Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirippatharkku Sila Visayangal...
Sirippatharkku Sila Visayangal...
Sirippatharkku Sila Visayangal...
Ebook151 pages53 minutes

Sirippatharkku Sila Visayangal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரசியல்வாதிகளால் மக்களுக்குக் கிடைக்கிற ஒரே உருப்படியான பலன் நகைச்சுவைதான் இப்புத்தகத்தில், 2006 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் துக்ளக்கில் வெளியான நகைச்சுவைக் கட்டுரைகளில், சிறந்தவை என்று நான் கருதியவை தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்களால் மக்கள் எவ்வளவோ பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தாலும், அவர்களை மக்கள் தங்கள் எதிரிகளாகக் கருதிவிடாதபடி, நகைச்சுவையாளர்களாக அடையாளம் காட்டி இருக்கிறது.

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580160109428
Sirippatharkku Sila Visayangal...

Read more from Thuglak Sathya

Related to Sirippatharkku Sila Visayangal...

Related ebooks

Related categories

Reviews for Sirippatharkku Sila Visayangal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirippatharkku Sila Visayangal... - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிரிப்பதற்கு சில விஷயங்கள்...

    Sirippatharkku Sila Visayangal...

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. தவறுகளைத் திருத்துவது எப்படி?

    2. இலங்கைப் பிரச்னையும் கழகம் கண்ட தீர்வுகளும்

    3. வரலாறு கண்ட நல்லாட்சி!

    4. அதிர்ச்சி தரும் அரசியல் கதைகள்

    5. ஆட்சி மாறியிருந்தால்...!

    6. கலைஞரிடம் ராமதாஸ் நீதி கேட்டால்...!

    7. கண்டனங்களுக்கு ஒரு கண்டனம்

    8. பதவி கேட்டு ஒரு பயணம்

    9. கலைஞருடன் ஒரு கற்பனைப் பேட்டி

    10. ஜெயலலிதாவுடன் ஒரு புரட்சிப் பேட்டி

    11. அனைத்துக் கட்சி விவாதம்

    12. பிரச்னைகள் படும் பாடு

    13. தமிழகத் தலைவர்களுக்கான புத்தாண்டு பலன்கள்

    14. நீதித்துறை சீரமைப்புத் திட்டம்

    15. காஃபி வித் துக்ளக்!

    16. கலைஞரும் கழக ஆட்சியும்

    17. அறிக்கை தயாரிக்கிறது அரசு!

    18. அரசியல் நட்சத்திர தீபாவளி

    19. பிரதமருடன் ஒரு ‘ஆஃப் தி ரிகார்ட்’ பேட்டி

    20. நட்புறவு கிரிக்கெட் – ஒரு நேர்முக வர்ணனை!

    முன்னுரை

    துக்ளக் வார இதழில் அரசியல் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுகின்ற வாய்ப்பு துக்ளக் ஆசிரியர் திரு. சோ ஸார் அவர்கள் மூலம் எனக்குக் கிடைத்திருப்பதை என் அதிர்ஷ்டமாக நான் கருதுகிறேன். சுமார் 28 வருடங்களுக்கும் மேலாக, நானும் அலுக்காமல் அரசியல்வாதிகளின் பேச்சுக்களையும் செயல்களையும் நையாண்டி செய்து வந்துள்ளேன். எனது எழுத்துக்களின் விளைவாக எந்த அரசியல்வாதியும் மாறவில்லை என்பதுதான் என் எழுத்துக்களின் பலம். ஒரு விதத்தில், அரசியல்வாதிகள் திருந்தாமல் இருப்பதும் வசதியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அவர்களைத் திருத்துகிற முயற்சியில் நான் என்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ள முடிகிறது.

    அரசியல்வாதிகளால் மக்களுக்குக் கிடைக்கிற ஒரே உருப்படியான பலன் நகைச்சுவைதான் என்பது என் உறுதியான கருத்து. சரியாகக் கவனிக்காமல், அந்தப் பலனையும் மக்கள் இழந்துவிடக்கூடாதே என்றுதான், அரசியலில் மறைந்துள்ள நகைச்சுவைக் கருத்துக்களை துக்ளக் கட்டுரைகள் மூலம் தந்து கொண்டிருக்கிறேன்.

