Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanal Vizhi
Kanal Vizhi
Kanal Vizhi
Ebook144 pages1 hour

Kanal Vizhi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Sudha Suresh
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466503
Kanal Vizhi

Related to Kanal Vizhi

Related ebooks

Related categories

Reviews for Kanal Vizhi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanal Vizhi - Sudha Suresh

    28

    1

    நந்தினி அந்த மரத்தடியில், பப்பி நாய்குட்டி போன்ற தனது ஸ்கூட்டியை ஸ்டாண்டிட்டு நிறுத்திய போது, மணி இரவு பதினொன்றை நோக்கி நொண்டி அடித்துக் கொண்டிருந்தது.

    லட்சங்களில் வரும் வருமானத்தை, எப்படி கோடிகளாக்குவது என ஓயாது ஓடும் செல்வச் செழிப்பு மிக்க பெசண்ட் நகர் ஏரியா. சில்லென்று காற்று வீசும் கடற்கரை சாலையில் இருந்து சற்றே இடதுபுறம் பிரிந்த அந்த அகலமான தெரு, இரு மருங்கிலும் ஆள் அரவமின்றி ஜிலோவென்று இருந்தது!

    சுத்தமான சாலையில், தெருவிளக்குகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சோம்பேறியாய் எரிய, தொண்ணூறு சதவிகித வீடுகள் இருளில் குளித்தது.

    எக்ஸ்னொரா போன்ற, ஏதோ ஒரு அமைப்பு அழகாக சேவை செய்திருக்க, ராட்க்ஷச மரங்கள் இலவச ஏ.சி., வழங்கிக் கொண்டிருந்தன!

    கடற்காற்று...

    கார்த்திகை மாதம்...

    மரங்களின் ஏ.சி.,...

    என சில்லென்றுக் குளிரெடுக்க, இரண்டு கைகளையும் மார்பில் கட்டியபடி ஸ்கூட்டியில் சாய்ந்து நின்றிருந்தாள் நந்தினி.

    ஸ்கூட்டியில் தொங்கிய ஹேண்ட் பேகிலிருந்து, மணியைப் பார்க்க செல்லை எடுத்தாள். அதற்காகவே காத்திருந்தது போல் அது மெல்லியதாய் சிணுங்க... டிஸ்ப்ளே ‘அம்மா ‘ என்றது.

    என்னம்மா

    என்ன நொன்னம்மா... மணி பதினொன்னு

    இல்ல பத்து அம்பத்தியெட்டு

    இதுல ஒன்னுங் குறைச்சலில்ல எப்போ வந்து தொலைவ

    ம்மா... முக்கியமான ஃபைல் ஒன்னைப் பார்த்துட்ருக்கேன்... நா வர இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்... நீ பயந்து தொலையாத

    ராத்திரி நேரத்ல பன்னண்டு மணிக்கு வந்தா என்ன அர்த்தம்!?அக்கம் பக்கம் பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க...

    ஆமா... ‘நந்தினி எத்தனை மணிக்கு வரானு’ பார்க்க அக்கம் பக்கத்தில இருக்கிறவங்கள்லாம் கொட்ட கொட்ட முழிச்சிட்டுருக்காங்க பாரு... இங்க பார் வெறுப்பேத்தாத... அவங்கவங்க அடிக்கிற குளிருல இழுத்து பொத்திட்டு ஒன்பது மணிக்கே கும்பகர்ணனுக்கு அட்டண்டன்ஸ் கொடுக்க போயாச்சு... இது 1979 இல்ல... 2019... லேடீஸ் நைட் ஷிஃப்ட் பார்க்க தொடங்கி பத்து வருஷமாச்சு... உன்னோட புலம்பல பாடி, இருக்கிற டென்ஷன்ல நீ வேற கடுப்ப கிளப்பாத வை

    "எதையாவது சொல்லி என் வாய மூடிடு... தோசைய சுட்டு ஹாட் பேக்ல வைக்கிறேன்... சாப்ட்டு படு... வெறும் வயித்தோட படுக்காத... அப்...

    ‘இது வேலைக்காகாது’

    போனை கட் செய்தாள்...

    ‘சே இந்த வினோத்தை இங்க வந்து, இந்த நேரத்தில பார்க்க வேண்டியிருக்கு. என்ன செய்ய அம்மாகிட்ட வினோத்துக்காக காத்திட்டிருக்கேம்மான்னா

    சொல்ல முடியும்.

