Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hello, Arasiyalvaathiya...?
Hello, Arasiyalvaathiya...?
Hello, Arasiyalvaathiya...?
Ebook226 pages1 hour

Hello, Arasiyalvaathiya...?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெயலலிதா அவர்கள் ஆதரவில் பிரதமராகும் நிலை ஏற்பட்டபோது வாஜ்பாய் அவர்கள் எத்தனை சங்கடங்களை எதிர்கொண்டார், பின்னர் சுப்பிரமண்யம் ஸ்வாமி அவர்கள் ஏற்பாடு செய்து 'டீ பார்ட்டி'க்கு பின், ஒரு ஓட்டில் அவரது அரசு கவிழ்ந்து தேசிய அரசியலில் என்னவெல்லாம் நடந்தன என்பதை வரலாறாகத்தான் படிக்க வேண்டுமா என்ன இப்படி நகைச்சுவைக் கட்டுரைகளின் மூலமும் படித்துத் தெரிந்து கொள்வோம்,

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580160109928
Hello, Arasiyalvaathiya...?

Read more from Thuglak Sathya

Related to Hello, Arasiyalvaathiya...?

Related ebooks

Related categories

Reviews for Hello, Arasiyalvaathiya...?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hello, Arasiyalvaathiya...? - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹலோ, அரசியல்வாதியா...?

    Hello, Arasiyalvaathiya...?

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால்…

    2. தமிழக பட்ஜெட் தரப்போகும் செய்திகள்

    3. தேர்தல் வெற்றிக்கு ‘துக்ளக் நோட்ஸ்’

    4. கவலைப்பட வேண்டியது வாக்காளர் பணி!

    5. இவை அரசியல் நியாயங்கள்

    6. இங்கே இருப்பதா...? அங்கே வருவதா...?

    7. முடிவெடுக்கிறார் மூப்பனார்...

    8. நடவடிக்கை எடுக்கிறார் நாராயணன்

    9. ஐயோ பாவம், காங்கிரஸ்!

    10. காங்கிரஸின் கொள்கைப் புரட்சி!

    11. இலங்கைப் பிரச்னையை இப்படியும் தீர்க்கலாம்

    12. ஹலோ அரசியல்வாதியா...?

    13. ராமதாஸுக்கு வந்த சோதனை

    14. ஒரு தேர்தல் வியூகம் தயாராகிறது

    15. எச்சரிக்கை - இங்கே பேச்சு வார்த்த நடக்கிறது

    16. கருணாநிதியும் ராமதாஸும் கலந்துரையாடியது என்ன ?

    17. மனுநீதிச் சோழனும் நக்கீரனும்

    18. கூட்டணி எவ்வழி - கொள்கை அவ்வழி

    19. தி.மு.க.பாணியும், அ.தி.மு.க.பாணியும்

    20. கேள்விகள் அங்கே பதில்கள் இங்கே

    21. கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்

    22. தமிழகக் காங்கிரஸார் தலைநகர் சென்றால்…!

    23. கருணாநிதி தலைமையில் ஒரு கருத்தரங்கு

    23.கருணாநிதி, ஜெயலலிதா, காவிரிப் பிரச்னை

    25. பிரச்னைகளுக்கு பெரிதும் காரணமாக இருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?

    26. தீபாவளிப் படங்கள் திடீர் விமர்சனங்கள்

    27. வருமானம் பெருக வளமான வழிகள்

    முன்னுரை

    அன்பார்ந்த வாசகரே…!

