Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Virkapadatha Rojakkal
Virkapadatha Rojakkal
Virkapadatha Rojakkal
Ebook362 pages2 hours

Virkapadatha Rojakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல எழுத்தாளர்களின் வரிசையில் என்னையும் ஒருவனாய் வைத்திருக்கும் எனது வாசகக் கண்மணிகளுக்கு வணக்கம்.
காதல் கலந்து இனிக்க இனிக்க எழுதப்பட்ட விறு விறுப்பான குடும்பக் கதையான இத்தொடரில் வருகிற மதுமிதாவையும், சூர்யாவையும், ரமணனையும், உங்களால் மறக்கவே முடியாது.
ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இக்கதையில் வரும் ரமணன். எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் சூர்யா.
அதே மாதிரி ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் மதுமிதா. எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அனுப்பிரியா.
இத்தொடரை வாசித்துவிட்டு ஏகப்பட்ட பேர் என்னிடம் தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும், நேரிடையாகவும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். மிகப்பெரிய வெற்றித் தொடராக அமைந்த இக்கதையை தேவியில் எழுதும் அருமையான வாய்ப்பை எனக்களித்த தேவி வார இதழின் ஆசிரியர் உயர்திரு. ஐயா அவர்களுக்கும், இத்தொடரை தற்போது புத்தகமாக உங்களது கைகளில் தந்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கும் எனது வணக்கத்திற்குரிய அறிவு நிலையம் பதிப்பகத்தினர் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல கோடி.
மீண்டும் சந்திப்போம்.
மகேஷ்வரன்
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580128304825
Virkapadatha Rojakkal

Read more from Maheshwaran

Related to Virkapadatha Rojakkal

Related ebooks

Reviews for Virkapadatha Rojakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Virkapadatha Rojakkal - Maheshwaran

    http://www.pustaka.co.in

    விற்கப்படாத ரோஜாக்கள்

    Virkapadatha Rojakkal

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    முன்னுரை

    பிரபல எழுத்தாளர்களின் வரிசையில் என்னையும் ஒருவனாய் வைத்திருக்கும் எனது வாசகக் கண்மணிகளுக்கு வணக்கம்.

    காதல் கலந்து இனிக்க இனிக்க எழுதப்பட்ட விறு விறுப்பான குடும்பக் கதையான இத்தொடரில் வருகிற மதுமிதாவையும், சூர்யாவையும், ரமணனையும், உங்களால் மறக்கவே முடியாது.

    ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இக்கதையில் வரும் ரமணன். எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் சூர்யா.

    அதே மாதிரி ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் மதுமிதா. எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அனுப்பிரியா.

    இத்தொடரை வாசித்துவிட்டு ஏகப்பட்ட பேர் என்னிடம் தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும், நேரிடையாகவும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். மிகப்பெரிய வெற்றித் தொடராக அமைந்த இக்கதையை தேவியில் எழுதும் அருமையான வாய்ப்பை எனக்களித்த தேவி வார இதழின் ஆசிரியர் உயர்திரு. ஐயா அவர்களுக்கும், இத்தொடரை தற்போது புத்தகமாக உங்களது கைகளில் தந்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கும் எனது வணக்கத்திற்குரிய அறிவு நிலையம் பதிப்பகத்தினர் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல கோடி.

    மீண்டும் சந்திப்போம்.

    மகேஷ்வரன்

    1

    வெடிகுண்டு வெடித்ததில்

    சிதறிக் கிடக்கிற

    அடுக்கு மாடிக்கட்டிடத்தின்

    அலங்கோலத்தைப் பார்க்கையில்

    வலிக்கிறது மனசு.

    கட்டிய காலத்தில்

    எரிக்கிற வெய்யிலில்

    காலணி அணியாத கால்களுடன்

    இடுப்பில் கைக்குழந்தையுடன்

    மேஸ்திரியிடம் திட்டு வாங்கியபடி

    சிமெண்ட் கலவையை சுமந்து நடந்த

    ‘சித்தாள்கள்’ நினைவுக்கு வருகிறார்கள்.

