Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalaimuraigal
Thalaimuraigal
Thalaimuraigal
Ebook651 pages4 hours

Thalaimuraigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முந்தைய காலங்களில் ஜமீன் பரம்பரையினர் அறம் வளர்த்து, தர்ம நெறியில் பலர் வாழ்ந்து மறைந்தனர். அவர்களின் முக்கியமானவர் மங்கம்மா. இவளின் தாத்தா மதுரையை ஆண்ட மங்கம்மாவின் பெயரை சூட்டி மகிழ்ந்த்தோடு பல வித்தைகளைக் கற்றுத் தந்து வீரப்பெண்மணியாக வளர்க்கிறார். சரியான துணை தனக்கு வாய்க்கா விட்டாலும், தன் பிள்ளைக்கு நல்ல தாயாகவும், தர்ம சிந்தனையோடு ஊர்மக்கள் போற்றும் வகையில் வாழ்ந்த்தோடு, தன் வம்சத்தின் மேன்மைக்காக மறுபடியும் அக்குடும்பத்தில் மறுபிறப்பெடுக்கிறார். சமூக சிந்தனைகளோடு, தேவையற்ற சம்பிரதாயங்களை உதறி, மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்ணாக... மங்கம்மா இந்நூல் முழுவதும் வலம் வருகிறார்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580144707135
Thalaimuraigal

Read more from Ilamathi Padma

Related to Thalaimuraigal

Related ebooks

Reviews for Thalaimuraigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalaimuraigal - Ilamathi Padma

    http://www.pustaka.co.in

    தலைமுறைகள்

    Thalaimuraigal

    Author :

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    அத்தியாயம் 99

    அத்தியாயம் 100

    அத்தியாயம் 101

    அத்தியாயம் 102

    அத்தியாயம் 103

    அத்தியாயம் 104

    அத்தியாயம் 105

    வாழ்த்துரை

    வளர்ந்து வரும் பெண் எழுத்தாளர்களில் ஒரு தனித்துவத்தோடு தென்படுபவர் இளமதி பத்மா அவர்கள். நடுத்தட்டு குடும்பத்தில் பிறந்து இன்றைய வாழ்வின் எல்லாவிதமான நன்மை, தீமைகளையும் உணர்ந்து பெரிதும் பக்குவப்பட்டிருப்பவர். கூடுதலாய் ஒரு பத்திரிக்கையாளராக பல இதழ்களில் பணியாற்றிய அனுபவமும் கொண்டிருப்பவர். இதனாலேயே இவரது படைப்புகளில் பெண்ணியம் சார்ந்த விழுமியங்களுடன், யதார்த்தமான உரையாடல்களும், அழுத்தமான கதையம்சமும் காணப்படுவதை நான் கண்டேன்.

    இந்த ‘தலைமுறைகள்’ நாவலும் அந்தவகையில் அமைந்த ஒன்றே. மானுடசாதியில் பலப்பல வண்ணங்கள்… பலவிதமான ஏற்றத்தாழ்வுகள்… பலவிதமான மனோநிலைகள்… இவை யாவும் இந்த நாவலில் காணக் கிடைக்கிறது.

    தமிழ் நாவல் இலக்கியம் இன்று ஒரு நல்ல உயரத்தில் உள்ளது. பலவித தளங்களிலும் உள்ளது! அச்சுக்கலை தோன்றி, வாசிப்புப் பழக்கம் உருவாகி, கோயில்களிலும், பொது வெளிகளிலும் காலட்சேபமாகவும், நாடகமாகவும், தெருக்கூத்தாகவும் உணரப்பட்ட கலைவடிவம் சிறுகதை, குறுநாவல், நாவல் நாடகம் என்கிற வடிவம் காணப்பெற்று ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.

    அந்த வகையில் எவ்வளவு படைப்புகள் உருவாகியுள்ளன என்று பட்டியலிட்டால் அது நிச்சயம் லட்சத்தை தொடுவதாக இருக்கும்.

    இந்த லட்சக்கணக்கான படைப்புகள்தான் இந்த தமிழ் சமுதாயத்தை நாகரீகத்துடன், கலாசாரத்துடன், பண்பாட்டுடன், உயிர்ப்புடன் வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை.

    வாசிப்புக்கும், சுவாசிப்புக்கும் ஒரு எழுத்தே வித்தியாசம். சுவாசித்தால்தான் உயிர்வாழ முடியும். அதேபோல வாசித்தாலே உயிர்ப்புடன் வாழ முடியும். அந்த உயிர்ப்புக்கு காரணம் தமிழ் எழுத்தாளர்களே!

    இவர்களில் ஆண் பெண் பேதம் பார்க்கத் தேவையில்லைதான். ஆயினும் பெண்ணியத்தை ஒரு பெண்ணாலன்றி அழுத்தமாய் எடுத்துரைக்க இயலாது என்பதால் பார்க்கவேண்டிய ஒரு தேவை உருவாகிவிட்டது.

    அவ்வகையில் தமிழ் நாவல்களில் முதல் பெண் எழுத்தாளராய் அறியப்படுபவர் வை.மு. கோதைநாயகி ஆவார். இவரைப் பின்தொடர்ந்தவர்கள் அதன்பின் பலராவர்! ஆயினும் ஆண் எழுத்தாளர்களைப் பட்டியலிடுவதுபோல் ஒரு பட்டியலை பெண்களுக்கென எடுத்தால் இவர்கள் மிகக் குறைவாகவே இருப்பது தெரிகிறது. அதேசமயம் இந்த 21ம் நூற்றாண்டில் கணிசமாக பெண் எழுத்தாளர்கள் முன்வந்து எழுதிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன். காரணம் பெண் கல்வியும், எல்லா துறைகளிலும் அவர்கள் கால்பதித்து வருவதும்தான்…

    இந்த வரிசையில்தான் இளமதி பத்மாவும் முன்வந்து உற்சாகமாக எழுதி வருகிறார். ‘சிறுமைகண்டு சீறுவாய்’ என்று பாரதி கூறியதை உடும்புபோல் பற்றிக் கொண்டிருப்பவர் இவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதாகவே இவர் பேச்சுமிருக்கும். எளிதில் உணர்வு வயப்படுவது இவரின் பலம் மட்டுமல்ல, பலவீனமும்தான். உணர்ச்சி வயப்படாத எழுத்தாளனின் எழுத்து மேலோட்டமானதாகவே இருக்கும். அப்படிப் பார்த்தால் இவர் மிக பலசாலி.

    சமுதாயத் தாக்கங்களுக்கு உள்ளாகின்றவர்கள் அந்த தாக்கத்தை எழுத்தில் பிரதிபலிக்க வேண்டும். அதிலும் எழுத்தாளன் கண்ணாடிபோல் உள்ளது உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். இந்த நாவலும் அப்படி ஒரு பிரதிபலிப்பாக உள்ளது.

