Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Swasa Kaattre...
En Swasa Kaattre...
En Swasa Kaattre...
Ebook131 pages47 minutes

En Swasa Kaattre...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரவிந்தனின் எதிர் வீட்டுக்கு கீதா, சுதா என்ற இரட்டையர்கள் குடி வருகிறார்கள். அரவிந்தன் கீதாவையும் அவன் நண்பன் பப்லு சுதாவையும் காதலிக்கிறார்கள்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ரத்தினவேல் பூங்குன்றனாரின் மகள்கள் தான் கீதாவும் சுதாவும் என்று தெரிய வருகிறது. அவர்களுக்கு முகம் தெரியாத எதிரிகளால் பலவகையான ஆபத்துகள் நேரிடுகின்றன.

ஒரு கருப்பு உடை மனிதன் கீதாவின் வீட்டிற்கு அடிக்கடி மர்மமான முறையில் வந்து செல்கிறான்.

கருப்பு மனிதன் வந்து செல்லும் நாட்களில் எல்லாம் நகரின் பிரபலமான முக்கிய பிரமுகர்கள் கொலையா, இயற்கை மரணமா என்று தெரியாமல் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.

இந்த மர்மமான தொடர் மரணங்களுக்குக் காரணத்தை குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி விக்னேஷ் கண்டுபிடிக்கிறார்.

திடீரென்று ஒருநாள் அந்தக் கருப்பு உடை மனிதன் நீதிமன்றத்தில் தான் தான் கொலையாளி என்று சரணடைகிறான்.

அவன் யார்? அவன் செய்த தொடர் கொலைகளுக்குக் காரணம் என்ன? பல திடுக்கிட வைக்கும் திடீர்த் திருப்பங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.

கதையைப் படியுங்களேன்...

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580172610560
En Swasa Kaattre...

Related to En Swasa Kaattre...

Related ebooks

Related categories

Reviews for En Swasa Kaattre...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Swasa Kaattre... - Leela Ramasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என் சுவாசக் காற்றே...

    En Swasa Kaattre...

    Author:

    லீலா ராமசாமி

    Leela Ramasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/leela-ramasamy

    பொருளடக்கம்

    அத்தியாயம் (1)

    அத்தியாயம் (2)

    அத்தியாயம் (3)

    அத்தியாயம் (4)

    அத்தியாயம் (5)

    அத்தியாயம் (6)

    அத்தியாயம் (7)

    அத்தியாயம் (8)

    அத்தியாயம் (9)

    அத்தியாயம் (10)

    அத்தியாயம் (11)

    அத்தியாயம் (12)

    அத்தியாயம் (13)

    அத்தியாயம் (14)

    அத்தியாயம் (15)

    அத்தியாயம் (16)

    அத்தியாயம் (17)

    அத்தியாயம் (18)

    அத்தியாயம் (19)

    அத்தியாயம் (20)

    அத்தியாயம் (21)

    அத்தியாயம் (22)

    அத்தியாயம் (23)

    அத்தியாயம் (24)

    அத்தியாயம் (25)

    அத்தியாயம் (26)

    அத்தியாயம் (27)

    அத்தியாயம் (28)

    அத்தியாயம் (29)

    அத்தியாயம் (30)

    அத்தியாயம் (1)

    மனிதனது உயிர் நாடி மூச்சுக் காற்று ஆகும். உணவு, நீர் இல்லாமல் கூட சில நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால் மூச்சுக் காற்று இல்லாமல் உயிர் வாழ முடியாது.

    ***

    அந்த மாடியறை ஜன்னலின் திரைச்சீலைகள் காற்றில் அசைந்தன. திரைச்சீலைகளின் இடைவெளியில் நுழைந்த கதிரவனின் கதிர்கள் போர்வையால் மூடப்படாத அரவிந்தனின் முகத்தை ஆசையுடன் தீண்டின.

    அவற்றின் ஆசையின் வெம்மை அரவிந்தனைக் கண் விழிக்கச் செய்தது. சடாரென்று போர்வையை விலக்கி எழுந்து சாளரத்தின் திரைகளை விலக்கி இரு ஓரங்களுக்குத் தள்ளினான்.