    சென்னை பெசண்ட் நகர்

    அந்தக் கால ராஜாக்களின் அரண்மனையைப் போல வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த பங்களா. பணத்தை தண்ணீராய்க் கொட்டி இறைத்து கலை நயத்தோடு கட்டியிருந்தார்கள் முழுக்க முழுக்க வெண்பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் பார்ப்பவரின் கண்களைக் கொள்ளையடித்தது.

    பங்களாவைச் சுற்றிலும் தோட்டம்.

    தோட்டம் முழுக்க… குட்டையாய்… அடர்த்தியாய்… பச்சையாய் படர்ந்திருக்கும் மரங்கள்… சுத்தமான காற்றை பிரசவித்துக் கொண்டிருந்தன.

    மாடியறையின் ஜன்னல்களைத் திறந்தால்… கூப்பிடும் தொலைவில்… ஈரமான நீலச்சேலையை விரித்து தரையில் போட்டதைப்போல கடல் தெரிந்தது.

    வளைந்து வளைந்து இறங்கிய வழவழப்பான தேக்கு மரப்படிகளில் அழகிய ஓவியம் மாதிரி… இறங்கி கூடத்திற்கு வந்தாள் மதுமிதா. கிளிப்பச்சை வண்ணத்தில் கறுப்பு பூக்கள் கொத்துக் கொத்தாய் பூத்திருந்த எளிமையான வாயில் சேலையை உடுத்தியிருந்தாலும் தேவதையைப் போல மிளிர்ந்தாள்.

    ஏய் அனு ப்ளீஸ், வால்யூமைக் கொஞ்சம் கொறைச்சு வெச்சுக்கக் கூடாதா? மத்தவங்கள்ளாம் வீட்ல இருக்கறதா வேணாமா? ஒரே தலைவலி எனக்கு.

    கனிவாய் வார்த்தைகளை உதிர்த்தாள் மதுமிதா

    அவளைவிட இரண்டு வயது இளையவளான அனுப்பிரியா, அதை லட்சியமே பண்ணவில்லை. முழங்காலுக்கு மேல் பாகம் வரை வெளியே தெரியும்படி குட்டைப் பாவாடையும், தொப்புளை மறைக்காத கை இல்லாத மேலாடையும் அணிந்திருந்தாள். சி.டி. பிளேயரில் பாப் பாடல் ஒன்று அலறிக் கொண்டிருந்தது. அந்தப் பாடலின் இசைக்கு ஏற்ப குதித்துக் குதித்துக் குலுங்கிக் குலுங்கி ஆடிக் கொண்டிருந்தாள்.

    அனு சொல்றது காதுல விழலியா?

    மது உனக்கு தலைவலின்னா நான் என்ன பண்ணட்டும்? மாடி மேல எத்தனை அறைகள் இருக்கு? அதுல ஏதாவது ஒரு அறையில போய் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டுத் தைலத்தை தேய்ச்சுகிட்டு படுத்துக்கிட்டின்னா தலைவலி தானாப் பறந்து போயிடும்.

    அலட்சியமாய் சிரித்தாள் அனுப்பிரியா.

    அனு... இது ஹால். எல்லோருக்கும் பொதுவான இடம். இங்கே நீ குதிச்சு கும்மாளம் போடறது சரியில்லை ஆமா இதென்னடி டிரெஸ்? வயசு வந்தப் பொண்ணாவா நடந்துக்கறே நீ?

    மதுமிதா உரிமையாய் படபடத்தாள்.

    உன்னை மாதிரி சேலையைக் கட்டிகிட்டு இழுத்துப் போர்த்திக்கிட்டு நடக்கவெல்லாம் என்னால முடியாது. இது மாடர்ன் யுகம். இங்கே இப்படி இருந்தாத்தான் மதிப்பு மரியாதை இல்லாட்டி ஒரு பயல் நம்மைத் திரும்பிப் பார்க்க மாட்டான்.

