Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naadu Thazhuviya Nagaichuvai
Naadu Thazhuviya Nagaichuvai
Naadu Thazhuviya Nagaichuvai
Ebook176 pages1 hour

Naadu Thazhuviya Nagaichuvai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'நகைச்சுவை நோய் தீர்க்கும் மருந்து' போன்றது. அவ்வகையில், 'துக்ளக் சத்யா'வின் - 'நாடு தழுவிய நகைச்சுவை' என்ற இக்கட்டுரையில், கலைஞர்களும், காவிரிப் பிரச்சினையும், கவர்னரைச் சந்தித்த கழகத் தலைவர்கள் பற்றியும், நேர்காணலில் வெற்றி பெறுவது எப்படி? என்பதையும், அரசியல்வாதிகளின் அறிக்கைகள், பேட்டிகள் மூலம் நம்மை சிரிக்க வைப்பதை காணலாம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateMay 20, 2023
ISBN6580160109366
Naadu Thazhuviya Nagaichuvai

Read more from Thuglak Sathya

Related to Naadu Thazhuviya Nagaichuvai

Related ebooks

Related categories

Reviews for Naadu Thazhuviya Nagaichuvai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naadu Thazhuviya Nagaichuvai - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நாடு தழுவிய நகைச்சுவை

    Naadu Thazhuviya Nagaichuvai

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு குடிமகன் ஓட்டு போடுகிறார்.

    2. கத்தியின்றி ரத்தமின்றி கொள்ளையொன்று நடக்குது

    3. பராசக்தி மனோகரா ஸ்டைலில் ஒரு வழக்கு!

    4. கலைஞர்களும், காவிரிப் பிரச்னையும்

    5. ஜெயலலிதாவிடம், கருணாநிதி நீதி கேட்டால்...?

    6. மனுதாரரும், மனோதத்துவ டாக்டர்களும்

    7. ராஜ்குமார் விடுதலை ஒரு (விபரீத) விழா

    8. ஒஸாமா பின்லேடன் தமிழ்நாட்டுக்கு வந்தால்...?

    9. தீர்ப்புக்கேற்ற திருப்பங்கள்

    10. கவர்னரைச் சந்தித்த கழகத் தலைவர்கள்

    11. இரட்டை நாக்கின் சிறப்புகள்

    12. அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி ஓர் அலசல்

    13. அதிகாரிகளை மாற்ற அதிரடி யோசனைகள்

    14. நிஜமல்ல, கதை

    15. உறவுக்கு கை கொடுப்போம். நட்புக்கு விடை கொடுப்போம்!

    16. பொதுமக்களின் தேவையும் போலீஸ்துறையின் சேவையும்

    17. நேர்காணலில் வெற்றி பெறுவது எப்படி?

    18. ஜெயலலிதா பாணியை சோனியா பின்பற்றினால்

    19. கருணாநிதி பாணியில் வாஜ்பாய் முழங்கினால்...

    20. நீங்கள் அமைச்சரானால்

    அன்பார்ந்த வாசகரே!

    வணக்கம்

    ஒரு மாட்டின் படத்தை வரைந்துவிட்டு, படத்தின் கீழே, மாடு என்று எழுதும் ஓவியனைப்போல இத்தொகுப்பில் வெளியாகி இருப்பவையெல்லாம் நகைச்சுவைக் கட்டுரைகள்தான் என்று உங்களை நம்பவைப்பதற்காக நாடு தழுவிய நகைச்சுவை என்று தலைப்பு கொடுத்துள்ளேன்.

