Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ella Vilakkum Sivappalla
Ella Vilakkum Sivappalla
Ella Vilakkum Sivappalla
Ebook89 pages33 minutes

Ella Vilakkum Sivappalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466657
Ella Vilakkum Sivappalla

Read more from K.G.Jawahar

Related to Ella Vilakkum Sivappalla

Related ebooks

Related categories

Reviews for Ella Vilakkum Sivappalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ella Vilakkum Sivappalla - K.G.Jawahar

    5

    1

    உலகத்தில் உள்ள அழகான கடற்கரைகளில் இரண்டாவது இடம் சென்னை மெரீனா கடற்கரையாம். சொல்கிறார்கள். மியாமி கடற்கரையை தீபக் பார்த்ததில்லை ஆகவே இதை நம்பத்தான் வேண்டியிருக்கிறது. மியாமி உலகத்தின் முதல் இடத்தில் உள்ள அழகான கடற்கரையாமே! எது எப்படி இருந்து, பிரசித்தமானாலும் இப்போது தீபக் அதை வியக்கும் மூடிலோ, ரசிக்கும் மூடிலோ இல்லை!

    அவனுக்கு இந்த சிங்காரச் சென்னை கசந்து விட்டிருந்தது. வந்து இரண்டு மாதமாயிற்று... இருக்கும் சில்லறையும் கரைந்து போயிற்று. இடம் கொடுத்த மன்னாரும் ‘எப்பப்பா வேலைக்குப் போகப்போறே...? என்று முணுமுணுக்கத் துவங்கலாயிற்று... இனி என்ன செய்ய?

    ஊரிலேயே இருந்திருக்கலாம். அப்பா சொன்னபடி விவசாயத்தைக் கவனித்திருக்கலாம். படித்த படிப்பு பிரமாதமான வேலையைத் தரும் என்று எண்ணி கானல் நீரைக்கண்ட மான் போலத் துள்ளியிருக்க வேண்டாம்.

    எக்ஸ்யூஸ்மீ... என்ன டைம்...? ஓர் இனிய குரல் அவன் பின்னே கேட்டது.

    சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

    ஒரு இளம் பெண் நல்ல உடற்கட்டில் இருந்தாள்.

    டைம் வந்து... இடது கையைத் தூக்கியவன் சுதாரித்துக்கொண்டு ஸாரி... வாட்ச் இல்லே என்றான். முகத்தில் அசடு வழிந்தது.

    ‘ம்... பெரிசா கையைத் தூக்குனியே’ என்பது மாதிரி முணுமுணுத்துவிட்டு அவள் இளக்காரப் புன்னகையுடன் சென்றாள். ‘நேற்று வரை வாட்ச் இருந்தது. இன்று காலைதான் அது அடகுக்குப் போயிற்று’ என்று அவளிடம் சொல்ல முடியுமா என்ன?’

    ‘எங்கு போவது? என்ன சாப்பிடுவது? வாட்சை அடகு வைத்த ரூபாய் கரெக்டாக மன்னாருக்கு வாடகை தருவதற்கு மட்டும் காணும். இனியும் அதைத் தள்ளிப் போட முடியாது. அவசரத்திற்கு இடம் கொடுத்த அந்தப் புண்ணியவானுக்குச் சிரமம் கொடுக்கலாமா?

    எப்படியாவது கொடுத்து விட வேண்டும்? ஆனால் இந்தப் பசியை எப்படி வெல்வது?’

    அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே கடற்கரை அலைகளை ஒட்டி ஒரு உருவம் வேகமாக ஓடிவருவது தெரிந்தது. இருளில் அந்த உருவத்தை அவனால் சரியாக இனம் கண்டுகொள்ள முடியவில்லை. ஏன் அப்படி அந்த உருவம் ஓடுகிறது!

    சரேல் என்று தீபக் எழுந்தான்.

    யாரு... ஏய்...

    அந்த உருவம் ஓடிக்கொண்டிருக்கிறது.