    வணக்கம். இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் 1999-2001 கால கட்டத்தில் அடியேன் துக்ளக்கில் எழுதியவை. அப்போதைய மத்திய மாநில அரசுகள் எப்படி இயங்கி வந்தன என்று இன்றைய வாசகர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

    மத்திய அரசாகட்டும், மாநில அரசாகட்டும் கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்கிற நிலை ஏற்பட்டால் நாடு எப்பேர்ப்பட்ட ஹிம்ஸைகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு, நமது நாட்டு அரசியலைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

    ஜெயலலிதா அவர்களின் ஆதரவில் பிரதமராகும் நிலை ஏற்பட்டபோது வாஜ்பாய் அவர்கள் எத்தனை சங்கடங்களை எதிர்கொண்டார், பின்னர் சுப்ரமண்யம் ஸ்வாமி அவர்கள் ஏற்பாடு செய்து ‘டீ பார்ட்டி’க்குப் பின், ஒரு ஓட்டில் அவரது அரசு கவிழ்ந்து தேசிய அரசியலில் என்னவெல்லாம் நடந்தன என்பதை வரலாறாகத்தான் படிக்க வேண்டுமா என்ன? இப்படி நகைச்சுவைக் கட்டுரைகளின் மூலமும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    மாநிலத்தில், தி.மு.க.வுடனும் அ.தி.மு.க.வுடனும் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டதன் மூலம் தமிழக அரசியல் கண்ட நகைச்சுவைக்கும் அளவே இல்லை. தி.மு.க - அ.தி.மு.க - பா.ம.க. - வின் நகைச்சுவைக் கூத்தால் தமிழக அரசியல் ஒரு வழியாக்கப்பட்டு. படித்துத்தான் பாருங்களேன்.

    நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு என் நன்றிகளைப் பதிவு செய்கிறேன்.

    அன்புடன்,

    துக்ளக் சத்யா

    1. ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால்…

    தமிழக அரசின் பட்ஜெட்டை ஆதரித்து ஆளும் கட்சியினரும் அவர்களது ஆதரவுக் கட்சிகளும் கருத்து தெரிவிக்க, பட்ஜெட்டைக் குறை கூறி எதிர்க்கட்சியினர் கருத்து வெளியிட்டு, மரபைக் காப்பாற்றி விட்டனர். இந்த சம்பிரதாயமான கருத்துக்களில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? எனவே, நமது திருப்திக்காக வரலாற்றை மாற்றி எழுத முடிவு செய்தோம். இப்போது, ஜெயலலிதாதான் முதல்வர் என்று வைத்துக் கொள்வோம்.(பயப்பட வேண்டாம். சும்மா, தமாஷ் தான்.) இதே பட்ஜெட்டை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தால், அதன் விளைவு எப்படி இருந்திருக்கும்?

    கருணாநிதி கடிதம்

    உடன்பிறப்பே,

    இன்றைய தினம் முதல்வர் பொறுப்பிலே அமர்ந்து கொண்டு, அம்மையார் ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டை வெளியிட்டிருப்பதை நீ ஏடுகளின் வாயிலாக அறிந்திருப்பாய்.

    உருப்படியான திட்டங்கள் எதுவுமின்றி, ஊழல் புரிவதற்கு வசதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையை அம்மையாரும், அவரது அடியொற்றி நடக்கும் ஆதரவுக் கட்சித் தலைவர்களும் அரசியல் லாபம் கருதி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    நானும் பார்த்திட்டேன் அந்த பட்ஜெட்டை.

    கல்கி, திரு.வி.க. நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு, அவர்களது குடும்பங்களுக்கு ரூபாய் 20 லட்சம் தரப்படுமாம். அவ்வளவுதானா அவர்களது நூல்களுக்கு மதிப்பு? ஏன் 20 கோடி கொடுக்கக் கூடாதா? முதல்வருக்கும், முதல்வரின் குடும்பத்தினருக்கும் ஆகும் பாதுகாப்புச் செலவை சற்றுக் குறைத்துக் கொண்டாலே இதைத் தரமுடியுமே!

    ஜூலை மாதத்திற்குள் ரேஷன் கார்டுகளை வழங்கி விடுவோம் என்று வீறாப்புடன் கூறியிருக்கிறார் முதல்வர். கவனிக்க வேண்டும் - ரேஷன் பொருட்களையல்ல, ரேஷன் கார்டை! அதைக் கொடுப்பதற்கே வருடக்கணக்கில் அவகாசம் கேட்கிற அளவிற்கு வக்கற்ற, வகையற்ற ஓர் அரசைத்தான் இன்றைய தினம் நாம் பெற்றிருக்கிறோம். என்னே, அம்மையார் ஆட்சியின் நிர்வாகம்!

