Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanandha Geetham Paaduthey
Aanandha Geetham Paaduthey
Aanandha Geetham Paaduthey
Ebook91 pages35 minutes

Aanandha Geetham Paaduthey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் எழுத்துப் பாதையில் கவிதையும், கதையுமாய் இணைந்து எழுதும் புதுமுகப் படைப்பாளர். கவிதையும், கவிதையோடு இழைந்த கதையும் இவரது பாணி.

கணினித் துறையில் உயர்படிப்பு படித்தவர் கதைக்களத்தோடும் கைகுலுக்குகிறார். இவரது முதல் கதை விருட்ச விதைகள். பெயரைப் போலவே விதைகள் வளர்ந்து விருட்சமாகக் காத்து நிற்கின்றன. இவரது இத்தனை பெருமைக்கும் காரணமாய் தன் குடும்பத்தையும், உறவுகளையும், நட்புகளையும் முன்னிறுத்துகிறார்.

Languageதமிழ்
Release dateDec 16, 2023
ISBN6580142810408
Aanandha Geetham Paaduthey

Read more from Mala Madhavan

Related to Aanandha Geetham Paaduthey

Related ebooks

Reviews for Aanandha Geetham Paaduthey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanandha Geetham Paaduthey - Mala Madhavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆனந்த கீதம் பாடுதே

    Aanandha Geetham Paaduthey

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 1

    பச்சை படர்ந்திருக்க

    பாவிமனம் சோர்ந்திருக்க

    பக்கத்தில் நீயுமில்ல

    பாரிஜாதப் பூவே!

    சீப்பினால் சீவினாற்போல் வரப்பெடுத்த வயல்களினூடே நடந்து கொண்டிருந்தான் அவன். ஆறடிக்குக் குறையாத உயரம். அசாத்தியமான புஜ பலம். எப்போதும் வெள்ளை வேட்டி சட்டை தான். அதில் ஒரு மரியாதை இருந்தது. ஆனால் ஒருத்தி மட்டும் சொல்லிச் செல்வாள். அடிக்கற கருப்புக்கு ஆத்து மணலாட்டம் வெள்ளை வேட்டி என்று. சே! சே! அவளை நினையாதே மனமே!

    தணிகைவேலன் தன் தலையைக் குலுக்கி விட்டுக் கொண்டான். மறக்க முடியுமா என்னை என அவள் உதடு சுழித்துச் சவால் விட்டாள். விலகி விடு பெண்ணே என விலக்கி மனம் துடைத்தான் என்னவோ அவள் நேரில் நிற்கின்றாற் போல்.

    என்னப்பா தணிகைய்யா! இன்னிக்கு வெரசாவே வந்துட்ட போல இருக்கு? ஊர்ப் பெரியவர் ஒருவர் வேப்பங்குச்சியில் பல் துலக்கியபடி வரப்பில் எதிர்ப்பட்டார்.

    ஆமாங்க. உரம் வைக்க ஆட்கள் வராங்க. அதான் கல்லூரிக்குப் போறதுக்கு முன்னாடி அப்பாவுக்கு உதவியா வந்துட்டுப் போலாமுன்னு...

    ஏன்... உந்தம்பி என்ன செய்யறாரு? ஊருலயிருந்து வாரா வாரம் வர்றாருல்ல. வந்து ஒத்தாசை செய்யறது? துரைக்கு நிலத்துல கால்படாதாமா?

    அவன் பெரிய படிப்பு படிச்சவன் மாமா. அதுக்கேத்த பெருமை இருக்கட்டுமே. தவிர சென்னையில் வேலை பார்க்குறான். வாரா வாரம் அம்மாவுக்காக ஓடியாறான். செல்லப் பய! சிரித்தான்.

    ஏன்ப்பு? நீயும் தான் விவசாயக் கல்லூரியில் படிச்சு அங்கனவே டீச்சரா இருக்க. உம் தம்பி வடிவேலன் இன்ஜினியருன்னா கொம்பா முளைச்சிருக்கு. அவனையும் இறங்குங்கப்பா நிலத்துல. நம்ம வீட்டு விவசாயத்தை நாம பார்க்காம யாரு பார்க்கறது? என்ன நான் சொல்றது?

    சரி தான் மாமா. நீங்க சொல்றது ரொம்பவே சரி தான். நான் கிளம்பறேன். அப்புறம் தொடர்சங்கிலி போல வேலை தாமதமாகும். விடைபெற்று வரப்போடு நகர்ந்தவனைத் திரும்ப வந்து நினைவில் தழுவிக் கொண்டாள் அவள்.

