Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naiyandi Katturaigal
Naiyandi Katturaigal
Naiyandi Katturaigal
Ebook170 pages1 hour

Naiyandi Katturaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடித்தட்டு மக்கள் முதல் அரசியல் வாதிகள் வரை அவர்களின் ஊழல் குற்றங்களையும், வீரப்பனின் காட்டு வாழ்வையும் சிந்திக்கும் வகையில் நகைச்சுவை கலந்த விமர்சனத்தை... "துக்ளக் சத்யாவின்" படைப்புகளை நகைச்சுவையோடு வாசிக்க வாருங்கள்...

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580160109367
Naiyandi Katturaigal

Read more from Thuglak Sathya

Related to Naiyandi Katturaigal

Related ebooks

Related categories

Reviews for Naiyandi Katturaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naiyandi Katturaigal - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நையாண்டிக் கட்டுரைகள்

    Naiyandi Katturaigal

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஜஸ்ட் எ மினிட் ப்ளீஸ்...

    1. ஆட்டம் காணாத வர்ணனை

    2. விரைவில் வருகிறது வரலாறு

    3. விக்கிரமாதித்தன் தந்த விடை

    4. சபாநாயகரின் வருங்கால நடவடிக்கைகள்

    5. நடவடிக்கை நாடகத்தில் ஒரு கற்பனைக் காட்சி

    6. சக்தி வாய்ந்தது சட்டமன்றமா, நீதிமன்றமா?

    7. வீரபாண்டிய ஜெயலலிதாவும், ஜாக்ஸன் நரசிம்மராவும்

    8. பிரதமரின் பிரதிநிதிக்கு ஒரு சவால்

    9. சென்னை டி.வி.யில் ராமாயணம்

    10. ஒரு கொலை வழக்கு துப்பறியப்படுகிறது

    11. மதிப்பிற்குரிய பேரன்பு மிக்க வீரப்பரே

    12. கைதிகள் தப்பியது எப்படி?

    13. இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

    14. கேள்வியா கேட்கிறாய் கேள்வி?

    15. மேயர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் ஸ்டாலினா, சந்திரலேகாவா?

    16. சிக்கல் நிறைந்த கேள்விகளும், சிரிப்பு மிகுந்த பதில்களும்

    17. ஒரு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

    18. ஜெயலலிதாவை கருணாநிதி குறுக்கு விசாரணை செய்தால்...?

    19. ஆவிகளும் ஆளும் கட்சியும்

    20. சந்தனக் கடத்தல் வீரப்பனின் சிந்தனைத் துளிகள்

    முன்னுரை

    துக்ளக்லே நான் முதல்லே படிக்கிறது. சத்யா கட்டுரையைத்தான். அதைப் படிச்ச பிறகுதான் மத்தது...

    தனியா உக்காந்து படிச்சாகூட சிரிப்பா வருது... யாராவது எதாவது நினைக்கப் போறாங்களேன்னுகூட பயம் வரும்... அவ்வளவு பிரமாதமா சத்யா எழுதறார்...

    என்றெல்லாம் என்னிடம் என் உறவினர்களும், நண்பர்களும் கூறியிருக்கிறார்கள். சிலர் உன்னைவிட சத்யாதான் நல்லா எழுதறார் என்றும்கூட சொல்லியிருக்கிறார்கள். அரசியல் தலைவர்களும்கூட சத்யாவின் கட்டுரைகளை விரும்பிப் படித்து பெரிதும் ரசிக்கிறார்கள், இதை அவர்களே என்னிடம் கூறியிருக்கிறார்கள். இப்படி எல்லோர் பாராட்டையும் ஏகோபித்து பெற்றுள்ள சத்யாவின் நகைச்சுவைக் கட்டுரைகள், துக்ளக்கிற்கு பெரும் பலமாக இருந்து வருகின்றன.

    நகைச்சுவை எளிதில் அலுத்து விடக்கூடிய விஷயம் என்ற கருத்துடையவன் நான். அப்படிப்பட்ட சுவையை, சற்றும் அலுப்பு தட்டாத வகையில் சத்யா கையாள்வது, அவருடைய திறமையை எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும், வெவ்வேறான அணுகுமுறையை வகுத்துக்கொண்டு, தன்னுடைய எழுத்தின் சுவை குன்றாமல் பார்த்துக்கொள்கிறார் அவர்.

