Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iravum Nilavum Valarattumey...!
Iravum Nilavum Valarattumey...!
Iravum Nilavum Valarattumey...!
Ebook197 pages1 hour

Iravum Nilavum Valarattumey...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் அண்ணன் அண்ணியே உலகம் என்று பெற்றோர்கள் இன்றி வாழும் கனிகாவிற்கு, அவள் அண்ணியிடம் கிடைத்தது வெறுப்பு மட்டுமே. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம்கொண்ட பிரகதீஷின் கண்களில் கனிகா பட, அவள்மீது காதல் கொள்கிறான். பிரகதீஷின் காதலை ஏற்றாளா? திருப்பங்கள் நிறைந்த இக்கதையை வாசிப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateJan 21, 2023
ISBN6580128309260
Iravum Nilavum Valarattumey...!

Read more from Maheshwaran

Related to Iravum Nilavum Valarattumey...!

Related ebooks

Reviews for Iravum Nilavum Valarattumey...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iravum Nilavum Valarattumey...! - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இரவும் நிலவும் வளரட்டுமே...!

    Iravum Nilavum Valarattumey...!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    தஞ்சாவூர் தெற்கு வீதி.

    வாகனங்கள் விருட்விருட்டென நகர்ந்து கொண்டிருந்தன.

    பரபரப்பான காலை பத்தரை மணி.

    சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது அஜந்தா கிப்ட் சென்டர்.

    வெறும் ஐம்பது ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் அங்கே பரிசுப் பொருட்கள் கிடைக்கும்.

    இருப்பவர்கள் முதல் இல்லாதவர்கள் வரை எல்லோருமே அஜந்தா கிப்ட் சென்டருக்குத்தான் படையெடுப்பார்கள்.

    சாயங்காலம் நான்கு முப்பது மணிக்குமேல் பள்ளி மாணவ மாணவியரின் கூட்டம் நிரம்பி வழியும்.

    மொத்தம் மூன்று ஃப்ளோர்கள்.

    மூன்றிலுமே நிற்க இடம் இருக்காது.

    இரண்டாவது ஃப்ளோரல் நின்றிருந்தாள் கனிகா.

    இன்னும் மூன்று தினங்களில் அவளுடைய தோழி ராதிகாவுக்கு கல்யாணம். பரிசுப்பொருள் வாங்குவதற்குத்தான் வந்திருந்தாள்.

    எந்தப் பொருளை வாங்கலாம்? கண்கள் நாலாபுறமும் சுழன்றது.

    கையில் இருந்ததோ வெறும் இருநூறு ரூபாய்தான். அந்தப் பணத்தையே அவளுடைய அண்ணியிடம் கெஞ்சிக் கூத்தாடிதான் வாங்கி வந்திருந்தாள்.

    இவளுங்களையெல்லாம் கல்யாணப் பத்திரிகைகொண்டு வந்து வைக்கலைன்னு யாரு அழுதா...

    முதலில் ஐம்பது ரூபாய்த் தாளைத்தான் நீட்டினாள் வசுமதி.

    அண்ணி... ப்ளீஸ் கொஞ்சம் கூடுதலா தாங்களேன்...

    இங்கே என்ன கொட்டியா கெடக்கு...? வீடு மட்டும்தானே சொந்தம்... மத்ததெல்லாம் காசு கொடுத்துதானே வாங்க வேண்டியிருக்கு...?

    முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

    ஏழெட்டுப் ப்ளவுஸ் தைத்து வச்சிருக்கேன். அஞ்சாறு வயர்கூடை பிண்ணி ரெடியாயிருக்கு... யாரும் வாங்கிப்போக வரலை... வந்துட்டாங்கன்னா என் கைக்கு பணம் வந்துரும்... திருப்பிக் கொடுத்துடுவேன்... ப்ளீஸ் அண்ணி...

    அழாத குறையாய் கெஞ்சினாள்.

    வசுமதியிடம் எதிர்த்துப் பேசினால் எதுவுமே நடக்காது. ஒன்றுமே கிடைக்காது.