    தொடையும் தொப்புளும் வெளியே தெரியறாப்ல டிரெஸ் பண்றதுதான் நாகரீகமா? வரவர உன்னோட போக்கே சரியில்லை.

    என்றவள் வேகமாகவும் கோபமாகவும் அலறிக் கொண்டிருந்த சி.டி ப்ளேயரை ஆஃப் பண்ணினாள்.

    எதுக்காக ஆஃப் பண்ணினே? இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தாள்.

    மரியாதையா சொன்னேன். நீ கேக்கலை. அதான் நானே நிறுத்தினேன்.

    எனக்கு அதைத் திரும்ப ஆன் பண்ணத் தெரியும்?

    சொன்னவள் மறுபடியும் சி.டி ப்ளேயரின் பொத்தானை அழுத்தினாள். வால்யூமை இன்னும் அதிகமாக்கினாள்.

    மது… உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? எனக்கு இந்த டிரெஸ்ஸை ஆசை ஆசையா வாங்கித் தந்ததே நம்ம மம்மிதான். ‘இதையெல்லாம் உடுத்திக்கற வயசை நான் தாண்டிட்டேன். நீயாவது… உடுத்தி அழகு பாரு அனு'ன்னு சொல்லி பிரியமா வாங்கித் தந்ததைத்தான் நான் போட்டிருக்கேன் தேவையில்லாம என்னோட விஷயத்துல நீ தலையிடாதே. உன்னோட விஷயம் எதுலயாச்சும் நான் தலையிடுறேனா? டாடியும் மம்மியுமே எதையும் கண்டுக்கறதில்லை. எனக்கு அட்வைஸ் பண்ண நீ யாரு? என்னை விட ரெண்டு வயசு உனக்கு அதிகம். வீணா உன்னோட மரியாதையைக் கெடுத்துக்காதே மது.

    கன்னத்தில் அறைந்தது போல இருந்தது மதுமிதாவுக்கு.

    நீ கெட்டுப் போகக் காரணமே அப்பாவும் அம்மாவும்தான்.

    நீ உத்தமியாவே இரு. அப்பத்தான் பிற்பாடு உனக்கு யாராச்சும் கோவில் கட்டி கும்பிடுவாங்க.

    தோள்களில் புசுபுசுவென்று வழிந்த கூந்தலை விரல்களால் கோதிக் கொண்டாள்.

    நீ அதிகமாப் பேசறே.

    அப்படித்தான் பேசுவேன். அழுத்தமாய் உச்சரித்தாள் அனுப்பிரியா.

    மதுமிதா மத்தாப்பு என்றால், அனுப்பிரியா பட்டாசு.

    மதுமிதாவுக்கு அதிர்ந்து பேசத் தெரியாது. யாருடைய மனதையும் புண்படுத்தவும் மாட்டாள். பணக்கார வீட்டுப் பெண் என்ற கர்வமோ, திமிரோ, துளியும் இல்லாதவள். பி.ஏ. தமிழ் இலக்கியம் முடித்துவிட்டு, தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பவள். நூலகத்திற்கும் கடற்கரைக்கும் கோவிலுக்கும் அடிக்கடி போவாள். மற்றபடி அனுப்பிரியா மாதிரி ஊரைச் சுற்றவெல்லாம் பிடிக்காது.

    மதுமிதா சொக்கத்தங்கம்.

    அனுப்பிரியா துருப்பிடித்த தகரம்.

    மதுமிதா அப்பாவின் சாயல். அனுப்பிரியா அம்மாவின் சாயல். இருவருக்கும் குணத்திலும் சரி தோற்றத்திலும் சரி நடத்தையிலும் சரி ரொம்பவே வித்தியாசம்.

    பாந்தமாய் சேலைகட்டி தலையைத் தளரப்பின்னி காதோரமாய் ஒற்றை ரோஜாவைச் செருகிக் கொண்டு அம்மன் சிலை மாதிரி இருக்கும் மதுமிதாவிற்குப் பக்கமாய் அனுப்பிரியா நின்றால் இருவரையும் ‘அக்கா தங்கை’ என்றே யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

    அனும்மாவோட குணம்தான் எல்லோருக்கும் தெரிஞ்சதாச்சே! உங்க நேரத்தை ஏம்மா வீணாக்குறீங்க. பேசாம தோட்டத்துப் பக்கம் போங்கம்மா.

