Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Oviyam Kaiyil Serumo!
Kaadhal Oviyam Kaiyil Serumo!
Kaadhal Oviyam Kaiyil Serumo!
Ebook181 pages36 minutes

Kaadhal Oviyam Kaiyil Serumo!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் கண்ணின் மணியான கண்மணி வாசகர்களுக்கு வணக்கம்!
மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தொலைந்துப் போன தன் மகனைத் தேடும் ஒரு தாயின் தவிப்பே இந்நாவல். அவளுடைய மகன் என் தொலைந்தான்? யாரால் தொலைந்தான்? காரணத்தை அறிகிற போது கலங்கிப் போகப் போகிறீர்கள்!
சுயநலமிக்க மனிதன் மிருகமாவான். அந்த மிருகத்தையும் மன்னிப்பவனே தெய்வமாவான் இக்கதையில் வருகிற தனசேகரனும், வசந்தனுமே அதற்கு உதாரணங்கள்.
எல்லோருக்கும் ஓவியம் வரைந்துக் கொடுக்கும் கதாநாயகி இளவேனில்... பகலவனை நேசிக்கிறாள்.
அவளுடைய காதல் ஓவியம் அவளுடைய கையில் சேர்ந்ததா?
மகனைத் தேடிய தாய் அவனை மறுபடியும் சந்தித்தாளா இல்லையா?
நாவலை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள். மறக்காமல் விமர்சனம் எழுதுங்கள்.
அன்புடன் மகேஷ்வரன்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580128305678
Kaadhal Oviyam Kaiyil Serumo!

Read more from Maheshwaran

Related to Kaadhal Oviyam Kaiyil Serumo!

Related ebooks

Reviews for Kaadhal Oviyam Kaiyil Serumo!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Oviyam Kaiyil Serumo! - Maheshwaran

    http://www.pustaka.co.in

    காதல் ஓவியம் கையில் சேருமா!

    Kaadhal Oviyam Kaiyil Serumo!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    சில நேரங்களில் நீ மழையாகக் கூட வந்து மண்ணில் விழலாம் இல்லையா? அதனாலேயே மழை பெய்கிற போதெல்லாம்... குடை பிடிக்காமல் நனைகிறேன்! ஒரு வேளை நீ கல்லாகவோ முள்ளாகவோ கூட கீழே கிடக்கலாம் இல்லையா...? அதனாலேயே காலணிகள் அணியாமல் நடக்கிறேன்!

    பூமிப்பெண்ணிற்கு இரவு காதலன் கொடுத்த முத்தங்களின் ஈரம்... மரங்களிலும், செடி, கொடிகளிலும், கிளைகளிலும், இலைகளிலும், கிளைகளிலும், பூக்களிலும், மொட்டுக்களிலும்... பனித்துளிகளாய் இன்னும் மிச்சமிருந்தது. கிழக்கு வானத்தைக் கிழித்துக் கொண்டு வெள்ளித்தாம்பாளமாய்... மேலே ஏறிக்கொண்டிருந்தான் கதிரவன். பக்கவாத்தியங்கள் இல்லாமலே… பறவைகள் கீச்கீச் என... இனிமையாய்… இன்னிசைக்கச்சேரி... நடத்திக் கொண்டிருந்தன…

    மலர்க் கண்காட்சிக்கு ஆயத்தமாகிய தாவரவியல் பூங்காவைப்போல… அந்தப் பங்களாவின்... எதிரே இருந்த விசாலமான தோட்டம் முழுக்க பல விதமான பூக்கள் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கின...

    மரகத பச்சைவண்ண, கண்ணாடியினால் செய்யப்பட்டதைப்போல வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கார் பங்களாவின் போர்டிகோவை ஒட்டி வந்து நின்றது. ஜீன்ஸ்பேண்ட்டும்… கசங்கி அழுக்காய் காணப்பட்டது. தலைகேசம் கலைந்திருந்தது. இரவு முழுக்க உறங்காமல் நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடித்துவிட்டு வந்திருக்கிறான் என்பதற்கு அடையாளமாய் முகத்தில் பொலிவு குறைந்திருந்தது.

