Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanivaai Oru Kaadhal!
Kanivaai Oru Kaadhal!
Kanivaai Oru Kaadhal!
Ebook139 pages53 minutes

Kanivaai Oru Kaadhal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டேவிட், வசந்தன் இருவரும் நண்பர்கள். இலக்கியக் கூட்டம் ஒன்றில் தன் தோழி மதுமதியை அறிமுகப்படுத்துகிறான். மதுமதியைப் பார்த்ததுமே டேவிட்டின் மனதில் காதல் பூக்கிறது. தன் நண்பனிடம் சொல்ல, அவன் கவலைக்குள்ளாகிறான். மதுமதி காதலுக்கு எதிரானவள்! அவளிடம் உன் காதலை வெளிப்படுத்தி ஏமாறாதே என்கிறான். அதை ஏற்காத டேவிட் மதுமதி எனக்கானவள் என்ற எண்ணம் அவனுள் வேர் விடுகிறது. மதுமதியிடம் காதலை வெளிப்படுத்துகிறானா.. அவள் ஏற்கிறாளா...? இல்லையா... என்பதைத் தெரிந்து கொள்ள, இனி வாசியுங்கள்

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580144710934
Kanivaai Oru Kaadhal!

Read more from Ilamathi Padma

Related to Kanivaai Oru Kaadhal!

Related ebooks

Reviews for Kanivaai Oru Kaadhal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanivaai Oru Kaadhal! - Ilamathi Padma

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கனிவாய் ஒரு காதல்!

    Kanivaai Oru Kaadhal!

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் –3

    அத்தியாயம் –4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் –6

    அத்தியாயம் –7

    அத்தியாயம் –8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் –11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் –15

    அத்தியாயம் – 1

    இரண்டு நாட்களாக எதையோ தொலைத்தவன் போல் வளைய வந்த டேவிட்டை கவனித்தபடி சமையலை செய்து முடித்தான் வசந்தன். அவனே சொல்லுவான் என்று எதிர்பார்த்தான். அது நடக்கவில்லை என்னும் போது, வசந்தன் தானாகவே டேவிட்டின் மெளனத்தை உடைத்தான். சற்று கோபமாகவே பேசத் துவங்கினான்.

    பொண்டாட்டி செத்தவன் மாதிரி முகம் ஏன் தொங்கி கிடக்கு...? என்றான் வசந்தன். காதில் பட்டாலும் பதில் சொல்ல விரும்பாதவனாய் மெளனமாக இருந்த டேவிட்டின் தோளைத் தட்டினான். டேய் மாப்ளே என்னாச்சு உனக்கு...?

    தெரியலை டா.

    என்னை நேரா பார்த்து பதில் சொல்லு! எதையோ மறைக்கிறாய் என்ற வசந்தன், டேவிட்டை தன்பக்கம் திருப்பினான். மாப்ளே மனசு விட்டுப் பேசினால்தான் நான் ஏதாவது செய்ய முடியும்! உன்னை மாப்ளே மாப்ளேனு ஏன் தெரியுமா சொந்தம் கொண்டாடுறேன்...? அப்படி கூப்பிட யாருமே இல்லை டா. உன்னைப் பார்த்துப் பழகிய பிறகு எனக்கு ஒரு தங்கை இல்லையேனு வருத்தப்பட்டிருக்கேன். இருந்திருந்தால் நீதான் டா என் வீட்டு மாப்பிள்ளை. மலையில் வளரும் நார்த்தங்காய்க்கும், கடலில் விளையும் உப்பிற்கும் என்ன சம்பந்தம்...? கடவுள் எப்படி இணைக்கிறான்...? அதுபோல்தான் நம் நட்பும்! யாருக்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இங்கு வந்து எனக்கு நண்பனானது தற்செயல்னு சொல்ல மாட்டேன். ஏதோ ஒரு பந்தம்! நீ நம்புறியோ இல்லையோ... நான் நம்புறேன். ஆனால் பல விசயங்களுக்கு உன்மேல் பொறாமைப்பட்டிருக்கேன். படிப்பு, அழகு, சம்பாத்தியம் முக்கியமாக அமைதியான உன்னோட குணம்! இப்படி அனைத்திலும் நீ நம்பர் ஒன்! நல்லப் பெண் வாழ்க்கைத் துணைவியாக அமைந்து விட்டால் உன் வாழ்க்கை முமுமையாகி விடும்! என்ற வசந்தனை ஏறிட்டுப் பார்த்த டேவிட், அதற்கு உன் உதவி தேவை" என்றான்

    கண்டிப்பா டா. உனக்குப் பெண் பார்க்க சொல்லட்டுமா...?

    ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு. எனக்காக அவளிடம் பேசணும்.

    வாரே வா.... காதலா... யார் அந்த மோகினி...?

    போன வாரம் இலக்கியக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினியே அவள்தான்!

    "யாரு... மதுமதியா...?! அவள் திமிர் பிடிச்சவள் டா. எவர் மைண்டா பேசுவாள். இதில் நான் தலையிட மாட்டேன். நீயே போய் சொல்லிக்கோ. செருப்படி வாங்கணும்னு உன் தலையில் எழுதியிருந்தால் அதை மாற்ற முடியுமா என்ன...?

    ஏன்டா பயமுறுத்துறே....திமிர் உனக்கில்லையா... எனக்கில்லையா... பெண்ணுக்கு இருந்தால் அது தவறா...

    அதுக்கில்லைடா. உனக்கு அவள் பொருத்தமானவளா... யோசிச்சியா...? கண்டதும் காதல் என்பது ஏற்புடையதாகாது டா மாப்ளே. நீ பொறுமைசாலி. அவள் முன்கோபி தவிர ஆளுமை மிகுந்தவள்! ஒரு பார்வை பார்த்தால் போதும் அடங்கிடுவாய்.

    இருக்கட்டுமே டா. என்ன கெட்டுப் போச்சு. மதுமதி என்னுடையவள்னு மனசு சொல்லுது. அவளை மிஸ் பண்ண மாட்டேன்.

    எக்கேடாவது கெட்டுப் போ. நீயே டீல் பண்ணிக்கோ.

    என்னடா இப்படி சொல்லிட்டே....?

    வேறெப்படி சொல்ல...? எனக்கென்னமோ இது நடக்காதுனு தோணுது.

    ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள அஸ்து கொட்டாதடா என்ற டேவிட் சோகமான முகத்தோடு சாலையை வேடிக்கை பார்த்தான். தான் அப்படி பேசியிருக்கக் கூடாதோ என்ற உறுத்தலோடு டேவிட்டின் அருகில் சென்று ஐயாம் சாரி டா மாப்ளே... நீ ரொம்ப சென்சிட்டிவ்! ஏமாற்றத்தை தாங்க முடியாமல் வேற ஏதாவது முடிவுக்கு வந்துட்டால் அது என்னை பாதிக்கும் டா. அதனால்தான் அப்படிப் பேசினேன். மன்னிச்சிடு! உனக்காக நான் ஒரே ஒருமுறை பேசிப் பார்க்கிறேன்.

    வேண்டாம்! நான் உணர்ந்தது போல் அவளும் உணர்ந்துட்டா பெட்டர்ல.

    நல்லது டா மாப்ளே...அப்ப சிரித்த முகத்தோடு இருடா. உன் எண்ணம் ஈடேற வாழ்த்துகள் என்ற வசந்தனின் மனதில் டேவிட்டைப் பற்றியக் கவலை அதிகமானது. மதுமதி சராசரி பெண்ணில்லை. சற்று மேம்பட்டு சிந்திப்பவள். காதல் என்ற சொல்லை கடுமையாக சாடுபவள். கொழுப்பெடுத்து திரியுதுங்க! என்று காதலிப்பவர்களை புறம் தள்ளுபவள். ‘அழகு’ என்று சொல்ல முடியாது. ஆனால் பேச்சிலும், நடத்தையிலும் ஒரு கம்பீரம் இருக்கும்.

    "என்ன யோசிக்கிறே... என்ற டேவிட்டை ஒருமுறை ஏற இறங்க பார்த்த வசந்தன், ‘காதலுக்கு கண்ணில்லை என்பது சரிதான் போல என்று முணுமுணுத்தான். வெட்கப்பட்டு சிரித்த டேவிட், இருக்கலாம்! ஆனால் காதல் நிஜம்! என்றான்.

    சரி சாப்பிட வா. உனக்குப் பிடித்த வெண்பொங்கல் செய்திருக்கேன்.

    பசிக்கலை டா. இன்று மதுமதியைப் பார்க்க முடியுமா...கண்ணுக்குள்ளேயே நிற்கிறாடா.

