Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும்
ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும்
ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும்
Ebook131 pages30 minutes

ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டீ கார்டன் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் ஜங்க்ஷனில் நுழைந்து - கீறிச்சிட்டு நின்றபோது விடியற் காலை ஐந்து மணி. ஸ்லீப்பர் கோச்சினின்றும் அந்த மூன்று பெண்கள் இறங்கினார்கள். இரண்டு பேர் சல்வார் கம்மீஸ், ஒருத்தி சேலை. அழகாக இருந்தார்கள்.
 ஒருத்தி கூப்பிட்டாள்.
 "கீதா..."
 "ம்..."
 "லக்கேஜ் ஏதும் விட்டுடலையே...?"
 "எல்லாமே அவங்கவங்க கையிலே இருக்கு..."
 "நம்மை ரிஸீவ் பண்ண வின்ஸி வந்திருக்காளான்னு பாரு...?"
 "வராமே இருப்பாளா...? கேட்ல நின்னுட்டிருப்பா..."
 "என்னடி பானு! ஸ்டேஷன் இவ்வளவு இருளோன்னு கிடக்கு..."
 "அதான் கேரளா..."
 "சே...! மீன் நாத்தம்..."
 "டீ... வசந்தி! அதாண்டி கேரளாவோட மண்வாசனை."
 கீதா, பானு, வசந்தி - மூன்று பேரும் பிரிட்ஜ் ஏறி எக்ஸிட் கேட்டுக்கு வந்தார்கள். ஒன்றாக திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்"என்னடி... வின்ஸியைக் காணோம்...?"
 "அதானே... கழுதை தூங்கிட்டாளா...?"
 "அவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்க மாட்டாளே...! ஒருவேளை நாம போட்ட லெட்டர் கிடைச்சதோ என்னவோ...?"
 "அதெப்படி லெட்டர் கிடைக்காமே போகும்...? அஞ்சு நாளைக்கு முன்னாடியே போஸ்ட் பண்ணியாச்சே...?"
 "இப்ப என்னடி பண்றது...?"
 "கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பாக்கலாமே...?"
 அங்கிருந்த பாலிவினைல் நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். பதினைந்து நிமிஷத்தை துரத்திவிட்டு - லக்கேஜ்களை தூக்கிக் கொண்டார்கள்.
 "அந்த கடங்காரி தூங்கிட்டான்னு நினைக்கிறேன். நாம்பளே ஒரு டாக்ஸியை பிடிச்சு... அவ வீட்டுக்கு போயிட வேண்டியது தான்."
 டாக்ஸி ஸ்டாண்ட்டுக்கு வந்தார்கள். ஊதுவத்தி புகையைக் காட்டி குருவாயூரப்பன் படத்துக்கு பூஜை செய்து கொண்டிருந்த ஒரு டிரைவர் - வேக வேகமாய் பூஜையை முடித்துவிட்டு - இறங்கி வந்தான். கேட்டான்.
 "டாக்ஸி வேணும்...?"
 "ஆமா..."
 "எவிட போகணும்...?"
 "மட்டாஞ்சேரி"
 "ஃபிப்டி ரூபீஸ்..."
 பேரம் பேசாமல் ஏறி உட்கார்ந்தார்கள்.
 டாக்ஸி புறப்பட்டது. வெறிச்சோடியிருந்த எம்.ஜி.ரோட்டில் வேகம் பிடித்து ஐந்தே நிமிஷத்தில் ஷிப்யார்டைக் கடந்து - கொச்சின் போர்ட் ரோட்டில் நுழைந்தது. வசந்தி உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டாள்"ஊர் ஜில்ன்னு இருக்கு... ஏ.ஸியை மேக்ஸிமத்தில் வெச்ச மாதிரி..."
 "நாம மூணு பேருமே… இந்த ஊருக்கு புதுசுன்னு வின்ஸிக்குத் தெரியும்... தெரிஞ்சிருந்தும் ஸ்டேஷனுக்கு வராமே விட்டுட்டாளே...?"
 "லெட்டர் கிடைச்சிருக்காதுன்னுதான் என் மனசுக்கு படுது."
 "லெட்டர் கண்டிப்பாக கிடைச்சிருக்கும். அந்த சோம்பேறி கழுதை குளிர்க்கு இழுத்து போர்த்துக்கிட்டு தூங்கிட்டிருப்பா... நாம போய் எதிர்ல நின்னதும் தலையை சொறிஞ்சிக்கிட்டு... பல்லைக் காட்டிக்கிட்டு தலையைச் சொறிவா பாரேன்..."
 பதினைந்து நிமிஷ பயணத்திற்குப்பின் -
 டாக்ஸி மட்டாஞ்சேரியின் கடற்கரை பகுதிக்குள் நுழைந்தது. டிரைவர் கேட்டான். "எந்த ஸ்ட்ரீட்...?"
 "பாரடைஸ் ஸ்ட்ரீட்... நெம்பர் ஃபோர்ட்டீன்..."
 கார்ப்பரேஷன் விளக்குகள் - வெளிச்சத்தைக் கொட்டிக் கொண்டிருந்த - அந்த நீளமான ரோட்டில் ஓடி - பிறகு வந்த ஒரு குறுகலான தெருவுக்குள் டாக்ஸி நுழைந்து 14-ம் எண்ணுள்ள வீட்டைத் தேடிக்கொண்டு போயிற்று.
 10, 12, 12, 13... வசந்தி பார்த்துக் கொண்டே வந்து 14-ம் எண் கிடைத்ததும் கத்தினாள்.
 "டிரைவர்! இந்த வீடுதான்."
 டாக்ஸி நின்றது.
 "இந்த வீடுதானா...?" - பானு கேட்டாள்.
 "ஆமாண்டி...! கேட் சுவரைப் பாரு... வின்ஸி ஹவுஸ்ன்னு போட்டிருக்கு."
 "இறங்கு..."
 இறங்கினார்கள். காம்பௌண்ட் கேட்டை நெருங்கியதும் பெரிதாய் திடுக்கிட்டார்கள். கேட்டிலும் - உள்ளேயிருந்த வாசல் கதவிலும் - கனமான பித்தளை பூட்டுக்கள் தொங்கின

