Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalam Naalam Thirunaalam
Naalam Naalam Thirunaalam
Naalam Naalam Thirunaalam
Ebook121 pages45 minutes

Naalam Naalam Thirunaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாளாம் நாளாம் திருநாளாம்! ஒவ்வொரு நாளும் திருநாள் தான் என்றாலும் வருடந்தோறும் வரும் பண்டிகைத் திருநாள் நம்மில் பெருமகிழ்வைப் பூக்கச் செய்பவை. அவற்றையே தலைப்பாக வைத்து சங்கப்பலகை என்னும் குழுவில் கதை படைக்கச் சொல்ல கோலாகலம் கொண்டாட்டம் தான்! இவை அனைத்தும் ஆடிப்பெருக்கு முதல் தைப்பூசம் வரை தொகுக்கப் பட்ட பன்னிரெண்டு கதைகள்.

மிலாடிநபி, கிறிஸ்துமஸ்... ஏன் சுதந்திர தினத்துக்கும் கதை உண்டு. பன்னிரெண்டில் ஆடிப்பெருக்குக்கு எழுதிய நெஞ்சப் புனல் என்ற கதையும் மிலாடி நபிக்கு எழுதிய இது எங்கள் புனிதப் பயணம் என்ற கதையும் பொங்கலுக்கு எழுதிய கனுப்பிடி காதல் என்ற கதையும் பணப் பரிசைப் பெற்றன என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனது கதைகளைத் தொடர்ந்து வெளியிடும் புஸ்தகா நிறுவனத்துக்கு நன்றிகள் பல.

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580142809630
Naalam Naalam Thirunaalam

Read more from Mala Madhavan

Related to Naalam Naalam Thirunaalam

Related ebooks

Reviews for Naalam Naalam Thirunaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalam Naalam Thirunaalam - Mala Madhavan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நாளாம் நாளாம் திருநாளாம்

    (பண்டிகைக் காலச் சிறுகதைகள்)

    Naalam Naalam Thirunaalam

    (Pandigai Kaala Sirukathaigal)

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நெஞ்சப்புனல் – (ஆடிப்பெருக்கு)

    2. சும்மாவா கிடைத்தது சுதந்திரம் – (சுதந்திர தினம்)

    3. சாட்சி பூதம் – (கோகுலாஷ்டமி)

    4. யௌவனம் தொலைதல் – (பிள்ளையார் சதுர்த்தி)

    5. ஜய ஜய ஹே! – (நவராத்திரி)

    6. இது எங்கள் புனிதப் பயணம் – (மிலாடி நபி)

    7. ஹேப்பி தீபாவளி! – (தீபாவளி)

    8. தீபச் சுடரொளியே! – (திருக்கார்த்திகை)

    9. புதிய ஏற்பாடு – (கிறிஸ்துமஸ்)

    10. வானமே எல்லை – (ஆங்கிலப் புத்தாண்டு)

    11. கனுப்பிடி காதல் – (பொங்கல்)

    12. யாத்திரைப் பொழுது – (தைப்பூசம்)

    1. நெஞ்சப்புனல் – (ஆடிப்பெருக்கு)

    மருதி! நீ என் மந்தியல்ல! நான் அறிவேன்! படுத்திருந்தவனின் பிதற்றல் அதிகரித்தது.

    அவள் பெயரை அறிந்த நாள் முதல் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறான். மாறாத ஒலிக்குறிப்பு அது. பழகிவிட்டது மருதிக்கு.

    சற்றே குனிந்து அவன் தலையைத் தூக்கித் தன் மடியில் சாய்த்துக்கொண்டு சொன்னாள்.

    நீங்கள் அறிந்தது சரியே! இந்தாருங்கள்! வாய் திறவுங்கள்!

    அடிபட்டு படுத்திருக்கும் நிலையில் மெல்லத் தேறி வரும் அந்த ஆணழகன் பேசும் சொற்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், குப்பியில் இருந்த கஷாயத்தை அவன் வாயில் ஊற்றினாள் மருதி.

