Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivamalar
Sivamalar
Sivamalar
Ebook402 pages2 hours

Sivamalar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு கிராமத்தில் உள்ள சிவன் கோவில் கேட்பாரற்று இருக்கிறது. ஆனால் அச்சிவனோ ஏகப்பட்ட நிலங்களுக்குச் சொந்தக்காரர். சிவனின் சொத்தை அனுபவிப்போர் வாழ்வு எவ்வாறு இருக்கும்? சிவனை நம்பியோர் வாழ்வு எவ்வாறு இருக்கும்? சிவன் மீண்டும் தன் சொத்தைப் பெற்றாரா? யார் மூலம்? ஆன்மீகமும், அமானுஷ்யமும் கலந்து மிரட்டும் விதமாய் விடை சொல்ல வருகிறாள் சிவமலர்! வாங்க! படிக்கலாம்!

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580142808199
Sivamalar

Read more from Mala Madhavan

Related to Sivamalar

Related ebooks

Related categories

Reviews for Sivamalar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivamalar - Mala Madhavan

    https://www.pustaka.co.in

    சிவமலர்

    Sivamalar

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    இந்த நாவலை எழுத என்னுடன் இருந்து எழுத வைத்தது இறை பேராற்றல். இறையே சிவமே!

    இந்த நாவலுக்காகவே தேவாரம், திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் எனப் படித்தேன். சித்தர் பாடல்கள் போன்றே குறிப்பான பாடல்கள் சில எழுதினேன். ஒவ்வொரு அத்தியாயம் எழுதும் போதும் கிடைத்த அதிர்வலைகள் உன்னுள் நானிருக்க உனக்கென்ன எழுத்தில் குறை என சிவமந்திரமாய் ஒலித்தது.

    இது ஒரு ரிலே தொடர் என்றும் எழுதுபவர் ஐவர் என்றும், அந்த ஐவரும் பெண்கள் என்றும், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தது கூடக் கிடையாது என்றும் நீங்கள் அறியத் தருகிறேன்.

    மிகச் சரியாக ஒரு மண்டலத்தில் முடித்த கதையிது. தானே தன் பாத்திரங்களை உண்டாக்கிக் கொண்டது சிவமலர்.

    சிவன் சொத்து குல நாசம்! என்பதே எடுத்துக் கொண்ட கரு.

    அது இங்கு கதை மாந்தர்கள் மூலம் தெளிவாக விளக்கப் படுகிறது. இதில் வரும் ஆஹாஹா பாட்டின் பின் அனைவரும் ஆஹாஹா என்று சொல்வீர்கள் என்பது நிச்சயம். அதே போல் தும்பைப்பூ பாடலும் என் அம்மா ஸ்ரீமதி. வசந்தா ரெங்கநாதன் தன் பங்காய் தந்து உதவினார்கள். பாடலும் கதையோடு நன்றாகப் பொருத்திப் போனது. அவருக்கு என் நன்றி.

    என்னுடன் இக்கதை எழுதப் பயணித்த மதுரா, சாய்ரேணு, விஜி சம்பத் மற்றும் செல்லம் ஜரீனா நால்வருக்கும் நன்றி.

    எங்கள் அனைவரின் பெரும் பலமாக இருக்கும் எழுத்தாளர் G.A.பிரபா அவர்களுக்கு நன்றி.

    இக்கதையை முதலில் வெளியிட்ட சங்கப்பலகை முகநூல் குழுவுக்கு நன்றி.

    படித்து ஆஹாஹா எனப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி

    என்றும் அன்புடன்,

    மாலா மாதவன்

    C:\Users\INTEL\Downloads\WhatsApp Image 2022-02-23 at 3.27.58 PM.jpeg
    எழுத்தாளர் G.A.பிரபா வழங்கும் தங்கமலர்களின் அறிமுகம்.

    சங்கப் பலகையில் ரிலே தொடர் ஆரம்பித்தபோது உருவான ஐவர் குழு. இதுவரை மூன்று தொடர்களை வித்தியாசமான கதை அம்சத்துடன், சிறப்பான கருத்துகளுடன், அற்புதமாக எழுதியுள்ளார்கள். அதைவிட மகிழ்ச்சியான விஷயம், இவர்கள் நடுவில் நிலவும், அற்புதமான ஒற்றுமை. அன்னியோன்யம்.

    எந்த வித ஈகோவும் இல்லாமல் சிறப்பாக கதையைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு வாட்சப் குழு ஆரம்பித்து, அருமையாக கதையை ஆலோசித்து எழுதினார்கள்.

