Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannan Varuvan
Kannan Varuvan
Kannan Varuvan
Ebook202 pages1 hour

Kannan Varuvan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்ணன் வருவான் தன்னைத் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பிக்கையில் ஆண்டளை போலவே ஒரு கோதையும் காத்திருக்கிறாள். கோதையின் காதல் நிறைவேறியதா? கண்ணன் வந்தானா?

இது போன்ற மனதின் மெல்லிய உணர்வுகளையும் குடும்ப சூழ்நிலையில் உள்ள சமூக பிரச்சனைகளையும் சேர்த்து பின்னிப்பிணைந்த சிறுகதை தொகுப்புகளுடன் நாம்...

Languageதமிழ்
Release dateSep 3, 2022
ISBN6580157908982
Kannan Varuvan

Read more from Godha Parthasarathy

Related to Kannan Varuvan

Related ebooks

Reviews for Kannan Varuvan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannan Varuvan - Godha Parthasarathy

    http://www.pustaka.co.in

    கண்ணன் வருவான்

    சிறுகதைகள்

    Kannan Varuvan

    Sirukadhaigal

    Author:

    கோதா பார்த்தசாரதி

    Godha Parthasarathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/godha-parthasarathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னைப்பற்றி...

    கண்ணன் வருவான்

    வைராக்கியம்

    கடைசியாக ஒரு வார்த்தை

    எங்கள் வீட்டிலும் ஒரு டெலிவிஷன்

    நல்லதோர் வீணை செய்தே?

    இடைவெளி

    சிரித்துக்கொண்டே அழுகின்றேன்!

    குழந்தையும் தெய்வமும்

    பணத்தால் முடியுமா?

    வீட்டுக்குள் வந்த சாக்கடை

    அவள் ஒரு பாரதப் பெண்

    வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது

    முதுமை ஊஞ்சலாடுகிறது

    ஃபாரின் மாப்பிள்ளை

    ஜிம்மி

    அணிந்துரை

    இருண்ட கண்டத்திலே நான் வசித்துக் கொண்டிருந்த ஆண்டுகளில் இங்கே எழுத்தாளர்களாக உருவாகி இலக்கிய ஒளிக்குள்ளே வந்துவிட்ட பல பெண் எழுத்தாளர்களில் திருமதி. கோதா பார்த்தாரதி அவர்களும் ஒருவர். குறுகிய காலத்தில் தமக்கே ஒரு சிறந்த நடையும் உத்தியும் ஏற்படுத்திக்கொண்டு பத்திரிகை உலகில் பரவலாக அறிமுகமாகிவிட்ட பெருமைக்கு உரியவர். இவரது படைப்புகளின் ஒரு தொகுதியைத்தாம் நாம் இந்தப் புத்தக வடிவில் காண்கிறோம்.

    குடும்பச் சூழ்நிலையில் சமூகப் பிரச்சினைகளையும் மெல்லிய மன உணர்வுகளையும் பின்னிப் பிணைத்து அரிய விருந்துகளைப் படைத்திருக்கிறார்.

    ‘கண்ணன் வருவான்’ கதையில் அந்தக் கோதையைப் போன்றே பக்தி செலுத்திய கதாநாயகி கோதை மானுடர்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே என்றபடி மானுடன் கைபடுமுன் மாயவனுடன் கலந்து விடுகிறாள். சோகமாக முடிந்து மனதில் அழுத்தமாய் படியும் கதை.

    ‘எங்கள் வீட்டிலும் ஒரு டெலிவிஷன்’... தற்காலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் அவல நிலையை எடுத்துக் காட்டுகிறது. கல்யாணமாகாமல் வேலைக்குச் சென்று குடும்பத்தையே தாங்கும் சுமைதாங்கியான பெண், அழியும் மெழுகுவர்த்தி என்பதை உருக்கமாக விளக்குகிறது.

    ‘இடைவெளி’ இந்தக் காலத்து மகள், மருமகள், பேரன் பேத்திகளைப் பற்றியது. டெல்லியில் வாழும் நகரத்து நாகரீகம் மிக்க அவர்களுடன் கிராமத்துப் பாட்டி கலந்து வசிக்கும்போது கொள்கைகள் மாறுபட்டிருப்பதை உணர்கிறாள். தனக்கு ஒத்து வராது என்று ஊர் திரும்புகிறாள். இங்கே இடைவெளி மனத்தளவில்தான் என்ற உண்மையை வலியுறுத்துகிறது கதை.

    கைம்பெண்ணுக்கு மறுவாழ்வு தருவதாகக் கூறும் கதாநாயகன், அவளது முதல் கணவனது குழந்தையையும் உடன் ஏற்க மறுக்கும் சுயநலம். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா?... என்று ‘குழந்தையும் தெய்வமும்’ கதைமூலம் கேட்காமல் கேட்கிறார் ஆசிரியர்.

    ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது. இத்தகைய அருமையான படைப்பினை நமக்களித்த திருமதி. கோதா பார்த்தசாரதியை மென்மேலும் இதுபோன்ற புதிய படைப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன், அதற்கேற்ற கற்பனையும், திறனும் அவருக்கு மேலும் மேலும் பெருகிவருமாறு இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    வணக்கம்

    க. திரிபுரசுந்தரி (‘லக்ஷ்மி’)

    மயிலை

    19-12-79

    என்னைப்பற்றி...

    இந்த இடத்தில் நான் உண்மையிலேயே பெண் எழுத்தாளர் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பலமுறை நான் இதை எடுத்துச் சொல்லியும்கூட Mr. திரு என்ற அடைமொழியுடன் எனக்குக் கடிதங்களும், திரும்பி வரும் கதைகளும், சில சமயங்களில் சன்மானங்களும்கூட வருகின்றன.

    என்னுடைய நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறுகிறது. எழுத வேண்டும் என்று என் பிஞ்சு மனத்தில் விழுந்த வித்து, வளர்ந்து, செடியாகி, பூத்து அதிலிருந்து சில மலர்களைத் தொடுத்துக் கதம்பமாக்கி உங்களுக்கு அளிக்கிறேன்.

    அதன் மணத்தை நீங்கள் நுகருமுன்...

    என் தந்தையே ஒரு எழுத்தாளர். அவருடைய ஆற்றலில் ஒரு பகுதிதான் என்னுள் மலர்ந்து, என்னைத் தூண்டி எழுதச் செய்தது.

    என் முதல் கதை வெளியானது தினமணி கதிரில்தான், 1957-ல். அதைத் தொடர்ந்து இன்னும் இரு கதைகள் கதிரிலும், மித்திரனில் ஒன்று, குமுதத்தில் ஒன்று, தீபத்தில் ஒன்று என வெளிவந்தன. பத்திரிகை உலகில் புதிய அலைகள் அடித்துக் கொண்டிருந்த நேரம் அது. எனவே தற்காலிகமாக எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.

    மீண்டும் என் எழுத்துலக பிரவேசத்துக்கு இடம் கொடுத்தது ‘தீபம்.’ தொடர்ந்து பல பத்திரிகைகள் என் எழுத்துக்கு ஆதரவு தந்தன.

    நான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதைவிட சிறந்த வாசகி என்று சொல்லிக் கொள்வதில் இன்னும் மகிழ்ச்சியடைவேன்.

    நான் ஒரு சாதாரண குடும்பத் தலைவி. என்னுடைய உலகம் என் பார்வைக்கு உட்பட்ட உலகம் மிகச் சிறியது. எனக்கு அரசியல் தெரியாது. வெளிஉலக ஈர்ப்பும் அதிகம் கிடையாது. ஆகையால் என் கதைகள் ஒரு சிறிய வட்டத்துக்குள்தான் அடங்கி இருக்கும். எனக்குத் தெரியாத விஷயங்களை வைத்து நான் ‘கதை’ பண்ணுவதில்லை.

    எனவே என் கதையைப் படிக்கும் உறவினர்களோ, நண்பர்களோ ‘இந்தக் கதையில் இவரை வைத்து எழுதியிருக்கிறயா? இது அவள் கதை போலிருக்கிறதே?’ என்று கேட்கும் போதெல்லாம் வெற்றி பெற்றதாக எண்ணுகிறேன்.

    ஆம் நான் எழுதும் கதைகள் அவர்கள் சந்தித்த ‘யாரை’யோ நினைவுபடுத்துவதாக இருந்தால், அந்த அளவுக்கு ‘ரியலிசம்’ இருப்பதாகத்தானே பொருள்!

    இந்தக் கதைகளுக்கு ஆதரவு கொடுத்து தங்கள் இதழ்களில் வெளியிட்ட பத்திரிகையாளர்களுக்கும், என்னை எழுதவும், புத்தகம் வெளியிடவும் தூண்டிய எழுத்தாள நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோதா பார்த்தசாரதி

    சமர்ப்பணம்

    என் அன்புத் தந்தைக்கு

    கண்ணன் வருவான்

    மார்கழி மாசத்து சில்லென்ற காலைப்பொழுது.

    பனி மூடிக் கிடக்கிறது.

    தொலைவில் எங்கிருந்தோ நாதஸ்வரத்தில் இனிய பூபாளம் காற்றில் மிதந்து வந்தது.

    தனுர் மாச ஆராதனைக்காக பெருமாள் கோயிலில் பெரிய மணி ‘ஓம் ஓம்’ என்று ஓங்காரத்துடன் முழங்கியது.