    மெல்லச் செருகின அவன் கண்கள்.

    சலசலவென்று ஓடும் காவிரி இவன்மேல் மோகம் கொண்டாளோ? பார்க்கும் கண்கள் பரவசப்பட இவனின் திண்ணென்ற தோளும், திடமான மார்பும், கோடி சூர்யபிரகாசம் காணும் கருவிழிகளும் போதாதா என்ன? பற்றாக்குறைக்கு ஆடற்வல்லானாம்! அழகுறை நீச்சல் நாயகனாம்! வேறென்ன வேண்டும். நீச்சல் தெரிந்தவனையுமா காவிரி கைப்பற்றிக் கொண்டாள். ம்! அத்தனை காதல்கொண்டு விட்டாளோ? காதலின் வேகம் கட்டி அணைத்தபின் கரை சேர்த்ததோ?

    ம்ஹும்! மந்தியும், மருதியும் போதாது போலும். காவிரியும் இவன் ஸ்பரிசத்தைப் பெற போட்டியிட்டாள் போலும்.

    அயர்ந்த நல்லுறக்கத்தின் பின் சற்றே தெளிந்த அவன் வதனத்தில் சந்தோஷ ரேகைகள் காணப்பட,

    மருதிக்குத் தன்னைக் கண்டே நாணம் வந்தது.

    ஒருவேளை அவன் மனம் என் மீது திரும்புகிறதோ? நான் பாக்கியசாலி என்று நினைத்தவள் அவன் அங்கு வந்து சேர்ந்ததில் இருந்து கேட்கும் கதையை அன்றும் கேட்க ஆயத்தமாகி, அவளே கேள்வியைக் கேட்டு வைத்தாள்.

    அன்று அவ்வேளை நீரின் சுழலுக்கு நீங்கள் ஆடினீர்களா? இல்லை நீர் உங்கள் சுழற்சிக்குத் தக்கவாறு சுழன்றதா? கேட்ட அவளின் கை தன்போக்கில் அவன் கால்களுக்கு களிம்பைத் தடவிக்கொண்டிருந்தது.

    கழலணிந்த கால்கள் அல்லவா? ஆற்றில் முட்டி மோதி பயணித்ததில் சிதறிய அவற்றின் வெட்டுத்தடம் அவன் கால்களில் ஆழமாக இறங்கி இருந்தது.

    ஐயகோ! முதன்முதலில் இவனைப் பார்க்கும்போது அந்த ரணத்தை குடைவரை வண்டாய் குடைந்துகொண்டிருந்த புழுக்களும், அவற்றைத் தின்ன வந்த காக்கைக் கூட்டமும்.

    நினைத்ததும் மருதியின் கண்களில் கண்ணீர் பூத்தது.

    காதல் கவர்ச்சிமிகு கட்டழகில் மட்டுமா வரும்? காயத்தில் காயம் கண்டிடினும் வரும். மருதியின் மனதுள் காதல்பூ பூத்தது.

    ஆ! வலி! பெரும் வலி! என்ற குரலில் நினைவின் இழையறுந்து...

    மன்னியுங்கள், காயத்தின் தடத்தில் அழுத்திவிட்டேனோ?

    இல்லையில்லை, என் வினைப்பயன். நீயுமில்லையெனில் என் உயிர் என்றோ விடைபெற்றிருக்கும் மருதி!

    இல்லையில்லை இந்த மருதி இல்லையென்றால் ஒரு மல்லி. யாரேனும் உங்களைக் காப்பாற்றி இருப்பார்கள். சொல்லுங்கள், நீராட நீர் ஆடிற்றா? இல்லை நீராட நீர் ஆடினீரா?