    அடுத்து இன்னொரு வாய்தா - ஜூலைக்குள் கிருஷ்ணா நீர் வருமாம்! காவிரி வந்து விட்டது. கிருஷ்ணா வரப் போகிறது. காதிலே பூ வைத்திருப்பவர்கள் நம்பலாம், நமக்கு அட்டியில்லை! வராத கிருஷ்ணா நீருக்கு இந்த அம்மையார் ஆடிய ஆட்டம், ஏ அப்பா! ஏதோ கிருஷ்ணா நீர் தமிழனின் வீடுகளில் முன்பக்கம் நுழைந்து பின்பக்கம் பாயப்போவதைப் போல, அம்மையார் தனக்குத் தானே விழா எடுத்துக் கொண்ட கூத்துக்கள், தமிழனின் மரமண்டையில் இருக்காது என்று புரிந்து கொண்டதால்தானே இந்த மாய்மாலங்கள் அரங்கேற்றப்படுகின்றன!

    அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வென்று அறிவித்து விட்டு, அதிலே பெரும் பகுதி 5 ஆண்டு காலத்திற்கு முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய ஆட்சிக் காலத்தில் இப்படியா நடந்திட்டது? இந்த அம்மையாரை ஆட்சியில் அமர்த்தியதின் பலனை இன்றையதினம் அரசு ஊழியர்கள் அனுபவிக்கிறார்கள். ஏமாற்றப்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பொங்கியெழுந்து போராட்டத்தைத் துவக்கினால், அவர்களது போராட்டத்துக்கு தலைமை தாங்கி, எப்போதும் போல் மீண்டும் ஒரு முறை களப்பலி ஆக இந்த கருணாநிதி தயாராகத்தான் இருக்கிறான்.

    ஐந்தாவது வகுப்பு வரை இலவசப் புத்தகமாம்! மாணவர்களின் ஓட்டைப் பறிப்பதற்காகத்தானே இப்படிப்பட்ட கவர்ச்சித் திட்டம்? ஏன் பட்டப்படிப்பு வரை இலவசப் புத்தகங்கள் கொடுக்கக் கூடாதா? அதற்குக் கூடவா உன்னிடம் பணமில்லை? கழக ஆட்சியிலே அதற்கான ஆணை தயாராகி அதிலே நான் கையெழுத்து இடுகிற சமயத்தில் ஆட்சிக் காலம் முடிந்து விட்டதால், இந்தத் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டது என்பதை மக்கள் அறிய மாட்டார்களா? அந்தக் கோப்பைத் தேடியெடுத்து திட்டத்தை நிறைவேற்றக் கூட அம்மையாருக்கு மனம் வரவில்லை.

    இன்னொரு அக்கிரமும் அரங்கேறியிருக்கிறது.

    குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டையாம்! எங்காவது கேட்டதுண்டா இப்படியொரு கோமாளித் திட்டத்தை? குழந்தைகளின் வாக்குகளைக் கைப்பற்றத்தான் இப்படியொரு திட்டம் என்று கூறக்கூடியவன் அல்ல நான். மீதி ஆறு நாட்களுக்கு குழந்தைகள் புத்தகங்களையா சாப்பிடுவார்கள்? சரி, அதையாவது திட்டத்தில் குறிப்பிட்டார்களா என்றால், அதுவும் இல்லை. அம்மையாருக்குத்தான் இதெல்லாம் தெரியாது. அருகே இருக்கும் நாவலராவது எடுத்துக்கூறியிருக்க வேண்டாமா.

    கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்களில் தூர் எடுத்து ஆழப்படுத்த, கோடிக்கணக்கில் ஓர் திட்டம்! யாருக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்படப் போகிறது என்பது பற்றி துருவித் துருவி தேடினாலும் தகவல் இல்லை. இப்படி கொள்ளையடிப்பதற்கென்றே திட்டங்கள் போடப்படுவதை அம்மையாரின் ஆட்சியில்தானே நீ பார்க்க முடியும்?