    இப்புத்தகத்தில், 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் துக்ளக்கில் வெளியான நகைச்சுவைக் கட்டுரைகளில், சிறந்தவை என்று நான் கருதியவை தொகுக்கப்பட்டுள்ளன. (கட்டுரைகளைப் படித்துவிட்டு ஞாபகமாக நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான், ‘நகைச்சுவைக் கட்டுரைகள்’ என்று குறிப்பிடுகிறேன்.)

    அரசியல் தலைவர்களால் மக்கள் எவ்வளவோ பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தாலும், அவர்களை மக்கள் தங்கள் எதிரிகளாகக் கருதிவிடாதபடி, நகைச்சுவையாளர்களாக அடையாளம் காட்டியிருப்பதற்காக அரசியல் தலைவர்கள் எனக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்

    துக்ளக் சத்யா

    1

    தவறுகளைத் திருத்துவது எப்படி?

    பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏராளமான தவறுகள் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்த நிலையில், ரேஷன் கார்டுகளை வழங்கும் அலுவலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.

    ஏம்பா சத்தம் போடறீங்க? ரேஷன் கார்டுலே ஒரு தப்பு இருக்கிறவங்களுக்கு தனி க்யூ, ரெண்டு தப்பு இருக்கிறவங்களுக்கு தனி க்யூ, அதுக்கு மேற்பட்டு தப்பு இருந்தா அவங்களுக்கு தனி க்யூ. எல்லோரும் அந்தந்த க்யூவிலே வந்து அமைதியா தப்பைத் திருத்திட்டுப் போங்க

    ஸார்... இதுலே குடும்பத் தலைவர் ஃபோட்டோ இருக்க வேண்டிய இடத்திலே, என் ஃபோட்டோவுக்கு பதிலா...

    ‘‘உங்க சம்சாரம் ஃபோட்டோ இருக்குதா? இருந்துட்டுப் போகட்டுமேய்யா! சம்சாரத்துக்காக இதைக்கூட விட்டுக் கொடுக்கக் கூடாதா? அப்படியாவது அதை மாத்தணுமா? உங்க சம்சாரம் கோவிச்சுக்காதா?"

    அதில்லைங்க. என் ஃபோட்டோவுக்கு பதிலா பக்கத்து வீட்டுக்காரர் ஃபோட்டோ இருக்குது...

    அப்படியா? அப்ப அவரோட ரேஷன் கார்டுலே உங்க ஃபோட்டோ இருக்கணுமே

    ஆமாங்க...

    பார்த்தீங்களா எவ்வளவு கரெக்டா சொல்லிட்டேன்? அதான் அனுபவம்ன்றது. சரி, ரேஷன் கார்டை நீங்களே மாத்திக்க வேண்டியதுதானே? இதுக்காக எங்க கழுத்தை அறுக்கணுமா?

    "அப்படி மாத்த முடியாதுங்க. ஏன்னா, ஃபோட்டோ மட்டும்தான் மாறியிருக்குது. மத்ததெல்லாம் மாறலையே’’

    அப்ப ஒண்ணு பண்ணுங்க. உங்க வீட்டு ரேஷன் சாமானை அவர் வந்து வாங்கிட்டுப் போகட்டும். அவர் வீட்டு ரேஷன் சாமானை நீங்க வாங்கிட்டுப் போயிடுங்க. ஆறு மாசத்திலே எப்படியும் இன்னொரு புதுக் கார்டு தரப்போறோம் அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ஓ.கே.? நெக்ஸ்ட்...

    வணக்கங்க, எங்க ரேஷன் கார்டுலேயும் ஃபோட்டோ மாறியிருக்குது

    என்ன? எதிர் வீட்டுக்காரர் ஃபோட்டோவா?

    இல்லீங்க. இது யார் ஃபோட்டோன்னே தெரியலை

    ஹா... அது மந்திரி ஃபோட்டோவாச்சே! மாத்தினா பிரச்னை ஆயிடும். பெரிய இடத்து விஷயம். அப்படியே இருக்கட்டும். விடுங்க. இதனால் ரேஷன் சாமான் எதுவும் குறையாது. வழக்கமா குறையற அளவுதான் குறையும். அடுத்தது?

    ஸார், என் சம்பளம் 9000...