    டி.வி. நகைச்சுவை நாடகங்களைத் தயாரிப்பவர்கள், நேயர்கள் ஏதோ சீரியஸ் நாடகம் போலிருக்கிறது என்று நினைத்து வழக்கப்படி அழுதுவிடக்கூடாதே என்ற கவலையில் முன் எச்சரிக்கையாக சிரிப்பு ஒலியையும் பின்னணியில் பதிவு செய்கிறார்கள். அதே பாணியை பின்பற்றுவதானால், இங்கே சிரிக்கவும் என்று கட்டுரைகளில் ஆங்காங்கே குறிப்பிட்டிருக்க வேண்டும். உங்கள் நகைச்சுவை உணர்வில் நம்பிக்கை வைத்து, நான் அப்படிச் செய்யாமல் தலைப்பில் மட்டும் நகைச்சுவை என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

    இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் வெவ்வேறு கால கட்டங்களில் துக்ளக் இதழில் வெளியானவை. இக்கட்டுரைகள் துக்ளக்கில் வெளியானபோது, சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது என்றும், சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது என்றும் துக்ளக் வாசகர்கள் நகைச்சுவையோடு கடிதம் எழுதியதால், அநேகமாக இவையெல்லாம் நகைச்சுவைக் கட்டுரைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நானும் என் நண்பர் அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களும் முடிவு செய்தோம்.

    எனது எழுத்துக்களுக்கு தெடார்ந்து ஊக்கமும் ஆதரவும் தந்துவரும் மதிப்பிற்குரிய மாமனிதர் சோ ஸார் அவர்களுக்கும், எனது எழுத்துக்களை ரசித்து எனக்கு ஏற்றம் தந்துகொண்டிருக்கிற அன்பிற்குரிய வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன்,

    சத்யா

    1. ஒரு குடிமகன் ஓட்டு போடுகிறார்.

    தண்டபானி யாரு?

    நான்தாங்க

    யோவ்...! ஓட்டு போட வரும்போது கையிலே என்னய்யா லக்கேஜ்? வெடிகுண்டு கிடிகுண்டு ஏதாவது வெச்சிருக்கியா? ஒட்டுச் சாவடிக்குள்ளே மூட்டை முடிச்சோட வரக்கூடாது. ரூல்ஸ் தெரியாதா?

    ஐயா... இதை உங்களுக்காகத்தாங்க எடுத்துகிட்டு வந்தேன்

    என்ன? லஞ்சம் கொடுக்கப் பாக்கறியா? என்னய்யா அது?

    நான்தான் தண்டபானின்னு நிரூபிச்சாத்தானுங்களே நான் ஒட்டுப் போடமுடியும்? அதுக்காகத்தான் ஆதாரங்களை எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்.

    ஓ... அதுவா? எதுக்கு இவ்வளவு ஆதாரம்?

    எதுக்கும் இருக்கட்டும்னு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், தாசில்தார் சர்டிஃபிகேட் எல்லாத்தையும் வாரிக்கினு வந்துட்டேங்க.

    அடையாள அட்டை இருக்குது இல்லே? அதை மட்டும் காட்டு போதும்

    இந்தாங்க அடையாள அட்டை

    என்ன இது? வோட்டர் லிஸ்ட்லே உன் வீட்டு நம்பர் 1-ன்னு போட்டிருக்குது. அடையாள அட்டையிலே 111-ன்னு போட்டிருக்குதே?

    ரெண்டுமே தப்புங்க. எங்க வீட்டு நம்பர் 11-ங்க. வோட்டர் லிஸ்ட்லே சுருக்கமா 1-ன்னு போட்டிருக்காங்க. அடையாள அட்டையிலே விளக்கமா 111-ன்னு போட்டிருக்காங்க.

    அப்ப இந்த அடையாள அட்டை உன்னுடையதுதான்னு நாங்க எப்படி நம்ப முடியும்?

    உங்களுக்கு இந்த சந்தேகம் வரும்னு தெரிஞ்சுதான், சுமைன்னுகூட பாக்காம எல்லா ஆதாரங்களையும் தூக்கிட்டு வந்திருக்கேன்.