    கனிகாவின் அண்ணன் ஆனந்த்கூட இப்படித்தான் வசுமதியிடம் கெஞ்சுவான்.

    வங்கியில் வேலை பார்க்கிறான். மாதம் நாற்பதாயிரத்துக்கும்மேல் சம்பளம் வாங்குகிறான். சம்பளப் பணம் முழுவதையுமே அப்படியே வசுமதியிடம் கொடுத்து விடுவான். நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதாக இருந்தாலும் வசுமதியிடம்தான் மன்றாட வேண்டும்.

    வசுமதி, ராட்சசி. இதயமே இல்லாத ராட்சசி.

    மனத்துக்குள் தான் ஒரு பெரிய மகாராணி என நினைப்பு.

    வசுமதி ஆனந்துக்கு தூரத்து உறவுப் பெண்.

    ஆனந்தின் அப்பா சபேசனும் அம்மா ஜெயமும் சாலை விபத்தில் பலியாகிவிட்டனர். சபேசன் பார்த்த வங்கி வேலைதான் ஆனந்திற்கு கருணை அடிப்படையில் கிடைத்திருந்தது.

    லட்சக்கணக்கில் கிடைத்த பணத்தையும், தன் பெயருக்கு பாதியையும், கனிகா பெயருக்கு மீதியையும் டெபாசிட் செய்திருந்தான்.

    பெற்றோர் இல்லாத கனிகாவை தாய்க்குத் தாயாய் தந்தைக்குத் தந்தையாய் பாசமாய் அரவணைத்துக் கொள்வாள் என எண்ணித்தான் உறவுக்காரப் பெரியவர்களாகப் பார்த்து வசுமதியை ஆனந்திற்கு மணம் முடித்திருந்தனர்.

    வசுமதி சுயநலவாதியாய், பேராசைக்காரியாய் எல்லோரையும் ஆட்டிப் படைப்பாள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. மனைவியை அடக்கி ஆள வேண்டும். அல்லது அடங்கிப்போக வேண்டும். இல்லாவிட்டால், குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். ஆனந்த் அடங்கிப்போகக் கற்றுக்கொண்டான்.

    கனிகாவும், அவனைப் பார்த்து தன்னை மாற்றிக்கொண்டாள். வசுமதியை எதிர்த்து ஒருவார்த்தைகூட பேசமாட்டாள். தையல் தைத்தும், வயர்கூடை பிண்ணியும், மாசம் மூவாயிரத்திற்குமேல் சம்பாதிக்கிறாள் கனிகா. ஒருரூபாய்கூட தொடமாட்டாள். அப்படியே வசுமதியிடம் கொடுத்து விடுவாள்.

    வரவு செலவு முழுக்க வசுமதிதான். அவளிடம் யாரும் கணக்குக் கேட்க முடியாது.

    தன்னுடைய சொந்தப் பணத்தைக் கேட்பதற்கே கையேந்த வேண்டிய நிலை. ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் ஜெயத்தின் அத்தனை நகைகளையும் வசுமதியே அபகரித்துக்கொண்டாள்.

    கனிகாவின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தையும் எடுத்துத் தரச்சொல்லி தன் பெயரில் போட்டுக்கொண்டாள்.

    அண்ணி... என்னை எப்படி வேணும்னாலும் பார்க்கட்டும்... எவ்வளவு கேவலமா வேணாலும் நடத்தட்டும்... ஆனாலும், நான் அவங்களை என்னோட அம்மா ஸ்தானத்துலதான் வச்சிருக்கேன். அவங்கமேல எனக்கு கோபமே வராது...

    கனிகா பெருந்தன்மையாக பக்குவப்பட்டவளாக பேசுகிறபோது, ஆனந்தின் கண்கள் கலங்கிப்போகும்.

    தேங்க்ஸ் கனிகா... நெகிழ்ந்துபோய் அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொள்வான்.

    விட்டுக் கொடுத்துப்போவதால் யாரும் கெட்டுப் போவதில்லை.

    கனிகாவின் பொறுமைதான் சில சமயங்களில் வசுமதியின் கோபத்தையே குறைத்துவிடும்.

