Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mullil Vizhuntha Pattampoochi
Mullil Vizhuntha Pattampoochi
Mullil Vizhuntha Pattampoochi
Ebook179 pages1 hour

Mullil Vizhuntha Pattampoochi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் அன்பான கண்மணியின் வாசக இதயங்களுக்கு வணக்கம்!

'இப்படி கூடவா மனிதர்கள் இருப்பார்கள்?' என நினைக்க வைக்கிற கதை இது. இங்கே பூக்களை விட முட்களே அதிகம். பனிப்பொழியும் சிகரங்கள் உள்ள இதே பூமியில்தான், வெடித்து சிதறும் எரிமலைகளும் காணப்படுகின்றன. மனிதர்களிலும் கூட அப்படித்தான். நல்ல மனம் படைத்தவர்களைவிட, பிறர் மீது வீண்பழி சுமத்தி... கேவலமாகப் பேசி... அவதூறான வார்த்தைகளைப் பரப்பிவிட்டு சந்தோஷப்படுகிறவர்களே ஏராளம்.

பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்த் துளிகள் எல்லாம் கத்திகளாக மாறினால் யாராலுயும் தாங்கவே முடியாது. கொடிய முள்காட்டில் சிக்கிக் கொண்ட அழகும், மென்மையும் மறைந்த பட்டாம் பூச்சியைப் போல, இதயமே இல்லாதவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட இளம்பெண் இதயாதான் இந்நாவலின் நாயகி.

தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சி வலையில் இருந்து இதயா மீண்டாளா? தனது சிறகுகள் முறியாமல் தப்பினாளா? இல்லையா? என்பதை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விமர்சனங்களை உடனே எழுதுங்கள்.

நன்றி மீண்டும் சந்திப்போம்

மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580128304743
Mullil Vizhuntha Pattampoochi

Read more from Maheshwaran

Related to Mullil Vizhuntha Pattampoochi

Related ebooks

Reviews for Mullil Vizhuntha Pattampoochi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mullil Vizhuntha Pattampoochi - Maheshwaran

    http://www.pustaka.co.in

    முள்ளில் விழுந்த பட்டாம் பூச்சி

    Mullil Vizhuntha Pattampoochi

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    என்னைப்பற்றி

    என் அன்பான கண்மணியின் வாசக இதயங்களுக்கு வணக்கம்!

    'இப்படி கூடவா மனிதர்கள் இருப்பார்கள்?' என நினைக்க வைக்கிற கதை இது. இங்கே பூக்களை விட முட்களே அதிகம். பனிப்பொழியும் சிகரங்கள் உள்ள இதே பூமியில்தான், வெடித்து சிதறும் எரிமலைகளும் காணப்படுகின்றன. மனிதர்களிலும் கூட அப்படித்தான். நல்ல மனம் படைத்தவர்களைவிட, பிறர் மீது வீண்பழி சுமத்தி... கேவலமாகப் பேசி... அவதூறான வார்த்தைகளைப் பரப்பிவிட்டு சந்தோஷப்படுகிறவர்களே ஏராளம்.

    பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்த் துளிகள் எல்லாம் கத்திகளாக மாறினால் யாராலுயும் தாங்கவே முடியாது. கொடிய முள்காட்டில் சிக்கிக் கொண்ட அழகும், மென்மையும் மறைந்த பட்டாம் பூச்சியைப் போல, இதயமே இல்லாதவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட இளம்பெண் இதயாதான் இந்நாவலின் நாயகி.

    தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சி வலையில் இருந்து இதயா மீண்டாளா? தனது சிறகுகள் முறியாமல் தப்பினாளா? இல்லையா? என்பதை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விமர்சனங்களை உடனே எழுதுங்கள்.

    நன்றி மீண்டும் சந்திப்போம்

    மகேஷ்வரன்

    1

    தீர்க்க சுமங்கலி ஜவுளிக்கடை.

    மன்னார்குடியில் இருக்கிற மிகப்பெரிய ஜவுளிக்கடைகளில் அதுவும் ஒன்று. கைராசியான கடை என்று பெயர் வாங்கியதாலோ... என்னமோ... கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. ஆடவர்க்கு என்று தனிப்பிரிவும், பெண்களுக்கென்று தனிப்பிரிவும், குழந்தைகள் மற்றும் ரெடிமேட் உடைகளுக்கென்று தனிப்பிரிவும் இயங்கி வந்தது. ஐம்பது ரூபாயில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும்... எந்த விலையில் கேட்டாலும் சேலைகள் கிடைக்கும் என்பதால் பெண்களின் கூட்டம் அலை மோதும்.

    பட்டுச்சேலைகளுக்கென்று மேல் மாடியை ஒதுக்கியிருந்தார்கள். அந்தப்பகுதி மட்டும் குளிர்சாதனப் பெட்டியின் உதவியினால்... குளு குளுவென்றிருந்தது. தரைப்பகுதியில் வரிசையாக விரிக்கப்பட்டு கிடந்த கோரைப்பாய்களில்... பத்துப் பதினைஞ்சு பட்டுச்சேலைகள் இறைந்து கிடந்தன.