    காரின் சப்தம் கேட்டதுமே பங்களாவினுள் இருந்து வெளியே ஓடிவந்த பாவை பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்து செய்தித்தாளில் கண்களை அலைபாயவிட்டிருந்த தனசேகரனின் காதோரம் குனிந்து கிசுகிசுத்தாள்.

    டாடி வளவன் அண்ணன்... வந்தாச்சு...! ராத்திரி முழுக்க எங்கே போயிருந்தேன்னு… கேட்டு... நாலு டோஸ் விடுங்க...

    தனசேகரன் நிமிர்ந்தார். தோள்களை அலட்சியமாய் குலுக்கியபடி, அவரைக் கவனிக்காதவனைப் போல் நடந்து... பங்களாவினுள் நுழைய முற்பட்ட வளவனை... ஏற இறங்க முறைப்பாய் நோக்கினார் தனசேகரன்.

    வளவன்... நில்லு...

    அதட்டலாய் ஒலித்தது அவருடைய குரல்.

    வளவன் சட்டென்று நின்றான்.

    டாடி...

    எங்கே போய்ட்டு வர்றே...? ராத்திரி முழுக்க... எங்கே தங்கியிருந்தே...?

    என் பிரெண்ட்டு ஒருத்தனுக்கு பர்த் டே! எல்லோரையும்... ஜாலியா... கல்லணைக்கு கூப்பிட்டு போய்... பார்ட்டி கொடுத்தான்...! நேரமாயிடுச்சு! அதான் அங்கேயே ரூம் எடுத்து தங்கிட்டேன்...

    குடிச்சியா...? கண்ணெல்லாம்… சிவந்திருக்கு....?

    நானே டயர்டா வந்திருக்கேன் எப்படா படுக்கையில விழுவோம்னு இருக்கு! செக் போஸ்ட் மாதிரி… வழியிலயே மறிச்சு வெச்சு... கேள்வி மேல கேள்வியா… கேட்கறீங்களே...! ச்சே...

    எரிச்சலானான் வளவன்...

    கேட்கற கேள்விக்கு பதில் சொல்லு...! குடிச்சியா... இல்லையா...?

    செய்தித்தாளை நான்காய் மடித்து... பிரம்பு ஊஞ்சலிலேயே போட்டுவிட்டு... கீழே இறங்கினார்.

    பிரெண்ட்ஸ்ங்க எல்லாம் வற்புறுத்தினதால… கொஞ்சமா குடிச்சேன். இதிலென்ன... தப்பு?

    சிகரெட் பழக்கம் மட்டும்தான் இருந்துச்சு....! இப்ப குடிக்கற பழக்கத்தையும்... கத்துக்கிட்டியா...? வளவன்… சரியில்லை...! வரவர உன் போக்கே சரியில்லை. மத்த விஷயங்களில் காட்டற ஆர்வத்தை படிப்புலயும்... காட்டு...!

    புக்ஸை தொறந்தாலே… போரடிக்குது! தலைவலியும்... முதுகுவலியும்... தானா வந்துடுது...! நா என்ன பண்ணட்டும்... டாடி? பிடிக்காத விஷயத்தை நா யார் சொன்னாலும்... செய்யமாட்டேன்...! பிடிக்காத விஷயத்தை.... யார் தடுத்தாலும் நிறுத்தமாட்டேன்...! நா காலேஜ்க்கு போறது... பொழுது போக்குக்காக.....! படிச்சு... வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்ங்கறதுக்காக இல்லை...! நா ஏழுதலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு நீங்களேதானே... சொத்து சேத்து வெச்சிட்டிங்களே...

    வளவன்... நீ நடத்துகிற விதம் எனக்குப்பிடிக்கலை...

    என் பிரெண்ட்ஸ்ங்களுக்கு பிடிக்குதே... அது போதும்...!

