Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athu Vanthu Nirkirathu..!
Athu Vanthu Nirkirathu..!
Athu Vanthu Nirkirathu..!
Ebook108 pages38 minutes

Athu Vanthu Nirkirathu..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எஸ்டேட் ஒன்றிற்கு வரும் இளம்பெண்ணுக்கு நேரும் வித்தியாச அனுபவம், அவளை மிதமிஞ்சிய கிலிக்கு ஆளாக்குகிறது. அதனை கண்டறிய தன் காதலனுடன் சேர்ந்து முயற்சிக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள் என்ன..? என்பதையும், அதே எஸ்டேட்டில் சில வருடங்களுக்கு முன் தனக்கு நேர்ந்த இன்னலுக்கு பழிவாங்கும் விதமாய் "பெண் ஒருவள்" ஆவியாக வந்து தன்னை கொன்றவர்களை பழிவாங்க முற்படுகிறாள். பாதிக்கப்பட்ட அவளுக்கும், எஸ்டேட்டுக்கு புதிதாய் வந்த இளம்பெண்ணுக்கும் என்ன தொடர்பு..? என்பதையும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580159909312
Athu Vanthu Nirkirathu..!

Read more from Anuraj

Related to Athu Vanthu Nirkirathu..!

Related ebooks

Related categories

Reviews for Athu Vanthu Nirkirathu..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athu Vanthu Nirkirathu..! - Anuraj

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அது வந்து நிற்கிறது...!

    Athu Vanthu Nirkirathu...!

    Author:

    அனுராஜ்

    Anuraj

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuraj

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 01

    ஃப்ளாஷ்பேக்

    கண்களை குளுமைப்படுத்தும் கேரளத்தின் இயற்கை. எட்டிய தூரம் வரை பச்சை... பசேல்...! சரிவாய்... சரிவாய் வளர்ந்திருந்த தேயிலைச் செடிகள்.

    அந்த செடிகளின் ஊடாக பாதி மறைந்த நிலையில் கேரளப் பெண்கள். ஒரே சீராக அவர்களின் கைகள் துரித கதியில் இயங்க... கிள்ளப்பட்டத் தேயிலைக் கொழுந்துகள் கணக்காய் தலையின் பின்பக்கம் முதுகில் முடிந்த கூடையில் விழுந்து கொண்டிருந்தது.

    அவர்களில் ஒருத்தி அழகாய்... களையாய்... சிவப்பாய்...

    தனி நளினமாய் தெரிந்தாள். அவள் 'மரகதம்.'

    ***

    சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறி ஜனத்திரளில் கலந்தாள் ஜென்னி.

    ஜென்னி ஓர் இருபது வயது இளந்தென்றல். சற்று பிரவுண் கலந்த கூந்தல் ( செம்பட்டை மயிறு என்றால் கோபம் வரும் அவளுக்கு).

    சதா இங்குமங்கும் அலைபாயும் கருவிழிக் கண்கள். ஜீன்ஸூம் ஜெர்கின்னும் அணிந்திருந்தாள். ஜெர்கின் வெள்ளை நிறத்தில் அவளது நீலநிற ஜீன்ஸிற்கு படுபாந்தமாய் பொருந்தியிருந்தது.

    அவளது நடையில் ஓர் அவசரகதி காணப்பட்டது. சப்வேயில் நுழைந்து எதிர்புறம் சென்று டி.வி.எஸ்.ஸ்டாப்பில் நின்று கொண்டாள். சிறிது நேரத்தில் 18ஏ வர, அதில் ஏறி சைதாப்பேட்டை எனக் கேட்டு வாங்கியவள், வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள். விரையும் பேருந்தில் இருந்து கொண்டு சட்சட்டென மறையும் கட்டிடங்களை சிறுபிள்ளைத்தனமாய் வேடிக்கைப் பார்த்தாள்.

    பஸ் அண்ணா மேம்பாலத்தைத் தாண்டிச் சென்றவுடன் அவளது பார்வை ஓரிடத்தில் நிலைக்க... வியந்தவளாய் ஆவலுடன் எழுந்து கொண்டாள். ஏ.ஜி. பஸ் ஸ்டாப்பில் வண்டி சென்று நின்றும் நிற்காததுமாய் இருக்கையில் பஸ்ஸின் இடிபாடுகளை லாவகமாய் தவிர்த்து, கண்டக்டரின் விசில் சத்தத்தை அலட்சியப்படுத்தி குதித்தவளாய், பின்னோக்கி விரைந்தாள்.

