Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhaikku Odhungaathey
Mazhaikku Odhungaathey
Mazhaikku Odhungaathey
Ebook98 pages35 minutes

Mazhaikku Odhungaathey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466664
Mazhaikku Odhungaathey

Read more from K.G.Jawahar

Related to Mazhaikku Odhungaathey

Related ebooks

Related categories

Reviews for Mazhaikku Odhungaathey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhaikku Odhungaathey - K.G.Jawahar

    11

    1

    எதிரே வருவது என்னவென்றே தெரியவில்லை. வெள்ளைத் திரை ஒன்றைக் குறுக்கே பிடித்த மாதிரி மழை. ஆனந்தன் என்றழைக்கப்படுகிற ஆனந்தும், அனன்யாவும் கைகளை இறுக்கமாகக் கோர்த்தவாறு சாலையோரமாய் ஓடினார்கள்.

    இருளும் சேர்ந்து சதி செய்தது. இப்படி ஆகும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.

    வீட்டுக்குத் தெரியாமல் மகாபலிபுரம் வந்தது தப்பு. பல்லவன் கால பாரம்பரியங்களைக் கல்லில் கண்டு ரசித்தபோது இருட்டிக்கொண்டு வந்ததைக் கவனிக்க மறந்து போனது இன்னமும் தப்பு. அப்போதே நீல நிற வானத்தைக் கறுப்பு நிற மேகம் கற்பழிக்க முயன்று வெற்றி கண்டதைப் பார்த்த பின்னும் ஜாவாவை உதைத்து ஏறிச் சிட்டாய்ப் பறந்து சென்னை நோக்கி வராதது தப்பு, தப்பு... தப்பு...

    இப்போது அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளுக்கோ என்ன பேசுவதென்று தெரியவில்லை. சாலையோரம் ஜாவா படுத்துவிட்டது. அவர்கள் ஆடைகள் தெப்பலாய் நனைந்தன. அதுவும் அனன்யாவின் ஆடைகள் அவள் உடலில் அப்படியே ஒட்டிக்கொண்டு பூஜாபட்டின் வித்தைகளைக் காண்பித்தன.

    அவன் அனன்யாவின் வெண்டைக்காய் விரல்களை இறுக்கியபோது சில்லிட்டிருந்தது.

    பயப்படாதே. அதோ...சவுக்குமரத் தோப்புக்குள் ஓர் அரண்மனை மாதிரித் தெரியுது பார். அங்கு புகுந்து கொள்ளலாம். மழை விட்டதும் நண்டுகள் மாதிரி வெளியேறி ஜாவாவைச் சரிசெய்து பறந்து விடலாம்.

    அவள் மிரட்சியாக அவனைப் பார்த்தாள். கண்கள் பாலில் மிதக்கும் திராட்சைப் பழங்கள் மாதிரி அலை பாய்ந்தன.

    வா. ஓடலாம், பங்களாவைப் பார்த்து.

    சவுக்குத் தோப்புப் பங்களா. அரண்மனை மாதிரி பிரம்மாண்டமாய் இருந்தது. இருளில் தவம் புரிந்து கொண்டிருந்த மாதிரி.

    ‘சடங்... சடார்...’

    அவன் கேட்டைத் திறந்தான்.

    பழகிய மாதிதிரி ஆனந்த் பங்களாவை நெருங்கினான். போர்ட்டிகோவில் தஞ்சம்.

    அந்தப் போர்ட்டிகோ ஏதோ இன்டோர் ஸ்டேடியம் சைஸில் இருந்தது. பிரம்மாண்டமானதாக. பல்லவ கால சாம்ராஜ்யத்தில் யானைப் படையையே இங்கு கட்டி வைத்திருக்கலாம்.

    மணி என்ன? அனன்யா கேட்டாள்,. குளிரில் பற்கள் தந்தியடித்தன. கைகளை மார்புக்கு இடையில் குவித்துக் கொண்டாள்.

    வாட்ச் ஓடலை. ஈரம் பட்டு ஸ்டக் அப்!

    ஒன்பது இருக்குமா?

    இருக்கும்.

    சட்டென்று ஆனந்த் காதுகள் கூர்மையாகின.

    மழையின் இரைச்சலையும் மீறி பைக்கின் சத்தம்.

    அது... அது... அவனுக்கு மிகவும் பரிச்சயமான ஜாவாவின் சத்தம்.

    ஆம். அவனோட ஜாவாவின் சத்தமேதான்...!