    வேலைக்காரி கனகாதான் மதுமிதாவை சமாதானப்படுத்தி வேறு பக்கமாய் கூட்டிப் போனாள்.

    மதுமிதா நகர்ந்ததும் பாப் இசைக்கு ஏற்ப மறுபடியும் குதிக்கத் தொடங்கினாள் அனுப்பிரியா.

    ***

    சென்னையில் தொழிலதிபர் தேவேந்திரனைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. டெக்ஸ்டைல்ஸ், ஹோட்டல், ஜுவல்லரி, டிரான்ஸ்போர்ட் என்று ஏகப்பட்ட நிறுவனங்கள் இருக்கிறது. கிரானைட் கல் பிசினஸ்ஸிலும் கொடிகட்டிப் பறக்கிறார். அவர் ஆரம்பித்த கூரியர்தான் தமிழ்நாட்டில் இப்போதைக்கு சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் போதாதென்று அரசியலிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்தக் கட்சிப் பக்கமாய் ஒரே தாவாய் தாவி விடுவார். அப்போதுதானே… லட்சக் கணக்கில் லாபம் பெற்றுத்தரும். பெரிய பெரிய கட்டிடக் காண்டிராக்ட்டுகளையெல்லாம்… கைப்பற்ற முடியும்.

    தேவேந்திரன் நினைத்ததை சாதித்து விடுவார்.

    எண்ண முடியாத அளவுக்குப் பணம் கொட்டிக் கிடந்தும்… அவருக்கு ஆசை அடங்கியபாடில்லை.

    சர்வதேச அளவில் பணக்காரர்களின் வரிசையில் தானும் ஒருவனாய் இடம்பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பெங்களூருக்கும் தில்லிக்கும் மும்பைக்கும் பிசினஸ் விஷயமாக அலைந்து கொண்டே இருப்பார்.

    வாரத்தில் ஒருநாள்தான் வீட்டில் தங்குவார்.

    வீட்டு நிர்வாகம் முழுக்க காமினிதேவியின் கையில் இருந்தது.

    ***

    வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் ஏழைகள் வாழும் குடிசைகள் நிறைந்த பகுதி அது. குண்டும், குழியுமாக இருந்த ரோட்டின் ஓரமாக தனது புத்தம் புது வெளிநாட்டுக் காரை நிறுத்தி விட்டு தடிதடியாய் இரண்டு வாலிபர்கள் சூழ.. வேகமாகவும் கோபமாகவும் கீழே இறங்கினாள் காமினிதேவி.

    இரண்டு வயதுக்கு வந்த பெண்களின் தாய் நாற்பதைத் தாண்டிய நடுத்தர வயதுப் பெண்மணி... என்ற நினைப்பே இல்லாமல் பளபளப்பான சேலைகட்டி, அளவுக்கதிகமான ஒப்பனை செய்திருந்தாள். உச்சிக் கொண்டையில் சொருகியிருந்த தங்க ஊசிகள் சூரியனின் ஒளிப்பட்டு மினுமினுத்தது. அணிந்திருந்த குட்டைக்கை ரவிக்கையில் ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்த கண்ணாடித் துண்டுகள் பார்ப்பவரது கண்களைக் கூசியது. உடம்பில் பூசியிருந்த உயர்தர செண்ட்டின் நறுமணம் அந்தப் பகுதியையே நிறைத்தது.

    குறிப்பிட்ட அந்த குடிசையின் முன்பு வந்து நின்றாள் காமினிதேவி.