    தனசேகரனுக்கு முகம் கறுத்துப்போனது. அதற்குமேல் வளவனிடம் பேச விரும்பாதவராய் கையை ஆட்டி விரட்டினார்...

    சரி போய் குளிச்சுட்டு வேற டிரெஸ் மாத்திக்க...! உங்கம்மா கண்ணுல பட்டுடாதே....! அப்புறம் என்னைதான் திட்டுவா...! உன்னை செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கிட்டேன்னு கொறை சொல்லுவா... சிரித்தபடியே... வளவன் நகர்ந்தான்...

    வளவன் அண்ணனோட கன்னத்துல... ஓங்கி ஒரு அறைவிடாம அவன் பேசறதையெல்லாம்... கேட்டுகிட்டு நிக்கறீங்களே...! எல்லாத்துக்கும் நீங்கதான் டாடி...! அம்மா திட்டறதுல தப்பே இல்லை.....

    எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பாவை… படபடத்தாள்.

    வளவனுக்கும் பாவைக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம்...

    பாவை இன்பர்மேஷன் டெக்னாலஜி கடைசி வருடமும், வளவன் எம்.சி.ஏ. முதல் வருடமும்... படிக்கிறார்கள்.

    படிப்பில் பாவைக்கு இருக்கிற ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட வளவனுக்கு கிடையாது. அவன் காலேஜ்க்கு செல்கிற நாட்களைவிட நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றும் நாட்கள்தான் அதிகம்.

    தோளுக்கு மேலே வளர்ந்து நிக்கிற பிள்ளையை… எப்படிம்மா... கை... நீட்டி அடிக்கிறது...?

    அப்போ... எதையும் கண்டுக்காதீங்க... டாடி...! எக்கேடோ… கெட்டு ஒழியட்டும்...

    வளவன் எம்புள்ளை... என்ரத்தம்...! அவன் ஒரு நாளும்... கெட்டுப் போயிட மாட்டான்...! போகப் போக சரியாயிடுவான்! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்றார் அழுத்தமாய்...

    வளவன் தன்னை மாதிரியே சிவப்பாய்... தன்னை மாதிரியே... உயரமாய்... இருப்பதில் தனசேகரனுக்கு... கர்வமும், பெருமையும்... அதிகம்…

    நேருக்கு நேர் நின்று அவனை உரிமையோடு திட்டுவாரே தவிர... மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்கவே மாட்டார்.

    வளவன்மீது அவர் கொள்ளைப்பாசம் வைத்திருந்தார். சின்னவயசிலிருந்தே வளவன் எதைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துவிடுவார்... கொஞ்ச நேரம் முன்பு வளவன் ஓட்டி வந்து நிறுத்திய காரின் விலை முப்பதுலட்ச ரூபாய்... அவன் ஆசைப்பட்டுக் கேட்டான் என்பதற்காக... பணத்தைப்பற்றிக் கவலைப்படாமல்... உடனடியாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொடுத்திருந்தார்.

    இது நியாயமா… டாடி...?

    எது...?

    எம்மேல வெச்சிருக்கற பாசத்தைவிட… பத்து மடங்கு பாசத்தை வளவன் அண்ணன் மேலே வெச்சிருக்கிங்களே...

    நீ தப்பா சொல்றே...! உம்மேல வெச்சிருக்கற பாசத்தைவிட நூறு மடங்கு பாசத்தை எம்புள்ளைமேல வெச்சிருக்கேன்...

    அடேயப்பா... பாவை கண்கள் விரிய சிரித்தாள்.

    என்னைக்கு இருந்தாலும் நீ... ஒருத்தன் வீட்டுக்கு... வாழப்போற பொண்ணு உம்மேல அதிகமான பாசம் வெச்சுட்டா… அப்புறம் பிரியறப்போ... தாங்கவே முடியாது... ஆனா… எம்புள்ளை... எப்பவும் எங்கூடவே இருக்கப் போறவனாச்சே...! வயசானக்காலத்துல... என்னையும் உங்கம்மாவையும்... கண்ணுக்குள்ளே வெச்சு தாங்கப் போறவனாச்சே! என்றார் இளகிய குரலில்.