    சாரங்கன் விழித்துக் கொண்டார். வாய் ‘கௌசல்யா சப்ரஜா ராம’ என்று முனகியது. மனம் ஒரு நிலையில் இல்லை. கண்கள் ஊஞ்சலை நாடின. கோதை அங்கில்லை. கடிகாரத்தைப் பார்த்தார். மணி காலை நான்கு அதற்குள்ளாகவா எழுந்து விட்டாள்? எங்கே போயிருப்பாள்? ‘துணுக்’ என்றது அவருக்கு. சித்தம் சரியில்லாத பெண்ணாயிற்றே?

    கோதை! அம்மா கோதை! என்று குரல் கொடுத்தார்.

    குரல் நடுங்கியது.

    விரியத் திறந்து கிடந்த வாசற் கதவின் வழியே என்னப்பா? என்ற கோதையின் குரல் கேட்டது.

    சாரங்கன் வாசலுக்கு வந்தார். திண்ணையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அரிக்கன் விளக்கின் ஒளியில் கோதை கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

    அழகிய ரதம் ஒன்று அவள் கைவண்ணத்தில் உருவாகி இருந்தது. அதன் நடுவில் ‘மஞ்சள் மஞ்சேல்’ என்று பரங்கிப் பூக்கள் ஒய்யாரமாகச் சிரித்தன.

    ஊர் முழுவதும் போட்டி போட்டுக்கொண்டு அந்த அதிகாலை நேரத்தில் கோலங்கள் கோலங் காட்டின.

    ஓ! இன்று மார்கழி மாதம் பிறந்து விட்டதா?

    ‘மாஸானாம் மார்க்க சீர்ஷோஸ்மி’ என்று ‘மாதங்களில் நான் மார்கழியாக நிற்கிறேன்’ என்று கீதாசாரியன் அருளிச் செய்த மாதம் அல்லவா இது?

    கோதை! இந்தப் பனியில் எழுந்திருக்காவிட்டால் என்னம்மா? இரவு முழுதும் இருமினாயே? என்றார் சாரங்கன் கனிவுடன்.

    ‘இன்று மார்கழி மாசப் பிறப்பாயிற்றே அப்பா? அதிகாலையில் எழுத்து நீராடி நோன்பு நூற்றால்தானே அப்பா கண்ணன் வருவான்? இந்த ரதம் நன்னா இருக்காப்பா? இதில்தானே, அன்று ருக்மணியை அழைத்துப் போனது போல், என்னையும் கண்ணன் அழைத்துப் போவான்?’ என்று வெகுளியாகப் பேசினாள் கோதை.

    சாரங்கனின் கண்களில் நீர் பனித்தது.

    என்னை ஆசீர்வதியுங்கள் அப்பா என்று தன் கால்களில் வணங்கி எழுந்த மகளைத் தூக்கி நிறுத்தினார் தந்தை. சுருண்டு நெற்றியில் தவழும் குழற் கற்றைகளை அன்புடன் ஒதுக்கி, மகளின் முகத்தைப் பரிவோடு நிமிர்த்தினார்.

    ஆழ்ந்த அகன்ற அவளது கரிய பெரிய கண்கள் அதில் மாபெரும் சோகத்தைத் தேக்கி வைத்திருந்தன. கூரிய நாசியில் ஒற்றை மூக்குத்தி சுடர் விட்டது. சிவந்த ஆதரங்களும் முகமும் வாடி வெளுத்திருந்தன. அடிக்கடி விரதம், நோன்பு என்று உடலை வாட்டிக் கொண்டதால் கொடி போன்ற உடல் மேலும் வாடி இளைத்திருந்தாலும், புடம் போட்ட பொன் போல் ஒளி விட்டது.

    வைகறையில் எழுந்து, நீராடி, கூந்தலைத் தளரக் கட்டி, குண்டு மல்லிகை ஒன்றைச் செருகி இருந்தாள். மஞ்சள் சுடர் விடும் முகத்தில் ஸ்ரீசூர்ணத் திலாம் ஒற்றைக் கோடாய்ப் பிரகாசித்தது மருதோன்றியிட்டுச் சிவந்த பாதங்களில் ‘கலீர் கலீர்’ என்று கொலுசு கொஞ்சிடது.

    புத்தி சரியில்லாத பெண்ணாக இருந்தாலும் கோதை அலங்காரத்தில் என்றும் குறை வைக்க மாட்டாள்.

    என்னப்பா, அப்படிப் பார்க்கறேள்? இத்தனை அதிகாலையில் இப்படியெல்லாம் அலங்காரம் பண்ணிண்டிருக்கேனேன்னு பார்க்கறேளா? எப்பவும் தயாரா இருக்கணும்பா. திடீர்னு கண்ணன் வந்தால், ‘நான் இன்னும் குளிக்கலை, தலைவாரிகல்லைன்னு சொல முடியுமாப்பா? இல்லை, அவன்தான் எனக்காக ரதத்தை வெச்சிண்டு காத்துண்டிருப்பானா? அதனாலேதான் அவன் எப்போ வருவானோன்னு எப்பவும் தயாரா இருக்கேம்பா! என்றாள் கோதை.