    சொர்ணா.. வெளில வாடி..! பிளாட்பாரத்துல இட்லி சுட்டு விக்கணும்னு சொல்லித்தானே என்கிட்டே ரெண்டாயிரம் ரூபா வட்டிக்கு வாங்கினே? ஆறு மாசம் ஆயிடுச்சு. வட்டியும் வரலை அசலும் வரலை. என்னோட ஆளை வரச் சொன்னதுக்கு ‘இப்ப தரமுடியாது'ன்னு திமிரா பேசி அனுப்பினியாமே? அதான்டி நானே நேர்ல வந்திருக்கேன்

    கூச்சல் போட்டாள்.

    பயந்து வெளியே தலையை நீட்டினாள் சொர்ணா என்ற அந்தப் பெண்மணி. கிழிசலான நூல் சேலை கட்டியிருந்தாள்.

    இட்லி சுட்டு விக்கத்தான்மா வட்டிக்குப் பணம் வாங்கினேன். ஆனா திடீர்னு புள்ளைக்கு உடம்பு முடியாமப் போயிடுச்சு. பூரா பணமும் செலவாயிடுச்சு. நான் என்னம்மா பண்றது? கைகளைக் குவித்தாள். சொர்ணா.

    அது எனக்குத் தெரியாது. எண்ணி ஏழே நாள்ல என் பணம் வட்டியோட வந்தாகணும். இல்லாட்டி நான் மனுஷியா இருக்க மாட்டேன். உன்னோட குடிசைக்குள்ளே இருக்கற சாமான்களையெல்லாம் ஆட்களைக் கூட்டி வந்து தட்டு ரிக்ஷாவுல ஏத்திப் போய் பழைய இரும்புக் கடையில் போட்டுப் பணத்தை வாங்கிடுவேன், ஜாக்கிரதை

    விரலை உயர்த்தி எச்சரித்துவிட்டு காரை நோக்கி நடந்தாள் காமினிதேவி.

    அவளது ஒரே குறிக்கோள் பணம்தான்.

    பணத்திற்காக அவள் எதையும் செய்வாள்.

    பீச்சில் சுண்டல் விற்பவர்கள் முதல் பிளாட்பாரத்தில் சிறு சிறு கடைகள் போடுபவர்கள் வரை எல்லோருமே அவளிடம்தான் வட்டிக்குப் பணம் வாங்குவார்கள்.

    அவள் வாங்குவது சாதாரண வட்டி அல்ல பத்துக்காசு வட்டியைவிட மோசமான கந்துவட்டி.

    ஆனால் வெளியே நல்லவள் மாதிரி வேஷம் போடுவாள். இரத்த தான முகாமாகட்டும், அனாதை இல்ல விழாவாகட்டும் பெண்களுக்காகப் போராடும் உரிமைப் பிரச்சினை ஆகட்டும்.. எல்லா இடத்திலும் அவள்தான் முன்னால் நிற்பாள்.

    மாதர் சங்கத் தலைவி என்ற பட்டத்தோடு சமூக சேவகி போல தன்னைக் காட்டிக் கொண்டு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதிலும், புகைப்படம் எடுக்க 'போஸ்’ கொடுப்பதிலும் கெட்டிக்காரி.

    ***

    குளியலறையைவிட்டு வெளியே வந்தான் சூர்யா.

    இருபத்தியேழு வயது ஆகிற சூர்யாவைக் ‘கட்டழகன்' என்று வர்ணிப்பது தான் பொருத்தமாக இருக்கும். அழகான வசீகரமான உருண்டை முகம். கூடுதல் அழகாய் கம்பளிப்பூச்சி மீசை. ஆண்மைத்தனமான துறுதுறுவென்ற கண்கள். எந்தப் பெண்ணையும் இன்னொரு தடவை திரும்பிப் பார்க்கத் தூண்டும் வாளிப்பான தோற்றம்.

    பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கும் சூர்யாவுக்கு புகைப்படக் கலையில் ரொம்பவே ஆர்வம். எப்பவும் கேமராவும் கையுமாகவே திரிந்து கொண்டிருப்பான் விளம்பரத் துறைக்குள் நுழைந்து பேரும் புகழும் பெற வேண்டும். திறமையான கலைஞன் என்று பாராட்டைப் பெறுவதோடு.. பண மழையிலும் நனைய வேண்டும். கார் பங்களா என்று சகல வசதிகளையும் தேடிக் கொள்ள வேண்டும்

    இதுதான் சூர்யாவின் தற்போதைய லட்சியம்.

