Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swasamai Nee...!
Swasamai Nee...!
Swasamai Nee...!
Ebook179 pages1 hour

Swasamai Nee...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகேஷ் சஞ்சனா என்ற பெண்ணை காதலிக்கிறான். இதையறிந்த அவனது தந்தை சஞ்சனாவை சந்தித்து முறைப் பெண்ணான ரேணுகா மகேஷை காதலிப்பதாக சொல்லி விட்டு கொடுக்கச் சொல்லி தன்மையுடன் கேட்க...

ஊரை விட்டு வேறிடம் செல்ல திட்டமிடுகிறாள்.

நெருங்கிய தோழிக்குக் கூடத் தெரிவிக்காமல் இடம் பெயர்கிறாள். மகேஷ் விருப்பமில்லாமல் முறைப்பெண்ணை மணக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவர்களின் மணவாழ்க்கை எப்படி போகிறது... சஞ்சனா மகேஷூடன் மீண்டும் இணைகிறாளா... இல்லையா... என்பதுதான் கதை!

Languageதமிழ்
Release dateJul 4, 2022
ISBN6580144708687
Swasamai Nee...!

Read more from Ilamathi Padma

Related to Swasamai Nee...!

Related ebooks

Reviews for Swasamai Nee...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swasamai Nee...! - Ilamathi Padma

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுவாசமாய் நீ…!

    Swasamai Nee...!

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் - 1

    சஞ்சனா வளவளவென்று பேசக் கூடியவள் இல்லை. ஆனால்… இன்று அதிகமாக அமைதி காப்பது போல் தெரிந்தது. பத்தடி தூரத்தில் அமர்ந்திருந்த பாவனாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போது பிரேக் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள். தேநீர் இடைவெளிக்குக் கூட இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்த சஞ்சனா புதிராகத் தெரிந்தாள்.

    ஏய்ய்… சஞ்சு டீ குடிக்கப் போகலாம் வா…

    ப்ச்ச்…. வேண்டாம்

    "ஏன்… மூஞ்சி முகரையெல்லாம் உப்பலா இருக்கு அழுதாயா… மனம் விட்டு பேசித் தொலையேன். தாத்தாவிற்கு உடம்பு சரியில்லையா…?

    சாயந்திரம் சொல்றேன்.

    சிதம்பர ரகசியமா சொல்லப் போறே… சொல்லித் தொலையேன்

    இல்லை! பிறகு சொல்கிறேன்

    அலுவலகம் முடிந்த பின் பாவனா, சஞ்சனாவைத் தேடி வந்தாள். வா… கேன்டீன் போகலாம் காஃபி குடித்துக் கொண்டே பேசலாம். உலகத்து சோகத்தையெல்லாம் ஒட்டு மொத்தமாய் அனுபவிக்கிற மாதிரி முகத்தை வச்சுக்கனுமா… எதுவாக இருந்தாலும் அதற்கு தீர்வுனு ஒன்று இருக்கும்! என்ன பிரச்சனை….இப்பவாச்சும் சொல்லேன்.

    ம்ம்ம்… நேற்று மகேஷின் அப்பா வந்தார். கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னை திணறடித்தார். மகேஷ்க்கு முறைப்பெண் இருக்காளாம். அவளைதான் மணக்கப் போகிறானாம்! நான் அவனை விட்டு விலகனுமாம்!

    சபாஷ்! அதுக்குத்தான் பணக்கார வீட்டுப் பிள்ளையின் காதலை ஏற்றுக் கொள்ளாதேனு சொன்னேன். நீ கேட்கலையே… இப்ப என்னாச்சு பார்… நீ என்ன சொன்னாய்…?

    என் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, என் தங்கை பெண் வாழ்க்கை உன் கையில்தான் இருக்கு. ஏற்கனவே அம்மா அப்பாவை இழந்தவள். மகேஷ் மேல் உயிர் இருக்கா…விட்டுக் கொடும்மானு தன்மையா கேட்கும் போது என்ன செய்ய முடியும் சொல்லு…? சரினு சொல்லிட்டேன்.

