Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

குற்றமும் கற்று மற
குற்றமும் கற்று மற
குற்றமும் கற்று மற
Ebook209 pages49 minutes

குற்றமும் கற்று மற

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆபீஸ் புறப்பட்டு போகும் மும்முரத்தில் இருந்தான் வசீகர்.
 கழுத்து டையை இறுக்கிக் கொண்டு கண்ணாடிமுன் நின்று நகர்ந்த போது அவனுடைய மனைவி சுருதி சமையலறையிலிருந்து இரண்டு லஞ்ச் பாக்ஸ்களோடு வெளிப்பட்டாள். சிரித்துக் கொண்டே சொன்னாள்,
 "இது என்னோட பெரிய குழந்தைக்கு." என்று சொல்லி லார்ஜர் சைஸ் லஞ்ச் பாக்ஸை வசீகர் கையில் திணித்து விட்டு மினி லஞ்ச் பாக்ஸோடு தன் ஏழு வயது மகனைத் தேடினாள்.
 "பவன்"
 "மம்மி.. நான் பூஜா ரூம்ல இருக்கேன்."
 "சாமி கும்பிட்டது போதும்.. வா சீக்கிரம். இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஸ்கூல் வேன் வந்துடும்."
 பவன் வெளியே வந்தான். அப்படியே வசீகரை உரித்த வைத்த மாதிரியான தோற்றம்.
 "இந்தா உன்னோட லஞ்ச் பாக்ஸ். ஸ்கூல் இண்டர்வெல்ல சாப்பிடறதுக்கு உள்ளேயே ட்ரை ஃப்ரூட்ஸ் வெச்சிருக்கேன். மறக்காமே சாப்பிடணும்."சரி மம்மி..."
 "ஷூ தொடச்சியா?"
 "ம்..."
 "போட்டுக்கோ.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல உன்னோட வேலை எல்லாம் முடியணும்..."
 வசீகர் தன்னுடைய லேப் டாப் பேக்கைத் தோளில் மாட்டிக் கொண்டே மனைவியை ஏறிட்டான்.
 "சுருதி...! அந்தச் சின்னப் பையனைப் போட்டு எதுக்காக இந்த விரட்டு விரட்டறே.. பாவம் பவன்"
 சுருதி தன் ஆட்காட்டி விரலை உயர்த்தினாள்.
 "இதோ பாருங்க.. நான் பவனுக்கு புத்திமதி சொல்லும்போதோ திட்டும் போதோ நீங்க பரிஞ்சு பேசிட்டு வந்தா எனக்குப் பிடிக்காது. அவன் என்ன சின்னக் குழந்தையா.. வயசு ஏழாகுது. செகண்ட் ஸ்டேண்டர்ட் படிக்கிறான். அவனோட வேலைகளை அவன்தான் பண்ணிக்கணும்."
 "சுருதி! நான் என்ன சொல்ல வர்றேன்னா...?"
 பவன் குறுக்கிட்டு சிரித்தான்.
 "டாடி.. மம்மி சொல்றதுதான் சரி. மம்மிக்கு காலையில் இருந்து எவ்வளவு வேலை."
 "என்னிக்குமே அம்மாவும் புள்ளையும் ஒரு கட்சி. நான் தனிக்கட்சிதான்.." வசீகர் சொல்லிக் கொண்டே சார்ஜரில் இருந்த தன் செல்போனை எடுத்து லாப்-டாப் பைக்குள் போட்டுக் கொண்ட விநாடி -
 வாசலில் காலிங் பெல் ஒலித்தது.
 "என்னங்க...! போய் யார்ன்னு பாருங்க. எனக்கு கிச்சன்ல கொஞ்சம் வேலையிருக்கு... அநேகமாய் லாண்டரி பையனாகத்தான் இருக்கும்."
 சுருதி சொல்லிக் கொண்டே சமையலறையை நோக்கிப் போக, வசீகர் வாசல் கதவை நோக்கிப் போய் தாழ்ப்பாளுக்கு விடுதலை கொடுத்து கதவைத் திறந்தான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223217367
குற்றமும் கற்று மற

Read more from Rajeshkumar

Related to குற்றமும் கற்று மற

Related ebooks

Related categories

Reviews for குற்றமும் கற்று மற

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    குற்றமும் கற்று மற - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    எடிட்டர் ஏரியா

    "லோ... யாருங்க.. விடிஞ்சும் விடியாததுமான இந்த நேரத்தில்... பேசாம விசும்பறது...?"

    அண்ணே! நாந்தாண்ணே.. உங்க அன்புத் தம்பி அசோகன்...

    ஏந்தம்பி அழுறீங்க..? அதுவும் மார்கழி மாதம் விடியற்காலை ஐந்து மணிக்கு...