    அதுவரையில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பிய ராஜனின் முதுகில் செல்லமாய் ஒரு குத்து விட்டவளாய், ஹாய்... ராஜ்... என் வருங்கால கணவரே... ஹௌ டு... யூ... டு என்றாள்.

    ஹே... ஜென்னி... வாட் எ சர்ப்ரைஸ்... ஐ யாம் ஃபைன்... என்ற ராஜன் இருபத்து ஐந்தின் தொடக்கத்தி்ல் இருந்தான்.

    ஹேர்ஸ்டைல் அவனை எண்பதுகளின் கதாநாயகர்களை நினைவு படுத்தியது.

    என்ன ஜென்னி இந்தப் பக்கம்...?

    அப்பாவோட ஆபிஸூக்கு வந்தேன். அவர் இறந்த பின்னாடி அவர் பார்த்திட்டு இருந்த வேலையை எனக்கு தர்றேன்னு மானேஜர் சொல்லியிருந்தார். ஆனா, எனக்கு தான் இந்த ஆபிஸ் வொர்க்லே இண்ட்ரஸ்ட் இல்லையே...! அதான் அம்மாவோட எங்க பாலக்காட்டு பரம்பரை எஸ்டேட்டுக்கே போயிடலாம்னு இருக்கோம். அப்பாவோட கிராஜூவிட்டி அமௌண்ட் மட்டு்ம் பேலன்ஸ் இருக்கு... அதை பேங்க்லே , வர்றப்ப போட்டுவிடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.

    ஏய்... உண்மையிலேயே பாலக்காடு போறியா...?

    "ஆமா... அப்பா இருந்தவரைக்கும், எஸ்டேட் பக்கமே தலைவச்சுப் படுக்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்வாரு...! இப்ப நானும், தம்பியும் அடம்பிடிச்சு

    அம்மாவை கேரளா பக்கம் போறதுக்கு

    சரிக்கட்டிச் சம்மதிக்க வச்சிருக்கோம்."

    இப்ப எஸ்டேட் யாரோட மேற்பார்வையிலே இருக்கு...?

    சுமார் ஐம்பது வருஷமா... வைத்தியலிங்கம் அங்கிள் தான் பார்த்துகிறார். எங்க தாத்தா காலத்திலே இருந்து இருக்கார். பாவம்... வயசு வேற அதிகமாயிட்டது. என்னாலே முடியலை...! நீங்க வேற யாரையாவது வச்சு பாருங்கன்னு அடிக்கடி லெட்டர் போடுவாரு...! ஆனா... இது வரைக்கும் எஸ்டேட் பக்கமே போக கூடாதுன்னு அப்பா முடிவா இருந்தாரு... இப்பதான் அப்பா இல்லையே, அதான் நாங்க எஸ்டேட் எப்படி இருக்குன்னு போய் பார்க்கலாம்னு நெனக்கிறோம்.

    அப்ப எஸ்டேட் போறதுன்னு முடிவு பண்ணிட்டே...! என்னை அம்போன்னு கட் பண்ற இல்லையா...? என்றான் கேலியாக ராஜன்.

    நோ... ராஜ்…! எங்க எஸ்டேட் மானேஜ்மெண்டை உங்க கிட்டே விடலாம்னு ஒரு ஐடியா வச்சிருக்கேன்.

    வாட்...! நீ மட்டும் முடிவு பண்ற காரியமா இது...?

    அம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்க...

    இஸிட்...!

    எஸ்...! நாங்க எஸ்டேட் போனதும் லெட்டர் போடறேன். நீங்க கிளம்பி வாங்க...

    ஓ.கே. டியர். அப்ப நம்ம காதலை பாலக்காட்லே கண்டினியூ பண்ணலாம்ங்கற...

    துரைக்கு ஆசையைப் பாரு...

    "ஜென்னி... நானும் அங்கே வர்றதுக்கு அம்மாகிட்டே பெர்மிஷன் வாங்கிடறேன். எனக்கு தி.நகர்லே ஒரு வேலை இருக்கு என்றவனாய், அவளை வேறொரு வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு, எதிர்சாரியில் நிறுத்தியிருந்த தனது வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான் ராஜன்.

    அத்தியாயம் 02

    ஃப்ளாஷ்பேக்

    வைத்தி... அது யார்றா அந்தக் குட்டி...! புதுசா இருக்கா...? என வினவிய சாலமனுக்கு வயது நாற்பது. அந்த எஸ்டேட்டின் முதலாளி. திருமணமாகி

    Enjoying the preview?
    Page 1 of 1