    அவர்களின் வித்தியாசமான முயற்சி சிவமலர். ஆன்மீகமும், அமானுஷ்யமும் கலந்து, மிரட்டும் சம்பவங்களுடன், படங்களுடன் முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் எழுதி அசத்தி விட்டார்கள். பலரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற சிவமலர் படிக்கும்போது நம்மை நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும்.

    ரிலே தொடரின் வெற்றிக்கு அடிவாரமாக இருப்பது இந்த ஐவரின் ஒற்றுமையும், கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு எழுதியதும்தான். அவர்களுக்கு என் அன்பான நன்றிகளும், வாழ்த்துகளும். இது மேலும் மேலும் தொடர வேண்டும் என்பதே என் ஆசை.

    சங்கப் பலகையை ஜொலிக்க வைக்கும் அவர்களின் திறமைகளைப் பற்றி இதோ அவர்களின் வார்த்தைகளில்.

    மாலா மாதவன்:

    தேவகோட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் திருமணமாகிச் சென்னையில் வசிக்கிறார். படிப்பு: MCA. சில காலம் கணினித்துறையில் பணி செய்து தற்போது இல்லத்தரசி. தமிழார்வம் உண்டு. கவிதைகள், கதைகள் என எழுதி வருகிறார். ஆண்டாளைப் பற்றி வெண்பா வடிவில் இவர் கொண்டு வந்த நூல் பாவை. ஸ்ரீமான் சந்தக்கவி ராமசாமி அவர்களின் உரையுடன் வந்துள்ளது.

    பைந்தமிழ்ச்சோலை என்ற குழுவில் ஐயா பாவலர் மா. வரதராசன் கீழ் பாடல் பயின்று பைந்தமிழ்பாமணி என்ற பட்டமும் வாங்கி உள்ளார். முதல் சிறுகதையான விருட்ச விதைகள் தினமலர் வாரமலரில் வெளி வந்தது.

    இயற்கை என்னும் கவிதை ராணி இதழில் வெளி வந்துள்ளது.

    தவிர சில சிறுகதைகள் இணைய மின்னிதழ்களில் வெளி வந்துள்ளன.

    ஆலம்பாடி காளி என்ற பாடல் யூ-டியூபில் வெளிவந்து இருக்கிறது.

    பேட்சிடேர்ம் டேல்ஸ் மூலமாக ஆதித்யா ஒன்றாம் வகுப்பு, பாதாளக் கரண்டி என்ற இரு சிறுகதைத் தொகுப்புப் புத்தகங்களும் புஸ்தகா மூலமாக இணையுமோ இருதயம், முற்றத்து முல்லை, ஒத்தப்பனை, புத்தன் ஒரு கொலை செய்தான், மாயம் செய்தாயோ மாயவா என்ற கதைகளும், மார்கழிச் சீராட்டு என்ற கவிதை நூலும் வந்துள்ளன.

    தன்னுடைய எழுத்துலக வெற்றிக்குக் காரணமாகத் தன் குடும்பத்தினரை மகிழ்வோடு குறிப்பிடுகிறார்.

    ***

    செல்லம் ஜெரினா:

    சீர்மிகு சீர்காழியில் பிறந்து சிங்காரச் சென்னையில் வளர்ந்து கவின் மிகு கோவையில் வாழ்க்கைப்பட்டு சுந்தரத் தெலுங்கு பேசும் ஆந்திரத் தலைநகரில் வெள்ளிவிழாக் காலம் வாழ்ந்து மீண்டும் பேக் டூ பெவிலியன் தமிழகம். 2008 ல் தினமலர் வாரமலரின் சிறுகதைப்போட்டியில் என் முதல் கதையே பரிசு பெற அப்போது துவங்கியது எழுத்தின் ஓட்டம். பல போட்டிகளில் வென்றாலும் கலைமகளில் அமரர் ராஜரத்னம் குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றது என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பேன். பரவலாக எல்லா வார மாத இதழ்களிவும் சிறுகதைகளாகவே எழுதி சதமடித்த சமயம்... சங்கப்பலகை முகநூல் குழுமம் நாவல் போட்டி வைக்க அதிலும் பரிசு பெற்றேன். சிறந்த மேடையாக அமைந்தது அது.