    சரளமான நடை, தேவைப்படும் திருப்பங்கள் என்று இந்த நாவல் ஒரு நாவலுக்கான எல்லா அடிப்படைகளையும் கொண்டு திகழ்கிறது. பத்மா இன்னும் நிறைய எழுதி சாதனைகள் புரிய வேண்டும். புரிவார் என்று நம்புகிறேன். இவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    25.6.22

    மதுரை - 3

    அன்புடன்

    இந்திரா சௌந்தரராஜன்

    1

    பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் கிருஷ்ணதேவராயர் தென்னகத்திற்கு வருகை தந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த தெலுங்கர்கள் பலர் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். தமிழகம் 72 பாளையங்களாகப் பிரிக்கட்டு குறுநில மன்னர்களாகவும், ஜமீன்களாகவும் ஆட்சி அதிகாரத்தை கோலோட்சினர். இவர்களில் திருமலை நாயக்கர் தலைசிறந்து விளங்கினார். நாயக்கர் மட்டுமல்லாது வடுகர்கள், கவரா நாயுடு, கம்மவார் நாயுடு, பலிஜா நாயுடு போன்றவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். பிரிட்டிஷ்காரர்களால் தந்திரமாக நம் நாடு சூறையாடப்பட்டு, பதவி இழந்து பெருமை இழந்த பிறகும் கூட வீரம் இழக்காமல் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட பாளையக்காரர் பரம்பரையில் வந்தவர்தான் முத்தையா. 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த (17 ஆம் நூற்றாண்டு) இவர் பிறப்பிலிருந்து கதை துவங்குகிறது.

    இவரது தந்தையை விட தாய் புத்திசாலியாகவும், ஆளுமை திறன் கொண்டவராகவும் விளங்கியதால், ஏலமலை, வெற்றிலைத் தோட்டம், தென்னந்தோப்பு, மற்றும் நெல் விளையும் வயல்கள் அனைத்தையும் இவரின் தாய் மங்கம்மாவே கவனித்துக்கொண்டார். தந்தை சுப்பையா மனைவி சொல்லுக்குக் கட்டுப்பட்டவராய் ஒரு கர்மயோகி போல் வாழ்ந்தார் என்று சொல்லலாம்.

    இனி கதைக்குள் வருவோம்.

    வாசல் விளக்கு மாடங்களில் விளக்கேற்றிவிட்டு வீட்டிற்குள் வந்து முற்றத்தில் 5 அடி உயரத்தில் நிற்கும் விளக்கு கம்பங்களில் சீமெண்ணையை நிரப்பி ஒளியேற்றினாள் மங்கம்மா. சமையலுக்கும், மற்ற வேலைகளுக்கும் இரண்டு பணியாட்கள் இருந்தாலும் விளக்கு மாடத்திலிருந்து பூஜையறை வரை விளக்கேற்றும் வேலையை தானே செய்தால்தான் திருப்தி. 12 அறைகள் உள்ள தனது பூர்வீக வீட்டை பராமரிப்பதில் தனி ஆர்வமுடையவளாய் இருந்தாள். வீடு ஒளி வெள்ளத்தில் ஜெகஜோதியாய் ஒளிரும் அழகை அங்கங்கு நின்று நின்று ரசிப்பாள்.

    இரவானால் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஆண் வேடமிட்டு விளைச்சலுக்கேற்றவாறு காவலுக்கும் தனியாக சென்று விடுவாள். எப்போதும் குறுவாளுடன்தான் வெளியே சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

    முத்தையா பிறந்து ஆறுமாதக் குழந்தையாக இருந்தபோது கன்னக்கோல் போட்டு வீட்டிற்குள் திருடர்கள் நான்குபேர் ஒவ்வொருவராக உள்ளே வர வர குறுவாளால் வயிற்றில் குத்தி சுற்றுச் சுவருக்கு வெளியே எறிந்தாள். இதைக் கண்டு கணவன் சுப்பையா திகைத்து நிற்க, திருடன் வருவது கூடத் தெரியாமல் கும்பகர்ணனாட்டம் தூங்குறே. குடும்பம் வெளங்கிடும். போய் தூங்கு. எனக்குனு வந்து வாச்சிருக்க பாரு. என் தலையெழுத்து. உன்னையெல்லாம் கோழி கூடாரத்தில்தான் இனி அடைக்கணும். வீரப் பரம்பரையில் இப்படி ஒரு கோழை என்றவள், கையோடு சுவற்றில் திருடர்கள் போட்ட துவாரத்தை தாழ்வாரத்தில் கிடந்த பெரிய திருகையால் அதன் அருகே ஒட்டியபடி வைத்து விட்டு…

    நாளைக்கு ராசப்பனை வரச்சொல்லு உடனே மூடணும் என்றபடி உள்ளே சென்றதும் பயத்தில் நாக்கு மேலண்ணத்தொடு ஒட்டி உலர்ந்து போக, ஒரு செம்பு நிறைய தண்ணீர் அருந்திவிட்டுத் தூங்கப்போன சுப்பையாவிற்கு, அன்றைய இரவு சிவராத்திரியானது!

    முத்தையாவிற்கு ஐந்து வயது நிரம்பியவுடன், வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து தமிழும், ஆங்கிலமும், கணக்கும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தாள். இரண்டிரண்டு வயது வித்தியாசத்தில் ஐந்து ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த மங்கம்மா, இரண்டு குழந்தைகளை காலரா, மற்றும் ராஜபிளவை கட்டிக்கும் பறிகொடுக்க மூன்று பிள்ளைகள் மட்டுமே எஞ்சினர். மூத்தவனான முத்தையா அம்மாவின் வீரத்தையும், தாத்தாவின் விவேகத்தையும் கொண்டிருந்தான். மற்ற இரண்டு பிள்ளைகளும் சுயநலப் போக்குடன் வளர, முத்தையா தாய்க்கு பக்கபலமாய் இருந்தான்.

    தோளுக்கு மேல் பிள்ளைகள் வளர்ந்தபோது, இல்லற வாழ்க்கையிலிருந்து விலகி பூஜைகளில் அதிக நேரத்தை செலவழித்தாள். குலதெய்வமான விஷ்ணு ஆலயங்களை தரிசிக்க ஊர் ஊராக சென்று கொண்டிருந்தாள். தன் கணவன் சுப்பையாவின் போக்கை கண்காணிக்கத் தவறியதில்…

    தன் அண்ணன்களோடு சேர்ந்து சோமபாணம் ருசிக்கக் கற்றுக் கொண்டான். பிற பெண்களின் மேல் நாட்டம் வர, சரிவர வீட்டிற்கு வராமல், வெளியில் தங்க ஆரம்பித்தான். அல்லது மேற்குத்தொடர்ச்சியிலுள்ள தமக்கு சொந்தமான ஏலமலையில் பல மாதங்கள் தங்கினான்.

