பெயர் சேவையும் அல்ல! என்று நீங்களே என்னிடம் பலமுறை கூறியிருக்கிறீர்கள். மறந்து விட்டீர்களா? என்றதும்,

    இல்லையம்மா, வயோதிகம் வந்து விட்டாலே, ஒரு பயம் வந்து விடுகிறது. மனம் குழந்தைத்தனமாய் மாறி விடுகிறது என்றார் ஆயாசத்துடன்.

    போங்கள் தாத்தா! எல்லாம் நடக்கும்போது நடக்கும் என்று கூறிவிட்டு, மான் குட்டி போல் துள்ளியோடினாள் உள்ளே!

    உயரமாய் தன் மகளையே உரித்துக் கொண்டு பிறந்திருக்கும் பேத்தியைப் பார்க்க மனம் பூரித்தது!

    அதே பூரிப்போடு அருந்ததிக்கு, பொருத்தமான ஒரு துணையைத் தேடிக் கொடுத்துவிடு பெருமாளே! என்று வேண்டிக் கொண்டார் சபேசன்!

    அன்று மாலையே, சபேசனுக்கு, செல்வரத்தினத்திடம் இருந்து அழைப்பு வந்தது.

    மாலை சிற்றுண்டிக்கு மாவைப் பிசைந்து கொண்டிருந்த அருந்ததி, தாத்தா உங்கள் நண்பரைப் பார்த்து விட்டால் பொழுது போவதே தெரியாது! சீக்கிரமாய் வாருங்கள் என்றாள்.

    செல்வரத்தினத்திற்கு பெருமையே பிடிபடவில்லை. வெளிநாடு சென்று, ‘முதுகலை மேலாண்மைப் படிப்பை முடித்து விட்டு, வந்திருக்கும் தன் பேரனைப் பற்றிய புராணம்தான், கண்ணில் படுபவர்களிடம்!’

    தன் மகளை, தன் தங்கை மகனுக்கே மணமுடித்து, தன் அருகேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டார். அவரது மாப்பிள்ளை ஏதும் குறைவின்றி தேயிலைத் தோட்டங்களைப் பார்த்துக் கொண்டதோடு, தானே, தேயிலையை தரம் பிரித்துப் பக்குவப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்த்து விட்டிருந்தார்.

    எனவே, செல்வரத்தினத்திற்கு ஒரு குறையும் இல்லை. பேரனுக்குத் திருமணம் செய்ய வேண்டுமே என்கிற கவலையைத் தவிர! திருமணத்தில் நாட்டமின்றி இருந்த கதிரேசனுக்கு தாத்தாவின் பிடிவாதத்தால் சம்மதிக்கும் படி நேர்ந்து விட்டது.

    பெரியவர் தன் கண்ணீரால் கரைத்து விட்டார்! மனதிற்குள் ஏற்பட்ட வேண்டா வெறுப்பாலும், வீட்டில் நடக்கும் தடபுடல்களுக்கும் சற்று விலகியிருந்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றவே, காலாற நடக்கத் தொடங்கினான்.

    மாலை வானம் செக்கச் சிவந்து கிடந்தது.

    அவ்வேளை பாரதியின் பாடலை நினைவூட்டியது. அவனுக்கு சிறு வயதில், படித்த பாடம் மனதில் வந்து போனது.

    "வெள்ளிப் பனிமலையும் பொன் மலையாகும்.

    அண்டங்காக்கையும் பொன் காக்கையாகும்’ என்ற வரிகள் - நினைவு வர ரசித்தவாறே நடந்தான்.

    2

    கதிரேசன் உயர்நிலைப்பள்ளி வரை ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்தான் படித்தான். அப்பள்ளியில் இறை வணக்கம் பக்திப் பாடல்கள், தேச பக்திப் பாடல்கள் பண்டிகைகள் என்றால் அதற்கேற்ற சுலோகங்கள், போன்றவையும் கற்றுத் தந்தார்கள்.

    யோகா போன்றவையும், அந்தந்த நாளுக்குரிய கடவுளுக்குத் தகுந்த பாடல்கள் பள்ளி வளாகத்தில் கூட்டு வழிபாடாக இருந்தது.

    வெறும் படிப்பு மட்டுமின்றி மத நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற பல தலைப்புகளில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள், அதற்கான பரிசுகள் வழங்குவது போன்றவற்றை வழக்கமாகக் கொண்டிருந்தார் அப்பள்ளியின் முதல்வர்.

    இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளில் வரும் பாத்திரங்களில் நாடகம் மற்றும் மாறுவேடம் போன்றவற்றையும் நடத்துவது அவரது வாடிக்கை!

    இக்காலத்துப் பிள்ளைகள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளே மட்டும் ஐக்கியமாகி விடுவது குறித்து மிகுந்த வேதனைப்படுபவர்! அதோடு நம் தேசத்தின் கலாச்சாரம் பண்பாடு, போன்றவற்றின் முக்கியத்துவம் அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதில் ஈடுபாட்டுடன் முனைப்புக் காட்டுபவர்.

    அதனால் பள்ளியும் புகழ் பெற்றதாக விளங்கவே, கதிரேசனும் நம் இலக்கியங்கள்,

    Enjoying the preview?
    Page 1 of 1