Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!
ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!
ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!
Ebook83 pages27 minutes

ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ஏண்டா... உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு...?" அம்மா சரோஜினி.
 "முப்பதாயிரம் பேர் செத்திருக்காங்க... ஊரே நாறி - காற்று மண்டலமே கெட்டு போயிருக்கும்... அந்தக் காத்தை சுவாசிச்சாலே வராத நோயும் வந்துரும்... படுத்துட்டா குடும்பம் என்ன ஆறது...?" - அப்பா சுவாமிநாதன்.
 "ஏண்டா கிச்சு...! எடிட்டர் சொன்னா தலையாட்டிட்டு வந்துடறதா... ஏதாவது காரணத்தை சொல்லி தட்டி கழிக்க தோணலையா?" அக்கா பத்மா.
 ஹோல்டாலை இழுத்துக் கட்டிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி சற்றே கோபமாய் நிமிர்ந்தான்.
 "எல்லாரும் பேசி முடிச்சாச்சா... இனி யாராவது பேச வேண்டியது பாக்கி இருக்கா...?"
 அம்மா சரோஜினி பக்கத்தில் வந்து, அவன் தோளைத் தொட்டாள். "டேய் கண்ணா...! எல்லாரும் உனக்கு நல்லதைத்தான் சொல்லிட்டு இருக்கோம்... அந்த பூகம்பத்துல ஒருத்தர் ரெண்டு பேரா செத்துப் போயிருக்காங்க...? முப்பதாயிரத்துக்கு மேல செத்துப் போயிருக்காங்க... வீட்ல ஒரு எலி செத்துக் கிடந்தாலே வயித்தையெல்லாம் புரட்டி விடற மாதிரி நாத்தம். எலியை எரிச்சுட்டு அது விழுந்து கிடந்த இடத்தை பினாயில் போட்டு கழுவறோம்... பூகம்பம் நடந்த இடத்ல நிலைமை எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு பார்த்தியா...?"
 "எல்லாம் யோசிச்சுப் பார்த்தேன். இதோ பாரம்மா! மஹாராஷ்ட்ராவில நடந்த பூகம்பம் தமிழ்நாட்ல நடந்து - அதுல நமக்கு வேண்டியவங்க, சொந்தக்காரங்க செத்துப் போயிருந்தா... இப்பேர்ப்பட்ட வார்த்தையெல்லாம் உன் வாயிலிருந்து வராது. அங்கே செத்துப் போனவங்களும் மனுஷங்கதான்... இந்த உலகத்துல யார் செத்து போனாலும் சரி... அவங்க உடம்பு நாறத்தான் செய்யும்..."
 அப்பா சுவாமிநாதன் தலையில் அடித்துக் கொண்டு ஈ.ஸி நாற்காலியில் சாய்ந்தார். "இவன் கேட்க மாட்டான் சரோ... பங்குனி மாசத்துல நல்ல உச்சி வெய்யில்ல பொறந்தவனாச்சே...! சின்ன வயசிலிருந்தே எல்லாம்அவனோட இஷ்டத்துக்கு விட்டு குட்டிச் சுவராக்கிட்டோம்... இப்ப பேசி என்ன பண்றது...?"
 அப்பாவிடம் நிமிர்ந்தான் கிருஷ்ணமூர்த்தி. "நீங்க கூட ஏம்பா... அம்மா மாதிரியே புரியாத்தனமா பேசறீங்க... பூகம்பம் நடந்திருக்கிறது நம்ம இந்தியாவில. ஏதோ கண்காணாத தேசத்தில் இல்லை."
 இப்போது அக்கா பத்மாவின் முறை. "கிச்சு! நீ போற இடம் இப்ப நரகம். பேப்பர்ல போட்டிருந்தாங்க... பார்க்கலையா...? மழை பெய்ஞ்சு... பொணமெல்லாம் குவியல் குவியலா அழுகிக் கிடக்காம். நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கிற ராணுவ வீரர்களே ஊருக்குள்ளே போறதில்லையாம். இன்ன தொத்து நோய்ன்னு இல்லையாம்... எல்லா நோயும் பரவற சாத்தியம் இருக்குன்னு டாக்டர் குழு பேட்டி குடுத்திருக்காங்க..."
 ஹோல்டாலை கட்டி முடித்தான் கிருஷ்ணமூர்த்தி. பிறகு சூட்கேஸை பிரித்து வைத்துக் கொண்டு - பத்மாவை ஏறிட்டான்.
 "அயர்ன் பண்ணி வெச்ச அந்த ட்ரஸ்ஸை எடு"
 "எங்க பேச்சை கேக்கமாட்டியா?"
 "ட்ரஸ்ஸை எடு..."
 "நீ கல்லுளி மங்கன்..."
 "அப்படியே இருந்துட்டு போறேன்... ட்ரஸ்ஸை எடு..."
 "எடுத்துத்தரமாட்டேன்..." பத்மா தூணுக்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்,
 கிருஷ்ணமூர்த்தி மூன்று பேரையும் மௌனமாய் பார்வையில் நனைத்து விட்டு சொன்னான்.
 "மரணமும், இழப்பும் மத்தவங்களுக்கு வரும் போது நாம கதறி துடிக்க வேண்டாம்... இருதயத்து ஓரத்துல கொஞ்சம் ஈரம் காட்டினாலே போதும். அந்த ஈரமும் கூட உங்க மனசுல இல்லைன்னு நினைக்கும் போது எனக்கு வருத்தமா இருக்கு. இந்த குடும்பத்துல பிறந்ததுக்காக வெட்கப்படறேன்... எங்க பத்திரிகை ஆபீஸில் வேலைப் பார்க்கிற நிவேதிதா ரிடையர்ட் டி.ஐ.ஜி.யோட பொண்ணு. அந்தப் பெண்ணும் என் கூட வர்றா... அவளோட அப்பா அவ கையைப் பிடிச்சு குலுக்கி - 'போய்ட்டு வாம்மா'ன்னு வாழ்த்தி அனுப்பறார். ஒருபொண்ணைப் பெத்தவரே அவ்வளவு தைரியமா இருக்கும் போது - நீங்களெல்லாம் எவ்வளவு தைரியமா இருக்கணும்...?"
 படபடவென்று பொரித்துவிட்டு - சூட்கேஸ்க்குள் துணி மணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான் கிருஷ்ணமூர்த்தி