    டிபன் ரெடியா இருக்கு... ரெண்டுபேரும்... சாப்பிட வாங்க...

    உள்ளேயிருந்து வெளியே வந்தாள் செங்கமலம்... சின்ன ஜரிகைப் போட்ட காட்டன் சேலைக்கட்டி... எளிமையாய்க் காணப்பட்டாள். கண்களில் கனிவும் சாந்தமும் வழிந்தது. தான் ஒரு கோடீஸ்வரி என்பதற்கான எந்த அடையாளமும் அவளிடம் காணப்படவில்லை.

    மரியாதையோடு கை எடுத்துக் கும்பிடலாம் போல இருந்தது செங்கமலத்தின் தோற்றம்.

    இரு செங்கமலம்... குளிச்சிட்டிருக்கிற வளவனும் வந்துடட்டும். எல்லோரும் சேர்ந்தே... சாப்பிடலாம்...

    வளவன் வந்துட்டானா...? பூஜையறையில் இருந்தேன்! அதான் நான் அவனைக் கவனிக்கலை ஆமா... ராத்திரியெல்லாம் எங்கே பூஜையறையில் இருந்தானாம்? கேட்டிங்களா என்றாள் ஆர்வமாய்...

    கேட்டேன்...! இனிமே இது மாதிரி வேலையெல்லாம் வெச்சுக்காதேன்னு கண்டிச்சுட்டேன்...! நீ வேற அவனைத் திட்டாதே...

    "கோழி தன் குஞ்சுகளைத் கொத்தறது... கோபத்தினால இல்லைங்கறதைப் புரிஞ்சிக்கங்க...! நா பெத்த மூணு தங்ககட்டியில... ஒரு தங்க கட்டியை முழுசா தொலைச் சுட்டு நிக்கறேன்! இப்ப எங்கூட இருக்கறது வளவனும் பாவையும் மட்டும்தான்! பாவை இந்த சின்னவயசுலயே... எல்லா விஷயத்துலயும்... தெளிவாகவும்.. புத்திசாலியாகவும். இருக்கா... பாவையைப்பத்தி... எனக்கு எந்த கவலையும் கிடையாது. வளவனைப் பத்தி நெனைச்சா தான் கவலையா இருக்கு...! அன்னைக்கு அவனோட ரூம்ல... தலையணைக்கு அடியிலயும், கட்டிலுக்கு கீழேயும் ரெண்டு மூணு சிகரெட்டு பாக்கெட்டுகளைப் பார்த்தது லேர்ந்து எம்மனசே சரியில்லை…

    காலேஜ்லேர்ந்து நேரம் கழிச்சு வந்துக்கிட்டிருந்தவன்… இப்ப பொழுதுவிடிஞ்சு... வர ஆம்பிச்சிருக்கான்... அவன் தப்பான பாதையிலே போறானோன்னு பயமாருக்குங்க.....!"

    செங்கமலத்தின் கண்களில் நீர்த்துளிர்ந்தது.

    பொலம்பாதே செங்கமலம் இந்தகாலத்து பசங்களே இப்படித் தான்! நாம தான் விட்டுப்பிடிக்கணும்.

    அவளை சமாதானப்படுத்தினார் தனசேகரன்...

    "பொலம்பாம என்ன பண்ண சொல்றீங்க? வளவன் எதுக்கெடுத்தாலும். எடுத்தெறிஞ்சு பேறான்...! யாரையும் மதிக்கறது கிடையாது! எந்தக் காரியத்தையும் பொறுப்பா செய்யறது இல்லை! காணாமப்போன மூத்தவன் வசந்தன் திரும்பக்கிடைப்பானோ மாட்டானோங்கற ஏக்கமும் வேதனையும் என்னை வாட்டி எடுக்கறது போதாதுன்னு... இவன் வேற..... வதைக்கிறான்... நா என்ன பாவம் பண்ணினேனோன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1