    சரி... ரேஷன் கார்டைக் காட்டு

    இந்தாங்க ரேஷன் கார்டு. இதுலே வீட்டு நம்பர் 11-ன்னு கரெக்டா போட்டிருக்குது பாருங்க

    "வீட்டு நம்பர் கரெக்டா இருந்து என்ன பிரயோஜனம்? இதுலே உங்க அப்பா பேரு மாணிக்கம்னு போட்டிருக்குதே...?

    அது தப்புங்க. எங்க அப்பா பேரு வெங்கடாசலம்

    "அப்ப... மாணிக்கம்ன்றது அவரோட புனைப்பெயரா?

    எங்க உண்மையான அப்பா பேரு... சீ... எங்க அப்பாவோட உண்மையான பேரு வெங்கடாசலம். அடையாள அட்டையிலே மாணிக்கம்னு இருக்குது. வோட்டர் லிஸ்ட்லே கந்தசாமின்னு இருக்குது. ரேஷன் கார்டுலே குப்பன்னு இருக்குது. உங்களுக்கு எந்த பேர் வேணுமோ அதை வெச்சுக்கிட்டு, எனக்கு ஒட்டு போடறதுக்கு அனுமதி குடுங்க

    ஊர்லே இருக்கிற பேரையெல்லாம் உங்க அப்பாவே வெச்சுகிட்டா, மத்தவங்க எல்லாம் என்னய்யா பண்றது? நல்லா ஞாபகப்படுத்திட்டு சொல்லு. யாரு உங்கப்பா?

    வெங்கடாசலம்தாங்க

    நல்லா தெரியுமா?

    சத்தியமா தெரியும்ங்க. சின்ன வயசிலேர்ந்தே அவர்தான் எங்க அப்பா. நடுவிலே எப்பவுமே அவர் தன் பேரை மாத்திக்கலை. அவர் அந்தமாதிரி ஆள் இல்லைங்க.

    அதெல்லாம் எனக்கு தெரியாது

    அதனாலேதாங்க நான் சொல்றேன். இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்தா எங்க அப்பாவையே கூப்பிடறேன், கேட்டுக்குங்க. அவரையும் கூட்டிகிட்டுத்தான் வந்திருக்கேன்.

    என்ன? உங்கப்பாவை கூட்டிகிட்டு வந்திருக்கியா? அதெப்படி முடியும்? அவர்தான் செத்துப்போயிட்டாரே

    ஐயையோ... அவர் சாகலைங்க. அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலேகூட பாத்தேனே!

    யார்கிட்டே கதைவிடறே? எங்க லிஸ்ட்படி அவர் செத்துப்போயிருக்கணுமே

    ரேஷன் கார்டைப் பாருங்க ஸார். அவர் உயிரோடதான் இருக்காரு. இப்பவாவது நான் ஓட்டு போடலாமா?

    அவசரப்படாதய்யா! செக்பண்ணிட்டுத்தானே அனுமதிக்கணும்? உன் வயசு என்ன?

    39-ங்க

    வோட்டர் லிஸ்ட்லே 93-ன்னு போட்டிருக்குதே?

    அது தப்புங்க

    அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? கொஞ்சம் வெளியே வெயிட்பண்ணு. 93 வயசானதும் உள்ளே வா. ஓட்டு போட அனுமதிக்கிறேன். இப்ப ஓட்டு போட முடியாது.

    என்ன ஸார் இப்படிச் சொல்றீங்க? என் வயசு 39-தான்னு டிரைவிங் லைசென்ஸ்லே சரியா போட்டிருக்குது பாருங்க.

    இது உன் டிரைவிங் லைசென்ஸ்தானா?

    ஆமாங்க! வண்டிகூட எடுத்துக்கிட்டு வந்திருக்கேன். ஓட்டிக் காட்டட்டுங்களா? எட்டு போட்டு காட்டறேன்

    யோவ்...! எட்டு போடறது ஒரு பெருமையா? எல்.கே.ஜி. குழைந்தைகூட போடும். ஓட்டு போட வந்தியா? எட்டு போட வந்தியா? ஆமா... டிரைவிங் லைசென்ஸ்லே இருக்கிற ஃபோட்டோவுக்கு தாடி இருக்குது. உனக்கு தாடி இல்லையே?