    நடுவில் அமர்ந்திருந்தாள் இதயா. எளிமையான வாயில் சேலையில் கூட தேவதையைப் போல பிரகாசித்தாள். மாசு மருவில்லாத வட்டமுகத்தில்... கண்களிரெண்டும்... கருவண்டுகள் போல சுழன்றன. காதுகளில் அணிந்திருந்த... பதினைந்து ரூபாய்க்கு வாங்கிய கவரிங் ஜிமிக்கிகள்கூட அவளுக்கு அழகாகத்தான் இருந்தது.

    கும்பலாக சற்று முன்பு முகூர்த்தப்பட்டுச்சேலை எடுக்க வந்தவர்கள் கலைத்துப் போட்டு விட்டு போயிருந்த பட்டுச்சேலைகள்தான் அவளைச் சுற்றிலும் குவியலாகக் கிடந்தன. அத்தனையும் விலையுயர்ந்த சேலைகள்.

    தோகை விரித்தாடுகிற மயில்... ஆலிலை கண்ணன்... ராமரின் பட்டாபிசேகம் என ஒவ்வொரு சேலையின் முந்தானையிலும் கலை நுணுக்கத்தோடு ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    சேலை எடுக்க வந்த கூட்டத்தினருக்கு எந்த சேலையையும் பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு போனதுதான் மிச்சம்.

    இதயா, ஒவ்வொரு சேலையாய் கையில் எடுத்தாள். மடிப்பு கலையாமல் மடித்தாள். ஓரங்களை சரி செய்து.. நூலினால் கட்டி, அட்டைப் பெட்டிக்குள் வைத்து மூடினாள். அட்டைப்பெட்டி முன்பு இருந்த இடத்தில் கொண்டு போய் வைத்தாள். இப்படியே ஒவ்வொரு சேலையாய் எடுத்து அடுக்கி வைப்பதற்குள் வியர்த்துப் போய் விட்டது.

    இதயாவிற்கு 900 ரூபாய்தான் சம்பளம்.

    இரண்டு வருடங்களாக அந்த கடையில்தான் வேலை பார்க்கிறாள்.

    அவளுடன் பட்டுச்சேலைகள் பிரிவில் வேலைப்பார்த்த ஜமுனாவுக்கு இன்னும் 10 நாட்களில் கல்யாணம். போனமாதமே ஜமுனா வேலையை விட்டு நின்று விட்டாள். ஜமுனா இருந்தால் இதயாவுக்கு வேலையின் பளு தெரியாது. இருவரும் வேலையை பகிர்ந்து செய்து விடுவார்கள். ஜமுனா இல்லாததது இதயாவுக்கு சிரமமாகத் தோன்றியது. பட்டுச்சேலைப் பிரிவிற்கு யாராவது புதிதாய் வேலைக்குச் சேர்ந்தால் தனக்கு உதவியாக இருக்குமே என்று நினைத்தாள். இன்னும் யாரும் வந்து சேரவில்லை.

    இதயா...

    ரெடிமேட் உடைகள் பிரிவில் இருக்கும் மேனகா வேகமாக உள்ளே நுழைந்தாள்.

    என்னடி?

    உனக்கு போன் வந்திருக்கு, போய் பேசிட்டு வா...

    போன் யார்கிட்டேர்ந்துடி...?

    "யாரோ... அமுதனாம்.'

    இதயாவைப் பார்த்து கண்களாலேயே சிரித்தாள் மேனகா. அமுதன் என்ற பெயரைக் கேட்டதுமே இதயாவிற்கு சிலிர்ப்பாக இருந்தது. யாரோ தன்னை மயிலிறகினால் வருடி விடுவதைப் போல உணர்ந்தாள். முகத்தில் வெட்கம் சூழ்ந்தது.

    தாவணியை சரி செய்து கொண்டு... முந்தானையை இழுத்து சொருகியபடி பட்டுச்சேலைகள் பிரிவை விட்டு வெளியே வந்தாள். கம்ப்யூட்டரில் பில் போட்டுக் கொண்டிருந்த கோபிக்கு நேர் எதிரே இருந்த மேஜை மீது மல்லாந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ரிஸீவரைக் கையிலெடுத்தாள்.

    ஹலோ.. நா... இதயா பேசறேன் என்றாள் மெல்லிய குரலில். சேலைகள் பிரிவில் இருக்கிற அத்தனை இளம்பெண்களும் தன்னையே குறுகுறுவென்று பார்ப்பது மாதிரி... இதயாவுக்கு கூச்சமாக இருந்தது.

    இதயா... நா… அமுதன் மறுமுனையில் அமுதனின் கரகரப்பான குரல் கேட்டது.

    சொல்லுங்க...!

    ஒற்றை வார்த்தையை உதிர்த்தாள்.

    என்ன... நீ வேண்டா வெறுப்பா பேசறே? ஏதாவது முக்கியமான விஷயம் இருந்துச்சுன்னா... கடை நெம்பருக்கு போன் பண்ணுங்கன்னு... நீ தானே சொன்னே...'