    எமோஷ்னல் பிளாக்மெயில்! இது மகேஷ்க்கு தெரியுமா…?

    சொல்லாமல் எங்காவது வெளியூர் போய்டலாம்னு இருக்கேன்

    முட்டாளே… எங்கடி போவாய்…? உன்னால் மகேஷை மறக்க முடியுமா…?!

    முடியனும்! மகேஷ் அப்பாவிடம் ஒரு மாதம் டயம் கேட்டிருக்கேன். அதற்குள் ஏதாவது பிளான் பண்ணனும். தாத்தா கிராமத்து வீட்டையும், நிலத்தையும் விற்க ஊருக்குப் போயிருக்கார்.. அவர் வருவதற்குள் வெளியூர் போக பிளான் பண்ணனும்! ஒரு வாரம் விடுமுறை கேட்டு அப்ளை செய்திருக்கேன். மகேஷ் வந்தால் உனக்குத் தெரியாதுனு சொல்லி அனுப்பிடு.

    திமிராடி உனக்கு… உருகி உருகி காதலிப்பீங்க… பிறகு வேண்டாம் விலகிடலாம்னு முடிவெடுப்பீங்க… அதற்கு நான் உதவனுமா…? ராஸ்க்கல்! சரி அதை பிறகு யோசிப்போம். தாத்தாதான் இல்லையே… என் வீட்டுக்கு வாயேன். இரண்டு நாள் நானும் லீவ் போடுறேன். ஜாலியா ஊர் சுத்தலாம். ஷாப்பிங் போகலாம்.

    இல்லை பாவனா… கொஞ்சம் வேலை இருக்கு!

    சரி போய்த் தொலை! ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடு என்ற பாவனா விடை பெற்று சென்றதும், டூ வீலரை உயிர்பித்து வீடு வந்து சேர்ந்தாள் சஞ்சனா. மனம் முழுவதும் மகேஷ் நிறைந்திருந்தான். மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்ததை இதுவரை பாவனாவிடம் கூட பகிர்ந்ததில்லை. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லைதான். ஆனால்… மகேஷ் தன்னுடையவன் என்று நினைத்துக் கொண்டிருந்த போது… முளை விட்ட பயிரில் வெந்நீர் ஊற்றியது போல்… தன்னை பொசுக்கி விட்டுப் போனது காலமா அல்லது மகேஷின் அப்பாவா….? சட்டென்று நினைவிலிருந்து மீண்டவளாய் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் சஞ்சனா…வேண்டாம்! இனி மகேஷ்க்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். கட்டுக்கடங்காமல் வந்த கண்ணீரை வழிய விடாமல் கட்டுப்படுத்தினாள். இரண்டு வருச பழக்கத்தில் இப்படி மாய்ந்து போகிறாயே… கூடவே வளர்ந்து மகேஷ் மேல் உயிராய் இருக்கும் ரேணுகாவிற்கு மகேஷ் என்னைக் காதலிப்பது தெரிய வந்தால் எப்படித் துடித்துப் போவாள்…?? கடவுளே… என்று பலவாறாக யோசி்த்தபடி பித்துப் பிடித்தவளாய் வளைய வந்தாள்.

    மருத்துவ முகாமிலிருந்த மகேஷிற்கு அவ்வ போது சஞ்சனாவின் நினைவு வந்தாலும் படிப்பும், கடமையும் அதை விட முக்கியம் என்று போன் கூட செய்யாமல் அமைதியாக இருந்தான். இரண்டு முறை போன் செய்த அப்பாவின் அழைப்பிற்கு மட்டும் பதில் சொன்னான். ஆயிற்று இந்த வருடத்தோடு படிப்பு முடிகிறது. மேற்படிப்புக்கு அமெரிக்கா போகனும்! அதற்குள் சஞ்சனாவை மணந்து கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு நாளில் முகாம் முடிந்துவிடும். முதலில் சஞ்சனாவை சந்திக்கனும்! அறிவிப்பின்றி அவளெதிரில் நின்று அவளை திகைக்க வைக்கனும்! என்று நினைத்த போதே இனித்தது.