    ‘அவனுக்குத்தான் கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்... என்னதான் டாக்டரா இருந்தாலும், காலாகாலத்துல வந்தோம், நந்தினிக்கு தேவையானத கொடுத்தோம்னு ஒரு அக்கரை வேண்டாம்... என்னடா, ஒரு வயசுப் பொண்ணு அதுவும் அழகான குட்டிப் பொண்ணு, அர்த்த ராத்திரில தனியா நிற்கிறாளேனு நினைப்பு வேண்டாம்... வரட்டும் இதுக்கு இன்னிக்கு முடிவு கட்டறேன்’ என தனக்குள்ளேயே பேசி சிரித்துக் கொண்டாள்.

    ‘அய்ஸ்... குல்பி...ஈ...ஈ அய்ய்ஸ்...’ ராகத்தோடு பாடியவாறு, டிங் டிங் மணி சத்தத்துடன் குல்பி ஐஸ் விற்றபடி ஒரு பெரியவர் ட்ரை சைக்கிளில் வந்தார்.

    அவள் அருகில் வந்தவர் அவளையும், பின்னால் நின்றிருந்த ஸ்கூட்டியையும் பார்த்துச் சைக்கிளை நிறுத்தினார்.

    என்னம்மா எதாவது ரிப்பேரா... இல்ல பெட்ரோல் இல்லையா

    ம்... ம்... ரிப்பேர்

    அச்சச்சோ... இங்க சுத்துப்பட்டுல எல்லாக் கடையும் இந்நேரம் மூடியிருப்பாங்களே தாயி

    இல்ல... மெக்கானிக்கு போன் பண்ணியிருக்கேன் வந்துருவான்

    சின்ன பொண்ணு இருட்டுல நிக்கறியேனு கேட்டேன்... ஐஸ் வேணுமாம்மா... சூப்பரா இருக்கும்... பாதம் பிஸ்தாலாம் போட்டது

    இந்த குளிருலையா... நீங்க வேற... சூடா டீ இருந்தா குடுங்க

    ஹஹ போங்கம்மா

    என்று ட்ரை சைக்கிளை நகர்த்தினார்.

    அட! குல்பி சாப்பிடறா மாதிரி நிக்கலாமே... யோசித்தவள்...

    சரி... சரி... கேட்டுட்டீங்க... எவ்வளவு

    இருபதுல தரேம்மா... கில்லி மாதிரி இருக்கும்

    ஐஸ் வண்டிக்காரரும் நகர்ந்தார்... குல்பி ஐஸ் கரைந்தது... ஆனால், வினோத்தை இன்னும் காணோம்.

    நினைத்த வேளையில் கார் ஒன்று, திருப்பத்தில் திரும்பியது.

    உற்று பார்த்தாள்... அவனேதான்... காரில் க்ளிட்டரிங்கில் மின்னிய, ப்ளஸ் குறியிட்ட டாக்டர் சிம்பல் தெரிந்தது... கார் நம்பர் TYY 0008... சந்தேகமில்லை வினோத்தேதான்.

    ‘ஹப்பா வந்துவிட்டான்’ அவள் பார்க்க பார்க்கவே கார் அவள் அருகில் வர, குல்பி ஐஸ் குச்சியோடு கைக் காட்டினாள்...

    யெஸ்... எனி ப்ராப்ளம் மேடம்

    கார் கண்ணாடியை இறக்கி நந்தினியை மேலிருந்து கீழ்வரை பார்வையிட்டு ‘ஜொள்ளியபடி’ கேட்டான் வினோத்.

    எஸ் டாக்டர்... வண்டி செயின் கழண்டுடிச்சு

    ஹஹ அதுக்கு என்னை நிப்பாட்டி என்ன யூஸ்... அயம் மெக்கானிக் ஃபார் ஹ்யூமன் பீயிங் ஒன்லி... நாட் ஃபார் வெஹிக்கில்ஸ் என்று உலகமகா ஜோக் அடித்த மாதிரி சிரித்தான்.

    அவனுக்கு மேல் சிரித்த நந்தினி...