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223465287
ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும்

Read more from Rajeshkumar

Related to ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும்

Related ebooks

Related categories

Reviews for ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    வானிலை நிலையத்தின் அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு - சென்னையை இருபத்திநாலு மணி நேரமும் விடாமல் நனைத்துக் கொண்டிருந்தது மழை.

    ராத்திரி மணி ஒன்பது. ஹாரிங்க்டன் ரோடு, கடைசி பங்களா. அழகான - ஆறடி உயர - விஜய் பாபு குளிர்க்கு இதமாய் ஸ்வெட்டர் அணிந்துக் கொண்டு மேஜையின் மேலிருந்த கார் சாவியை எடுத்தபடி போர்டிகோவுக்கு வந்தான். போர்டிகோ வராந்தாவில் நாற்காலிகளைப் போட்டு உட்கார்ந்தபடி பேசிக் கொண்டிருந்த அவனுடைய அப்பா வராக மூர்த்தியும் அம்மா ரஞ்சிதமும் நிமிர்ந்தார்கள் ஆச்சர்யமாய் ரஞ்சிதம் கேட்டாள்.

    டேய்... எங்கேடா புறப்பட்டே... இந்த மழையில...?

    மேரேஜ் இன்விடேஷனை கொடுக்கத்தான்...

    யாருக்கு...?

    என் ஃப்ரெண்ட் ஜெயகோபாலுக்குத் தான்... இந்நேரம் போனாத்தான் அவனை க்வார்ட்டர்ஸில்... பிடிக்க முடியும்...

    ஆவடியில் தானே அவன் இருக்கான்...?

    ஆமா...

    இன்விடேஷனை போஸ்ட்ல அனுப்பிட்டு... போன்ல கூப்பிட்டு விட வேண்டியது தானே...? இதுக்காக மெனக்கெட்டு இந்த சிணுங்கற மழையில் போகணுமா...?