    ***

    அழைப்புமணி இடைவிடாமல் ஒலிக்க, சற்று சினத்தோடு வாசலுக்கு விரைந்த சஞ்சனா… மகேஷை கண்டதும் திகைத்துப் போய் அப்படியே நின்றாள். உள்ளே வரலாமா மேம் சாப்…? புன்சிரிப்பாய் கேட்டவனுக்கு நகர்ந்து வழி விட்டாள். உனக்கெப்படி என் வீடு தெரியும்…?

    ஆ… இராணுவ ரகசியம் மாதிரி சொல்லாமல் மறைத்தால் கண்டு பிடிக்க மாட்டோமா… தாத்தாவைக் கூப்பிடு நம் திருமணம் குறித்து அவரோடு நான் பேசனும்!

    தாத்தா இல்லை! வெளியூர் போயிருக்கார். காஃபி தரேன் குடிச்சுட்டு புறப்படு. மெய்டு வர்ற நேரம் அவள் தவறா நினைச்சுட்டா வம்பாய்டும்!

    "ஏன்… நான் ஏன் போகனும்…? கேம்பிலிருந்து நேரா இங்கதான் வரேன்.தாத்தா வரும் வரை இங்கதான் இருக்கப் போறேன் என்றபடி சுவாதீனமாய் டிராவல் பேக்கை அறையில் கொண்டு வைத்த மகேஷ்…

    நான் குளிச்சுட்டு வரேன். சாப்பிட ஏதாவது செய் ரொம்ப பசிக்குது! என்றதும் குழப்பத்தோடு சமைலறைக்குப் போனாள் சஞ்சனா. இட்லியும் வேர்கடலை சட்னியும் செய்து விட்டுத் தவிப்போடு உட்கார்ந்திருந்தாள். தலையை துவட்டியபடி வந்த மகேஷ்…

    நீ சாப்ட்டியா… வா இரண்டும் பேரும் சேர்ந்து சாப்பிடலாம். லஞ்ச் என்ன செய்யப் போறே…?

    அடிதான் கிடைக்கும்! அம்மா தேடப் போறாங்க டா. டிபன் சாப்ட்டுட்டு மரியாதையா வீட்டுக்குப் போய்டு.

    அடிப்பாவி! அம்மாவைக் கூட பார்க்காமல் உன்னைத் தேடி வந்தால் இப்படியா விரட்டுவாய்… ஒரு இரண்டு நாளாவது இருக்க விடேன்.

    சான்சே இல்லை! உன்னைப்பத்தி தாத்தாவிடம் சொன்னதே இல்லை. திடீர்னு வந்துட்டார்னா… பிரச்சனையாய்டும்! தயவுசெய்து கிளம்பிடு.

    "வரட்டுமே… விசயம் தெரிஞ்சா நல்லதுதானே… சுலபமா நம்ம கல்யாணம் நடந்துடும்!

    விளையாடாதே மகேஷ்… என்ற சஞ்சனாவை முறைத்தபடி, என் மேல் உனக்கு நம்பிக்கையில்லை! அதனால்தான் இப்படி பேசுறே. இரண்டு வருசமா பழகுறோம். ஒரு நாளாவது உன்னை விகல்பமா பார்த்திருக்கேனா…ஒரு சின்ன முத்தமாவது கொடுத்திருக்கேனா.. சொல்லு சஞ்சனா…?

    இல்லைதான்! ஆனால் இந்த தனிமை நம்மை எங்க கொண்டு போய் நிறுத்தும்னு தெரியாது உன்னை நம்புறேன் மகேஷ். ஆனால்… என் மேல்தான் எனக்கு நம்பிக்கையில்லை! போதுமா…?!

    "வாரே வா… நிஜமாவா…?! அப்ப சரி! கல்யாணத்திற்கு முன்பு ஒரு ட்ரையல் பார்த்துடலாமா…

    ம்ம்ம்.. கொன்னுடுவேன்! ஓடிப் போய்டு!