    வெற்றுடம்பில் ஒரு தேங்காய்ப்பூ டவலைக் கட்டியிருந்த சூர்யா உடம்பில் முத்து முத்தாய்ப் படிந்திருந்த தண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டு, அவசர அவசரமாய் பேண்ட்டு சட்டைக்கு மாறினான்.

    சூர்யா...

    வாஞ்சையோட மகனுக்கு அருகில் வந்து நின்றாள் மரகதம்.

    என்னம்மா…

    நீ எங்காச்சம் வெளில போறதா இருந்தா இன்னும் அரை மணி நேரம் கழிச்சுப் போப்பா.

    ஏம்மா…

    தரகர் வர்றதா சொல்லியிருக்கார். கைவசம் நாலைஞ்சு பொண்ணுங்களோட புகைப்படங்களை வெச்சிருக்காராம். இன்னைக்கு நல்ல நாள். அதனாலதான் நானும் அப்பாவும் அவரை வரச் சொன்னோம். அவர் காட்டற புகைப்படங்கள்ள உனக்கு எந்தப் பெண்ணைப் பிடிக்குதோ அந்தப் பெண்ணையே பேசி முடிச்சிடலாம். உனக்கும் வயசாயிடுச்சுல்லே? காலா காலத்துல நடக்க வேண்டியது நடந்தாத்தானே நல்லா இருக்கும்?

    அம்மா கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? ரெண்டு வருஷம் போகட்டும் வாடகை வீட்ல குடியிருக்கோம். அப்பாவோட பென்ஷன்லதான் வாடகையும் கொடுத்துட்டு குடும்பத்தையும் நடத்த வேண்டியிருக்கு. என்னோட புகைப்படத் தொழிலில் மாசா மாசம் ரெண்டாயிரம் ரூபாய்கூடக் கெடைக்கறது கிடையாது. அப்படியே கெடைச்சாலும் அது என்னோட செலவுக்கே போதலை. இதுல கல்யாணம் பண்ணி இன்னொரு பெண்ணையும் கூட்டி வந்துட்டா திண்டாட வேண்டியதுதான்.

    தோள்களைக் குலுக்கியபடியே சொன்னவனைக் கண் கலங்கப் பார்த்தாள் மரகதம்.

    வசதியான குடும்பத்துப் பொண்ணா பார்த்தோம்னு வை.. அவங்களே உனக்கொரு பிசினஸ் வெச்சுக் கொடுத்துடுவாங்கடா.

    அம்மா அதெல்லாம் சரியா வராது. இப்போதைக்கு கல்யாணப் பேச்சை பேசி என்னைத் தொந்தரவு பண்ணாதே. புகைப்படத் துறையில் நான் நெறைய சாதிக்கணும், கைநெறைய சம்பாதிச்சு கார், பங்களான்னு வாங்கணும், மத்தவங்க ஆச்சர்யப்படற அளவுக்கு பேரும் புகழும் பெறணும். அதுதான் என்னோட லட்சியம். அதுக்குப் பிறகுதான் கல்யாணம்.

    படபடத்தபடியே காலை சிற்றுண்டியைக் கூடச் சாப்பிடாமல் வெளியே வந்தான். செகணண்டில் வாங்கி வைத்திருக்கும் பைக்கில் ஏறிப் பறந்தான். விக்கித்துப் போனாள் மரகதம்.

    எந்த வேலையும் ஓடவில்லை.

    வெகுநேரம் வரை சிலையாக அமர்ந்திருந்தாள்.

    வெளியே போயிருந்த சேதுமாதவன் உள்ளே நுழைந்தபடியே ஆர்வமாய்க் கேட்டார்.

    சூர்யாகிட்டே விஷயத்தைச் சொல்லிட்டியா என்ன சொன்னான்?

    அவன் இப்போதைக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டான்.