    கூடுதலான்னா எவ்வளவு வேணும்... சொல்லித் தொலையேன்...

    சற்றே மனம் இரங்கி எரிந்து விழுந்தாள்.

    இருநூறு ரூபாய் போதும் அண்ணி...

    வசுமதி கொடுத்திருந்த இருநூறு ரூபாயையும் வைத்துக்கொண்டுதான் அஜந்தா கிப்ட் சென்டர் முழுவதும் சுற்றி வந்தாள்.

    கிளிகள் கூட்டமாக வரயைப்பட்டிருக்கிற அதோ அந்த க்ளாஸ் பெயிண்டிங்கை எடுங்களேன்...

    சேல்ஸ் கேர்ளிடம் சுட்டிக் காட்டினாள்.

    அந்தக் கிளிகள் பயிண்டிங் தவுசண்ட் ருபீஸ் மேடம்...

    அப்ப வேணாம்...

    அவசரமாய் பின்வாங்கி மறுபடியும் தேடத் தொடங்கினாள்.

    பொருளின் தரத்தையோ, அழகையோ பார்க்காமல் விலையைப் பார்த்துப் பார்த்து தேடினாள்.

    சரியாய் இருநூறு ரூபாய் விலையில் ஒரு ஓவியம் அகப்பட்டது. க்ளாஸ் பெயிண்டிங். கருப்பு வண்ண மரச் சட்டத்தினால் பிரேம் போடப்பட்டு அட்டகாசமாய் இருந்தது.

    பூமரம் ஒன்றின் கீழே கண்ணனும் ராதையும். ராதையின் மடியில் தலைவைத்துப் படுத்தபடி குழல் ஊதுகிற மயக்கும் தோற்றத்துடன் கூடிய கண்ணன். அலங்கார பதுமையாய் ராதை. முற்றிலும் பறவை இனங்கள். மான் கூட்டம். தோகை விரித்து ஆடுகிற மயில். பெயிண்டிங் அழகோ அழகு. நெஞ்சை அள்ளிக் கொள்கிற அழகு.

    இது ரொம்பப் பிடிச்சிருக்கு பேக் பண்ணிடுங்க...

    பெயிண்டிங்கை கையில் எடுத்து புரட்டிப்புரட்டிப் பார்த்தாள். வெடுக்கென அவளிடமிருந்து அந்த க்ளாஸ் பெயிண்டிங்கை பரித்தான் ஒரு இளைஞன்.

    எக்ஸ்க்யூஸ் மீ... ஏற்கெனவே இந்த க்ளாஸ் பெயிண்டிங் நான் செலக்ட் பண்ணிட்டேன். அதுக்குள்ளே நீங்க வந்து எடுத்து விலை பேசினால் எப்படி...? தோள்களைக் குலுக்கினான்.

    அதிர்ந்துபோய் நிமிர்ந்தாள் கனிகா.

    2

    தன் கையில் இருந்த க்ளாஸ் பெயிண்டிங்கை தட்டிப் பறித்ததோடு குறுகுறுவென தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிற அந்த இளைஞனை எரிச்சலும் கோபமுமாய் பார்த்தாள் கனிகா.

    கனிகா...

    அமைதியே உருவானவள்...

    கோபமே வராது...

    கோபம் என்றால் என்னவென்றே தெரியாது...

    இவ்வளவு நேரமாய் கால் கடுக்க நின்று கண்கள் வலிக்க தேடி எடுத்த சரியாய் இருநூறு ரூபாய் விலையில் இருந்த அழகான ஒரே ஒரு கிளாஸ் பெயிண்டிங்கையும் பிடுங்கிவிட்டானே...!

    சாதாரணமாய் வாயால் கேட்டிருந்தால்கூட கனிகாவுக்கு கோபம் வந்திருக்காது. தட்டிப் பறித்ததையோ அதிகாரமாய் பேசியதையோதான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    பார்த்தா... டீசண்டா இருக்கீங்க...! படிச்சவர்போலத் தெரியறீங்க... இப்படித்தான் நாகரீகமே இல்லாம நடந்துப்பீங்களா...?

