Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நில்லாமல் ஓடி வா...
நில்லாமல் ஓடி வா...
நில்லாமல் ஓடி வா...
Ebook146 pages34 minutes

நில்லாமல் ஓடி வா...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்ஸ்பெக்டர் சேரலாதனும் சப் - இன்ஸ்பெக்டர் மாயக்கண்ணனும் அந்த ஐந்து பாட்டில்களில் இருந்த ரத்தத்தை மிரட்சியோடு பார்த்தார்கள். பாட்டில்களின் வாய்கள் அரக்கு சீல் வைத்து இறுக்கமாய் சாத்தப்பட்டிருந்தன.
 "மாயக்கண்ணன்..."
 "ஸார்..."
 "இது ரத்தம்தானா... இல்லை வேற ஏதாவது திரவமா?"
 "ரத்தம்தான் ஸார்... நோடவுட்..."
 "டிக்கியில் வேற ஏதாவது இருக்கான்னு பாருங்க."
 மாயக்கண்ணன் ஒரு தீக்குச்சியை உரசி அதன் வெளிச்சத்தில் டிக்கிக்குள் பார்வையை அலையவிட்டார். ஒரு நிமிஷத்துக்குப்பின் நிமிர்ந்தார்.
 "வேற ஒண்ணும் இல்ல ஸார்..."
 சேரலாதன் சுற்றும் முற்றும் பார்த்தார்.
 காலனியில் இருந்த எல்லா வீடுகளும் இருட்டுக்குள் புதைந்து இருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் பார்வைக்குக் கிடைக்காமல் போகவே மாயக்கண்ணனிடம் திரும்பினார்.
 "கண்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணின அந்த சிவசுப்ரமணியன் எந்த தெரு...?"
 "நம்பர் 129, பாரதி தெரு ஸார்."நான் இங்கேயே நிக்கறேன்... நீங்க போய் அந்த சிவசுப்ரமணியனை கூட்டிகிட்டு வாங்க... அவர் பார்த்தது இந்த கால்டாக்ஸியைத் தானான்னு என்கொயர் பண்ணிக்கலாம்."
 "எஸ்... ஸார்..." மாயக்கண்ணன் சொல்லிவிட்டு பக்கத்துத் தெருவான பாரதி தெருவை நோக்கிப் போனார்.
 தெரு நிசப்தமாய் இருந்தது. குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் சுருண்டு படுத்து இருந்த நாய் ஒன்று மாயக்கண்ணனின் பூட்ஸ் சத்தம் கேட்டு காதுகளை மட்டும் உயர்த்திப் பார்த்துவிட்டு மறுபடியும் அதே போஸில் படுத்துக் கொண்டது.
 மாயக்கண்ணன் தெருவின் இரண்டு பக்கத்திலும் ஒரே மாதிரியாய் கட்டப்பட்டிருந்த வீடுகளை நோட்டமிட்டுக் கொண்டே நடந்தார். கதவு எண் 129 பார்வைக்குக் கிடைத்ததும் நின்றார்.
 'இந்த வீடுதான்!'
 சிறிய காம்பௌண்ட் கேட் சாத்தப்பட்டிருக்க அதைத் தள்ளிப் பார்த்தார். உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. ஒரு கணம் திகைத்த மாயக்கண்ணன் அழைப்பு மணியின் பொத்தான் எங்கேயாவது தட்டுப்படுகிறதாவென்று காம்பெளண்ட் சுவரின் உட்பக்கங்களைத் தடவிப் பார்த்தார்.
 பட்டாணி சைஸில் அந்த அழைப்புமணியின் பட்டன் கிடைத்தது. அழுத்தினார். வீட்டுக்குள்ளே அது 'பிங் – பாங்' என்று எதிரொலித்தது. கதவு திறக்கப்பட காத்திருந்தார்.
 அரை நிமிஷ அவகாசத்துக்குப் பிறகு - வீட்டின் முன் பக்கம் இருந்த ட்யூப்லைட்டில் வெளிச்சம் பற்றிக் கொள்ள - பக்கவாட்டு ஜன்னல் திறந்து ஒரு பெண்ணின் முகம் எட்டிப்பார்த்தது. கேட்டது.
 "யாரு...?"
 "சிவசுப்ரமணியத்தின் வீடு இதுதானே...?"
 "ஆமா..."
 "அவரைப் பார்க்கணும்..."