    அவருக்கு சாப்பாட்டுத் தட்டை எடுத்து வைத்தாள்.

    நான்கு இட்லிகளை வைத்துக் கொத்து மல்லி சட்னியை ஊற்றினாள்.

    அவர் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தவள்.. தயக்கமாய் பேச்சைத் தொடங்கினாள்.

    என்னங்க உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.

    சொல்லு..

    கோபப்பட மாட்டிங்களே?

    திக்கென்று நிமிர்ந்தார்.

    மொதல்ல விஷயத்தைச் சொல்லு.

    நாம ரெண்டு பேரும் நாளை மறுநாள் கோவிலுக்குப் போகலாமாங்க?

    ஓ… போகலாமே.

    தலையை ஆட்டினார்.

    அன்னைக்குத்தான் நம்ம ஜெகனுக்கு பிறந்தநாள். அவன் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடலாம்ங்க.

    மரகதம் சொல்ல சேது மாதவனின் கண்களில் கோபம் நெருப்புக் கட்டியாய் பளபளத்தது.

    ***

    கனகா இங்க வாயேன்…

    மதுமிதா கூப்பிட பணிவாய் ஓடிவந்து அவளுக்குப் பக்கமாய் நின்றாள் கனகா.

    என்னம்மா... வேணும்?

    என்னோட அறையில ‘கண்ணாடி இதயம்'னு ஒரு கவிதைப் புத்தகம் வெச்சிருந்தேன். நீ அதைப் பார்த்தியா?

    இல்லையேம்மா. எனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே. நான் அதை எடுத்து என்னம்மா பண்ணப் போறேன்.

    உதட்டைச் சுழித்தாள் கனகா

    நீ எடுக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். அந்தப் புத்தகத்தை வேற யாராச்சும் எடுத்துப் போனாங்களான்னுதான் கேக்கறேன்...

    அனும்மாதான்… உங்க அறைக்குள்ளே இருந்துட்டு வெளியே போனாங்க. ஒருவேளை அவங்க எடுத்துட்டுப் போயிருக்கலாம், நான் வேணா... அனும்மாகிட்டே கேட்டு வரட்டுமா?

    நீ கேக்க வேணாம். இரு. நானே போய் கேட்டுக்கறேன்.

    மதுமிதா மாடியிலிருந்த தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தாள். கீழே இறங்கி அனுப்பிரியாவின் அறையை நெருங்கினாள்.

    அனுப்பிரியாவின் அறைக்கதவு கால்வாசி திறந்திருக்க அனுப்பிரியா உள்ளே டெலிபோன் ரிஸீவரின் வழியே யாருடனோ அழுகிற குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.

    தபாரு… சந்துரு… நான் உம்மேல உயிரையே வெச்சிருக்கேன். நீ இல்லாம என்னால வாழவே முடியாது. எங்க வீட்ல நம்ம காதல் விவகாரம் தெரிஞ்சிப் போயிடுச்சு. என்னை வெளிலயே விடறது இல்லை. என்னோட செல்போனைக் கூட பிடுங்கி வெச்சுகிட்டாங்க அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கேன். இப்பக்கூடத் தாழ்ப்பாளை உடைச்சுகிட்டுதான் வெளில வந்து யாருக்கும் தெரியாம உங்ககூட பேசிக்கிட்டு இருக்கேன். நம்ம கல்யாணம் உடனடியா நடந்தாகணும். நீங்களும்… பூமாலை, தாலி, முகூர்த்தப் புடவையோட மாப்பிள்ளைக் கோலத்துல வந்துடுங்க. நீங்க வராமப் போனா நான் விஷத்தைக் குடிச்சுட்டு அந்த எடத்துலயே உயிரை விட்டுடுவேன்.

    கதவைக் கை வைத்து தள்ளித் திறக்க நினைத்த மதுமிதா - அப்படியே உறைந்து போனாள்.

    2

    எல்லாவற்றையும் விட

    பேரழகு அதுதான்.

    நல்ல நிறமும்கூட.