    ஐ நோ டாக்டர்... கார்ல சிம்பல் பார்த்ததும்தான் தைரியமா கைக் காட்டினேன். இப்ப பேசினீங்களே, இத இத இதைத்தான் உங்ககிட்ட உதவியா எதிர் பார்க்கிறேன். தனியா நிற்க பயமாயிருக்கு! ஒரு டென் மினிட்ஸ் கம்பெனி கொடுத்தீங்கன்னா போதும் என்று அந்த ‘கம்பெனி’ எனும் வார்த்தையில் ஒரு அழுத்தம் கொடுத்தாள்.

    அதற்குள் இரண்டு மூன்று கார்கள் அவர்களைக் கடந்தன!

    அதுக்கப்புறம் வண்டி தானா சரியாயிடுமா

    எகெய்ன் குட் ஜோக்... டென் தர்டிக்கே மெகானிக்கு போன் செஞ்சிட்டேன் டாக்டர்... ஹி இஸ் ஆன் த வே. ப்ளீஸ்... ஸ்பேர் மீ டென் மினிட்ஸ்... அதுக்குள்ள மெகானிக் வரலைனா நெக்ஸ்ட் மூவ் யோசிப்போம்

    என்னென்னவோ கற்பனையில் ஓட

    ஓகே... லெட் வீ வெய்ட்... இஃப் யூ டோண்ட் மைண்ட் காருக்குள்ள வந்து உக்காருங்களேன்

    "தேங்க்ஸ் டாக்டர். பேசிட்டிருக்கும் போதே, நினைச்சேன்... ஐஸ் வேற சாப்பிட்டு ரொம்ப குளிருதே காருக்குள்ள உக்காந்துக்க கேட்கலாமானு... நீங்களே சொல்லிட்டீங்க... ‘தட் ஈஸ் டாக்டர்’... உங்க வாய்க்கு ஸ்வீட்தான் போடனும்! ஹை... ஸ்வீட்னதும் ஞாபகம் வருது, இப்பவே தரேனே, ஐ ஹேவ் இட் என்றவள், பின்னால் நகர்ந்து கைபையை எடுத்தாள். அதனுள் இருந்த ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை எடுத்து ரேப்பரை பிரித்தபடியே நீங்க பாதி நான் பாதி என்றவள் பாதி ரேப்பர் பிரித்ததை அவனிடம் நீட்டினாள்.

    நோ... நோ... ஐ ஹேவ் டு டேக் மை டின்னர்... அல்ரெடி இட்ஸ் டூ லேட்

    இந்தாங்க ரொம்ப பிகு பண்ணாதீங்க! ஜஸ்ட் என்ஜாய்... என் சாக்லேட் உங்களுக்கு வேண்டாம்னா, உங்க கார் எனக்கு வேண்டாம்... அப்புறம் நான் காருக்கு வரமாட்டேன் என கொஞ்சினாள்.

    ஒகே... ஓகே... கொடுங்க என்று நீட்டிய பாதியை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டான் வினோத்.

    அதுதான் அவன் கடைசியாய் சாப்பிட்ட ஈட்டபிள் அயிட்டம்... டின்னர்... ஸ்வீட் எல்லாம்.

    என்ன? ஏன்? எதற்கு? என எந்த கேள்விக்கும் விடை தெரியாமல், வாயில் நுரை தள்ள, அப்படியே காரின் சீட்டில் சாய்ந்தான் வினோத்.

    மூன்றே நிமிடம் தான்!

    வந்தான்...

    நின்றான்...

    ஜொள்ளினான்...

    போய் சேர்ந்தான்!

    ஹப்பா... என ஒரு பெருமூச்சு விட்ட நந்தினி, சாலையின் இரு புறமும் பார்த்தாள். சொல்லி வைத்தார் போல் ஈ காக்கா இல்லை. இரண்டே வினாடிகள்தான்... பையிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் கவரை எடுத்தவள், அதற்குள் இருந்ததை காரின் உள்ளே கவிழ்த்தாள்.

    முடித்த காரியம் திருப்தி அளிக்க, ஸ்கூட்டியில் ஏறிய நந்தினி

    ‘ராணி கைய வச்சா’ பாட்டை விசிலடித்தபடியே பறந்தாள்.

    2

    இருட்டு விலகி பொலபொலவென விடியத் துவங்கியது. அந்த நேரத்திலும் செய்தி பரவி பெசன்ட் நகர் தீப்பற்றி எரிந்தது.

    இரண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1