    அதுக்கு நான் என்ன ஸார் பண்ண முடியும்? எனக்கே எட்டாயிரம்தான் கெடைக்குது. நான் யார்கிட்டே போய் சொல்றது? பே கமிஷன் வந்தாத்தான் சம்பளம் ஏறும்...

    அட, சொல்றதைக் கேளுங்க ஸார்! என் சம்பளம் 9000 ரூபாய். ஆனா சம்பளத்துக்கு நேரா, 1/104-ஏ-ன்னு ரேஷன் கார்டுலே போட்டிருக்குது. இவ்வளவு கம்மி சம்பளத்துக்கு எந்தப் பொருளும் கொடுக்க முடியாதுன்னு ரேஷன் கடையிலே தகராறு பண்றாங்க.

    அடடா...! சம்பளத்துக்குப் பதிலா வீட்டு நம்பரை எழுதிட்டிருக்காங்கபோல இருக்குது...

    இல்லைங்க. எங்க வீட்டு புது நம்பர் 22பி; பழைய நம்பர் 588. இந்த 1/104-ஏ-தான் என்னன்னு புரியலை

    உங்க வீட்டு சமாச்சாரம் உங்களுக்கே புரியலைன்னா எங்களுக்கு மட்டும் எப்படிப் புரியும்? சரி. குடுத்துட்டுப் போங்க. பாத்து வெக்கறேன். நெக்ஸ்ட்...? உங்க கார்டுலே என்ன ஸார் பிரச்னை?

    ஸார் இந்த ரேஷன் கார்டுலே ‘பிள்ளையார் கோவில் தெரு’ன்னு போட்டிருக்குது. அதை மாத்தணும்

    உங்க தெரு பேர் என்ன?

    விநாயகர் கோவில் தெருங்க...

    விநாயகர், பிள்ளையார் ரெண்டும் ஒண்ணுதான். எதுக்காக அதை மாத்தணும்னு தகராறு பண்றீங்க?

    இல்லை ஸார். இப்படி தப்பா இருந்தா பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசென்ஸ் வாங்கும்போது பிரச்னை வரும். எங்க தெருவிலே 500 வீடுங்க இருக்குது. எல்லா ரேஷன் கார்டுலேயுமே ‘பிள்ளையார் கோவில் தெரு’ன்னு தப்பாவே இருக்குது

    எல்லாத்துலேயுமே தப்பா இருக்குதா

    ஆமாங்க...

    அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்க எல்லாரும் சேர்ந்து கார்ப்பரேஷனுக்கு எழுதி, தெரு பேரை மாத்திடுங்க. நெக்ஸ்ட்... உங்க பிரச்னை என்ன?

    சொன்னா வயித்தெரிச்சல் ஸார். அக்கம்பக்கத்து வீடுகளிலே தப்பு தப்பாவாவது ரேஷன் கார்டு கிடைச்சிருக்குது. எங்க வீட்டுக்கு, ரேஷன் கார்டுக்கு பதிலா போஸ்ட் கார்டு கொடுத்துட்டுப் போயிருக்காங்க. அதுவும் 15 பைசா ஸ்டாம்ப் ஒட்டினது...

    போஸ்ட் கார்டா குடுத்திருக்காங்க? சரி, அதுலேயே ஒரு கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுங்க, கவனிக்கிறேன். நெக்ஸ்ட்?

    என்ன ஸார் இது, அட்ரஸ் இருக்க வேண்டிய இடத்திலே என்ன இருக்குது பாருங்க?

    அட்ரஸ்தானே இருக்குது?

    எந்த அட்ரஸ்னு பாருங்க. நம்பர் 10, டவுனிங் ஸ்ட்ரீட், லண்டன்னு போட்டிருக்குது இல்லே? இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

    ஐயையோ, இது இங்கிலாந்து பிரதம மந்திரியோட ரேஷன் கார்டு ஆச்சே! உனக்கு எப்படி கெடச்சுது? சரி, இதை அவருக்கு அனுப்பிட்டு உனக்கு வேறே ரேஷன் கார்டு தரச் சொல்றேன். உங்களுக்கு என்ன பிரச்னை?

    ஸார். எனக்கு ஷுகரே இல்லை...

    வெரிகுட். இதுக்கு ஏன் வருத்தப்படறீங்க? சந்தோஷப்பட வேண்டிய சமாச்சாரமாச்சே...

    Enjoying the preview?
    Page 1 of 1