    வெள்ளத் தடுப்புப் பணிக்கு 300 கோடி. நெடுஞ்சாலைகள் போட 750 கோடி. பாலங்கள் அமைக்க 360 கோடி. அம்மையாருக்கு கோடிகளைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதை நிரூபிக்கும் வகையில் தீட்டப்பட்ட திட்டங்களைத்தான் பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது.

    இந்த வேதனைகளைப் பற்றியெல்லாம் பஸ்ஸில் ஏறி யாரிடமாவது புகார் சொல்லப் புறப்பட்டால், ஆம்னி பஸ்ஸுக்கும் வரி விதிப்பு. அதன் காரணமாக கட்டண உயர்வு.

    வரி குறைப்பே இல்லையா என்று நீ கேட்கலாம். உண்டு. ஐஸ்க்ரீமுக்கு வரிக்குறைப்பு. வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் எல்லாம், இந்த அம்மையாரைப் போல ஒரு நாளைக்கு ஐந்துவேளை ஐஸ்க்ரீம் சாப்பிட்டா உயிர் வாழ்கிறார்கள்?

    ஐயகோ! இப்படி தன் வசதிக்காக, ஒரு பட்ஜெட்டைத் தயாரித்துக் கொண்டு, அதைத் தமிழர் நலனுக்காக போடப்பட்டுள்ள பட்ஜெட் என்று முதல்வர் கூறினால், அதையும் நம்பக் கூடியவன்தானே அறிவிழந்த தமிழன்?

    அன்புள்ள

    மு.க.

    ஜெயலலிதா அறிக்கை

    தான் ஆட்சி செய்தபோது ஒரு பட்ஜெட்டைக் கூட ஒழுங்காகப் போடாத முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கும் வகையில், நான் போட்டுள்ள பட்ஜெட்டை வெட்கமின்றி விமர்சிக்கத் துணிந்து விட்டார்.

    என்னுடைய பட்ஜெட் பற்றி கருத்து சொல்ல இவருக்கு என்ன அருகதை இருக்கிறது? கருத்து சொல்லும் உரிமையை இவருக்கு யார் கொடுத்தது? கருணாநிதி தானும் நல்ல பட்ஜெட்டைப் போடமாட்டார், மற்றவர்கள் நல்ல பட்ஜெட்டைப் போட்டால் வாய் கிழிய வக்கணை மட்டும் பேசுவார்.

    தமிழர்களின் வாழ்க்கை என்னால் சிறப்படைந்து விடுகிறதே என்ற வயிற்றெரிச்சலில் புலம்புகிறார். என்னுடைய இந்த பட்ஜெட்டைப் பார்த்து நாடே மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும்போது, தாங்க முடியாத பொறாமையின் காரணமாக பட்ஜெட்டில் குறை இருப்பதாக கருணாநிதி கதை அளந்து கொண்டிருக்கிறார்.

    பட்ஜெட்டை நான் வெளியிட்ட அரைமணி நேரத்திற்குள்ளேயே, அமெரிக்காவிலிருந்து கிளிண்டன் என்னுடன் ஃபோனில் பேசிப் பாராட்டினார். கிளிண்டன் சார்பாக வெள்ளை மாளிகையிலிருந்து இரண்டாம் நிலை அதிகாரி ஒருவரும் என் இல்லம் தேடி வந்து, சுமார் ஆறு மணி நேரம் பாராட்டிக் கொண்டிருந்தார். இதுதான் கருணாநிதியின் ஆத்திரத்திற்குக் காரணம். இங்கிலாந்து அரசாங்கமும் தமிழக பட்ஜெட்டைத்தான் பின்பற்றப் போகிறது என்ற தகவல் எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு என்ன செய்யப் போகிறார் கருணாநிதி? இப்படி உலகெங்கிலுமிருந்து எனக்கு பாராட்டுரைகள் குவிந்த வண்ணம் இருப்பதால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார் கருணாநிதி.