    நாற்பது வயசில் உன் பெண்டாட்டி சாமி சாமினு திரிந்தால் நீயும் அப்படி இருக்கணும்னு விதியா…? போகட்டும் விட்டுத் தொலைடா. உலகத்தில் பெண்ணா இல்லை. ஒரு சொடக்கு போட்டால் வாசலில் வந்து நிற்பார்கள். வயசில் மூத்தவளைக் கட்டும்போதே நினைச்சேன். உன் வாழ்க்கை சின்னாபின்னமாகப் போகுதுனு. 36 வயசுல அனுபவிக்கலைனா எப்ப அனுபவிக்கப் போறே…? எனக்கு 45 வயசாச்சு. உன் மதினியைத் தவிர இரண்டுபேர் இருக்காங்க எனக்கு. நீ எதுக்கு ஒத்தையில் கிடந்து சாகணும்… ஐயோ… மங்கம்மா என்னைக் கொன்னுப் போட்றுவா.

    அடப் போடா போக்கத்தவனே… தைரியமில்லாத நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையாடா… என்றெல்லாம் அண்ணன் உசுப்பேற்ற… பெண் போதையில் தடம் புரண்டான் சுப்பையா…

    கோவில் யாத்திரை முடிந்து ஊர் திரும்பிய மங்கம்மாவிற்கு தன் கணவன் வீட்டில் இல்லாதது மனதை நெருடினாலும், பிள்ளைகள் முன் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.

    மூத்தவனே… உங்கப்பா எங்கடா என்று கேட்க, இளையவன் பதில் சொன்னான் ஏலமலையில் இருக்கார் மா. இருபது வயசு பெண்ணோட சல்லாபம் செய்வதாக கேள்விபட்டேன் என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னம் சிவந்தது.

    ஒரு பூச்சியைக் கண்டாலே பயப்படுவார்டா உங்கப்பா. அவரையா கேவலமா பேசுற…

    முத்தையாஆஆஆ… என்று மங்கம்மா கத்த…

    அம்மா… எதுக்கு ஆவேசம்… பெரியப்பன் சொன்ன கதை இது. நான் நம்பலை. நீயும் நம்பாதே. இப்பதான் அப்பா பொறுப்பா இருக்கார். சந்தோசப்படுமா!

    நம்புங்க. நம்பி நாசமாப் போங்க. ஏலமலை இனி நமக்கில்லை. முடிஞ்சா காப்பாத்திக்கங்க. அவர் முழுசா அழிக்கிறதுக்குள்ள என் பங்கை எனக்குப் பிரிச்சுக் கொடுத்துடுங்க என்ற இளமகனை வெறித்துப் பார்த்தாள் மங்கம்மா.

    2

    தன் மகன் முத்தையாவுடன் கணவன் சுப்பையாவை சந்திக்கப் புறப்பட்டாள் மங்கம்மா. கேள்விப்பட்ட விசயம் உண்மையாக இருந்தால் சுப்பையாவை உடனே தலைமுழுகி விடுவது என்ற உறுதியோடு இருந்தாள். மலையேறத் துவங்கும்போதே ஏலம் பூத்து விட்டதை காற்றில் கலந்து வரும் நறுமணம் உணர்த்தியது. ரசித்தபடி சற்று வேகமாகவே நடந்தாள் மங்கம்மா. அம்மாவின் வேகநடை முத்தையாவை கலவரப்படுத்தியது.

    பலவித மனப் போராட்டங்கள முத்தையாவை அலைக்கழித்தது.

    அம்மா எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை கடைப்பிடிப்பவள். அந்தந்தப் பொருள் அந்தந்த இடத்தில் இருக்க வேண்டும். இடம் மாற்றி வைத்தாலே கோபப்படுவாள்.

    அப்பாவும், அம்மா எள் என்று சொல்லுமுன் எண்ணெயாக நிற்பவர்தான். ஆறுமாத இடைவெளியில்தான் அவரிடம் பல முரண்கள் தெரிந்தன. ஏன் மாறினார்…? எப்படி இப்படியானார்…?

    இதற்கெல்லாம் யார் காரணம்…? என்று பலவாறானக் கேள்விகள் மனதில் ஓட, அம்மாவிற்கு இணையாக நடக்க முடியாமல் ஓடினான் என்று சொல்வதுதான் இங்கு பொருத்தமாக இருக்கும். என்னவாகப் போகிறதோ என்ற கலக்கத்தில் வயிறு குழைந்தது. நூறு சதவிகிதம் அன்பு காட்டும் அம்மா நூறு சதவிகிதம் வெறுப்பையும் கக்குவாள் என்பது அப்பாவிற்குத் தெரிந்தும், பிறர் சொல்வதைக் கேட்டு வழி மாறி நடப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லையே… முத்தையாவிற்கு மனசு பதை பதைத்தது.

    அம்மா தன்னுடன் வருகிறாள் என்று அப்பாவிற்கு எச்சரிக்கை செய்ய நினைத்தும் தன்னால் முடியாமல் போனதை நினைத்து வருந்தினான். இதோ ஆயிற்று பத்தே நிமிடத்தில் தங்களது ஏலமலைத் தோட்டத்து வீடு வந்துவிடும். அப்பா மட்டும் இருந்தால் தப்பித்தார். வேறு யாரேனும் உடனிருந்தால்… அம்மாவின் பெருங்கோபத்தில் பொசுங்கிப் போவார்கள்.

    வீட்டின் அமைப்பு வெளியே சற்று மாறியிருந்தது. மல்லிகையும், ரோஜாவுமாக வீட்டின் வேலி அமைந்திருந்தது. படியேறி சென்ற அம்மா கதவைத் தட்டியத் தட்டலில் ஆவேசம், கோபம், பதட்டம் எல்லாம் ஒரு சேர இருந்ததை கவனித்த முத்தையாவிற்கு உடல் நடுங்கியது.

    திறக்கப்பட்ட கதவிற்குப் பின் இளவயது பெண் நின்றிருந்தாள்.

    நீங்க யாரு…? என்று விசாரித்த அடுத்த நொடி அவளைத் தள்ளிக்கொண்டு அம்மா உள்ளே நுழைய, முத்தையா வெளியிலேயே நின்றான்.

    துப்புக்கெட்டவனே… சோறுதானே திங்கிறே… கல்யாண வயசில் மூணு பிள்ளைகள் இருப்பது மறந்துபோச்சா… உன்னை மனுசன்னு நினைச்சேன். நரகலைத் தின்னும் பன்னின்னு நிரூபிச்சுட்ட… என்றதோடு சுப்பையாவை இழுத்துப் போட்டு மிதித்தாள் மங்கம்மா. இனி உனக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. இந்தா நீ கட்டியத்தாலி என்று அறுத்து சுப்பையாவின் முகத்தில் எறிந்தாள். அவளைக் கூட்டிக்கிட்டு வெளியே ஓடிப்போ. இல்லே… நான் கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டேன். த்தூ நீயெல்லாம் ஒரு மனுசனாடா…?