    ஓ... எதுக்கு நிற்கிறாள்... உட்கார சொல்லு டா.

    நக்கல் பண்ற பார்த்தியா...? என்ற டேவிட்டின் குரலில் வருத்தம் இழையோடியது.

    "டேய் மாப்ளே... கொஞ்சம் பிரேக் விடு. உனக்கு வந்தது காதல்தானா என்று யோசி! இந்த மாதக் கடைசியில் ஒரு கவியரங்கம் இருக்கு. மதுமதி வருவாள்! அப்போது பார்க்கலாம் அது வரை அமைதியா இரு. முக்கியமாய் அவளை நினைக்காதே. அதற்கு முன் சந்திக்க நேர்ந்தால் ஒரு ஹாய் சொல்லு போதும்!

    ம்ம்ம்... என்ற டேவிட்டை வற்புறுத்தி சாப்பிட வைத்தான் வசந்தன். வசந்தனின் சொந்த ஊர் தஞ்சாவூர். அம்மா தமயந்தி ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். வசந்தனுக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி. தம்பிக்கு ஒரு வயதாகும் போது, அப்பா மாரடைப்பில் இறந்து போக, பிறந்த வீடு தமயந்தியைத் தாங்கிப் பிடித்தது. தமயந்தி மேற்கொண்டு படித்து ஆசிரியர் பயிற்சி பெற்று வேலையில் அமரும் வரை வசந்தனின் தாய்மாமா வேலாயுத்த்தின் உழைப்பு அதிகம்! இன்று வரை மாமாதான் அனைத்துமாய் இருக்கிறார்.

    ***

    பனகல் பார்க்கின் திருப்பத்தில் உள்ள டூ லீவர் பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தி பூட்டிய டேவிட், எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மதுமதியைப் பார்த்ததும் மனசு லல்லாலா பாட அவளை நோக்கி விரைந்தான். ஹாய் மதி... ஷாப்பிங்கா...? என்று கேட்க, ஒரு நிமிட இடைவெளிக்குப் பின், நெற்றியை தேய்த்த படி யார் நீங்கள்... என்று கேட்டதும் திகைத்தான்.

    நான் வசந்தனின் நண்பன் டேவிட். போன வாரம் சந்தித்தோமே. என்றதும் ஓ அப்படியா... நினைவில்லை என்ற மதுமதியின் பதில் அவனை சோர்வடைய செய்தது. ‘ பாவி பெண்ணே ‘! அதற்குள்ளாகவா என்னை மறந்து விட்டாய்...? என்று நினைத்தபடி, வாங்களேன் காஃபி சாப்பிடலாம் என்றான் ஆர்வமாய்.

    ஹலோ... நீங்க வசந்தனின் நண்பர் என்பதால் தப்பித்தீர்கள். இல்லேனா கன்னம் பழுத்திருக்கும் இடியட்!

    அட டே... தவறா நினைச்சுட்டீங்க போல... சாரி ஜஸ்ட் ஃபிரண்ட்லியா கேட்டேன். தவறுனா மன்னிச்சுடுங்க. என்ற டேவிட்டை பொருட்படுத்தாமல் விரைந்த மதுமிதாவை வியப்புடன் பார்த்தான். அதே சமயம் வசீகரமானத் தோற்றம் கொண்ட தன்னை உதாசீனப்படுத்தி விட்டு சென்றதை அவனால் நம்பவே முடியவில்லை. நாளை மறுநாள் தங்கை நான்சிக்கு பிறந்தநாள் என்பதால் நல்லியில் நான்கு செட் சுடிதாரும், இரண்டு புடவைகளையும் வாங்கிக் கொண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய ஃபாதர் அந்தோணி ராஜ் அவர்களுக்கு போன் செய்து நலம் விசாரித்தான்.

    " டேவிட் இந்தக் கிழவனைப் பார்க்க மாதம் ஒரு முறையாவது வரக்கூடாதா மகனே, உன்னை சர்ச் வாசலில் விடிகாலையில் கையில் எடுத்த இந்தத் தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன். உன் வாழ்வு முழுமையாகும்படி ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து மணமுடித்து விட்டால் என் ஆத்மா ஆண்டவரோடு ஐக்கியமாகி

    Enjoying the preview?
    Page 1 of 1