    அது வந்துங்க... டிரைவிங் லைசென்ஸுக்காக அலையோ அலைன்னு அலைஞ்சப்போ, ஷேவ் பண்றதுக்கு டைம் இல்லை. அதான் அப்ப தாடி வளர்ந்திடுச்சு.

    சந்தேகமாக இருக்குதே!

    என்ன ஸார் சந்தேகம்! மனுஷனுக்கு தாடி வளராதா?

    அதில்லைய்யா... அந்த தாடிக்கார ஆள் நீதான்னு நான் எப்படி நம்பறது?

    அப்படின்னா, தாடி வளர்ற வரைக்கும் நான் இங்கே வெயிட் பண்ணனுமா? ரெண்டு தாடியையும் ஒப்பிட்டுப் பார்த்துட்டுத்தான் ஓட்டு போட அனுமதிப்பீங்களா? அப்ப தாடி கறுப்பா வளர்ந்தது. இனிமே வளர்ற தாடி வெள்ளையா இருக்குமே.

    இந்த வோட்டர் லிஸ்ட்லே இருக்கிற தண்டபானி நீதான்னு சரியான ஆதாரத்தோட நிரூபிக்க உன்னாலே முடியலைன்னா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?

    இந்தாங்க... தாசில்தார் சர்டிஃபிகேட். தாடியில்லாத என் ஃபோட்டோ இதுலே இருக்குது பாருங்க. இப்பவாவது நான்தான் தண்டபானின்னு நம்பறீங்களா?

    தாசில்தார் சர்டிஃபிகேட்லே ‘விநாயகர் தெரு’ன்னு போட்டிருக்குது. ஆனா, ரேஷன் கார்டுலே கணபதி தெருன்னு இருக்குதே

    கணபதி, வினாயகர் ரெண்டும் ஒண்ணுதானுங்களே!

    அதெப்படி?

    ரெண்டு பேருக்குமே தும்பிக்கை இருக்குமே!

    அதெல்லாம் எனக்கு தெரியாது.

    தெரியாதுன்னா காலண்டர்லே பாத்து தெரிஞ்சுக்குங்க. அதுக்காகத்தான், காலண்டரையும் எடுத்துகிட்டு வந்திருக்கேன் விநாயகருக்கு தும்பிக்கை இருக்குது பாருங்க

    அதைச் சொல்லலைப்பா... தெரு பேரு மாறியிருக்கும்போது, ஓட்டு போட எப்படி நான் உன்னை அனுமதிக்க முடியும்? சட்டம்னு ஒண்ணு இருக்குது இல்லே? ஐயையோ...

    என்ன ஸார்?

    வோட்டர் லிஸ்ட்லே உன் பேருக்கு எதிரா ‘பெண்’னு போட்டிருக்குதே. அநாவசியமா டைமை வேஸ்ட் பண்ணிட்டேன், போ... போய் பொம்பளைங்க க்யூவிலே நில்லு

    இல்லைங்க, நான் ஆம்பளைதாங்க

    வாயாலே சொன்னா போதாது. ஏதாவது சர்டிஃபிகேட் இருக்கா?

    ஏன்... ஸார் இத்தனை ஆதாரங்களைக் கொண்டு வந்திருக்கேன். ஒவ்வொண்ணுலேயும் ஏதாவது தப்பு இருக்குது. ‘வாக்களியுங்கள், கடமையை நிறை வேற்றுங்கள்’னு சொல்றீங்களே. அரசாங்கத்திலே வேலை செய்யறவங்க கடமையை ஒழுங்கா நிறைவேற்றியிருந்தா. இத்தனை தப்பு வந்திருக்குமா?

    "யோவ்... நீ செஞ்ச அதிர்ஷ்டம், வோட்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1