    நா... நல்லாத்தான் பேசறேன்... என்ன விஷயம்னு சொல்லுங்க... பரபரத்தாள்.

    இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்... இதயா...

    அப்படியா...? வாழ்த்துக்கள்...

    அதை நேர்ல வந்து சொல்லணும்...

    வர்றேன்.

    தேரடிகிட்டே... உனக்காக காத்திருக்கேன். கடையை விட்டு அரை மணி நேரம் முன்னாடியே வந்துடு. 2 பேரும் ராஜகோபாலசாமி கோவில்ல போய் சாமி கும்பிடலாம்.

    சரி…

    மறந்துடாதே இதயா.

    மறக்க மாட்டேன். வெச்சிடுங்க... போனை...

    என்ன அவசரம்? ஒரு 2 வார்த்தை கூட பேசினா குறைஞ்சா போயிடுவே... அமுதன் ரிஸீவரின் வழியே சிணுங்கினான்.

    நேர்ல வந்து 100 வார்த்தைகளுக்கு மேல பேசறேன்… போதுமா...?

    மேற்கொண்டு அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் ரிஸீவரை வைத்தாள்.

    பேசினது யாரு இதயா...?

    ப்ளவுஸ் பிட் செக்ஷனில் இருந்த மிருதுளா ஆர்வமாய் இதயாவை பார்த்து கேட்டாள்.

    என்னைக் கட்டிக்கப் போறவர்தான் பேசினார்...

    சொல்லிவிட்டு பட்டுச்சேலை பிரிவை நோக்கி விறுவிறுவென்று நடந்தாள் இதயா.

    ***

    20 வயது இதயாவிற்கு அம்மா இல்லை. அவளுக்கு மூன்று வயது நடந்து கொண்டிருக்கும் போதே மஞ்சள் காமாலை நோய்க்கு பலியாகி விட்டாள். இதயாவை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். பொன்னுத்துரை 2-ம் தாரமாக வேதவல்லியைக் கட்டிக்கொண்டார். ஏழைப் பெண்ணான வேதவல்லி ஆரம்பத்தில் சாதுவாக இதயா மீது அன்பைக் காட்டுபவளாகத்தான் இருந்தாள். பொன்னுத்துரையைக் கண்டாலே பயந்து நடுங்குவாள். இதயாவைக் கீழேயே இறக்கி விடமாட்டாள். எப்பவும், தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டேயிருப்பாள்.

    அவளுக்கென்று சங்கீதாவும், அதைத் தொடர்ந்து ராகுலும் பிறந்தவுடன் வேதவல்லி முழுமையாக மாறிப் போனாள். தன்னுடைய மோகவலையில் பொன்னுத்துரையை வீழ்த்தி கட்டிப்போட்டு விட்டாள். தன் வார்த்தையை எதிர்த்துப் பேசாத அளவுக்கு உயிருள்ள பொம்மை மாதிரி ஆக்கியிருந்தாள். இதயாவைக் கண்டாலே எரிந்து விழுந்தாள். தொட்டதற்கும் இதயாவை திட்டி தீர்ப்பாள். வேதவல்லியின் சுடு சொற்கள் துப்பாக்கி குண்டுகளை விட மோசமானவை. இதயாவிற்கு தினமும்... நெருப்பு மழையில் குளிக்கிற அவஸ்தை தான்.

    இதயா தன்னுடைய மகள், தன்னுடைய ரத்தம் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தார் பொன்னுத்துரை. அவருடைய குடும்பம், ஒரு காலத்தில் மிக மிக வசதியாக வாழ்ந்த குடும்பம். இப்போதைக்கு பெரிய ஓட்டு வீடும். கொஞ்சம் விளைநிலங்களும், தென்னந்தோப்பு ஒன்றும் இருந்தது. மாடு மாதிரி உழைக்கும் மனிதர் அவர். எப்பவும் வயல் காட்டிலேயே கிடப்பார்.

    வேதவல்லியின் இரும்புக்கரங்களில் சிக்கி, இதயா வதைபட்டுக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளவே மாட்டார். வேதவல்லியை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமுடியாது. அவள் வாயைத் திறந்தாள் சாமானியத்தில் மூடவே மாட்டாள். குத்தீட்டியை விட கூர்மையானது அவளது நாக்கு.

    உள்ளூர் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் வேதவல்லியிடம் வதைப்பட்டுக் கொண்டு சும்மா சுருண்டு கிடந்தவளை இந்த தீர்க்க சுமங்கலி ஜவுளிக்கடையில் கொண்டு வந்து சேர்த்து விட்டவள் ஜமுனாதான். அவர்கள் ஊரிலிருந்து மினி பஸ் தினமும் ஐந்தாறு தடவை மன்னார்குடிக்கு செல்கிறது. அதில்தான் இருவரும் வேலைக்கு வந்து போனார்கள். வாங்குகிற சம்பள பணத்தை அப்படியே கொண்டு போய் வேதவல்லியிடம் கொடுத்து விடுவாள் இதயா. ஒரு ரூபாய் குறைந்தாலும் முகத்திலேயே வீசியெறிந்து விடுவாள்

    Enjoying the preview?
    Page 1 of 1