    மூக்கும் முழியுமாக இருந்தது.

    'விலை போகவில்லையே' என

    தூக்கி எறியவும் மனசில்லை!

    கால் உடைந்த மண்பொம்மை.

    அனுப்பிரியா டெலிபோனில் பேசிக் கொண்டிருந்ததை கேட்கக் கேட்க மதுமிதாவுக்கு வியர்த்தது.

    ‘அனு காதலிக்கிறாளா?

    அவன் மீது உயிரையே வைத்திருக்கிறாளாமே..! அவனை மறக்க முடியாதாமே! அவன் இல்லாவிட்டால் உயிரையே விட்டுவிடுவாளாமே! அந்தளவுக்கு காதல் முற்றி விட்டதா!'

    மதுமிதாவுக்குப் படபடப்பாக இருந்தது.

    அனுப்பிரியாவின் கண்களில் படாமல் பூனை மாதிரி செல்ல, அங்கிருந்து நழுவினாள்.

    'நாளைக்கு ரிஜிஸ்தர் ஆபீசுக்கு பூமாலை, தாலியோடு அவனை வரச் சொல்லியிருக்கிறாளே. இந்தக் கல்யாணம் நடந்துவிட்டால்… அனுவின் வாழ்க்கையே திசைமாறி விடுமே காதலிப்பது தவறில்லை. கல்யாணம் பண்ணிக் கொள்வதும் தவறில்லை. ஆனால் காதலிக்கப்பட்டவன் நல்லவனாக கடைசிவரை கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்றுபவனாக இருக்க வேண்டும். அனு நல்லவனைத் தேர்ந்தெடுத்திருந்தால் தப்பில்லை. கெட்டவனைத் தேர்ந்தெடுத்திருந்தால் ஆயுள் முழுவதும் அழ வேண்டியிருக்குமே!'

    மதுமிதா நிலை கொள்ளாமல் தவித்தாள்.

    எங்க வீட்ல நம்ம காதல் விஷயம் தெரிஞ்சுடுச்சு என்னைப் பூட்டி வெச்சுருக்காங்க. இப்பக்கூட கதவுத் தாழ்ப்பாளை உடைச்சு வெளியே வந்துதான் உங்ககிட்டே பேசிக்கிட்டிருக்கேன்.

    அனுப்பிரியாவின் குரல் காதினுள் ஒலித்தது.

    ‘அனு ஏன் பொய் சொன்னாள்? அவள் சொன்ன மாதிரி வீட்டில் எதுவுமே நடக்கவில்லையே!’

    மதுமிதாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

    'எது பொய்? எது நிஜம்? அனுவின் நடத்தையே புதிராக இருக்கின்றதே.'

    ‘அப்பா வேறு வீட்டில் இல்லை. பெங்களூரிலிருந்து எப்போது வருகிறாரோ. அவர் வருவதற்குள் அனு இங்கே எவனையாவது கல்யாணம் பண்ணிக்கொண்டு ஓடிப் போய் விட்டால் தலை குனிவாகி விடுமே.'

    மதுமிதா யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

    ‘அம்மாவிடம் சொல்லிவிடலாம். அவள் என்ன முடிவெடுக்கிறாளோ… எடுக்கட்டும்."

    ***

    கை இல்லாத ரவிக்கை அணிந்து வயதைக் குறைத்துக் காட்ட முயன்றிருந்த காமினிதேவி மதுமிதா சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தாள்.

    ஆச்சர்யமா இருக்கு. அனுவா இப்படி?

    அம்மா.. அனுவுக்குச் செல்லம் கொடுத்து அவளை இந்தளவுக்கு வீணடிச்சதே நீங்கதான்.

    "மது.. அனு புத்திசாலி, தைரியசாலி. அவ மேல நான் ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கேன் காதலிக்கறது. ஓடிப் போறது இதெல்லாம் அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. இது மாதிரி முட்டாள் தனமான காரியத்தையெல்லாம் அனு செய்யவே மாட்டா. அனுவைக்

    Enjoying the preview?
    Page 1 of 1