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224891559
ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!

Read more from Rajeshkumar

Related to ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!

Related ebooks

Related categories

Reviews for ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…! - Rajeshkumar

    1

    மேஜை மேல் இருந்த இண்டர்காம் ஈனஸ்வரத்தில் முனகியதும் - தலையங்க ப்ரூப்பை சரிபார்த்து கொண்டிருந்த ரிப்போர்ட்டர் கிருஷ்ணமூர்த்தி ரிஸீவரை எடுத்தான்.

    மறு முனையில் எடிட்டர் பேசினார்.

    கிருஷ்ணமூர்த்தி! ஏதாவது வேலையா இருக்கியா?

    தலையங்கம் பார்த்துட்டிருக்கேன் ஸார்

    என்னோட ரூமுக்கு வா... ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்

    வர்றேன் ஸார்...

    ரிஸீவரை வைத்துவிட்டு எழுந்த கிருஷ்ணமுர்த்தி இளைஞன். ஜர்னலிஸம் படித்தவன். நன்றாக கவிதை எழுதுவான். ஆனால் பரக்க கட்டுரைகளும் எழுதுவது உண்டு. புனைப் பெயர் சூரியக்குஞ்சு, கதர் அணிவதில் அதிக ஈடுபாடு. அவன் எழுதிய கவிதைகள் எல்லாமே - ஏதாவது ஒரு பக்கம் சலசலப்பை உண்டாக்கியிருக்கின்றன. போன மாதம் சாமியார்களைப்பற்றி அவன் எழுதியிருந்த ஒரு கவிதை ஆஸ்திக வட்டாரத்தில் அனலை அள்ளிக் கொட்டியது.

    சாமியாரை வீட்டுக்கு –

    கூட்டி வந்து - உட்கார வைத்து

    பணிவிடை செய்து –

    யோசிக்காமலேயே - உன்

    தலையால் அவர் காலைத்

    தொடுகிறாயே! அவர்

    ஆசிர்வதிக்க மட்டுமா வந்துள்ளார்?

    உன்னிடம் யாசிக்கவும்தான்

    வந்திருக்கிறார்.

    காசின்றி நீ இருந்த காலத்து

    ஆசிர்வதிக்க இவர் ஏன் வரவில்லை?

    கிருஷ்ணமூர்த்தி எந்தக் கவிதையை எழுதினாலும் அதில் அமிலம் தோய்ந்திருக்கும். ஏப்ரல் மாதத்தின் சூரிய வெப்பம் அதில் ஒளிந்திருக்கும்.