    இவரது ஆட்சியால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பதால்தானே மக்கள் இவருக்கு சட்டசபைத் தேர்தலில் பட்டை நாமம் சாத்தி, ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்? இனியும் கருணாநிதி வாலாட்டினால், மக்கள் அவரை எதிர்க்கட்சித் தலைவராகக் கூட ஏற்கமாட்டார்கள். இப்படி ஒரு எதிர்க்கட்சித்தலைவர் தேவையென்று யார் அழுதார்கள்?

    கருணாநிதி இதுவரை எத்தனை பட்ஜெட்டை ஒழுங்காகப் போட்டுக் கிழித்தார் என்று எனக்குத் தெரியாதா? பட்ஜெட்டே போடத் தெரியாத கருணாநிதி, என்னுடைய பட்ஜெட்டை விமர்சிப்பது வெட்கக்கேடு!

    மக்கள் உள்ளங்களில் எப்போதும் என்னுடைய பட்ஜெட்தான் இருக்குமே தவிர, கருணாநிதியின் பட்ஜெட் இருக்காது. இந்த உண்மையை கருணாநிதி வசதியாக மறைத்துவிட்டு, குதர்க்கம் பேசுகிறார்.

    ஐந்தாவது வகுப்பு வரை இலவசப் புத்தகங்கள் கொடுப்பதை நாடே பாராட்டியிருக்கிறது. இப்படிப்பட்ட திட்டங்களை கருணாநிதியால் போட முடிந்ததா?

    குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை கொடுக்க வேண்டும் என்ற சிறப்பான திட்டம், கருணாநிதியின் மூளையில் எப்போதாவது தோன்றியதுண்டா? அதற்கு வக்கில்லாத கருணாநிதி, தாங்க முடியாத எரிச்சலில் ஜன்னி கண்டவர் போல ஏதேதோ உளறுகிறார்.

    மீனவர்களுக்கு நான் வீடு கட்டித் தருவதை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில், குள்ளநரித் தனத்தோடு ஒப்பாரி அரசியல் நடத்துகிறார் கருணாநிதி. மீனவ நண்பன் படத்தில் புரட்சித் தலைவர்தான் நடித்தாரே தவிர, வசனம் எழுதுவதற்குக் கூட இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

    கோடிக்கணக்கில் திட்டங்கள் போடுவது கூட அவருக்குப் பொறுக்கவில்லை. திட்டங்கள் போட்டு தமிழ்நாட்டை நான் முன்னேற்றி விடுகிறேனே என்ற ஆத்திரத்தில் புலம்பிக் கொண்டிருக்கிற கருணாநிதியை, மக்கள் தமிழகத்தை விட்டே ஓட ஓட விரட்டியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    அன்றாடம் அறிக்கை அரசியல் நடத்தி ஓலமிடும் கருணாநிதிக்கு துளியாவது தன்மானம் இருந்தால், நிமிடம் கூட அரசியலில் நீடிக்கக் கூடாது.

    ‘துக்ளக்’ 8.4.98

    2. தமிழக பட்ஜெட் தரப்போகும் செய்திகள்

    வரவிருக்கும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் எத்தகைய திட்டங்கள் அறிவிக்கப்படவிருக்கின்றன என்பது வேண்டுமானால் ரகசியமாக இருக்கலாம். பட்ஜெட் எப்படியிருந்தாலும் அதன் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கப் போகின்றன என்பதில் எந்த சந்தேகமும் நமக்கில்லை. இதோ பட்ஜெட்டுக்குப் பிந்தைய சட்டசபை விவாதம் பற்றிய பத்திரிகைச் செய்தியை, ‘துக்ளக்’ முந்தித் தருகிறது.

    தி.மு.க. உறுப்பினர்: இதுபோன்ற ஒரு சிறப்பான பட்ஜெட்டை கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் எந்த அரசும் போடவில்லை. வானுலகில் இருந்து அண்ணா, பெரியார், அம்பேத்கார் ஆகியோர் முதல்வரைப் பாராட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது உறுதி.

    சோ. பாலகிருஷ்ணன்:

    Enjoying the preview?
    Page 1 of 1