Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natpirkku Veettrirukkai Yathenin
Natpirkku Veettrirukkai Yathenin
Natpirkku Veettrirukkai Yathenin
Ebook71 pages27 minutes

Natpirkku Veettrirukkai Yathenin

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் எவ்வித வேறுபாடும் இல்லாது இணைந்திருப்பதே இல்லாமல் வேறு யாது? வேறில்லை தானே!

சோழ இளவல் இராஜாதித்தனுக்கும் மலை நாட்டு வெள்ளையங்குமரனுக்குமான நட்பு எத்தகையது.

அவர் தம் நட்பெனும் ஆழத்தை அறிய நாவலுக்குள் போகலாம் வாருங்கள்!

இக்குறுநாவல் சங்கப்பலகையும் லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா ராகவனும் இணைந்து நடத்திய போட்டியில் பரிசு பெற்றது.

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580142810412
Natpirkku Veettrirukkai Yathenin

Read more from Mala Madhavan

Related to Natpirkku Veettrirukkai Yathenin

Related ebooks

Reviews for Natpirkku Veettrirukkai Yathenin

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natpirkku Veettrirukkai Yathenin - Mala Madhavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

    Natpirkku Veettrirukkai Yathenin

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 1

    வாணப் பிரவேசம்

    தாழைமேட்டில்...

    "ஓம் ஐம் ப்ரம்ம ஜேஷ்டாய நம:

    ஓம் ஐம் ஸ்வர்ண ஜேஷ்டாய நம:"

    ஓம்! ஐம்! ஹ்ரீம்! என்ற மந்திர உச்சாடனங்களால் ஜேஷ்டாதேவி என்ற நிசும்பசூதனிக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேள்வியால் அவ்வூரே தகதகத்துக் கொண்டிருந்தது.

    சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடியவள் நிசும்பசூதனி. ஓங்கி உயர்ந்தவள் தன் கரங்களில் பல படைக்கலன்களைக் கொண்டுள்ளார். விரிகுழல் தீச்சுடராய், அசுர சம்ஹாரியாய், சினமிக்க திருமுகமாய் நின்றிருப்பவள்.

    அவள் வலது காதைப் பாருங்கள்... பிரேத குண்டலம், இடது காதிலோ பெரிய குழை, உடலில் ஒரு சதை இல்லை. நீண்டு தொங்கும் மார்பகங்களும் அவற்றின் கச்சாகப் பாம்பும். உடலெங்கும் ஆபரணமாய் மண்டை ஓடுகள், அவளின் இடக்கரம் தன் காலின் கீழ் கிடக்கும் அசுரரைக் காட்ட வலது பாதம் துண்டிக்கப்பட்ட ஒரு தலையின்மீது ஊன்றப்பட்ட நிலையில் உள்ளது. இவள் சத்ரு சம்ஹாரி. வெற்றிக்கு அதிபதி.

    அந்தணர்களாகிய வேத விற்பன்னர்கள் அங்கு மாமன்னர் மகாபலம் பொருந்திய சக்கரவர்த்தி பராந்தகச் சோழரின் திருப்பார்வை பட்டு மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

    நாளொன்று நகர்ந்தாலும் நம் வேள்வி தடைபடாது நகர்வதற்கு மேன்மை தாங்கிய நம் சக்கரவர்த்திக்குத் தான் நாம் பெரு நன்றி செலுத்த வேண்டும்! என்றார் சிவபாதப் பட்டர்.

    ஆம்! சக்கரவர்த்தியின் கருணையே கருணை! நமது மாசற்ற வேள்வியின் பூர்ணாஹுதிக்கு அவரை அழைக்கலாமா? அழைத்தால் வருகை தருவாரா? கேள்வி எழுப்பியவர் மூர்த்தி சிறிதானவர் தான்... ஆனால் கீர்த்திமான். சக்கர பண்டிதர் என்பது பெயர்.

    உமது கீர்த்தி சக்கரவர்த்தியின் அரண்மனை வரை நுழைந்து விட்டது ஓய்! பிறகென்ன? நீர் அழைக்கிறீர் என்றால் மன்னரே வர மாட்டாரா என்ன? கூட்டத்தில் ஒரு குரல் எழும்பியது.

    அபசாரம்! அபசாரம்! அவர் சக்கரவர்த்தி. நான் வெறும் சக்கரம் தான். இங்குமங்கும் சுற்றும் சக்கரம். வீணாய் வெறும் பொழுதாய் வெற்றிலையாய் ஊண் கொண்ட உயிரிடத்து ஓரிழைப் பாசம் கொண்டு ஒருசாண் வயிற்றிற்காய் உலா வருபவன். அடியேனைப் போய் அவருடன்... வினயமாய்க் கைகுவித்துக் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார் சக்கர பண்டிதர்.

    உண்மையில் அப்பூஜைக்கு, அந்த அற்புத வேள்விக்கு ஆதாரச் சக்கரம் அவரே. சக்கரமாய்ச் சுழன்று வேள்விக்கான ஸ்ருதியாய் இருப்பவர். ஓரிடத்தும் பலவிடத்தும் உள்ள விஷயஜீவிகளை ஒன்றிணைக்கும் சக்கரம் அவர். அவரவர் பார்வையை அவரவர் வைத்துக் கொண்டு என்ன பயன்? அப்பார்வை பிறருக்குப் பயன்பட வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்.

    அதெல்லாம் இருக்கட்டும் பண்டிதரே! நாம் செய்யும் இத்தகைய அற்புதமான வேள்விக்கு சக்கரவர்த்தி வருகை தராவிட்டாலும் இளவல் கோதண்டராமர் வருகை புரிவாரா?

    ஆஹா... வந்தால் நலமாய் இருக்கும். ஆனாலும் உள்ளாலையிலிருந்து அரச குடும்பம் இல்லாது புறம்படியில் இருந்து வீரர் குழாமாவது வருகை புரியுமா எனப் பாரும்! கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.

    இது நம் தேவிக்கான வேள்வி. இது சோழர் குலத்துக்கான வேள்வி. இது நம் அனைவர் நலத்துக்கான வேள்வி. இதில் பனங்காட்டுச் சலசலப்பு வேண்டாம். இனி திக்கெட்டும் புலிக்கொடியாய் திசையெங்கும் வில்லொலியாய் நிற்கட்டும் வெற்றியெங்கும்! நீங்கட்டும் தோல்வி முகம்! ஜெய் விஜயீ பவ! சிவபாதப் பட்டர் உற்சாகக் குரலில் சப்தமிட்டார்.

    அக்குரலைப் பின் தொடர்ந்தன எதிர்நிற்போரின் குரல்கள். சின்னஞ்சிறு ஓடை ஆற்றில் கலந்து அது நதியாகிக் கடலில் சேர்ந்து மகா சமுத்திரம் ஆவதைப் போல ஒரு சிற்றொலி பல்கிப் பரவி பல ஒலிகளைத் துணை சேர்த்து பெரும்

    Enjoying the preview?
    Page 1 of 1