    "என்னண்ணே... மறந்துட்டீங்களா..? நேத்து க்ரைம்நாவல் 306ஆவது இதழான 1+1=0 புக் கிடைத்ததும், எனக்கு போன் செஞ்சிங்களே.. நான்கூட, என் தயாரிப்பு நேர்த்தியப் பார்த்து பாராட்டப் போறீங்க.. என்ற சந்தோஷத்தில் ‘அண்ணே! சொல்லுங்க’ என்றேன்..."

    "ஆமா, ஆமா.. ஞாபகம் வந்துடுச்சி. பின்ன என்ன நீங்க.. குற்றமும் கற்றுமற நாவல் தான் ட்ர்பிள் ட்ராக் நாவல் என்று சொன்னேன். நீ(ங்க) பாட்டுக்கும் 1+1=0 ட்ர்பிள் ட்ராக் நாவல் என்று தப்பா போட்டிருக்க. சரி... அதுக்கு எதுக்கு இப்ப ஃபோன்...?"

    அண்ணே... நீங்கதான் அப்ப சொன்னீங்க, ‘எனக்கு வர்ற கோபத்துக்கு உன்ன மார்கழி மாச பனில மொட்ட மாடில படுக்க வச்சு விடியக் காலைல அஞ்சு மணிக்கு பச்சத் தண்ணில குளிக்க வச்சாத்தான் அடுத்தவாட்டி இது மாதிரி தப்பு செய்ய மாட்ட’ன்னிங்கல்லையா...?

    ஆமா... கோபத்தில சொன்னேன்தான். அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு...?

    "இருக்குண்ணே.. தாய் சொல்லை மட்டுமல்ல - தமையன் சொல்லையும் தட்டமாட்டேன் இந்த அசோகன். அதான்... நேத்து ராத்திரி எங்க வீட்டு மொட்டை மாடில படுத்தேன்.. படுத்ததும் குளிர் என்னை வாட்டுறதுக்கு முன்பு.. அய்யோ இப்படி அஞ்சாவது மொட்டை மாடில தனியா தூங்குறோம். இந்தப் பக்கம் தூங்கு மூஞ்சி மரம்; அந்தப் பக்கம் அரச மரம். கிளைகள் ஆடறப்பல்லாம் என்னை அறியாம என் தொட ஆட ஆரம்பிச்சுடுச்சு. அந்த பயத்திலேயே உடல் சூடானது. அந்த சூட்டிலே குளிர் தெரியல. நாலரை மணிக்கு யாரோ எழுப்பிவிட்ட மாதிரி எழுந்தேன். பக்கெட்டில் இருக்கற பச்சத் தண்ணிய தொட்டுப் பார்த்தேன். அவ்வளவு ஜில்லுன்னு இருக்கு.

    இதில் குளித்தால் நடுக்கம் நிக்குமா... உயிர் நிக்குமா தெரியலண்ணே.. அதான் ஒருவாட்டி உங்க குரலை கேட்கத்தான்... இந்த ஃபோன் அண்ணே..."

    லூசு தம்பி.. நான் விளையாட்டா சொன்னதுக்குப் போய் இப்படியா செய்வீங்க...? சரி... சரி... கீழே இறங்கி வீட்லபோய் சுடுதண்ணில குளிங்க.. உங்களுக்கு எதாவது வந்தா என்னால தாங்க முடியாது தம்பி.

    அண்ணே, அண்ணே... போதும் நிறுத்துங்க. நான் கம்முனு பச்சத்தண்ணில குளிச்சிருந்தாகூட பெரிய பாதிப்பு வந்திருக்காது. இப்ப நீங்க பேசலண்ணே. ஒரு பெரிய ஐஸ் பாறையை அன்புங்கிற பேர்ல தலைல வச்சுட்டீங்க.. அதத்தான் எப்படி தாங்கறதுன்னு...

    தம்பி... இருந்தாலும் உங்களுக்கு குசும்புத்தனம் அதிகம்! சுள்ளான் மாதிரி இருந்துக்கிட்டு இப்படி சுள்ளுன்னு பேச்சால அடிக்கறீங்களே....

    "அண்ணே! நான் ஒரு பச்சப்புள்ள... வெகுளித்தனமா பேசறத எல்லாமா தப்பா எடுத்துக்குவீங்க..? ‘குற்றமும் கற்று மற’ இதோ வந்துடுச்சு.. அடுத்து ‘பூனைக்குட்டிகள் வெளியே வருகின்றன’ நாவலை எப்பண்ணே தருவீங்க...? நீங்க... ஜனவரி இரண்டாவது வாரம் துபாய் சுற்றுப் பயணம் புறப்படறீங்க. பயணம் போற அறிபறில நாவல் எழுதத் தாமதமாகலாம். அதற்கு முன், ப்ரைம் நாவலுக்கு என்ன நாவல்ண்ணே..?"