    சொல்லிக் கொடுத்தோ, பயிற்சியின் மூலமாகவோ வரக்கூடியது அல்ல, நகைச்சுவை எழுத்துத் திறன். இயல்பாகவே ஒருவருக்கு அது அமைந்திருந்தால்தான் உண்டு. சத்யாவிடம் இந்த திறன் அப்படி அமைந்திருப்பது, துக்ளக்கின் அதிர்ஷ்டம். அரசியல் நிகழ்ச்சிகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, அரசியல்வாதிகளின் உள் மன எண்ணங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய அணுகுமுறை விசேஷங்களைக் கவனத்தில் வைத்து, தன்னுடைய கட்டுரைகளில் கூர்மையான அரசியல் விமர்சனத்தையும், நகைச்சுவையையும் தருகிறார் சத்யா. இது சாதாரண காரியமல்ல. இந்தக் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெறுகிற ஒவ்வொரு கட்டுரையும், இதற்கெல்லாம் சான்று.

    சத்யாவின் நகைச்சுவைத் திறன் மேலும் வளர்வதற்கு அவரை வாழ்த்துகிறேன்.

    -சோ

    ஜஸ்ட் எ மினிட் ப்ளீஸ்...

    வணக்கம். 1980 முதல் தொடர்ந்து துக்ளக்கில் எழுதுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்து வருகிறது. பலர் எனது கட்டுரைகளை நகைச்சுவைக் கட்டுரைகள் என்று பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரையான ஆட்டம் காணாத வர்ணனை தான் துக்ளக்கிற்காக தான் எழுதிய முதல் கட்டுரை. அதைத் தொடர்ந்து மதிப்பிற்குரிய சோ. ஸார் அவர்கள் என்மீது நம்பிக்கை கொண்டு இன்று வரை பல அரசியல் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுத வாய்ப்பளித்து வருகிறார். அவரது ஆசியும் ஆதரவும் எனக்கு கிடைத்திருப்பதை என் வாழ்க்கையில் நான் பெற்றுள்ள மிகப்பெரிய பேராகவே கருதுகிறேன்.

    இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இருபது கட்டுரைகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை என்பதால், ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்திலும், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையைச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். கட்டுரையின் நகைச்சுவைப் போக்கை எளிதாகப் புரிந்துகொள்ள இக்குறிப்புகள் உதவும் என்று நம்புகிறேன்.

    பல ஆண்டுகளாக அரசியல் நடப்புகளை எனது பாணியில் நான் நையாண்டி செய்து வந்தபோதிலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்போடு எப்போதும் ஒருவரிகூட நான் எழுதியதில்லை.

    நான் எந்த அரசியல் கட்சியின் அனுதாபியும் அல்ல. ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நான் நகைச்சுவையுடன் விமர்சிக்கும் போது, இந்த மாநிலத்தின் நலனையும் மக்கள் நலனையும் மட்டுமே மனதில் கொண்டு எழுதுகிறேன். அதனால்தான் எனது விமர்சனம் பல அரசியல் கட்சிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.

    இப்படி கட்டுரைகள் எழுதிக் குவிப்பதன் மூலம் மாநிலத்துக்கும், மக்களுக்கும் பெரிய நன்மை விளைந்துவிடப்போகிறது என்றெல்லாம் நான் நினைத்துவிடவில்லை. அது இயலாது என்று தெரிந்தும் அந்த நோக்கத்தை கைவிடாமல் எழுதுவதையே நான் விரும்புகிறேன். இம்மாதிரி விருப்பு வெறுப்பின்றி விமர்சிக்கின்ற வாய்ப்பு எனக்கு சோ ஸார் அவர்களால் வழங்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

    அரசியலில் கொட்டிக்கிடக்கிற அளவு நகைச்சுவை வேறு எதிலுமே இல்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா என்கிற உதாரணம் இதற்குத்தான் நன்றாகப் பொருந்துகிறது. அரசியல் வேரில் பழுத்த பலாவாக நகைச்சுவை இருக்கையில் பலர் அதை ரசிக்கத் தெரியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமான நிலைதான். அரசியலில் மக்களுக்கு கிடைக்கிற ஒரே லாபம், அதனால் கிடைக்கும் நகைச்சுவைத்தான். அதையும் புறக்கணித்து விட்டால் எப்படி?