    திகைப்புடனும், பயத்துடனும் நின்றிருந்தவளின் அருகே வந்த மங்கம்மா… நீ எந்த ஊரு… ஆத்தா அப்பன் இல்லையா உனக்கு… இருபது வயசுக் கூட இருக்காதே உனக்கு… என் குடியைக் கெடுக்க எங்கிருந்துடி வந்தே… என்று கொத்தாக அவள் தலைமுடியைப் பிடித்தபோது…

    அம்மா… விடுங்கம்மா பாவம் என்று ஓடிவந்து முத்தையா விலக்கினான். அப்போதுதான் மேடிட்டிருந்த அவளின் வயிற்றை கவனித்தாள். பிடியைத் தளர்த்தினாள். அந்தாளை கூட்டிட்டு வெளியே போய்டு. உழைச்சு கஞ்சி ஊத்தச் சொல்லு. இல்லே நீ உழைச்சு அந்தாளுக்கு ஊத்து. சொத்துல ஒரு அணா கூட தரமாட்டேன். பத்து நிமிசம் அவகாசம் தரேன். அதுக்கு மேலே நின்னீங்க பத்ரகாளி ஆயிடுவேன் என்றவள்…

    முத்தையா… வீட்டை இழுத்துப் பூட்டிட்டு வா என்றபடி சரசரவென சாரை பாம்புபோல் கீழிறங்கிய அம்மாவை பிரமிப்போடு பார்த்தான்.

    அழுது கொண்டிருந்த பெண்ணிடம் ஏம்மா… இந்த ஈன பிழப்பு…? என்றவன்… அப்பாவின் அருகில் வந்து நின்றான்.

    அப்பா… பெரியப்பாவோட கூட்டு சேராதேனு எத்தனை முறை சொன்னேன். உன் தலையெழுத்து சரியில்லை. பெரியப்பாவோட பலமுறை இந்தப் பெண்ணை பார்த்திருக்கேன். தான் அனுபவிச்ச பெண்ணை உன் தலையில் கட்டிட்டார். இவள் வயிற்றில் இருப்பது உன் குழந்தையா அவர் குழந்தையா… அதை தெரிஞ்சுக்க முதலில்… அவளை கூட்டிக்கிட்டு கிளம்பு. நீ தாமதிக்கிற ஒவ்வொரு நொடிக்கும் எனக்கு திட்டு கிடைக்கும் என்ற மகனை கேள்விக்குறியோடு பார்த்த சுப்பையா…

    அப்படி சொல்லாதேடா. ரெங்கம்மா நல்ல பொண்ணு. மலையடிவாரத்தில் ஒரு குடிசையில் சந்திச்சேன். எப்பவாச்சும் டீத்தண்ணி குடிக்கப் போவேன். அப்ப பழக்கமாய்டுச்சு. ஒரு மகனிடம் அப்பன் இப்படிப் பேசக் கூடாதுதான். ஆனால் பேச வேண்டிய நிலையை உங்கம்மா உருவாக்கிட்டா. கோவில் குளம்னு உங்கம்மா மாசக்கணக்கா சுத்திக்கிட்டிருப்பா. புருசனைப் பத்தி கவலையில்லை. பொண்டாட்டி பொண்டாட்டியா இல்லைன்னா… மனுசன் என்ன செய்வான் எவளையாவது தேடித்தான் போவான். உங்காத்தாளிடம் சொல்லு வெத்தலைத் தோட்டம் உங்கப்பன் சொத்து எனக்கு வந்து சேரனும். இல்லே நான் பொல்லாதவனா ஆயிடுவேன். அடியும், மிதியும் வாங்கிட்டு அடிமையா இருக்கனுமா…

    அப்பா… நீங்க செய்த தப்பை எங்கம்மா செய்திருந்தா… கையைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பியா… நல்லா நாயம் பேசுறேப்பா நீ… கிளம்புப்பா வீட்டைப் பூட்டனும் நேரமாகுது.

    உங்கப்பாரு ஜமீன்தார் பிள்ளை. இப்படி நடுத்தெருவில் நிறுத்திட்டுப் போறீங்களே நல்லாவா இருக்கு. இதெல்லாம் எல்லா ஆம்பளையும் பண்ற தப்புதான். அதுமில்லாமல் உங்கம்மா உங்கப்பாவை விட நாலு வயசு மூத்தவளாமே… அடக்கி வச்சு அடக்கி வச்சு அடிமையா நடத்தினால் எந்த ஆம்பிளை பொறுப்பான்…? தனக்கேத்த மாதிரி ஒருத்தியை சேர்த்துகிட்டு வாழ்றது காலங்காலமா நடக்குறதுதானே… என்னா குதி குதிச்சுட்டுப் போறாங்க உங்கம்மா. உடனிருந்தவள் வாய் திறந்து மெதுவாகப் பேசினாள்.

    ச்சீ… ச்சீ வாயை மூடுடி எங்கம்மா பத்திப் பேச உனக்கென்ன யோக்கியதை இருக்கு…? என்ற முத்தையா அவளது கையை பிடித்திழுத்து வெளியேற்றிய கையோடு வீட்டை இழுத்துப் பூட்டிய மகனை வெறித்துப் பார்த்தான் சுப்பையா.

    3

    அம்மா நிலைகுலைந்து போயிருப்பாள் எப்படி சமாதானப்படுத்துவது என்ற யோசனையுடன் வீட்டிற்கு வந்த முத்தையாவிற்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அம்மா வழக்கமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தாள். மறுநாள் வயலில் அறுவடைப் பணிக்காக நல்லானை வரவழைத்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

    இருபது நாட்களுக்கு மூன்று வேளையும் உணவு தயாரிக்க வேண்டும். முத்துப்பேச்சிக்குத் தகவல் சொல்லிடு. பெண்களும் ஆண்களுமாக முப்பது பேர் அறுவடைக்கு வருவார்கள். நெல் மூட்டைகள் வீட்டிற்கு வந்து சேரும்வரை நீ களத்தில் இருக்கணும் புரிஞ்சுதா…? இந்த வருசத்திலிருந்து எனக்கு பதிலாக முத்தையா வருவான். நீ போய் ஆக வேண்டிய காரியங்களை கவனி என்று நல்லானை அனுப்பி வைத்தாள்.

    தூணில் சாய்ந்தவாறு அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான் முத்தையா. கொஞ்சமும் விவரமில்லாத, பல்லியைப் பார்த்தால் கூட பயப்படும் அப்பாவை எப்படி அம்மா மணந்தாள் என்று பலமுறை வியந்திருக்கிறான். ஏதேனும் ஒரு வேலை சொல்லி அப்பாவை அம்மா வெளியே அனுப்பும் போதெல்லாம் அந்த வேலையை முடிக்காமல் முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வருவார். மங்கம்மா… நீ சொன்னதை அப்படியேதான் சொன்னேன். எவனும் என்னை மதிக்க மாட்டேங்கிறான் என்பார். வெத்தலைத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தவன் விளைச்சல் இல்லை என்று கையை விரிக்கிறான் என்று வந்து நிற்கும் போதெல்லாம்…

    கூறுகெட்ட மனுசா… ஒரு வேலையை ஒழுங்கா செய்ய துப்பில்லை. உன்னையெல்லாம் கட்டிக்கிட்டு அவஸ்தைப்படனும்னு என் தலையில் எழுதியிருக்கு. போய் தொலை என்று அலுத்துக் கொள்வாள். அதற்குமேல் அப்பாவை எதுவும் சொல்வதில்லை.