    எதிர் வீட்டின் முன் நின்றிருந்த ஒரு லாரி கண்ணில் பட்டது. அதிலிருந்த பொருட்களை ஆட்கள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். பூட்டி இருந்த எதிர்வீட்டுக்கு யாரோ புதிதாகக் குடித்தனம் வருகிறார்கள் போலும். சரி. பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று திரும்புகையில், அந்த வீணையை எதிலயும் இடிக்காமே பத்திரமா பாத்து எறக்குங்க என்று ஒரு வீணை பேசியது காதில் விழுந்தது.

    அரவிந்தன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். லாரியிலிருந்து இறக்கிய வீணையை வாங்கிக்கொண்டு வீட்டினுள்ளே செல்லும் அவளது முதுகுப்புறம் தான் தெரிந்தது.

    மற்றொரு பெண் உள்ளிருந்து வெளியே வந்து ஒரு சிறிய பெட்டியைக் (சுருதிப் பெட்டி?) கையில் வாங்கும் போது தற்செயலாக ஜன்னலைப் பார்க்க, அரவிந்தன் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், அவள் கண்களை உடனே தாழ்த்திக் கொண்டு, பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்று விட்டாள்.

    சற்று நேரம் நின்று பார்த்தும் யாரும் வெளியில் வரவில்லை. லாரியுடன் வந்த ஆட்கள் தான் பொருட்களை இறக்கி வீட்டினுள் கொண்டு வைத்தார்கள்.

    கீழே இறங்கி வந்தான்.

    என்னம்மா, எதிர் வீட்டுக்கு யாரோ குடி வந்திருக்காங்க போல

    ஆமா அரவிந்த். மதுரையிலிருந்து அம்மாவும் ரெண்டு பொண்ணுங்களும் வந்திருக்காங்க. அந்தம்மா வந்து பால், காய்கறி எங்கே கிடைக்கும்னு விசாரிச்சுட்டுப் போனாங்க.

    அடுத்தநாள் காலையில் ஜன்னல் திரையை விலக்கினால் எதிர்வீட்டின் வாசல் நீர் தெளிக்கப்பட்டுப் பளிச்சென்று கோலமிடப் பட்டிருந்தது. வாசலில் வரும் கீரைக்காரியிடம் ஒரு நடுத்தர வயதுப் பெண் கீரைவாங்கிக் கொண்டிருந்தாள்.

    மாலை அலுவலகம் விட்டு வந்து வண்டியை வீட்டின் முன் நிறுத்தி இறங்கினான்.

    வீணை இசையுடன் இழைந்து,

    "குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்

    குறையேதும் எனக்கேதடீ...சகி...!"

    என்ற பாடல் காற்றில் மிதந்து வந்தது. சற்று நேரம் கண்களை மூடி ரசித்தான். கூடவே கால் சலங்கை ஒலியும் கேட்டது. யாரோ நடனமாடுகிறார்கள். தன் வீட்டினுள் நுழைந்தான்.

    "பாட்டும் வீணையுமா கேக்கறதுக்கு நல்லா இருக்குன்னு போய்ப் பாத்துட்டு வந்தேன். அந்தப் பொண்ணு என்னமா ஆடறா!

    சாட்சாத் அந்த சரஸ்வதியே வீணை வாசிச்சுப் பாடி, அந்த நடராஜபெருமானே அந்தப் பொண்ணு ரூபத்துல வந்து ஆடறா மாதிரி இருந்தது. வீடே கலாக்ஷேத்திரமா மாறிட்டதோன்னு இருக்கு."

    அடுத்த சில நாட்களிலேயே இந்தச் செய்தி பரவி அந்தப் பகுதியிலுள்ளவர்களின் குழந்தைகள் பாட்டும் பரதமும் கற்றுக் கொள்ள வர, உண்மையிலேயே அது ஒரு கலாக்ஷேத்திரமாகியது.

    ஒரு நாள் மாலை எதிர் வீட்டில் பாட்டு, நடனம் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று குழந்தைகள் ஓவென அலறினார்கள். மின்சாரம் போய்விட்டது போலும்.

    எதிர் வீட்டம்மா வந்து அரவிந்தனின் அம்மாவிடம், உங்க வீட்ல, பக்கத்து வீடுகள்லாம் கரன்ட் இருக்கு. எங்கள் வீட்ல மட்டும் இல்லை. இங்கே யாராவது எலக்ட்ரீசியன் கெடைப்பாங்களா?