பெண்ணின் முகம் உடனே மறைந்தது. பேச்சுக்குரல் மட்டும் தப்பித்து வெளியே வந்து மாயக்கண்ணனின் காதுகளில் விழுந்தது.
 "என்னங்க... போலீஸ் வந்திருக்கு..." - பெண்குரல்.
 "போலீஸா... எதுக்கு?" - ஆண்குரல்.
 "என்னைக்கேட்டா...? கதவைத் திறந்துகிட்டு போய் என்னான்னு கேளுங்க..."
 "வந்தது போலீஸ்தானா...? நல்லாப் பார்த்தியா...? எவனாவது திருட்டுப்பயலா இருக்கப் போறான்...!"
 "வந்து இருக்கிறது போலீஸ்தான்... நீங்க வேணும்ன்னா ஜன்னல்ல ஒருதடவை எட்டிப்பார்த்துட்டு வெளியே போங்க..."
 "நீ பாத்திருந்தா சரிதான்…
 பேச்சுக்குரல் நின்றது. அடுத்த பத்தாவது விநாடி கதவு திறந்தது. ஒரு முப்பது வயது இளைஞன் லுங்கி பனியனோடு வெளிப்பட்டான். தூக்கம் கெட்ட கண்களோடு காம்பௌண்ட் கேட்டை நெருங்கினான்.
 "யார் வேணும்...?"
 "இது சிவசுப்ரமணியன் வீடுதானே...?"
 "ஆமா…"
 "நீங்கதான் சிவசுப்ரமணியனா...?"
 "இல்லை... நான் தினேஷ்குமார்."
 "அப்படீன்னா சிவசுப்ரமணியன் யாரு...?"
 "அவர் என்னோட அப்பா..."
 "கூப்பிடுங்க அவரை..."
 அந்த தினேஷ்குமார் மாயக்கண்ணனை திகைப்பாய்ப் பார்த்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223415138
நில்லாமல் ஓடி வா...

Read more from Rajeshkumar

Related to நில்லாமல் ஓடி வா...

Related ebooks

Related categories

Reviews for நில்லாமல் ஓடி வா...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நில்லாமல் ஓடி வா... - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    நேரம் நள்ளிரவு இரண்டு மணியைத் தாண்டியிருக்க - கோவையின் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்த ஏகப்பட்ட டெலிபோன்களில் ஒன்று தன் வாயைத் திறந்தது.

    டீ குடித்துக் கொண்டிருந்த கண்ட்ரோல் ஆபீஸர் உன்னிகிருஷ்ணன் டம்ளரை அப்படியே மேஜையின் மேல் வைத்துவிட்டு ரிஸீவரை எடுத்து வலது காதுக்கு அணிந்தார்.

    எஸ்...

    கண்ட்ரோல் ரூம்...?

    எஸ்…

    ஸார்... என்னோட பேர் சிவசுப்ரமணியன். ஒரு பேங்க்ல அக்கௌண்டன்ட் ஆபீஸரா ஒர்க் பண்றேன். வீடு கணுவாய்க்குப் பக்கத்தில் இருக்கிற ஐஸ்வர்யா நகர்.

    என்ன விஷயம் சொல்லுங்க...?

    ஒரு கம்ப்ளைண்ட் ஸார்.

    சொல்லுங்க...

    ஸார்... எங்க ஐஸ்வர்யா நகர்க்குள்ளே ஒரு கால்டாக்ஸி ரொம்ப நேரமா இருட்டுக்குள்ளே நின்னுட்டிருக்கு... அந்த டாக்ஸிக்குள்ளே விபச்சாரம் நடந்துகிட்டிருக்குமோன்னு ஒரு சந்தேகம். போலீஸை உடனே ஸ்பாட்டுக்கு அனுப்பிச்சு பார்த்தா பரவாயில்லை...

    உன்னிகிருஷ்ணன் உஷாராகி நிமிர்ந்து உட்கார்ந்தார். அது கால்டாக்ஸிதானா...?

    ஆமா ஸார்... கொட்டை எழுத்தில் பேர் எழுதியிருக்கு.

    என்ன பேரு...?

    எவர் ஹேப்பி கால் டாக்ஸி. போன் நம்பர் கூட தெளிவா தெரியுது ஸார். 5566779. அது ஒரு மாருதி வேன் ஸார். ஒயிட் கலர்.

    கால்டாக்ஸி எவ்வளவு நேரமா நின்னுட்டிருக்கு?

    கிட்டதட்ட நாலு மணி நேரமா ஸார். நான் ஒரு டயாபடீஸ் பேஷண்ட். ஒருமணி நேரத்துக்கு ஒருதடவை யூரின் பாஸ் பண்றதுக்காக எழுந்திருப்பேன். அப்படி எழுந்திருக்கும்போதெல்லாம் ஜன்னல் வழியா பார்ப்பேன்.

    டாக்ஸிக்குப் பக்கத்தில் யாராவது நின்னுட்டிருக்காங்களா...?

    அப்படி யாரும் இருக்கிற மாதிரி தெரியலை ஸார்.