    அதிலும், தேர்தல் என்று வந்துவிட்டால், அரசியல் கட்சிகள் அடிக்கிற கூத்து கொஞ்சமா நஞ்சமா? குறிப்பாக கூட்டணி ஏற்படுத்திக்கொள்கிற சமயத்தில் அவை கருத்துக்களை வெளியிடுகிற அழகு சாதாரணமானதா?

    தனியாக நின்றால் எங்களால் 100 இடங்களில் ஜெயிக்க முடியும். ஆகவே 10 ஸீட்டாவது கொடுக்கிறவர்களுடன்தான் கூட்டு என்ற வீராவேசமான நகைச்சுவையை அரசியலைத் தவிர வேறு எங்கு பார்க்க முடியும்?

    3 தொகுதிகளை ஏற்பதா அல்லது தன்மானத்துடன் செயல்படுவதா என்பது குறித்து செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று அறிவிக்கும்போது அதில் உள்ள நகைச்சுவை உங்களுக்குப் புரியவில்லையா?

    8 இடம் கொடுக்காவிட்டால் அந்த ஊழல் அணியில் இடம்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று எவ்வளவு சீரியஸாகப் பேசுகிறார்கள்! அந்த நகைச்சுவையைக்கூட ரசிக்கத் தெரியாமல் இருப்பது முறையா?

    சாதாரணமாகவே, எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் சொல்லி வருகிற கருத்தை நகைச்சுவை கலக்காமல் சொல்வதே இல்லை. நாம்தான் ஒழுங்காக கவனிப்பதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் நகைச்சுவையை வாரி வழங்கத்தான் செய்கிறார்கள். ஓஹோ! ஏதோ முக்கியமான கருத்து சொல்கிறார் போலும் என்று நாம்தான் தவறாக நினைத்துவிடுகிறோம்.

    ஒரு உதாரணம் பார்ப்போமே. நான் 10-ம் தேதி டெல்லி செல்கிறேன் என்று சொல்ல நினைத்தால் எப்படிச் சொல்வார்கள்? யாரும் அதை நேரடியாகக் கூறுவதில்லை. அவர்களது கொள்கையைக் கலந்துதான் கூறுவார்கள். கலைஞர் கருணாநிதி அவர்கள் வருகிற 10-ம் நாள் ஒரு நன்னாள், அது மட்டுமல்ல. அது ஒரு பொன்னாள். அந்த நாளில், பெரியார் காட்டிய வழியில், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் நான் டெல்லி செல்கிறேன் என்பது போல கூறுவார். ஜெயலலிதா அவர்கள் 10-ம் தேதி, தமிழக மக்களை வாழ வைப்பதற்காக, நான் டெல்லி சென்று கருணாநிதியின் முகமூடியை கிழிக்கப்போகிறேன் என்பார். சுப்ரமண்யம் ஸ்வாமி, 10-ம் தேதி நான் டெல்லிக்குப்போய் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்துவிட்டு, சோனியாவை இத்தாலிக்கு அனுப்பப் போகிறேன் என்பார். மூப்பனாராக இருந்தால், 10-ம் தேதி டெல்லிக்குப் போறேன். ஏன் போறேன்னு கட்சிதான் சொல்லணும். எப்ப திரும்பி வருவேன்னு சோனியாவைத்தான் கேக்கணும் என்பதுபோல கூறுவார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை கடைப்பிடிக்கிறார்கள். அனைத்திலும் இருக்கிற நகைச்சுவையை விட்டுவிட்டு, அரசியலை சீரியஸாக எடுத்துக்கொள்பவர்களை நினைத்தால் எனக்கென்னவோ வருத்தம்தான் ஏற்படுகிறது.

    அதனால்தான், நான் அரசியலையும், அரசியல்வாதிகளையும், நகைச்சுவைப் பார்வையாலேயே விமர்சிப்பதை முழுநேரத் தொழிலாகத் தேர்ந்துக் கொண்டிருக்கிறேன்.

    எனவே, நகைச்சுவைப் பிரியர்களுக்கு நான் ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன். நகைச்சுவையைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும், பேச்சுக்களையும், பேட்டிகளையும் படித்தாலே போதும். அரசியல் அறிவுதான் வளராதே தவிர, நகைச்சுவை உணர்வு நன்றாக வளரும்.

    ஏராளமான அரசியல் நையாண்டிக் கட்டுரைகளை எழுத, தங்களது அரசியல் பேச்சுக்களின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும், எனக்கு விஷயதானம் செய்து வருகிற அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும், இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    சத்யா

    Enjoying the preview?
    Page 1 of 1