    இரவானால் அப்பாவிற்கு அம்மா அருகில் இருக்க வேண்டும். பகலெல்லாம் உழைத்து அலுப்புடன் வருபவள் ஒரு குளியலைப் போட்டவுடன் அப்பாவிற்கு இருப்பு கொள்ளாது. சாப்பிடும் வரை கூட பொறுமையாய் இருக்க மாட்டார். குறுக்கும் நெடுக்குமாய் அலைவார்.

    முத்தையாவிற்கு பதினைந்து வயதிருக்கும் போது விஷக்காய்ச்சல் வந்து விட, இரவும் பகலும் மகனின் அருகிலேயே இருந்தவளுக்கு கணவன் சுப்பையாவின் செய்கை கோபத்தை வரவழைக்க, வெளியே போ… தினமும் பொம்பள சுகத்துக்கு வெட்கமே இல்லாமல் அலையிறியே, பிள்ளை உடம்புக்கு முடியாமல் இருக்கான். இப்பக் கூட உன் சுகம்தான் முக்கியம்னு நினைக்கிறியே… ச்சீ என்ன மனுசன் நீ… என்று அடிக்குரலில் பேசிய அம்மாவின் குரல், தூங்காமல் விழித்திருந்த முத்தையாவின் காதில் விழ, மனசு படபடவென அடித்துக் கொண்டதை நினைத்துப் பார்த்தான்.

    அம்மா தங்களை தனித்தனி அறைகளில் சிறுவயதிலேயே தூங்கப் பழக்கியது இதற்குத்தானா என்ற கேள்வி எழுந்ததும் அப்பாவின் மேல் எரிச்சலும், அம்மாவின் மேல் இரக்கமும் வந்தது. அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட, அப்பா என்ற அன்பும், பந்தமும் இருக்கவே செய்தது. ஆனால் இப்போதைய அவரின் செய்கையில் தான் மட்டுமில்லாமல் தம்பிகளுக்கும் வெறுப்பு வர, அவரை வீட்டிற்குள் சேர்க்கவே கூடாது என்பதில் மங்கம்மா உறுதியாக இருக்க, மூன்று பிள்ளைகளும் அவளுக்கு உறுதுணையாக இருந்தனர்.

    என்னடா பெரியவனே… வீட்டைப் பூட்டி சாவியைக் கொண்டு வந்துட்டல்ல. அந்த மனுசனோட உறவே எனக்கு வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கு அப்பாதான் முக்கியம்னு தோணுச்சுனா… நீங்க அவரோடப் போகலாம். நான் யாரையும் தடுக்க மாட்டேன். அப்படி போற எவனும் திரும்பி வரக் கூடாது என்றதும்…

    உன் சொல்லுக்குக் கட்டுப்படுவோம் மா. ஆனால் ஒன்னு… வெத்தலைத் தோட்டம் தாத்தா கொடுத்ததுதானே… அதை கொடுத்துடுவோம் மா. பாவம் வெளியே கூலிவேலைக்குப் போனால் நமக்குத்தானே அவமானம். அது பத்தி யோசிச்சு நல்ல முடிவு எடுங்கம்மா என்ற முத்தையாவை கோபத்துடன் பார்த்தாள் மங்கம்மா.

    உங்கப்பன் அதையும் தொலைச்சுட்டு வந்து நிற்பான். பொம்பள மோகம் அந்தளவுக்கு அந்தாளைப் பிடிச்சு ஆட்டுது. திம்ம மாதிரி திங்கிறதும் எருமை மாதிரி தூங்குறதும்தான் அந்தாளுக்குப் பொழப்பு! சரி தொலையட்டும் நம்ம மேலே இம்புட்டு அன்பு வச்சிருக்கானே… அது போதும்னு நினைச்சு நான் ஏமாந்து போனேன்.

    எங்கம்மா அப்பவே சொன்னாள். நான்தான் கேட்கலை. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டான். அந்தப் பெண்ணோட வயித்தைப் பார்த்துதான் உயிரோடு விட்டுட்டு வந்தேன். இல்லேனா… மிதிச்சே கொன்னுருப்பேன் என்று மங்கம்மா ஆவேசமாய் பேச…

    அதுக்காகத்தான்மா வெத்தலைத் தோப்பை கொடுத்துடலாம்னு சொல்றேன். பிறக்கப்போற சின்ன உயிர் கஷ்டப்படனுமா… அது என்ன பாவம் பண்ணுச்சு…? யோசிங்கம்மா என்றவன் மளமளவென்று உள்ளே போனதும், மங்கம்மா நீண்ட நேரம் யோசித்தாள். மூத்த மகன் சொல்வது நியாயம்தான்! ஆனால்… துப்புக்கெட்ட மனுசன் வித்துட்டா என்ன பண்றது…? உழைக்காமல் சாப்பிட்டு உடம்பில் கொழுப்பேறிப் போனதால்தானே… வேறொரு பெண் தேவைப்படுது… உழைத்து சாப்பிட்டால்தான் புத்தி வரும் என்று மனசுக்குள் சொல்லியபடி… சாப்பிட வாங்கடா என்றபடி அடுக்கலைக்குள் நுழைந்தாள்.

    சாப்பிட அமர்ந்த மூன்று பிள்ளைகளுக்கும் வெள்ளித்தட்டில் சுடச்சுட அன்னமிட்டு குழைய வேக வைத்திருந்த கெட்டியாக கடைந்து வைத்திருந்த அமுதுக்கிணையான துவரம்பருப்பை இரண்டிரண்டு கரண்டிகள் விட்டு நெய்யூற்றினாள்.

    கத்தரிக்காய் வதக்கலையும், அவரைக்காய் பொரியலையும், வாழைக்காய் வறுவலையும் அருகருகே வைத்தாள். முருங்கைக்காய் சாம்பார், மாங்காய் ரசம், கெட்டித்தயிர் என்று அனைத்தையும் கொண்டு வந்து வைத்தாள்.