    புதிய முயற்சியாக ஐவர் குழுவின் படைப்பாக ரிலேத் தொடர் வந்தது. புது அனுபவமாய் கனிந்தது. என் நாவல்கள் புஸ்தகா.காமிலும் இ- புக்ஸ் ஆகவும் வந்துள்ளன. என்னுடைய சிறுகதைகள் சில ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகமாகவும் வந்துள்ளன.

    ***

    விஜி சம்பத்:

    முதுகலைப் பட்டதாரி. சேலத்தில் வசிக்கும் இவருக்கு எழுத்தார்வம் அதிகம். பல சிறுகதைகள், குறுந்தொடர், தமிழ் வார மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. தினமணி கதிர், தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். தினத்தந்தியில் சில கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. அன்பின் வழியது உயிர்நிலை என்ற முழுநாவல் அமேசான் வெளியீடாக வந்துள்ளது. ஆறுபடை வீடு முருகன் மேல் எழுதிய ஆறு பாடல்கள் குறுந்தகடாக வெளி வந்துள்ளது. பாபாவைப் பற்றி எழுதிய கவிதைகள் நூறைத் தாண்டி இன்னும் ஒரு வாட்சாப் இலக்கியக் குழுவில் வந்து கொண்டிருக்கிறது.

    இவருடைய சிறுகதைகள், நாவல்கள் தொகுப்பாக புஸ்தகா.காமில் ஈ புத்தகமாக வெளி வந்துள்ளது. இருநூறு பேர் கொண்ட ஒரு பிரபல வாட்சாப் குழுவின் அட்மினாக உள்ள இவரின் சொற்கள் அனைவரையும் வழி நடத்திச் சென்றுள்ளது.

    புதிய புதிய கருத்துக்களுடன் பல சிறுகதைகள் எழுதி பரிசுகள் பெற்றுள்ள இவர், தெய்வீகப் பாடல்கள் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். அவைகள் குறுந்தகடுகளாகவும் வந்துள்ளன.

    ***

    சாய்ரேணு:

    தமிழ் பிறந்த பொதிகையின் மடியில் தவழும் தென்காசி என் ஊர். பள்ளிப் படிப்பெல்லாம் தென்காசியில்தான். இளைய வயதிலேயே தமிழில் ஈடுபாடு வந்தது. மாதவன் கருணையால் மன்னுபுகழ் மகாபாரதம் ஏழுவயதிலிருந்து தோன்றாத் துணையானது. கவிதைகள் எழுதக் கைவந்தது. அவைகளில் சில பத்திரிகைகளில் வந்துள்ளன. என் தாய் தந்தையர் கவிதைகளெழுதவும் மேடைப் பேச்சுகளிலும் மிகுந்த ஊக்கமளித்தார்கள். பள்ளிப் பருவத்தில் நிறைய பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.

    பொறியியல் துறையில் பட்டம் பெற்றேன், ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. உபநிடதம், புராணம், இதிகாசங்கள், திருமுறை, திவ்வியப் பிரபந்தம், திருத்தலப் பயணங்கள் இவற்றில் ஆர்வம் அதிகம். பண்டைய கால ஆய்வுகள், இலக்கியங்கள் பற்றிக் கற்பதில் மிகுந்த ஆவல்.

    நான் ஆன்மீகம் மற்றும் துப்பறியும் கதைகள் என்ற இரு துறைகளிலும் எழுதுகிறேன். இவ்விரண்டுமே சத்தியத்தை அறியும் முயற்சிகளன்றோ!

    நான் சத்தியத்தை உபாசிக்கிறேன். சத்தியமே இறைவன் என்று நம்புகிறேன். எல்லோருக்குள்ளும் அந்த இறைசத்தியம் சந்நிதி கொண்டிருக்கிறது. அந்தச் சத்தியத்தை நாம் உணரும் போதெல்லாம் ஆனந்தம் அடைகிறோம். கற்பனைக் கதை சொல்லும் கருத்து உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தால், அவற்றைப் படிக்கையில் நம்முள் இருக்கும் இறைசத்தியத்தை ஒரு நிமிடம் உணருகிறோம், அதனாலேயே ஆனந்தம் அடைகிறோம் என்று நினைக்கிறேன். இதனாலேயே கதைகள் இந்த உலகம் முழுவதும் விரும்பப்படுகின்றன என்பது என் நம்பிக்கை.