    தெருவோரம் மழையில் மக்கர் பண்ணிப் படுத்துவிட்ட அவனின் ஜாவா சத்தம்!

    அனன்யா... என்ன இது... என் ஜாவாவின் சத்தம்!

    ஆனந்த்! ரோட்டோரம் நிறுத்தினோமே...?

    சட்டென்று தன் ஸ்டோன்வாஷ் ஜீன்ஸ் பைக்குள் கைவிட்ட ஆனந்த்--

    மைகாட்... சாவியை பைக்கிலேயே விட்டுவிட்டு வந்து விட்டேன்... அவசரத்தில்...

    அப்ப... அந்த பைக்...?

    என்னோடது. திருட்டுப் பயல் இவ்வளவு சீக்கிரம் - இந்தக் கொட்டும் மழையில் வருவான்னு யார் கண்டது? மை காட்... என் கண் முன்னரே என் பைக் களவாடப்படுகிறதே... அதோ...

    அந்த ஜாவா, சாலையில் அவர்கள் ஒதுங்கியிருந்த பங்களாவைச் சர்ரென்று கடந்து போயிற்று.

    அப்போதுதான் -

    எங்கோ அந்தச் சத்தம் கேட்டது.

    அன்பே அனன்யா, பாரு ஏதோ சத்தம். அவன் வியப்பாய்க் கூவ -

    யெஸ் டியர் மன்னவா! ஏதோ டெலிபோன் மணி! சந்தோஷமாய் சப்தித்தாள்.

    இந்தப் பங்களாவிலிருந்துதான்.

    அப்ப இது பாழடைந்த பங்களா இல்லே?

    பின்னே ‘பலான’ பங்களாவா?

    சீ... வாயத் தொறந்தா உனக்கு அதுதான். ஆனந்த், வா. உள்ளே போகலாம். - டெலிபோனை இருளில் தடவிப் பிடித்து, போலீசுக்கு ஃபோன் செய்யலாம்.. உன் பைக்கின் குலம் கோத்ரம் அத்தனையும் தந்தால் உன்னிடமே உன் ஜாவா வந்துரும்.

    ம் நம்பிக்கையில்லை. வா...

    மழையின் மகா இரைச்சல் இன்னும் விட்டபாடில்லை. அவர்களின் உடையின் ஈரம் இன்னும் அப்படியே இருந்தது.

    அந்த டெலிபோன் சத்தம் நின்று போயிற்று!

    இந்த இருண்ட பாழடைந்த அரண்மனைக்குள் டெலி போன். யார் இருக்கிறார்கள்? யார் பேசுவார்கள்?

    அவளுக்குப் பயமாகவே இருந்தது. ஆயினும் காட்டிக் கொள்ளவில்லை.

    வெறுமனே பூட்டியிருந்தது. தள்ளினான். கிறீச் சென்று கோவில் கதவு மாதிரி மெள்ளத் திறந்தது. நல்ல வேளை. வௌவால்கள் பறக்கவில்லை.

    உள்ளே கும்மிருட்டு. நச்சென்று நாலு தும்மல் வந்தது. தூசி நிறைந்த பங்களா போலும்.

    ஏய் ஆனந்த். வா, வெளியே போயிடலாம். பயமா இருக்கு.

    ச்சு. வெளியே போய் என்னத்தக் கிழிக்கப் போறோம்? இரு. ஃபோன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து ஃபோன் செய்யலாம் போலீசுக்கு...

    ஏய்... அதுகூட வேணாம்னு தோணுது. போலீஸ்ல யார்ன்னு கேப்பாங்க. பிறகு நம்ம குட்டு வெளிப்பட்ரும்.

    சிரித்தான் ஆனந்த். சாதாரண சிரிப்புத்தான் அது. ஆனால் இப்போது, அந்த இருளில், அத்தனை பெரிய அரண்மனையில்-அது வித்தியாசமாக எதிரொலித்தது வயிற்றைக் கலக்கியது.

    சிரிக்காதே, பயமா இருக்கு.

    சரி தாயே! சிரிக்கலை.

    அவன் அவள் கையைப் பிடித்து மெள்ள அழைத்துச் சென்றான்.

    ச்சே... இந்த இருட்டு இன்னும் கண்ணுக்குப் பழகவில்லை. எழவு ஒரு ஜன்னல் கூட இல்லையா? வெளியே வெட்டற மின்னல் வெளிச்சம்கூட வரமாட்டேங்குது.

    மீண்டும் டெலிபோன் ஒலித்தது!

    "ஏய்...

    Enjoying the preview?
    Page 1 of 1