    நீங்களும் உட்காருங்க மா சேர்ந்து சாப்பிடுவோம் என்ற இளையமகன் பாலயாவை பார்த்து புன்னகைத்தாள். கடைக்குட்டி ராமைய்யா சாப்பிடும்போது பேச மாட்டான். ருசித்து சாப்பிடுவான். கடைக்குட்டி மகன் சாப்பிடும் அழகை அருகிலிருந்து ஆனந்தமாய் ரசிப்பாள் மங்கம்மா. இன்று எதையுமே ரசிக்க முடியவில்லை. சுப்பையாவின் நினைவுகள் அலைக்கழித்தன. நீ என் உசுருமா என்றவன் கேவலம் உடல் சுகத்துக்காக 25 ஆண்டுகால தாம்பத்தியத்தை அலட்சியப்படுத்திவிட்டுப் போயிருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை. அதுவும் மகன் வயதுள்ள பெண்ணுடன்…

    அம்மா. முத்தையாவின் குரலில் தன்னிலைக்கு வந்த மங்கம்மா, புருவம் உயர்த்தி மகனைப் பார்த்தாள். "சாப்பிடுமா, தேவையில்லாமல் வருத்தப்படாதே. உனக்கு நாங்கள் இருக்கோம். யார் என்ன பேசினாலும் சட்டை செய்யாதே. அப்பா உனக்கு வேண்டாமென்றால் எங்களுக்கும்

    வேண்டாம். உன்மேல் பாசமிருந்தால் இப்படி செய்ய மாட்டார். அதையே நினைத்து உன் நலத்தை கெடுத்துக் கொள்ளாதே…"

    ஊர் உலகத்தைப்பத்திக் கவலையில்லை முத்தையா. எங்கப்பாவிற்கு தெரிந்தால் என்மேல் கோபப்படுவார். உங்கப்பா மேல் அவருக்கு பாசம் அதிகம்.

    அம்மா… நான் ஒன்னு கேட்டால் தவறா நினைக்கக் கூடாது. அப்பா உன்னை விட வயதில் சிறியவரா…

    ம்ம்ம்… நாலு வயது சின்னவர். பத்து வயது சிறுவனாக எங்க வீட்டிற்கு வந்தார். எனக்கு 14 வயது. உங்க பெரியம்மா கல்யாணமாகி போய்ட்டா. எங்கம்மா உடம்புக்கு முடியாமல் இருந்ததால் உங்கப்பாவிற்கு சாப்பாடு போடுவதிலிருந்து பள்ளிக்கூடம் அனுப்புவது வரை நான்தான் செய்வேன். வரவு செலவு கணக்கையெல்லாம் வீட்டில் நான்தான் பார்ப்பேன். தாத்தாவிற்கு நான் இல்லையென்றால் வேலையே ஓடாது. உங்கப்பாவிற்கு வாலிப வயது வந்த போதுதான் அவரோட மனசில் நானிருக்கேனு தெரிஞ்சுது.

    அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கோபத்தில் பலமுறை அடித்தும் கல்லுளிமங்கனாட்டம் இருந்தாரே தவிர, தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை. எது சொன்னாலும் அழுது அழுது என்னைத்தான் கட்டிப்பேனு வைராக்கியமாய் இருந்தார். நாளடைவில் உங்கப்பாவின் மென்மையான மனசை நானும் விரும்ப ஆரம்பிச்சுட்டேன். ஆனால் உங்கப்பாவிற்கு எங்கப்பாவிடம் பேச பயம். கடைசியில் நான்தான் பேசினேன். எங்கப்பாவை சம்மதிக்க வைத்தேன். எந்த சூழ்நிலையிலும் சுப்பையாவை நீ கைவிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டுதான் கல்யாணத்தை முடித்தார். இந்த பாவி இப்படி கெட்டழிவானு தெரிஞ்சிருந்தா சத்தியம் செய்திருக்க மாட்டேன் என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட அம்மாவின் கண்கள் கலங்கியிருந்ததை கவனித்தான் முத்தையா.

    4

    அறுவடை முடிந்து நெற்களஞ்சியத்தில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக அடுக்கி வைத்ததும், மறுநாள் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்தக் கிழமையில் துவங்கி இந்த கிழமைக்குள் அறுவடை முடிந்து, போர் அடித்து, பதர் நீக்கி நெல் மூட்டைகள் வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்று அம்மா துரிதப்படுத்தியது நல்லதாகப் போயிற்று. இந்த மழை இரண்டு மூன்று நாட்களுக்கு முன் பெய்திருந்தால்… முத்தையாவிற்கு நினைத்துப் பார்க்கும்போதே வயிறு பிசைந்தது. அம்மாவிற்கு வான சாஸ்திரம் தெரியுமோ என்ற திகைப்பு கூட ஏற்பட்டது.

    முற்றத்தில் கொட்டிய மழைநீரை பெரிய பெரிய அண்டாக்களில் நிரப்பி தாம்பாளம் கொண்டு மூடிவைத்துக் கொண்டிருந்தாள் ரெங்கம்மா. காலரா என்னும் கொள்ளை நோயில் கணவன் இறந்தபின், மங்கம்மாவிடம் அடைக்கலம் தேடி வந்தவள். அடுப்பங்கரை பொறுப்பை ஏற்றுக் கொண்டதோடு, தன் நேர்மையான குணத்தால்… மங்கம்மாவின் சிநேகிதியாகவும் அங்கீகாரம் பெற்றவள் என்பதும் உண்மை. அம்மா துலாக்கோல் போல் இம்மியளவும் பிசகாத குணம் கொண்டோரை பெரிதும் மதிப்பவள் என்ற வகையில் ரெங்கம்மா ஸ்திரமாக இங்கேயே தங்கி விட்டாள்!

    தம்பி… நீ ஒரு கை பிடிச்சா… அடுப்பங்கரையில் அண்டாவை வச்சுடலாம். மழைநீர் அமுதம். இதை வீணாக்கக் கூடாது.

    கிணறு நிறைய தண்ணீர் இருக்கேமா. இது எதுக்கு என்ற முத்தையாவிடம்…

    நல்லா கேட்டீங்க போங்க. இந்த தண்ணீரில் சுக்குப்பொடி போட்டு காய்ச்சி வடிகட்டி குடிச்சா… எந்த நோயும் அண்டாதுனு உங்கம்மா சொன்னதிலிருந்து மழை வந்தால் பிடிச்சு வச்சிருவேன்.

    என்னமோ செய்ங்க… நீங்க நகர்ந்து போங்கமா. நானே தூக்கி வச்சுடுறேன் என்றபடி கிட்டத்தட்ட ஏழெட்டு அண்டாக்களைத் தூக்கிக் கொண்டுபோய் அடுப்பங்கரையில் தண்ணீருக்கென்றே அமைத்திருந்த மேடையில் வைத்துவிட்டு, அம்மாவிடம் நான் வெளியே போயிருக்கேனு சொல்லிடுங்க. இருட்டுவதற்குள் வந்துடுவேன் என்ற முத்தையா வாசலை நோக்கி விரைந்தான்.

    வயற்காட்டின் ஓரமாய் ஒரு ஓட்டு வீட்டைக்கட்டி அதில் அப்பாவை இருக்க செய்தான் முத்தையா. சாப்பாட்டிற்கான அனைத்துப் பொருட்களையும் அனுப்பி வைத்தான். காய்கறிகள் பழங்கள் போன்றவற்றையும் கொடுத்தனுப்பினான்.

    உங்கம்மாவிற்குத் தெரிந்தால் என்னாகும்னு யோசிச்சியா… என்ற சுப்பையாவிடம், அதை நீ யோசிச்சிருக்கனும் அப்பா என்றவன், நடந்தது நடந்துபோச்சு. இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.