    தம்பி... நானே சொல்லணும் என்று நினைத்தேன். நான், அண்ணி, என் மூத்த மகன் கார்த்திக், மருமகள் ப்ரியா, பேரன்கள் ஸ்ரீவத்ஸன், நீரஜ் எல்லாரும் ஒரு வாரம் துபாய் சுற்றுலா போகிறோம். இது முழுக்க முழுக்க பர்ஸனல் பயணம். துபாய் போய் வந்து தான் ‘பூனைக்குட்டிகள் வெளியே வருகின்றன’ நாவலை எழுதித் தருவேன். அதுக்கு முன்னே.. என் மெகா நாவல் ‘தேவை ஒரு தேவதை’ - அத வாசகர்களுக்குக் குடுங்க...

    சரிண்ணே...

    இதனால் சகலைகளுக்கும்... சாரி... சகலமான வாசகர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த 307வது நாவலான ‘குற்றமும் கற்று மற’வைத் தொடர்ந்து ‘பாக்கெட் நாவ’லில் ராஜேஷ்குமாரின் ‘புலிப்பொறி’ நாவல் வெளிவருகிறது. அதற்குப் பின் ப்ரைம் நாவலில் அண்ணா ராஜேஷ்குமார் எழுதிய ‘தேவை ஒரு தேவதை’ நாவல் வெளிவருகிறது.

    லவ்வுடன் - அதாங்க... அன்புடன்,

    ஜி.அசோகன்.

    ராஜேஷ்குமாரின் முகநூல்

    அன்பான வாசக உள்ளங்களுக்கு,

    வணக்கம்!

    இந்த 2018ஆம் ஆண்டு நம் எல்லோர்க்கும் சந்தோஷமான வாழ்க்கையை அள்ளித்தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இந்த உலகில் எவ்வளவோ விஷயங்கள் மாறிக் கொண்டு இருக்கின்றன. அந்த மாறும் விஷயங்களில் நாமும் அதனோடு இணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது.

    அண்மையில் ஒரு நாளிதழில் ‘பணம் இல்லா பரிவர்த்தனை - சாதனைகளும், சவால்களும்’ என்னும் தலைப்பில் சேவியர் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் சொல்லியிருந்த பல விஷயங்களை நம் க்ரைம் நாவல் வாசகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அவைகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    இன்னும் நான்கு ஆண்டுகளில் ஏ.டி.எம் மெஷின்கள் எல்லாம் காயலான் கடைக்குப் போய்விடும். மக்கள் எல்லாரும் தங்களின் மொபைல்களின் மூலமாக அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்துகொள்வார்கள் என்கிறார் ‘நிதி ஆயுக்’கின் தலைமை நிர்வாக அதிகாரி.

    மக்கள் கைகளில் பணத்தை எடுத்துக் கொண்டு கடைகளுக்குச் செல்கின்ற பழக்கம் படிப்படியாய் மறைந்துவிடும். மொபைல் பரிவர்த்தனைகள் சூடு பிடிக்கும். அதன் மூலம் ஏ.டி.எம். மட்டுமில்லாமல் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் போன்றவையும் காணாமல் போய்விடும் என்கிறார் அவர். இன்னும் சில ஆண்டுகளில் உலக அளவிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு என்னும் பெயரை இந்தியா பெற்று விடும் என்று புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானாலும் பணமில்லா பரிவர்த்தனையை அது அதிகப்படுத்தியுள்ளது என்னும் உண்மையை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

    பல வெளிநாடுகள் ஏற்கெனவே பணமில்லா பரிவர்த்தனைகளில் சிறந்து விளங்குகின்றன. சிங்கப்பூரில் 61சதவீதம், இங்கிலாந்தில் 52 சதவீதம், அமெரிக்காவில் 45 சதவீதம் பரிவர்த்தனைகள் பணமில்லா பரிவர்த்தனைகளாக நடக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு வெறும் 2 சதவீதம் பரிவர்த்தனைகள் மட்டுமே பணமில்லா பரிவர்த்தனையாக நடக்கின்றன. இந்த செயல்பாட்டை அதிகப்படுத்தும் நடவடிக்கையாக உருவானவைதான் ‘நேஃப்ட்’ எனப்படும் நேஷ்னல் எலக்ட்ரானிக் ஃபண்ட் ட்ரான்ஸ்பர், ஐ.எம்.பி. எஸ் எனப்படும் IMMEADIATE PAYMENT SERVICES (இமீடியெட் பேமெண்ட் சர்வீஸஸ்) போன்றவை.

    தனது பணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அது யாராலும் திருடப்பட்டுவிடக்கூடாது - எனும் உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை நாடுவார்கள். இல்லையேல் அந்தப் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். இந்த சிந்தனைகளின் அடிப்படையில் உருவானதுதான் யூ.பி.ஐ. எனப்படும் யூனிபைட் பேமெண்ட் இண்டர் பேஸ். அதாவது

    Enjoying the preview?
    Page 1 of 1