    என் மை - உண்மை என்று முழங்கும் எழுத்தாளராக இருக்கவே விரும்புகிறேன். ஆன்மீகமும் க்ரைம் கதைகளும் மாயாஜாலக் கதைகளும் என் எழுத்தில் முரண்பாடின்றிச் சங்கமிக்கக் காரணம் கண்ணியமான கதைகள் மூலம் அறிவுசால் கருத்துகளையும், தர்ம நெறிகளையும் பிரகாசப்படுத்த வேண்டும் என்ற என் கொள்கையாலேயே என்பது என் உறுதியான நம்பிக்கை.

    எழுத்து ஒரு தவம். அதை இணையத்திலோ, அச்சிலோ பார்ப்பது வரம். சங்கப்பலகை எனக்கு ஆத்மதரிசனம் செய்வித்தது.எழுத்துதான் உன் ஆத்மா என்று புரிய வைத்தது. ஆத்மத்யானம் பழக ஒரு ஆசிரமமும் மான்தோலாசனமும் அளித்தது.

    ***

    மதுரா:

    தேன்மொழி ராஜகோபால் என்ற இவர் படித்தது ஆங்கில இலக்கியம். மரபு நவீனக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

    கோகுலம். மங்கையர்மலர் தினமலர் ஆனந்த விகடன் இனிய உதயம் போன்ற பிரபல இதழ்களிலும், பதாகை காணிநிலம் உள்ளிட்ட

    சிற்றிதழ்களிலும். தகவு, நகர்வு, கதவு, செந்தூரம், மகாகவி, கலகம், சொல்வனம் உள்ளிட்ட இலக்கிய இதழ்களிலும் மின்னிதழ்களிலும் படைப்புகள் வெளியாகி உள்ளன...

    வெளியான நூல்கள்

    சிதறும் முத்துகள் என்ற தன்முனைக் கவிதைகள் தொகுப்பு

    பிராயசித்தம்என்ற சிறுகதைத்தொகுப்பு

    தழல்பூக்கள் குறுநாவல்

    முதல் கவிதைத் தொகுப்பு சொல் எனும் வெண்புறா

    நவீன கவிதைகள்

    இரண்டாவது நூல் ʻபெண் பறவைகளின் மரம்ʼ

    இருமொழி நூல் மொழியாக்கம்

    ***

    ஸ்ரீ:

    பாக்கியம் செய்தவர் படிக்கக் கடவர்….!

    சங்கப் பலகை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தங்கச் சுரங்கமாகிக் கொண்டிருக்கிறது.

    சங்கப்பலகை முகநூல் பக்கங்களில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் பல்சுவைப் படைப்புகள் நாம் அடையும் பிரமிப்பின் எல்லையைத் தள்ளி வைத்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் சிவமலர்

    நித்திய பூஜைகளுக்கே தள்ளாடும் ஒரு கிராமாந்தரச் சிவன் கோயிலைச் சுற்றியுள்ள மர்மங்கள், அந்தக் கிராமத்திற்கும் செண்பகாரண்ய க்ஷேத்திரம் எனப்படும் மன்னார்குடிக்கும் உள்ள தொடர்பு, அவற்றைப் பற்றி ஆராய்வதற்காகக் கிளம்பி வருகின்ற இளைஞன் விபுலானந்தன், உள்ளூர் ஜமீனின் வாரிசாகப் பிறந்தும் குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பழமையும் நவீனமும் இணைந்த சிவமலர் என்ற யுவதி, அண்ணனின் இறப்பிற்குப் இறகு சிவமலருக்கு ஏற்படும் வினோதமான அனுபவங்கள், அசரீரியாய்க் கேட்கும் அண்ணனின் குரல், அந்த அண்ணன் வரைந்த ஓவியங்கள், அவ்வப்போது தோன்றி மறையும் நாகங்கள், சிவன் கோயில் குருக்கள், குருக்கள் வீட்டில் சதா நிஷ்டையில் இருக்கும் பெரியவர், ஓதுவார், ஒருபுறம் நாத்திகம் பேசிக்கொண்டே குருக்களுக்கும் உதவி செய்யும் வித்தியாசமான பாத்திரமான மாணிக்கம்… அப்புறம்…. ஆழ்வார் பாசுரங்கள், திருமூலரின் வரிகள் போன்று தொனிக்கின்ற சந்தங்கள் தெறிக்கும் பாடல்களை சர்வசாதாரணமாக உதிர்த்துச் செல்லும் சன்னாசி, இன்னும் பல கதாபாத்திரங்களை ஒரு புள்ளியில் இணைக்கும் எழுத்துச் சித்திரமே சிவமலர்.

    மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலப் பெருமாளின் பிரம்மோற்சவ வாகனங்களில் ஒன்றான கண்டபேருண்ட பக்ஷி அசத்தலாக இந்தக் கதையுடன் ஒட்டிக்கொள்கின்றது.

    சிவமலரின் கதையைவிட அவள் அண்ணியின் கதை இன்னும் பரிதாபகரமானது. இளம் வயதில் எவ்வளவோ துயரங்களை எதிர்கொண்ட நந்தினியின் இல்வாழ்க்கை சட்டென்று முடிவுக்கு வந்தாலும் நாத்தனார் சிவமலரின் ஆதரவு சற்றே ஆறுதல் அளிக்கிறது.

    அமானுஷ்யங்களை நம்ப முடியாமல் நம்பும் நாம் அனைவரும் சிவமலரின் அண்ணன் மீண்டும் உயிருடன் வந்தாலும் வரலாம் என்ற மெல்லிய நம்பிக்கையுடனே கதையுடன் பயணிக்கிறோம். அந்த மெல்லிய நம்பிக்கையே கதைசொல்லி(கள்) பஞ்சமுகியின் வெற்றி. சக்திமான் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார் என்று 1990 களின் குழந்தைகள் நம்பினார்கள்தானே?

    எண்ணற்ற கதாபாத்திரங்களையும் அவர்களின் பெயர்களையும் உள்வாங்கிக் கொள்ளவே மூச்சுவாங்குகிறது. என்னதான் முன் தயாரிப்புகள் இருக்கும் என்றாலும் கூட இத்தனைக் கதாபாத்திரங்களையும் அவரவர்களுக்குரிய பொருத்தமான இடங்களில் பொருத்தி, பேச வேண்டிய இடங்களில் பேச வேண்டியதைப் பேச வைத்து, முன்பாதியில் தொடுத்த மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக விடுவித்து, கோர்வை தளராமல் ஒரு பெரிய புதினத்தை எழுதுவதென்பது மிகவும் கடினமான விஷயம்.

    ஒன்பதாம் அத்தியாயத்தில் வீட்டினுள் நுழைந்ததும் மாடியறை ஜன்னல் திறந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்ட சிவமலர் உடனடியாக மாடிக்குச் சென்று பார்க்காமல் (என்னதான் அலுப்பாக இருந்தாலும்) சற்று நேரம் கீழே இருந்துவிட்டு அதன் பிறகே மாடிக்குச் சென்று பார்க்கும் இடத்தில் மட்டும் நிகழ்வுகளின் வேகத்தில் சிறியதொரு தொய்வு போன்றதோர் உணர்வைக் கொடுத்தது. மற்றபடி விறுவிறுப்புக் குறையாத தொடராகவே இருக்கின்றது.

    இதனை ஒருவர் மட்டுமே எழுதாமல் ஐந்து பேர் இணைந்து எழுதுவதற்கு அசாத்தியமான புரிதலும் ஒருங்கிணைப்பும் இருக்க வேண்டும்.

    பஞ்சமுகிகளில் ஒவ்வொரு முகியும் அந்தக் கால அரசவை நர்த்தகியாக விளங்கிய சுவர்ணமுகி போல அசரடிக்கிறார்கள்.

    சிவமலருக்கென்று ஒரு மர்மம் என்றால், இந்த பஞ்சமுகிகள் யார் என்பதும் ஒரு மர்மம். அதைக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு உண்டென்று ஒருபுறம் அறிவிப்பும் உண்டு. சங்கப் பலகைப் பெண்சிங்கங்கள் யாரை நினைத்தாலும் பஞ்சமுகிகளில் இவரும் ஒருவரோ என்றுதான் தோன்றுகின்றது. சங்கப் பலகைப் பதிவுகளில் அசத்துவதோடு, பிரபல வார மாத இதழ்களில் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் எழுதிக்கொண்டிருக்கும் நம் சகோதரிகள் தற்பொழுது உச்சநிலையில் இருக்கின்ற எந்த எழுத்தாளருக்கும் சளைத்தவர்களில்லை.

    சிவமலர் அதற்கான சமீபத்திய உதாரணம்.

    சிவமலர் அளித்த பிரமிப்புக் குறையாமல் இதனை எழுதுகின்றேன்.

    பாக்கியம் செய்தவர் படிக்கக் கடவர்!

    பஞ்சமுகிகளுக்கு இதுவும் சாத்தியம். இதற்கு மேலும் சாத்தியமே!