    ஏ! கருப்பசாமி. கொஞ்சம் தொட்டுக்கவா? கண்ணுக்கு மை வேணும்.!

    அடி... அத்த மகளே... அந்தளவுக்கா நான் கறுப்பா இருக்கேன்.

    பின்ன... ராத்திரிப் பொழுதில் உன்ன நிக்க வைச்சா... இருட்டுக்கும் உனக்கும் வித்தியாசமே இருக்காது தெரியும்ல அவள் வாயடித்தாள்.

    இப்படிப் பேசற இந்த வாயை. தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டு நடந்தாலும் மேற்கொண்டு சொல்ல முடிய வில்லை அவனால்.

    அத்தனையும் கனவாய் கானல் நீராய்... தேன்மொழி எங்கே போய் விட்டாய்?

    தணிகையின் குரல் காதில் விழுந்ததோ என்னமோ அதிகாலைத் தூக்கத்தில் ஆழ அமிழ்ந்து இருந்தவள் கொஞ்சம் போல் அசைந்து புரண்டு படுத்துக் கொண்டாள்.

    சென்னையின் பிரதான இடமாம் அடையாரில் வொர்க்கிங் வுமன் ஹாஸ்டலில் இருந்தாள் தேன்மொழி. கூட இருவர் அறையைப் பகிர்ந்திருந்தனர். ஹாஸ்டல் என்ற பதத்துக்கு சற்றும் பொருந்தாத ஹை- டெக் அறை. சுவரில் டி.வி, அறையில் ஏ.சி., தனித்தனி பெட். ஓரத்தில் வாட்டர் கூலர். சாப்பாடு ஹால் மட்டும் பொது.

    அதுவும் அவரவர் வசதிக்கு டிபன் கிடைக்கும். மணி அடித்தால் சோறு என்ற நியதி கிடையாது. அது ஒரு அல்ட்ரா மாடர்ன் ஹாஸ்டல். அறை வரைக்கும் விசிட்டர்ஸ் அனுமதி இல்லை. அதற்கென்று வெளியே தனி ஹால் உண்டு. அதில் இருக்கைகளும் உண்டு. அதைத் தவிரச் சுற்றி மரங்கள் அடியில் சாய்வான பெஞ்சுகளும் உண்டு. இத்தனை வசதிக்கும் காசு கொஞ்சம் அதிகம் தான். அதனால் தான் தனியே தங்கும் அறை இருந்தும் மூன்று பேர் தங்கும் அறையில் இருந்தாள் தேன்மொழி. அங்கு இருக்கும் அனைவருமே வேலை பார்ப்பவர்கள் என்பதால் நல்ல புரிதல் உண்டு அவர்களிடையே.

    ஹேய் தேன்ஸ்... எந்திரிக்கலையா? சீக்கிரம் போகணும்ன்னு எழுப்பச் சொன்னியேப்பா? அறைத் தோழி வீணா எழுப்பினாள். இன்னொருவள் சுபாங்கி... அவள் முன்பே எழுந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து இருந்தாள்.

    ம்ம்ம்... கொஞ்சம் தூங்கிக்கறேனே வீணா! ப்ளீஸ்! திரும்பிப் புரண்டவளை சுபாங்கியின் கையில் இருந்த வளையல் பறந்து அடித்தது. சூர்ய நமஸ்காரம் செய்தவாறே இருந்தவள் தேன்மொழியை எழுப்பத் தன் கையில் இருந்த வளையலைக் கழட்டிக் குறிபார்த்து வீசி இருந்தாள்.

    எவ அவ? கத்தியபடியே எழுந்தாள் தேன்மொழி.

    தொட்டால் சிவக்கும் பால்போன்ற சருமம். கொஞ்சும் குழந்தை முகம். சிரிப்பில் உலகளக்கும் கன்னக் குழியழகி. தன் உடம்பை முறித்துக் கை கால்களை நீட்டி சமன்படுத்தியவாறு எழுந்து அமர்ந்து தன் உள்ளங்கையில் கண்விழித்து முருகா சரணம்! என்றவாறு தோழிகளைப் பார்த்தாள் தேன்மொழி.

    வாட்ஸப்!

    நத்திங்யா! எழுந்து சுறுசுறுப்பாக் கிளம்பு. டைம் அல்ரெடி செவன் ஆச்சு!

    ஹான்... செவனா? ஹய்யோ... செவன் தர்ட்டிக்கு ஆபீஸ்ல இருக்கணும்ன்னு சொன்னேன்ல!

    "சொன்ன! ஆனா எந்திருச்சியா? அம்மா எந்திரு!

    Enjoying the preview?
    Page 1 of 1