    மகன் முத்தையாவின் கைகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்ட சுப்பையா, உன்னைப் பார்க்கும்போது எங்கப்பாவே மறுஜென்மம் எடுத்து வந்த மாதிரி இருக்குப்பா. என்னை மன்னிச்சுடு முத்தையா… ஏதோ என் கெட்ட நேரம் தப்பு பண்ணிட்டேன். அப்பாவை மறந்துடாதப்பா என்ற தந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டான். சரி சரி போனதை விடுங்க. இந்தப் பெண்ணிடமாவது ஒழுங்கா இருங்க. உங்கண்ணன் சகவாசத்தை விட்டுத் தொலைங்க என்ற முத்தையா, உடனிருந்தப் பெண்ணிடம் இதோ பாரும்மா… எங்கப்பாவை உன் பொறுப்பில் விட்டுட்டுப் போறேன். பத்ரமா பார்த்துக்கோ. உங்க இரண்டு பேரையும் எங்கம்மா விரட்டி விடத்தான் சொன்னாங்க. எனக்கு மனசு கேட்கலை. அதில் எனக்கு விருப்பமுமில்லை. அதனால்தான் இந்த ஏற்பாடு. இதனால் எனக்கும், அம்மாக்கும் மனக்கசப்பு வரத்தான் வரும். வந்தாலும் பரவாயில்லைன்னுதான் இந்த முடிவை எடுத்தேன். நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு அது பார்த்துக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கேன். நான் போய்ட்டு வரேன் என்ற முத்தையாவை பிரமிப்போடு பார்த்தாள் வீரம்மா.

    மாமா… உங்க பிள்ளைத் தங்கமானப் பிள்ளையா இருக்கே…

    ஆமா, எங்கப்பா மாதிரி அவன்.

    க்க்க்கும். உங்கப்பா மாதிரி இல்லை. இது சொக்கத் தங்கம் என்ற வீரம்மாவை வியப்புடன் பார்த்த சுப்பையா, ஓரிருமுறை பார்த்ததில் தெரிஞ்சுகிட்டியா நீ… அப்ப நீ விவரம்தான் புள்ள. என் மங்கம்மாவையே நீ மறக்க வச்சுட்டியே…

    ஏன் சொல்ல மாட்டிங்க…? ஐயோ பாவம் பெரிய மனுசன். ஒரு டீத்தண்ணிக்காக மலையிறங்கி நம்ம குடிசைக்கு வராரேனு டீ வச்சுக் குடுத்தேன். என் தாத்தா வெளியூர் போன நேரம் பார்த்து ஏதேதோ பேசி என்னை மயக்கிட்டு, அந்தப் பழியை என்மீது சுமத்துறீங்களே… பிள்ளை பொறக்குறதுக்கு முன் என் கழுத்துல ஒரு மஞ்சக் கயிறைக் கட்டிடுங்க சாமி. உங்களுக்குப் புண்ணியமாப் போகும். என்னால் வைப்பாட்டியா காலம் முழுவதும் இருக்க முடியாது. பிறக்கப்போறது பெண்ணோ, பிள்ளையோ அதுக்கும் ஒரு மரியாதை வேணும்ல…

    ம்ம்ம்… பார்ப்போம்.

    என்னத்தைப் பாக்கிறது…? பார்த்ததெல்லாம் போதாதா… அதான் உங்க பொண்டாட்டி தாலியை அறுத்துப் போட்டுட்டு போய்ட்டாங்கல்ல… இன்னும் ஏன் சுணங்குறீங்க என்ற வீரம்மாவை வெறித்துப் பார்த்தான் சுப்பையா. வீரம்மாவின் இருபது வயது இளமை தன்னை ஈர்த்ததே தவிர, பெரிய அழகி என்று சொல்ல முடியாது. அழகுக்கும், அறிவுக்கும், ஆளுமைக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவள் மங்கம்மா மட்டுமே. அற்ப சுகத்திற்காக அவளை இழந்து நிற்பது புரியாமல் இவள் வேறு நம்மை நச்சரிக்க துவங்கி விட்டாளே என்ற எண்ணம் தலைதூக்க…

    அடக்கமா இருடி. ஆட்டம் போடாதே. பெண்டாட்டி ஆகனும்னு ஆசை வந்துடுச்சா… தாலியை அறுத்துப் போட்டாலும் மங்கம்மா ஒருத்திதான் என் பெண்டாட்டி. வேற எந்த கழுதையும் என் பெண்டாட்டி ஆக முடியாது. உடம்புல சொகுசு ஏறிப் போச்சுல்ல. அதான் உன்னை இப்படிப் பேச வைக்குது.

    சுப்பையாவின் பேச்சில் அரண்டு போனாள் வீரம்மா. நைச்சியமாகப் பேசி தனக்குரிய அங்கீகாரத்தை எப்படியும் வாங்கி விடலாம் என்று கணக்குப் போட்டுத்தானே இவர் ஆசைக்கு இணங்கினேன் என்று மனசுக்குள் பொங்கினாள். அதையும் பார்ப்போம் பெண்டாட்டி மேல் இவ்வளவு அன்பும், அக்கறையும் இருக்கா உனக்கு…? உன்னை விட நாலு வயசு மூத்தவளைக் கட்டிக்கிட்டு வாழ்ந்த உனக்கு, இருபது வயசே ஆன நான் பெண்டாட்டியாகக் கூடாதா… என்று மனசுக்குள் கருவினாள்.

    என்னடி முறைக்கிறே…

    நான் ஏன் முறைக்கப் போறேன். என் தலையெழுத்து இதுதானு ஆகிப்போச்சு. அக்கா மேல் இம்புட்டு பாசம் வச்சுருப்பது இப்பத்தானே எனக்குத் தெரியுது. முன்னமே தெரிஞ்சிருந்தா விலகி போயிருப்பேன். இப்படி இக்கட்டில் மாட்டி வச்சிருக்க மாட்டேன். அக்கா உங்களை இழுத்துப்போட்டு மிதிச்ச போது கூட உங்களுக்கு கோவம் வரலையேன்னு தோணுச்சு. இப்பதான் புரியுது உங்க பாசம். அதில் நூத்துல ஒரு பங்காவது என்மேல் இருக்கும்னு நம்புறேன்.

    இல்லாமலா… உன் கூட வந்து இருக்கேன். உன் பாசத்துல என்னைக் கட்டிப்போட்டு வச்சுருக்கியேடி. இல்லேனா ஒரே நாளில் ஓடிப் போயிருப்பேன். என் பெண்டாட்டியை மறந்துட்டு வாழ்றது கொடுமைதான் எனக்கு. என் தலையெழுத்து இப்படியாகும்னு நான் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை.

    சரி விடுங்க. இதையெல்லாம் நினைச்சு இனி என்ன ஆகப் போகுது. உங்க பிள்ளைதான் பாவம் அப்பாவையும் விட்டுக் கொடுக்காமல், அம்மாவையும் விட்டுக் கொடுக்காமல் அலையுறாரு.