    கனிகா படபடத்தாள்.

    முகம் சட்டென சிவந்து போயிருந்தது.

    டிப் டாப்பா டிரெஸ் பண்ணியிருந்தா... படிச்சவங்கன்னு அர்த்தம் ஆயிடுமா? நான் அஞ்சாங்கிளாஸ் ஃபெயிலுங்க...

    கண்கள் வலிய சிரித்தான்.

    ‘சரியான திமிர்க்காரனா இருப்பான் போலிருக்கிறதே!’

    ‘வேண்டுமென்றேதான் சீண்டுகிறான்...’

    கனிகாவிற்கு ஆத்திரம் கூடியது.

    நீங்க அஞ்சாங்கிளாஸ் பாசோ ஃபெயிலோ அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை... அந்த விசயம் எனக்கு தேவையும்மில்லை... இந்தப் பெயிண்டிங்கை அரை மணி நேரமா தேடி கையில் எடுத்ததே நான்தான். தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க... நீங்க செலக்ட் பண்ணினதா இருந்தா அப்பவே பேக் பண்ணச் சொல்லி கேஷ் கவுண்டருக்கு அனுப்பியிருக்கலாமே? என்றாள் கூர்மையாய்.

    அந்த இளைஞன் கனிகாவை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தான்.

    அட... இந்த யோசனை முன்னமே தோணாமப்போயிடுச்சே...! நான் இன்னும் ரெண்டு மூணு கிப்ட் வாங்கறதா இருந்தேன். அதையெல்லாம் செலக்ட் பண்ணின பிறகு ஒண்ணா சேர்த்து பேக் பண்ணச் சொல்லி, கேஷ் கவுண்டருக்கு அனுப்பலாம்னு இருந்தேன். நீங்கதான் இடையில் புகுந்து வம்பு பண்றீங்க...!

    தெத்துப் பல் தெரிய புன்னகைத்தான்.

    என்னது நான் வம்பு பண்றேனா...?

    நீங்கதான்...

    இதைப் பாருங்க... இதெல்லாம் நல்லால்ல...

    எது நல்லால்ல...?

    அடுத்தவங்க செலக்ட் பண்ணின பொருளை உரிமை கொண்டாடுறீங்களே...? அதைத்தான் சொல்றேன்...

    இவ்வளவு பெரிய கிப்ட் சென்டர்ல வேற பொருளே இல்லையா... எதையாச்சும் வாங்கிக்கலாமே...?

    இதே கேள்வியைத்தான் நானும் கேக்கறேன்... இவ்வளவு பெரிய கிப்ட் சென்டர்ல நீங்க ஏதாச்சும் ஒரு பொருளை வாங்கிட்டுப்போங்க...

    எனக்கு இதுதான் வேணும்... அழுத்தமாய்ச் சொன்னான்.

    நான் ஏற்கெனவே செலக்ட் பண்ணிட்டேனே...!

    சேல்ஸ் கேர்ள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள்.

    ‘இருவரும் ஏற்கனவே பழக்கமானவர்களோ...? வேண்டுமென்றே சண்டை போட்டுக்கொள்கிறார்களோ?’

    என நினைத்தாள்.

    அண்ணா... வெயிட் ப்ளீஸ்... இதேபோல இன்னொரு பீஸ் இருக்கான்னு பார்க்கறேன்...

    அதற்குள் இன்னொரு சேல்ஸ் கேர்ள் இடையில் புகுந்தாள்.

    இருவரையும் சமாதானப்படுத்துவது போல ஒவ்வொரு ஷெல்பாய் தேடினாள். அந்தக் கண்ணன் ராதை கிளாஸ் பெயிண்டிங் போல இன்னொன்று கிடைக்கவேயில்லை.

    ஒரு டஜன் வந்ததுல... இந்த ஒரு பீஸ்தான் மிச்சம்...

    தேடிப் பார்த்த சேர்ல்ஸ் கேள் ஏமாற்றத்தோடு உதட்டைச் சுளித்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1