    தீபக் சற்றும் தாமதியாமல் அதன் பின்னே ஓடத்துவங்கினான். நெருங்க, நெருங்க -

    அது ஒரு பெண்ணின் உருவம் என்று தெரிந்தது. அவள் வேகமாக ஓடினாள். தீபக்கும் அவளைத் துரத்த, அவள் இன்னும் வேகமாக ஓடி, கடலுக்குள் இறங்கினாள்.

    ஏய்... வேண்டாம்... நில்லு... நில்லு...

    அவள் கேட்கவில்லை. ஏதோ மந்திரம் போட்ட மாதிரி, கீ கொடுத்த பொம்மை மாதிரி, கடலுக்குள் இறங்கினாள்.

    தீபக் செருப்பை கரையில் எறிந்தான் ஒரே பாய்ச்சல், அவனும் கடலுக்குள் இறங்கினான். அவனுக்கு வந்தவேகம் அவனுக்கே வியப்பை மூட்டிற்று.

    அவள் மூழ்கிப் போயிருந்தாள். இவன் நீருக்குள் துழாவி, போராடி, அவளைக் கண்டுபிடித்தான். தலை முடியைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வந்தான். தொப்பென்று கரையில் போட்டான்.

    அவள் மயங்கிக் கிடந்தாள். உடனே தனக்குத் தெரிந்த முதலுதவியைச் செய்தான். பரபரவென்று ஓடி, சுண்டல் விற்கும் பையனைக் கூட்டி வந்தான்.

    ம்...கேஸா... இதே ரோதனையாப் போச்சுங்க... இதுகளுக்கு வேற வேலை இல்ல...

    தம்பி... கொஞ்சம் பார்த்துக்க, நான் ஒரு நிமிஷத்தல் வந்திடறேன்... பிளீஸ் தம்பி...

    ம்... ம்... எனக்கு ரெண்டு ரூபா தரணும்.

    தரேன்... தரேன்... பார்த்துக்க... -

    தடதடவென்று மணல் வெளியில் ஓடி மெயின் ரோட்டிற்கு வந்தான். ஆட்டோ ஒன்றை நிறுத்தினான். டிரைவரிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தான். அந்தப் பெண் இன்னும் மயக்கத்திலிருந்தாள். முறுக்குப் பையனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணைத் தூக்கினான்.

    இரண்டு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணை ஆட்டோவில் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள்.

    எங்க ஸார் போக...?

    ஒரு நல்ல கிளினிக்கா பார்த்துப் போங்க...

    தீபக் அந்தப் பெண்ணைப் பார்த்தான். சந்திரபிம்பம் மாதிரி அழகாய் இருந்தாள். சோப்பு விளம்பரப் பெண் போல மென்பட்டு மேனி. அதில் தண்ணீர்த்துளிகள். முகத்தில் தலைமுடி கோலங்களிட்டு ஈரத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தது. சிவப்பு உதடுகள் லேசாகப் பிரிந்திருந்தன. ஏறி இறங்கும் சுவாசத்தால் அவள் அழகும் தெரியலாயிற்று.

    இவள் யார்? என்ன பெயர்? எதற்காக தற்கொலை செய்ய முயன்றாள்? தீபக்கிற்கு குறுகுறுத்தது.

    ஒரு கிளினிக் வாசலில் ஆட்டோ நின்றது.

    தீபக் அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டான்.

    எமர்ஜென்சி வார்டில் அட்மிட் பண்ணினான்.

    டாக்டர்கள் பரபரப்பாக அப்பெண்ணைச் சூழ்ந்து கொண்டார்கள். உள்ளே அழைத்துச் சென்றதும், தீபக் தனியாக விடப்பட்டான்.

    தலையைச் சொறிந்தவாறே டிரைவர் வந்தான்.

    ஓ... ஆட்டோ கட்டணம் கொடுக்க வேண்டும்! மன்னாருக்கு கொடுக்க வைத்திருந்த வாடகைப் பணம்-வாட்சை அடகு வைத்த பணம் நினைவுக்கு வந்தது. ‘மன்னாரிடம் இந்த விஷயத்தைச் சொன்னால் நிச்சயம் எனக்கு டைம் தருவான். கோபித்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1