    சாரங்கன் மனம் துவண்டார்.

    கண்ணா! இந்தப் பேதையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்? எவ்வளவு திடநம்பிக்கையுடன் பேசுகிறாள்? உண்ணும் சோறு, பருகும் நீர் யாவும் உன் மயமாகவே காண்கிறாளே! அவள் இந்த அழியும் உலகில் ஒரு சாதாரணப் பெண். இரவெல்லாம் வாழ்ந்து சூரிய ஒளியில் மினுக்கி, பின் கரைந்து போகும் எத்தனையோ பனித்துளிகளில் ஒரு துளி அவளுள் புகுந்துகொண்டு அவளை ஏன் இப்படி ஆட்டி வைக்கிறாய்? பெண்ணின் வருத்தமறியாப் பாவியா நீ? அவள் ஆசை அசாதாரணமானது, நிறைவேற முடியாதா? என்று மனத்திற்குள்ளே புழுங்கினார்.

    ஏம்பா! இன்று எனக்கு உங்கள் வாயால் நல்லதாக ஏதாவது சொல்லி வாழ்த்தக் கூடாதா? அப்படியே நின்றுவீட்டீர்களே என்றாள் கோதை.

    துக்கம் நெஞ்சை அடைக்க இந்த முறை உன் நோன்பு வீண் போகப் போவதில்லை அம்மா! கூடிய சீக்கிரம் உன்னை அழைத்துப்போக கண்ணன் வருவான் என்று வாழ்த்தினார் சாரங்கன்.

    அப்பா, நல்ல அப்பா! என்று சொல்லிவிட்டு, உள்ளே ஓடினாள் கோதை.

    சாரங்கனின் மனமே அவரைச் சுட்டது.

    ‘பாவி, நீயாகத் தேடிக் கொண்டதுதானே இந்த நிலை? பெண் பிறந்த நாள் முதல் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளின் கதையைச் சொல்லிச் சொல்லி, அவள் இளம் நெஞ்சில் கண்ணனைப் பற்றிய இனிய கனவுகள் வளர்த்தவன் நீதானே?’

    தவமிருந்து பெற்ற செல்வி அவள்!

    சாரங்கன் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைச் செல்வம் இல்லாததால் அடைந்த துயரம் கொஞ்சநஞ்சமல்ல. பல புண்ணிய தலங்களுக்குச் சென்று பூஜைகள் பல செய்தபின், இறைவன் அருளால் குழந்தை பிறப்பதற்கான நம்பிகை ஒளி தோன்றியது. ‘மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன்’ என்று பேசி, அதன்படி வாழ்ந்து காட்டிய பெண் தெய்வமாம் ஆண்டாளின்பால் அளவற்ற பக்திகொண்ட சாரங்கன், தனக்கும் ஒரு பெண் மகவு பிறக்க வேண்டும். அதைப் பெரியாழ்வார் பெற்ற பைங்கிளி போல் வளர்க்க வேண்டும். கோதை கோதை! என்று வாய் மணக்க தமிழ் மணம் கமழும் பெயரிட்டு அழைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கொண்டார்.

    ரங்கநாயகியோ தங்கள் பிள்ளையில்லாக் கலி தீர ஒரு மகன் ‘புத் என்ற நரகத்தில் பொத்தென்று வீழாமல் தடுக்க’ ஒரு மகன் வேண்டுமென்று தவம் கிடந்தாள்.

    ஆண்டாள் அவதரித்த தலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் நடந்த நடை கொஞ்சமோ? அந்தத் தெய்வம் அருள்பாலித்தது. கோதை பிறந்தாள், பிள்ளை பிறக்கவில்லை என்ற குறையையும் கணவரின் மகிழ்ச்சியில் மறந்தாள் ரங்கநாயகி.

    சாரங்கன் ஒரு ராணி போல் அவளை வளர்த்தார். ‘மகளே’ என்று அவர் அழைத்ததே இல்லை. ‘அம்மா’ என்றுதான் அழைப்பார். ஏனென்றால் கோதை வடிவில் அவர் கண்டது அந்த லோக மாதா சொல்லின் செல்வியான கோதைப் பிராட்டியை அன்றோ?

    ***

    கோதை வளர்ந்தாள்.

    பள்ளியில் சேர்ந்தாள்.

    ஒருநாள் விக்கி விக்கி அழுதபடி கோதை ஓடி வந்தாள்.

    சாரங்கன் பயந்து போய் அவளே வாரி அணைத்து

    Enjoying the preview?
    Page 1 of 1