    அது சரி. பிள்ளைக்கு எப்ப கல்யாணம் பண்ணப் போறீங்க…?

    வீரம்மாவின் கேள்வி சுப்பையாவை திகைக்க வைத்தது. இதை நாம் யோசிக்கவே இல்லையே என்ற எண்ணம் வர, மங்கம்மா அதைப் பார்த்துக் கொள்வாள் என்று முணுமுணுப்பாய் கூற…

    அது சரிதான். உங்களை யார் அங்கு மதிக்கிறாங்க… எல்லாமே அக்காவோட ஆதிக்கத்துலதானே நடக்குது என்று நைச்சியமாகப் பேசியதோடு, சுப்பையாவின் தோளில் சாய்ந்துகொண்டு கன்னத்தை வருட, வீரம்மாவின் சாதுர்யமானப் பேச்சில் மயங்கிய சுப்பையா அவளை அணைத்துக் கொண்டான்.

    5

    ஏலச்செடியில் பிஞ்சு பிடிக்க ஆரம்பித்ததும் ஏலக்காய்த்தோட்டத்தின் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டான் முத்தையா. தினமும் வந்து போக முடியாதென்பதால், மங்கம்மா பண்ணையாளான முருகனை முத்தையாவின் துணைக்கு அனுப்பி வைத்தாள். சமைப்பது, துவைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது என்று அனைத்து வேலைகளையும் முருகனே செய்துவிடுவதால் முத்தையாவிற்கு ஏலச்செடிகள் ஒன்றுவிடாமல் கவனமாய் பார்த்துப் பார்த்து பராமரிப்பது முக்கிய வேலையாகிப் போனது.

    ஏலக்காய்ச்செடி மிக நுட்பமான பயிர்! சூரியனின் நேரடியான வெப்பத்தை இதனால் தாங்க இயலாது என்பதால், இடை இடையே சிவப்பு தேவதாறு, பலா போன்ற குறுமரங்களை வளர்த்தாக வேண்டும். ஏலக்காய் விதைகள் விதைக்கப்பட்டு முளைவிடும் நாற்றுகள் ஆறுமாத இடைவெளியில் மீண்டும் வேறு இடங்களில் நடப்படும். இவ்வாறு நடப்படும் செடிகள் மூன்றாண்டுகளுக்குப் பிறகே மகசூலைக் கொடுக்கும். களையெடுப்பு முடிந்ததும் ஒவ்வொரு செடியின் அடியிலும் சருகுகளையும், இலைகளையும் பரப்பிவிடும் போது நிலத்தின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும். காலை, மாலை இரு வேளையும் மிதமான அளவில் நீர் பாய்ச்ச வேண்டும். புழு பூச்சிகள் அண்டாதவாறு அதற்கான மருந்துகளை செடிகளில் தண்ணீரில் மிதமாகக் கலந்து பீய்ச்சியடிப்பது அவசியம்.

    வெத்தலைத் தோட்டத்தில் வந்த வருவாயைக் கொண்டு நெல்விளையும் பூமியையும், இவற்றின் வருவாயைக் கொண்டு அம்மாதான் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள இந்த ஏலக்காய்த் தோட்டத்தையும் வாங்கினாள். அம்மாவின் பதினெட்டு ஆண்டுகால உழைப்பில்தான் வயலும், ஏலக்காய்த் தோட்டமும் வாங்கப்பட்டது.

    இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்தை வாங்கி பதப்படுத்தி பலா, தேவதாறு மரங்களை நட்டு, மிளகுக் கொடிகளை படரவிட்டு ஏலக்காய் விளைவிக்க அம்மா உழைத்த உழைப்பு சொல்லி மாளாது. வஞ்சனையில்லாமல் உணவு வழங்குவதிலும் சரி, கூலி வழங்குவதிலும் சரி சுற்று வட்டாரத்தில் அம்மாவை மிஞ்ச யாருமே இல்லை.

    நீர்பாசனம் சரியாக உள்ளதா… என்று கவனித்தபடி ஒவ்வொரு செடியையும் சுற்றி சுற்றி வந்தான் முத்தையா. அழகாகவும், அடர்த்தியாகவும் ஏலக்காய் விளைந்திருந்ததைப் பார்த்ததும் மனசு குதூகலித்தது. சாதாரணமாய் ஒரு ஏக்கருக்கு 500 கிலோ என்ற அளவில் விளைச்சல் இருக்கும். காய வைத்து பதப்படுத்திய பின் 100 கிலோ என்ற அளவில் கிடைக்கும். இம்முறை விளைச்சலைப் பார்க்கவும் சற்றுக் கூடுதலாகவே கிடைக்கும் என்றெண்ணினான். வீட்டிற்கு வந்ததும் முருகனிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான்.

    அம்மாவோட நல்ல மனசுக்கும், அவங்க செய்யும் தான தர்மத்திற்கும் இயற்கை அளிக்கும் கொடைதான் இது என்று அங்கீகரித்த முருகனிடம்…

    நீங்க ஒரு வாரம் உங்க குடும்பத்தோட இருந்துட்டு வாங்க. நான் ஏதோ செய்து சாப்பிட்டுக்குவேன். தம்பிகளை நான் வரச்சொன்னேனு சொல்லுங்க. அவங்களுக்கும் பல விசயங்களை சொல்லித் தரனும். அறுவடையும் முடிஞ்சிருச்சு. வெத்தலைத் தோட்டத்தை பரமசிவம் பார்த்துப்பார். அம்மா வந்தால்கூட நல்லாதான் இருக்கும். விளைச்சலைப் பார்த்து சந்தோசப்படுவாங்க என்று சொல்ல…

    சரிங்க தம்பி. நாளைக்குப் புறப்பட்டுப் போறேன்.

    போகும்போது பலாப்பழம் அஞ்சாறு கொண்டு போங்க. ஏதாவது வண்டி வரும் ஏத்தி விடுறேன். அதில் ஒன்றை அப்பாவுக்கு அனுப்பிடுங்க.

    சரிங்க தம்பி. குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம். உங்களுக்கு பிடிச்ச நெய்சோறும், கறிக்குழம்பும் வச்சிருக்கேன்.

    அட…டே… அப்படியா…?! என்றபடி முத்தையா மூச்சை இழுத்து விட கறிக்குழம்பின் வாசனையும், நெய் சோற்றின் மணமும் அசத்தியது. பத்தே நிமிசத்தில் குளித்து விட்டு சாப்பிட அமர்ந்த முத்தையா, ஆகா… ஆகா என்று ஒவ்வொரு வாய் உண்ணும்போதும் சிலாகித்தான்.

    உங்க கைமணம் அபாரம். எப்படி இப்படி சமைக்கக் கத்துக்கிட்டீங்க…?

    "அட போங்க தம்பி. நிறைய

    Enjoying the preview?
    Page 1 of 1