    என் மகன்ட்ட கேட்டுச் சொல்றேன், லலிதாம்மா. அரவிந்த்! இங்கே வாப்பா. என்று அழைத்து விசயத்தைச் சொல்ல, இப்ப ஆறு மணிக்கு மேலே ஆச்சு. EB ஆபீஸ்லேருந்து யாரும் வரமாட்டாங்க. தனியார் எலக்ட்ரீசியனைக் கூப்பிடுறேன். என்று நான்கைந்து பேருக்குப் போன் பண்ணினான். யாரும் வரும் நிலையில் இல்லை.

    சரி வாங்க. நானே என்னன்னு பாக்குறேன்.

    மெழுகுவர்த்திகள், அகல்கள் ஏற்றி இருளை விரட்டி இருந்தார்கள். குழந்தைகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அருகில் இரண்டு தேவதைகள்!

    மெய்ன் போர்ட் எங்கே இருக்கு ஆன்டி? டார்ச் இருக்கா?

    ஒரு கைவிளக்கு உதவியுடன் ஆராய்ந்தான்.

    ஃப்யூஸ் போயிருக்கு.

    அதைச் சரி செய்தவுடன் மின் விளக்குகள் எரிந்தன. குழந்தைகள் மகிழ்ச்சியில் ஹே என்று கத்தினார்கள்.

    ரொம்ப நன்றி தம்பி. சின்னக் குழந்தைங்க பயந்துட்டாங்க. எம் பொண்ணுங்களுக்கும் இருட்டுன்னா பயம் தான். இவ கீதா. அவ சுதா. இரட்டைக் குழந்தைங்க. உக்காருங்க தம்பி. காபி குடிப்பீங்களா?

    அவனுக்கு அங்கேயே அமர்ந்து காபி குடித்து அவர்களின் பாட்டையும் நடனத்தையும் ரசிக்க ஆசை தான். ஆனால் அவர்கள் முன் முதல் நாளே அப்படி வழிந்து நிற்கக்கூடாது என்று கெத்தாக, இல்லங்க, ஆன்டி! இன்னொரு நாள் குடிக்கிறேன். இப்போதான் வீட்ல குடிச்சேன். வர்றேன் என்று கிளம்பி விட்டான்.

    வீட்டை அடைந்தும் அவன் மனம் மட்டும் எதிர் வீட்டை விட்டு வர மறுத்தது.

    ‘இப்படியா மக்கு போல நடந்துப்பே! நல்ல சான்ஸை விட்டுட்டியே! காபி சாக்குல இன்னும் கொஞ்ச நேரம் இருந்து அந்த அழகு தேவதைகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே. அந்தக் கானக்குயிலின் இசையையும் அந்த அப்சரஸின் நடனத்தையும் அனுபவித்திருக்கலாமே! என்னமோ போடா மாதவா, நீ குடுத்து வெச்சது அவ்வளவுதான்!’

    அந்தக் கடைசி வரியை மட்டும் அவனையறியாமல் வாய்விட்டுச் சொல்லிவிட்டான் அரவிந்தன்.

    என்ன, அரவிந்த்! எந்த மாதவனுக்கு எது குடுத்து வைக்கலே? என்ற குரல் அவனை நனவுலகுக்கு இழுத்து வந்தது.

    டேய் பப்லு! வா வா! வந்து நேரமாச்சா? ஒரு வேலையா எதிர் வீட்டுக்குப் போயிருந்தேன்...

    அம்மா சொன்னாங்க. நான் வந்து அம்மா கையால ஒரு காப்பி குடிச்சாச்சு. சரி... நீ ஏன் ரெண்டு நாளா ஸ்கூல் பக்கமே வரல? அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.

    இன்னும் ரெண்டு நாள்லே ஆபீஸ்ல ஆடிட் வருது. கொஞ்சம் வேலை அதிகம். அதான் வர முடியலை. சொல்டா. எனிதிங் இம்பார்ட்டென்ட்?

    "ஆமாடா. நான் கலந்துகிட்ட குண்டு எறிதல் போட்டியில

    Enjoying the preview?
    Page 1 of 1