    வராகமூர்த்தி குறுக்கிட்டார். ரஞ்சிதம்! நீ பேசறது... நல்லாயிருக்கா...? யார் யாரை நேர்ல போய் கூப்பிடணும். யார் யாருக்கு போஸ்ட்ல இன்விடேஷன் அனுப்பணும்ன்னு அவனுக்குத் தெரியாதா... என்ன...? டேய்... விஜய் நீ கிளம்புடா...

    அப்பான்னா... அப்பாதான்...

    ஆனா... ஒரு கண்டிஷன். போய்ட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே திரும்பிடணும்... ஐ... மீன்... பத்து மணி அடிக்கும்போது... கார் காம்பௌண்ட் கேட்டுக்குள்ளே நுழையணும்... ஆவடியில்... இறங்கி நடக்கும்போது... மழையில் அதிகம் நனையாதே... கல்யாணம் நெருங்கிட்டு வரும்போது... காய்ச்சல் கீய்ச்சல்ன்னு விழுந்துட்டா... சிரமமா போயிரும்...

    "கார் இருக்கும்போது நான் ஏன்ப்பா மழையில் நனையப் போறேன்... ஒரு சொட்டு ஈரமில்லாமே... உன்முன்னாடி வந்து நின்னாப் போதும் இல்லையா? சொல்லிக்கொண்டே போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கிப் போனான்... விஜய்பாபு.

    தூறிக் கொண்டிருந்த மழையில் – காரை காம்பௌண்ட் கேட்டுக்கு வெளியே கொண்டுவந்து வேகம் எடுத்த போது - நேரம் 9.05. வானம் அட்டைக்கறுப்பில் கனமாய் தெரிந்தது. காரின் முன்புறக் கண்ணாடியில் - மழைத்தூறல் வேகமாய்ப்பட்டு நனைக்க - வேப்பர்கள் இயங்கியது.

    ‘இந்த இன்விடேஷன் டிஸ்ரிப்யூஷன் வேலையை அடுத்த இரண்டு நாட்களுக்குள் முடித்து விட வேண்டும்... கல்யாணத்திற்கு முன் நான்கைந்து நாட்களாவது ஃப்ரீயாக இருக்கவேண்டும். இன்றைக்கு ஜெயகோபாலைப் பார்த்து கொடுத்துவிட்டால்... நாளைக்கு டி.நகர் சர்க்கிள்... மறுநாள் அடையார் சர்க்கிளைப் பார்த்து... இன்விடேஷனை டிஸ்ட்ரிப்யூட் பண்ணிட வேண்டியது தான்...’

    யோசனையாய் காரைச் செலுத்திக் கொண்டுவந்தவன் – ஈகா தியேட்டர் சந்திப்பில் சிவப்பு சிக்னலைப் பார்த்ததும் பிரேக்கை அழுத்தினான். கார் மஞ்சள் கோட்டையொட்டி நின்றது.

    அம்பர்க்காக காத்திருந்தான்.

    அந்த விநாடிகளில்தான் - அந்த பியட்கார் - அவனுடய மாருதியையொட்டி வந்து பக்கவாட்டில் நின்றது.

    விஜய்பாபு திரும்பிப் பார்த்து – ட்ரைவிங் சீட்டில் இருந்த இளம் பெண்ணைப் பார்த்ததும் கண்களை விரித்தான். உதடுகள் தன்னிச்சையாய் பிரிந்து -

    பிரதிமா - என்று கத்தியது.

    குரல் கேட்டு அவளும் கலைந்து திரும்பினாள். குபீரென்ற மலர்ச்சிக்கு போனாள். ஹாய்... விஜய் பாபு நீங்களா? பம்பாயிலிருந்து எப்ப வந்தீங்க...?

    நானும் ஃபேமிலியும்... இப்ப பம்பாயிலேயே இல்லை... ஏஜென்ஸி பிஸினெஸை மாத்திக்கிட்டு... மூணு வருஷத்துக்கு முன்னாடியே மெட்ராஸ் வந்துட்டோம்... நீ... இப்ப... திருவனந்தபுரத்தில் இல்லையா...?

    "இல்லை... மெட்ராஸ் வந்து ஆறுமாசமாச்சு... சிக்னல்ல க்ரீன் விழுந்தாச்சு... என் கார்க்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1