    சஞ்சனா… ஆர் யூ சீரியஸ்…?

    எஸ்! ஏதாவது தப்பாய்டுமோனு பயமா இருக்கு.

    "அடி போடி! நீயும் உன் பயமும்! நீ உன் ரூம்ல இருக்கப்போறே… நான் தாத்தா ரூமில்.. நீயே வந்து கதவைத் தட்டினாலும் கூட நான் திறக்க மாட்டேன். ஓகே வா… நாம் இரண்டு பேரும் சேர்ந்து சமைக்கலாம் வா என்ற மகேஷ் சொன்னபடி நடந்து கொண்டான். சாப்பிடும் நேரத்திற்கு மட்டும் வெளியே வந்தான். மற்ற நேரத்தில் புத்தகமும் கையுமாக இருந்தான். ஆனால்… சஞ்சனாவின் மனதில் குழப்பம் இருந்ததால் ரூமிலிருந்து ஹாலுக்கும், ஹாலிலிருந்து ரூமிற்குமாய் நடந்து கொண்டிருந்தாள். மகேஷின் மொபைல் விடாமல் ஒலிக்க, எடுத்துப் பார்த்த சஞ்சனா, ரேணுகாவின் பெயரைப் பார்த்ததும் சத்தமில்லாமல் வைத்து விட்டு அறைக்குத் திரும்பினாள்.

    மொபைல் எடுத்த மகேஷ், சொல்லு ரேணு… என்றான்.

    அத்தான்… இன்னும் கேம்ப் முடியலையா…?

    முடிஞ்சுருச்சு! நான் ஃபிரண்ட் வீட்லே இருக்கேன். என்ன விசயம் சொல்லு.

    மாமா கேட்க சொன்னாங்க.

    நான் என்ன சின்ன குழந்தையா… வருவேன்! உன் மாமாவை வருத்தப்படாமல் இருக்க சொல்லு. என்ற மகேஷ் அறை வாசலில் நின்றிருந்த சஞ்சனாவைப் பார்த்து… நீ தூங்கலையா இன்னும்…?என்றான்.

    இல்லை! தூக்கம் வரலை.

    ஏன்… என்ன பிரச்சனை உனக்கு…?

    நத்திங்! என்ற சஞ்சனா ஹாலில் உள்ள சோபாவில் வந்து அமர்ந்தாள். சஞ்சாவின் முகத்தில் தெரிந்த வெறுமை மகேஷை வருத்தியது. பக்கத்தில் வந்து அமர்ந்தான். இப்படி உன்னைப் பார்த்ததே இல்லை சஞ்சனா… எதைப்பற்றி யோசிக்கிறாய்…? முகத்தில் குழப்பம் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசு."

    என்னவோ தெரியலை எதையோ தொலைச்சுட்ட மாதிரி இருக்கு.

    ஹேய்… ஒரு வாரம் நான் ஊரில் இல்லாததுதான் காரணம்! அதான் வந்துட்டேனே… உன் பக்கத்தில்தானே இருக்கேன். என்றபடி சஞ்சனாவை தோளோடு சேர்த்தணைத்த மகேஷின் மேல் சாய்ந்தவள் விசும்பலுடன் கண்ணீரை சொரிய விட்டாள். "என் சஞ்சனா இப்படி தொட்டால் சிணுங்கியாக இருப்பாள் என்று நான் நினைக்கவே இல்லையே… வா.. உன்னைத் தூங்க வைத்து விட்டுப் போகிறேன் என்ற மகேஷ் சஞ்சனாவை அணைத்தபடி அறையில் வந்து அவளைப் படுக்க வைத்து இமைகளை மென்மையாக நீவி விட்டான். நெற்றியில் முத்தமிட்டு தூங்கு டா என்று கொஞ்சினான். கண்களை மூடிய சஞ்சனாவின் மனம் சஞ்சலப்பட்டது.

    Enjoying the preview?
    Page 1 of 1