    வாழ்த்துகளுடன்,

    எஸ். ஸ்ரீதுரை

    காஞ்சீபுரம் – 631501

    பொருளடக்கம்

    மொட்டு - 1

    மொட்டு - 2

    மொட்டு - 3

    மொட்டு - 4

    மொட்டு - 5

    மொட்டு - 6

    மொட்டு - 7

    மொட்டு - 8

    மொட்டு - 9

    மொட்டு - 10

    மொட்டு - 11

    மொட்டு - 12

    மொட்டு - 13

    மொட்டு - 14

    மொட்டு - 15

    மொட்டு - 16

    மொட்டு - 17

    மொட்டு - 18

    மொட்டு - 19

    மொட்டு - 20

    மொட்டு - 21

    மொட்டு - 22

    மொட்டு - 23

    மொட்டு - 24

    மொட்டு - 25

    மொட்டு - 26

    மொட்டு - 27

    மொட்டு - 28

    மொட்டு - 29

    மொட்டு - 30

    மொட்டு - 31

    மொட்டு - 32

    மொட்டு - 1

    "பொன்னார் மேனியனே புலித்

    தோலை அரைக்கசைத்து

    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்

    கொன்றை யணிந்தவனே

    மன்னே மாமணியே மழ

    பாடியுள் மாணிக்கமே

    அன்னே உன்னையல்லால் இனி

    யாரை நினைக்கேனே!"

    அந்த அதிகாலையில் ஓதுவார் சம்பந்தனின் குரல் கணீரென ஒலிக்க கூடவே ஆலய மணியின் ஓசையும் இணைந்து சூழலை தெய்வீக மணம் கமழ வைத்துக் கொண்டிருந்தது.

    85 வயதான நீலகண்ட குருக்கள் கோவிலின் வலது பக்கத்திலிருந்த தீர்த்தத்திலிருந்து முகர்ந்து வந்த நீரால் அபிஷேகம் செய்து சற்றே பழுத்துப் போயிருந்த அந்த வஸ்திரத்தை சாற்றி கோவிலைச் சுற்றிப் பூத்திருந்த பூக்களை சமர்ப்பித்தவரின் கண்களில் கண்ணீர் மல்கியது

    தள்ளாட்டத்தோடு மனைவி கமலா செய்தனுப்பிய பிரசாதத்தை நிவேதனம் செய்தவர் கருவறைப் படிக்கட்டில் சரிந்தபடி பெருமூச்செறிந்தார்.

    "சம்பந்தா! உன்னோட பாட்டும் இல்லைனா ரொம்ப அநாதரவா இருக்கிற மாதிரி ஆயிருக்கும்.

    நாளுக்கு நாள் உன் குரல் மெருகேறியிருக்கு.

    சிவனைப் பாடற நாவுக்கு இது கூட கைகூடலையினா எப்படி?"

    இருக்காதா பின்ன? உங்க ரெண்டு பேரு தயவு இல்லையின்னா சிவனோட கதி அதோகதிதான்!

    சிரித்தபடியே சொல்லிக்கொண்டு உள்ளே வந்தான் மாணிக்கம்.

    அந்த சிறிய ஊரின் முக்கியஸ்தர்களில் அவனும் ஒருவன்

    அவன் பேச்சைக் கேட்டதும் தீப்பட்டது போல் நீலகண்டன் துடித்துப் போனார்.

    அபச்சாரம்! இந்த அண்டசராசரத்துக்கே படியளக்கறவன் ஈசன். அவனோட தயவில்தான் அத்தனை பேரும் வாழறோம். வாயைக் கழுவு முதலில்.

    ஆத்திரத்தில் குரல் கமறியது.

    கோச்சுக்காதீங்க அய்யரே! எனக்கு சாமி பக்தி எல்லாம் கிடையாது. சாமி மேல நம்பிக்கையும் கிடையாது. ஆனால் மனுஷனுக்கு மனுஷன் உதவணும் னு நினைக்கிறேன். வாழ்ந்தவன் கெட்டா வரையோட்டுக்கும் ஆகாதுன்னு சொல்லுவாங்க! ஒரு காலத்தில் இந்த கோயில் ஓஹோன்னு இருந்தது. இவரோ இன்றைக்கு பஞ்சப் பராரியா நின்னு இருக்காரு. அவர் சொத்தையே அவரால காப்பாத்திக்க முடியல. அண்டசராசரத்துக்கும் படியளக்குறார் னு நீங்க கதையளக்கறீங்க.!