    டாக்ஸிக்குள்ளே அசைவுகள் ஏதாவது தெரியுதா?

    கண்ணாடியெல்லாம் ஏத்திவிட்டிருக்காங்க ஸார்.

    சரி... உங்க பேர் என்ன சொன்னீங்க?

    சிவ சுப்ரமணியன் ஸார்.

    உங்க வீட்டு அட்ரஸைச் சொல்லுங்க...

    நம்பர் 129, பாரதி தெரு, ஐஸ்வர்யா நகர்.

    இந்த ஐஸ்வர்யா நகர் எங்கே இருக்குன்னு லேண்ட் மார்க் சொல்லுங்க.

    ஸார்... தடாகம் ரோட்ல இடையர் பாளையம் வேலாண்டிபாளையம் தாண்டி வந்தீங்கன்னா டி.வி.எஸ். நகர் வரும்.

    ஆமா...

    டி.வி.எஸ். நகர்க்கு முன்னாடியே இந்த ஐஸ்வர்யா நகர் வரும் ஸார். கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் புதுசா உருவான காலனி. மொத்தமே எண்பது வீடுகள்தான் ஸார்... வீதிகளுக்கெல்லாம் தேசத் தலைவர்கள் பெயர்களைச் சூட்டி இருப்பாங்க ஸார். காந்தி தெரு, நேரு தெரு, வ.உ.சி. தெரு, கட்டபொம்மன் தெரு. நான் குடியிருக்கிறது பாரதி தெரு ஸார்.

    அந்த கால்டாக்ஸி எந்த தெருவில் நின்னுகிட்டு இருக்கு...?

    கட்ட பொம்மன் தெரு கார்னர்ல ஸார்.

    சரி... அந்த டாக்ஸியை வாட்ச் பண்ணிட்டிருங்க. போலீஸ் ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே ஸ்பாட்ல இருப்பாங்க.

    தேங்க்யூ ஸார்...

    உன்னிகிருஷ்ணன் ரிஸீவரை வைத்துவிட்டு வாக்கி டாக்கியில் ஒரு பட்டனைத் தட்டிவிட்டு பேசினார்.

    சேரலாதன்...! இன்னிக்கு ஃப்ளையிங் ஸ்க்வாட் நீங்கதானே...?

    ஆமா...

    தடாகம் ரோட்டுக்கு உடனடியா நீங்க புறப்பட்டு போகணும். உங்களுக்கு ஐஸ்வர்யா நகர் தெரியுமா...?

    தெரியும்... டி.வி.எஸ். நகர்க்குப் பக்கத்தில் இருக்கு. புதுசா உருவான குடியிருப்பு.

    அங்கே கால்டாக்ஸியில் வெச்சு விபச்சாரம் நடக்கிறதாக தகவல். அந்த நகர்ல குடியிருக்கிற சிவசுப்ரமணியன் என்கிற ஒரு பேங்க் ஆபீஸர் ஒருத்தர் போன் பண்ணி புகார் கொடுத்து இருக்கார். நீங்க ஜீப்பை ரெடி பண்ணிகிட்டு கண்ட்ரோல் ரூமுக்கு வாங்க. உங்களுக்கு நான் எல்லா டீடெய்ல்ஸும் தர்றேன்...

    உன்னிகிருஷ்ணன் வாக்கி டாக்கியை வைத்துவிட்டு டம்ளரில் மீதம் இருந்த டீயை குடித்து முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் சேரலாதனும் சப்-இன்ஸ்பெக்டர் மாயக் கண்ணனும் பூட்ஸ் சத்தங்களோடு வேகவேகமாய் வந்தார்கள். முப்பது வயது சேரலாதன் ஆறடி உயரத்தில் காக்கி யூனிஃபார்ம்க்கு கச்சிதமாய் பொருந்தியிருந்தார். அவர்க்கு இரண்டு அங்குலம் குறைவாய் இருந்த மாயக்கண்ணன் கொஞ்சம் புஷ்டியாய் மீசையை வளர்த்து பார்க்கிறவர்களை ஒரு கணம் மிரள வைத்தார்.

    என்ன உன்னிகிருஷ்ணன்...! இன்னிக்கு ஃப்ளையிங் ஸ்க்வாட்டுக்கு வேலை இருக்காதுன்னு நினைச்சேன்... வேலை கொடுத்துட்டீங்களே...? சேரலாதன் கேட்க உன்னிகிருஷ்ணன் சிரித்தார்.

    "என்ன செய்யறது சேரலாதன். இது கலியுகம். கேப்ஸ்யூல்களில் மருந்தை எடுத்துட்டு அதில் போதை

    Enjoying the preview?
    Page 1 of 1