Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Salangai Sathiradugirathu
Oru Salangai Sathiradugirathu
Oru Salangai Sathiradugirathu
Ebook62 pages25 minutes

Oru Salangai Sathiradugirathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிறப்பிலே தாயை இழந்த காமனிக்கு, தாயும் தந்தையுமாக அன்பைப் பொழிந்து, அவளை வளர்த்தார் சாம்பு. ஒரு நல்ல இடத்தில் பெண்ணை மணம்முடித்துக் கொடுக்க ஆசைப்பட்டு, பிரபல அட்வகேட் சங்கர அய்யரின் மகன் கணேஷ் என்பவருக்கு, தன்னுடைய மகளை திருமணம் செய்து வைக்கிறான். திருமணத்திற்கு பிறகு காமனிக்கு ஏற்பட்ட நிலைமை என்ன? அதன்பின் நடந்தது என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580157908985
Oru Salangai Sathiradugirathu

Read more from Godha Parthasarathy

Related to Oru Salangai Sathiradugirathu

Related ebooks

Reviews for Oru Salangai Sathiradugirathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Salangai Sathiradugirathu - Godha Parthasarathy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு சலங்கை சதிராடுகிறது

    Oru Salangai Sathiradugirathu

    Author:

    கோதா பார்த்தசாரதி

    Godha Parthasarathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/godha-parthasarathy

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    ‘டிரிங் - டிரிங்’

    போன் ஒலிக்கிறது. காமினியின் தூக்கம் கலைந்து விட்டது. இவ்வளவு அதிகாலையில் யாராக இருக்கும்? படுக்கையில் புரண்டு படுத்தபடியே, அருகே டீபாயின் மேல் அலறிக் கொண்டிருந்த போனை எடுத்தாள். அவள் அந்தரங்கக் காரியதரிசி நளினிதான் பேசினாள்:

    எக்ஸ்க்யூஸ் மீ மேடம்...! லேடீஸ் கிளப்பிலிருந்து போன். நான் எத்தனை சொல்லியும் அந்தத் தமயந்தி அம்மா கேட்க மாட்டேங்கிறாங்க! நீங்களும் எட்டு மணிக்கு எழுப்பச் சொன்னீங்களேன்னு தான்...!"

    மை காட்! மணி எட்டு ஆகி விட்டதா? நான் நல்லாத் தூங்கி விட்டேன். பரவாயில்லை, நளினி! போனை மேலே போடு. நானே தமயந்தி அம்மாவுடன் பேசறேன் என்றாள் காமினி.

    எஸ் மேடம் இதோ!

    ஹலோ! மிஸ் காமினி தேவியா? வணக்கம்மா. காலை நேரத்திலே டிஸ்டர்ப் பண்ணறதுக்கு மன்னிச்சுடுங்கம்மா. உங்களிடம் சின்ன ஆப்ளிகேஷன். எங்க கிளப்பில் பெண்கள் ஆண்டு கொண்டாடறோம். அதுக்கு நீங்க தலைமை தாங்கி இரண்டு வார்த்தைப் பேசணும்...

    அடாடா! எனக்கு கால்ஷீட்டுக்கே நேரம் கிடைப்பதில்லையேம்மா. இதுக்கெல்லாம் ஏது டயம்? பிளீஸ், மிஸ்டேக் பண்ணிக்காதீங்க கெஞ்சும் குரலில் சொன்னாள் காமினி.

    ஓ! நோ! நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நீங்கள் வருவதாக நான் எல்லாரிடமும் சொல்லிட்டேன். நாங்க நேரில் வந்து இன்வைட் பண்றோம். எதுக்கும் உங்களுக்கு முன்னாடி இன்ஃபார்ம் பண்ணிடலாம்னுதான் போன் பண்ணேன். நீங்க கண்டிப்பா வரணும், மிஸ். காமினி! மறுக்கக் கூடாது! என்று மன்றாடினாள் தமயந்தி.

    காமினிக்கு ஒரே எரிச்சல். நல்ல ஆள் பார்த்தாள் தலைமை வகிக்க! இந்தத் தமயந்தி அம்மாவுக்கு ஆசை, தான் பிரசிடண்டாக இருக்கும்போது, என்னை எப்படியாவது கிளப் நிகழ்ச்சியிலே கலந்துக்கும்படிச் செய்யணும்னு! நான் சொன்னா காமினி தட்டவே மாட்டாள்னு எல்லாரிடமும் பெருமையடிச்சிருப்பா! போகிறது, அவள் ஆசையையும் தான் கெடுப்பானேன்? போகவில்லை என்றால் கர்வம், அப்படி, என்று ஏதாவது கிளப்பி விடுவாள். இவர்கள் விரோதத்தைத் தேடிக்கொள்ளக் கூடாது!

    ஓகே! ஐ வில் டிரை! அதெல்லாம் நீங்க நேரில் வந்து இன்வைட் பண்ணணும்னு ஒண்ணும் இல்லைம்மா. பார்க்கலாம், ஸீ யூ தென்! பை பை! போனை வைத்தாள் காமினி.

    ***

    பெண்கள் ஆண்டா கொண்டாடுகிறார்கள்?

    பெண்களுக்கு என்ன விதத்தில் பெருமை கிடைத்திருக்கிறது, கொண்டாடவும் கூத்தாடவும்? ஏதோ ஒரு சிலர், பல விதத்தில் முன்னேறி இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான பெண்கள்...?

    திறந்திருந்த ஜன்னல் வழியே தெரிந்த ஒரு சினிமாப் போஸ்டர் அவள் கண்ணில் பட்டதும், அவள் முகம் சிவந்தது. ஆடை குலைந்த நிலையில் போராடும் பெண்ணும், அவளைத் துரத்தும் ஆணும்! அதன் கீழ் ஒரு குளியல் காட்சி! நாற்சந்தியில் பெண்ணை இதுபோல் கேவலப்படுத்துவது என்று ஒழிகிறதோ அப்போதல்வவா, பெண்கள் ஆண்டைக் கொண்டாட வேண்டும்?

    மேடம்! நீங்கள் இன்னும் எழுந்திருக்கவில்லையா? உள்ளே வந்தாள் நளினி.

    இதோ, ஒன் மினிட் நளினி! இன்டர்காமில் இரண்டு காபிக்குச் சொல்லு! நான் ‘வாஷ்’ பண்ணிண்டு வந்துடறேன் என்று பக்கத்திலேயே இருக்கும் பாத் ரூமுக்குள் மறைந்த காமினி, பல் தேய்த்து முகம் கழுவி டர்க்கி டவலில் முகத்தை ஒற்றியபடி வெளியே வந்த போது, காபி ரெடியாக இருந்தது. காபியை உறிஞ்சியபடி, …ம் நளினி இன்று என்ன புரோகிராம்? என்று விசாரித்தாள். நளினி தன் ஹேண்ட் - பாக்கிலிருந்து ஒரு டயரியை எடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1