    நீலகண்டன் கண்ணில் நீர் தளும்பியதைக் கண்டு பேச்சைத் தொடர்ந்தான் மாணிக்கம்

    சரி! இந்த காலை நேரத்துல உங்க மனசை ஏன் கஷ்ட படுத்தணும்? நாளைக்கு என் ஆளுங்க ரெண்டு பேர் வருவாங்க கோயிலுக்கு முன்னாடி இருக்குற இடத்தையும் குளத்துக்கு இறங்குற படிக்கட்டையும் சுத்தம் பண்ண சொல்லி இருக்கிறேன். வேற ஏதாவது வேலை இருந்தா வாங்கிக்குங்க. நாளைக்கு ஒரு நாள் மட்டும் தான் வேலை பாப்பாங்க அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்.!

    உன் உதவிக்கு ரொம்ப நன்றி ப்பா. ஆனா சிவனோட சக்தி தெரியாம விளையாடிட்டிருக்க…

    அட போங்க சாமி. இந்த கோவிலோட நிலபுலம் சுத்துபட்டு கிராமத்தில எங்கெங்கோ இருக்குனு சொல்றாங்க. அதையெல்லாம் எந்த போக்கத்தவனுங்களோ அனுபவிக்க உங்க உபயத்தில சீவனை வச்சிட்டிருக்க இந்த சிவனுக்கு சக்தியிருக்கா? நம்புற மாதிரி ஏதாவது சொல்லுங்க

    அவன் பெரிதாய் சிரிக்க...

    சம்பந்தம் எரிச்சலானார்.

    போதும் பா. உன் சம்சாரத்துகிட்ட போய் இதெல்லாம் சொல்லு!

    "வேற வினையே வேண்டாம். அப்புறம் நானும் சிவனுக்கு போட்டியா இங்கேயே இருக்க வேண்டியது தான்

    என்றவன்… ஏஞ்சாமி பேசாம கோவிலை அரசாங்கத்திடம் ஓப்படைச்சா என்ன?"

    அதுக்கும் உரியவங்க ஒப்புதல் வேணுமே…

    அப்ப இது கதைக்காவாது. நான் போய் பொழைப்பைப் பார்க்கிறேன். ஓதுவார் சாமி! என் வீட்ல எதையும் போட்டுக் கொடுத்திடாதீங்க. என் வீட்டம்மா பெரிய சிவபக்தை. அப்புறம் ராச்சோறுக்கு உங்க வீட்டுக்குத் தான் வரணும்…

    அவன் நகர்ந்தான்.

    மாணிக்கம் சொல்வது போல் அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது தான். ஆனால் அவ்வப்போது கோயில் காரியங்களில் ஏதாவது ஒரு உதவி செய்து கொண்டுதான் இருக்கிறான்

    அவன் மனைவி கொடுக்கிற பாலில் தான் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடக்கிறது

    இப்போது நெருஞ்சிக்காட்டை

    சுத்தம் செய்ய வருவது போல்... எத்தனையோ சின்ன சின்ன உதவிகள்... அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்ட குருக்கள் அறுபது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்த கோயில் நாளுக்கு ஒரு திருவிழா தினத்துக்கு ஒரு கொண்டாட்டம் னு ஏகபோகமாக இருந்தது இன்னைக்கு கவனிப்பாரற்று பாழடைந்து கிடக்கு.

    ஆறு கால பூஜையும் பஞ்சமுக வாத்தியம் முழங்க படு அமர்க்களமாக நடக்கும் சிவனுக்கு வேளைக்கு ஒரு பட்டாடை அவனுக்கு இடப்புறத்தில் சன்னதியில் இருக்கும் வடிவுடையம்மன் மட்டும் குறைந்தவளா என்ன அவளுக்கென்று பிரத்தியேகமாக நெய்த பட்டு புடவைகளில் வைர வைடூரியமணிந்து ஜொலித்துக் கொண்டிருப்பாள்.

    இன்றோ... கரப்பு அரித்த புடவையைக் கிழிசல் தெரியாமல் கட்டிவிட வேண்டியிருக்கிறது.

    திருமேனி எண்ணெய்க்காப்பு இல்லாமல் பூஞ்சை பிடித்துக் கிடக்கிறது.

    பெரியவர் மகேஷ்வர பூபதியின் அப்பா பஞ்சாட்சரம்…

    நஞ்சையும் புஞ்சையுமாய்ப் பல ஏக்கர் நிலங்கொண்ட ஜமீன்தார்.

    அவருடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொத்தைப் பாகப்பிரிவினை செய்ய முயன்றபோது கனவில் வந்து என் பாகம் எங்கே? என்றாராம் சிவன்.

    மறுநாள் அவருடைய தோப்புக்குள் சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்துக்கும் பாகம் கொடுத்து உடனே கோவிலை நிர்மாணித்தார். அப்போது நாகமொன்று அவரைத் தீண்ட நாகத்தின் நஞ்சை தன் மேனியிலேற்றிக் கொண்டு பஞ்சாட்ரசத்தைக் காப்பாற்றி நஞ்சுண்டேஸ்வரராக அருள்பாலிக்கிற தலமிது.

    அம்மனோ ஒரு படி மேலாய் ஸ்தபதியின் கனவில் தன்னுருவைக் காட்டி உருவானாள்.

    பஞ்சாட்சரத்தின் மகன்களில் மூத்தவரான மகேஸ்வர பூபதி அப்பாவுக்குப் பின்னும் பொறுப்பாக கோவிலைப் பராமரித்தார்.

    ஆறுகால பூஜையும் பஞ்சமுக வாத்யங்களும் நாதஸ்வரமும் முழங்க விமரிசையாக நடக்கும்.

    கோவிலுக்கென்றே தனி நாதஸ்வர வித்வானும் பல்லக்கு தூக்கிகளும் இருந்தார்கள்.

    பிரகாரத்தின் வெளிப்புறத்தில் நந்தவனமும் அதைப் பராமரிக்க ஆட்களும் பூக்கட்டும் நபர்களும் இருந்தார்கள்.

    மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியும் திருவாதிரைத் திருநாள்... சிவராத்திரியும் ஊர் கூடி சிவநாமத்தை உச்சரிக்கும்.

    கார்த்திகை சோமவாரங்களில் அலைமோதும் கூட்டத்தில் எள் போட இடமிருக்காது.

    மகேஸ்வரரின் துர்ப்பாக்யமோ என்னவோ அவருக்கு ஆண் மகவில்லை. அவருக்கு அடுத்த இரு சகோதரர்களுக்கு புத்ர பாக்யமில்லை. கடைசி சகோதரர் ஈஸ்வரனுக்கு இரு மகன்கள். ஈஸ்வரன் அப்பாவி. மனைவி இறந்த பிறகு இரண்டாம்தாரமாக வந்த பெண்ணின் குடும்பம் அவருடைய சொத்துகளையும் கோவில் சொத்துகளையும் சேர்த்து அழித்தது. அதில் கோவிலைக் கவனிக்காமல் சிதிலமடைய வைத்துவிட்டார். நாள்கிழமை கூட கோவிலுக்கு வருவதில்லை. அவரது மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகன் அருணாசலம் தான் வரவு செலவு பார்ப்பதாகக் கேள்வி. அவரோ அவர் குடும்பத்தாரோ இங்கு வந்ததேயில்லை. இரண்டாவது மகன் சிவகடாட்சம் மிகுந்த சிவப்பற்று உள்ளவர் என்றும் அவர் அகால மரணமடைந்து விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்.

    சிவன் சொத்து குலநாசம் என்பார்கள்.

    சொத்தைக் கொடுத்த ஒரு குலமே அதை வீணடிக்கும் கொடுமையை என்ன சொல்வது?

    நீலகண்டன் பெற்றோரை இழந்து தனியனாய் நின்றபோது அவருக்கு பதினாறு வயது. திக்குத் தெரியாமல் கலங்கி நின்றவரை கைநீட்டி அரவணைத்துக் கொண்டவர் மாமா சுந்தரேச குருக்கள். ஆனால் தனக்குப் பணிவிடை செய்யப் பணித்தவர் நஞ்சுண்டேஷ்வரரே.

    மாமா பெண் கமலாம்பாளை மணந்து இங்கேயே செட்டிலாகிவிட்டார்.

    ஒரு ஆண் மகவை ஆண்டவன் அருளியிருந்தால் கோவில் கார்யத்தில் உதவியிருப்பான். ஆனால் பிறந்ததோ பெண் மகவு.

    வடிவுடையம்மனே தனக்குப் பிறந்திருப்பதாக எண்ணி வடிவழகி எனப் பெயர் வைத்து சீராட்டினார். வாய்த்த மாப்பிள்ளை திருச்செந்தூர் கோவிலில் பரம்பரையாய் பூஜிப்பவர்.

    குடியிருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1