    எடிட்டரின் அறைக்கதவு சாத்தப்பட்டிருக்க - மெல்ல தட்டினான்.

    எடிட்டரின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.

    வா... கிருஷ்ணமூர்த்தி...

    கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனான். எடிட்டருக்கு முன்னால் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றில் - நிவேதிதா உட்கார்ந்திருந்தாள். அந்த பத்திரிகை அலுவலகத்தில் அவளும், ஒரு ரிப்போர்ட்டர், பெண்களுக்கான பக்கங்களை கவனித்துக் கொள்பவள், பார்க்கிற இந்த நிமிஷம் சுடிதாரில் இருந்தாள்.

    எடிட்டர் நாற்காலியைக் காட்ட - கிருஷ்ணமூர்த்தி உட்கார்ந்து அவர் முகத்தை ஏறிட்டார்.

    அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார். கிருஷ்ணமூர்த்தி நானும் நிவேதிதாவும் மஹாராஷ்ட்ரா பூகம்பத்தைப் பத்தி பேசிட்டிருந்தப்ப - ஒரு யோசனை தோணிச்சு. அந்த யோசனையை செயல்படுத்தலாமா, வேண்டாமான்னு கேட்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்...

    என்ன யோசனை ஸார்...?

    எல்லா வார இதழ்களும் - செய்தித்தாள்களில் வந்த ஆதாரத்தை வெச்சுகிட்டுத்தான் கட்டுரை எழுதறாங்க... சம்பவம் நடந்த இடத்தை ஒரு செய்திப் பத்திரிகையின் நிருபர் பார்க்கிறதுக்கும் - ஒரு வாரப் பத்திரிக்கையின் நிருபர் பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இதை நீ ஒத்துக்கறியா?

    ஒத்துக்கிறேன் ஸார்...

    அப்படீன்னா... நம்ம பத்திரிக்கையிலிருந்து - ரெண்டு பேரை பூகம்பம் நடந்த அந்த மகாராஷ்ட்ரா ஊர்களுக்கு ஏன் அனுப்பி வைக்கக் கூடாது...?

    தாராளமா அனுப்பலாம் ஸார்... பூமி வாய் பிளந்த அந்த மண்ணோட அவலங்களைப் பத்தி - நல்லாவே தெரிஞ்சுட்டு வரலாம்...

    எடிட்டர் புன்னகைத்தார்.

    மஹாராஷ்ட்ரா மாநிலம் வாத்தூர், உஸ்மானாபாத் மாவட்டங்களை உலுக்கிய பூமி அதிர்ச்சியின் கோபம், உக்கிரம் இன்னும் தணியலை. அந்த ஊர்களுக்கு நீயும், நிவேதிதாவும் போய் - உண்மையான விபரங்களை சேகரிச்சுட்டு வரணும்ங்கிறது என்னோட விருப்பம்...

    ஸார்... கிருஷ்ணமூர்த்தி நிமிர்ந்தான்.

    நிவேதிதா சம்மதம் கொடுத்தாச்சு... இனி எனக்கு தேவைப்படறதெல்லாம் உன்னோட சம்மதம்தான்.

    நான் ரெடி ஸார்...

    எடிட்டர் சிரித்தார்.

    இதுதான் கிருஷ்ணமூர்த்தி. நிவேதிதா! நான் சொல்லலை...?

    எப்ப புறப்படணும் ஸார்...?

    இன்னிக்கு ராத்திரிக்கே கூட ட்ரெயின் இருக்கு. கிளம்பறதாயிருந்தா இன்னிக்கே கிளம்பலாம்... எவ்வளவு சீக்கிரத்துல அந்த ஸ்பாட்டுக்கு போறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது...

    இன்னிக்கே கிளம்பறோம் ஸார்...

    டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?

    ம்...

    நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் திங்க்ஸை ரெடி பண்ணுங்க... ராத்திரி பத்து மணிக்கு ட்ரெயின். நாம் மறுபடியும் சாயந்தரம் அஞ்சு மணிக்கு இங்கே சந்திப்போம். ஸ்பாட்டுக்கு போய் - அங்கே என்னென்ன செய்யணும்ங்கிறதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்...

    தலையாட்டிக்கிட்டு - நிவேதிதாவும் - கிருஷ்ணமூர்த்தியும் வெளியே வந்தார்கள்.

    கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.

    "இது

    Enjoying the preview?
    Page 1 of 1