    வடிவத்தில் மட்டுமல்ல வார்த்தை கோப்பதிலும் நீ அழகிதான். ஒப்புக்கொள்கிறேன். நானாடத்தான் நீர் ஆடிற்று. பின் நீர் ஆட நான் அதன்மேல் ஆடத் துவங்கி என் உயிர் மூச்சின் விடை உனக்குத் தெரிந்ததால் நான் இன்று உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்! வலிந்து சிரித்தான்.

    உண்மை. ஆனால் உங்களைத் தேடி யாரும் இதுநாள் வரை வரவில்லையே.

    வருவாள்! நிச்சயம் வருவாள்!

    யார்?

    என் உயிர்!

    நீங்கள் என்னுயிர் ஆயிற்றே. ஆ... அதாகப்பட்டது... நான் அளித்த உயிரெனக் கூறுவீர்களே! பேச்சை மாற்றினாள்.

    ஒரு கூட்டில் ஓருயிர்தான் மருதி. ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டான்.

    வீட்டில் எப்போதும் உதவிக்கு இருக்கும் வயதான பாட்டியிடம் அவனைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டுப் படலைச் சார்த்தியபடி குடத்துடன் வெளிவந்தாள்.

    கலகலவென்று சிரிப்புச் சத்தத்துடன் வந்துகொண்டிருந்த மருதியின் தோழிகள் குடத்துடன் அவளைச் சூழ்ந்துகொண்டனர். மருதியும், தோழிகளும் தண்ணீர் சேந்தி வரக் கிளம்பினர். அங்கு பேச்சுதான் தண்ணீர் வெள்ளமெனப் பெருகிற்று.

    எப்படியடி இருக்கிறார் உன்னவர்?

    ம்... இருக்கிறார். மருதி நீ என் மந்தியல்ல என்று புலம்புகிறார். இவரது மந்தியை நான் எங்கு போய்த் தேட?

    அதானே! ஊர் ஊராய்ப் போய் மந்தி யாரம்மா மந்தி என ஏலம் போட்டுவிட்டு வருகிறாயா மருதி? கேட்ட தோழியுடன் சேர்ந்து மற்றவரும் கொல்லென்று சிரித்தனர்.

    எங்கே தொலைத்தாராம் அம்மந்தியை?

    ஆடிப்பெருக்கு நேரமாம். காவிரியில் புதுப்புனலாடும் போது, நீரில் ஆடும் நடனப்போட்டி இருந்ததாம். இவருடன் ஆடியவள் பெயரும் காவிரியாம். இருவரின் ஆட்டத்தைப் பார்த்து மன்னரைவிட காவிரியாறு பொங்கி ஆடியவர் இருவரையும் ஆசையோடு அணைத்துக்கொண்டதில் இவர் எங்கெங்கோ ஆற்றோடு அலைக்கழிக்கப்பட்டு நம் கண்ணில் அகப்படவேண்டும் என்று இறைவன் விகுத்த விதியில் காவிரித்தாய் இவரைக் கரை தள்ளிவிட்டாள்.

    அப்போ இவரோடு ஆடிய அந்தப் பெண் காவிரி?

    ம்ச்ச்! தெரியவில்லையடி. போயிருக்கலாம். இல்லை இவரை மாதிரி எங்கேனும்...!

    மருதி கவலையோடு சொன்னாள்.

    உன் கையில் கிடைத்தவன் கட்டழகன். காதல் வந்தது உனக்கு. ஒருவேளை அந்தப் பெண் காவிரி கிடைத்திருந்தால்...? குறும்பாய்த் தோழி கொக்கியிட்டாள்.

    என்ன... உன் இடத்திற்கு அவள் வந்திருப்பாள் உற்ற தோழியாய்! என்றாள் மருதி.

    "கேட்ட கேள்விக்கு என் மடியிலேயே கை வைக்கிறாயே. பிழைத்துக் கொள்வாயடி மருதி! கூட ஆடிய நடனப் பெண் காவிரி,

    Enjoying the preview?
    Page 1 of 1