Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kann Simittalgal
Kann Simittalgal
Kann Simittalgal
Ebook132 pages44 minutes

Kann Simittalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரசனை என்பது ஒரு கலை, அது ஒரு சிலருக்கு கைவந்த கலை. ரசனை, ரசிகன் என்றால் திரைப்படங்களை மட்டும் குறிப்பது அல்ல ரசிப்பவர்களால்தான் கலைகள் மட்டுமல்ல பண்பாடே வளர்கிறது. கலைஞனைப் போல ரசிகர்களையும் வளர்க்க வேண்டும் ஏனெனில், ரசிகனும் ஒரு கலைஞன்தான் என்று அழகாகக் கூறியுள்ளார் சத்தியமூர்த்தி வாருங்கள் படிப்போம் கண் சிமிட்டும் நேரத்தில்...

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580145207992
Kann Simittalgal

Read more from S. Sathyamoorthy

Related to Kann Simittalgal

Related ebooks

Reviews for Kann Simittalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kann Simittalgal - S. Sathyamoorthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண் சிமிட்டல்கள்

    Kann Simittalgal

    Author:

    S.சத்யமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    கண் சிமிட்டல்கள்

    அறிஞர் யார்? மேதை யார்?

    அந்த நாள் ஞாபகம்...

    ஆவேசமான வீழ்ச்சி!

    பிளாஸ்டிக் பணம்

    எங்கே போனார் ராம்?

    உலகம் விசித்திரமானது!

    கலப்புத் திருமண ஆசை!

    கருவறையிலிருந்து கல்லறை வரை...

    எங்கும் சிறை... எல்லாம் சிறை...

    எவரெஸ்ட் கூடாரமா?

    ஆண்வர்க்கத்தை வறுத்தெடுத்தவர்!

    பருவகால இதழ்கள்...

    அமெரிக்கச் சிலம்பரசன்

    ஞான ராஜா!

    பதின்மூன்று வயதில் பட்டதாரி!

    மயக்கம் வருகிறதா?

    நதியாகிப் போன நீர்வீழ்ச்சி!

    தண்டவாளத்தில் பறக்கும் ரயில்!

    கிசுகிசுக்கள்

    தமிழனின் தனிக் குணம்...!

    ஈராக்கில் ஆண்களுக்குப் பஞ்சம்!

    இன்னொரு இம்ரான்...

    தலைநகரில் மகாகவி பாரதி

    முக்தசார் படுகொலை!

    பஞ்சப் பாட்டு பாடும் பட்ஜெட்!

    மானும் மாயமானும்...

    சரித்திரம் திரும்புகிறதா?

    இது நாகரிகமா?

    முதல் நான்கு இடங்களில் ஒன்று - ‘ஸ்பிக்’

    கோவை - பாரதி கனவு கண்ட நகரம்!

    கேள்விப் பட்டறை!

    இந்து மதம் அன்றே சொன்னது...

    ரன்தோம்பர்

    லீலாவின் லீலைகள்...

    அமெரிக்காவில் இரண்டு சுவையான வழக்குகள்...

    மகாத்மா காந்தி கிரிக்கெட் வீரரா?

    ஜோக் அடிப்பவரே பேச்சாளரா?

    ஏன் இந்த அவலம்?

    ARACHYBUTY ROPHOBIA...?

    அந்த 30 நாட்கள்

    சமர்ப்பணம்

    என் அழகிய பொமேரேனியன் நாய்க்குட்டிக்கு

    பூக்களைப் பறியுங்கள்

    போனவாரம் கொடைக்கானல் போயிருந்தேன். அங்கங்கே தொங்கும் ஓவியங்களாய் எத்தனை இறைவன் அளித்த வரங்கள்... அத்தனையும் ரசிக்க, நடந்தல்லவா செல்ல வேண்டும்! நான் ஆறு மணி நேரத்தில் கல்தூண் பாறை, தற்கொலைப் பள்ளத்தாக்கு, பூங்கா, ஏரி என்று எல்லாவற்றையும் கால்நடையாகவே சென்று தரிசித்தேன். ஆனால், ‘விர் விர்’ என்று கார்கள் பறக்கின்றன. கொடைக்கானலின் இதயத்தைக் கத்தியால் கீறுகின்றன. பலவித ஹாரன்கள்... நாராச ஒலிகள், அமைதியைக் கிழிக்கின்றன. அழகு அங்கே கசக்கப்படுகிறது. ஏரிகாத்த ராமன்போல, ஊட்டியைக் காத்த ஜெ., கொடைக்கானலையும் காப்பாற்றுவாரா? மதுரை மாநாடு ஒரு சந்தர்ப்பம்!

    ***

    கல்தூண் பாறையருகே உள்ள பூங்காவில் பூக்கள் பூத்துக் குலுங்கின. ஆனால் பூங்கா பூட்டிக் கிடந்தது. காதல் புகாத கன்னியின் மனம்போல! ஏன்? என்று கேட்டேன். உல்லாசப் பயணிகள் எல்லாப் பூக்களையும் பறித்து விடுகிறார்களாம். பரமார்த்த குரு கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. கையில் புண் என்றால், கையையே வெட்டுவதா?

    ஆமாம்; பூக்கைளைப் பறிக்கலாமா, கூடாதா? சமீபத்தில் கவியரசு வைரமுத்து தனது புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ‘இதனால் சகலமானவர்களுக்கும்...!’ என்று பெயர். அதில் மலர்களுக்காகத் தன் மனப்பேழையைத் திறந்திருக்கிறார். காதலைக் கொட்டியிருக்கிறார். பூக்களைக் குடும்பத்தோடு குசலம் விசாரிக்கச் சொல்கிறார். சில்லுச் சில்லாக வாழ்க்கை உடைந்து போனாலும், பூக்களைச் சிலுவையில் அறையாமல் இருக்கச் சொல்கிறார். சில மணி நேரங்களாவது பூக்களுடன் சிநேகம் பாராட்டச் சொல்கிறார். சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மலர்களை மறந்துவிட வேண்டாம் என்கிறார். பூக்கள் விற்பனைக்கல்ல; கற்பனைக்கே என்கிறார்!

    ‘மலர்களைக் கொடிகளின் மகுடங்கள்’ என்றார் கிப்ரான். ‘இயற்கை சிரித்தபோது எழுந்த மின்னல்களே மலர்கள் என்பேன் நான்.’ ஆனால், பூக்கள் பறிப்பதற்கல்ல என்ற கருத்து மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அது இங்கே விலை போகாது என்று நினைக்கிறேன். அங்கே மூன்று மாதங்களே வசந்தம்; இங்கே வருடம் முழுவதும் மலர்கள். அங்கே கூந்தலே கிடையாது. இங்கே ஆறடிக் கூந்தல் தாளடி தொட்டாலும் மல்லிகையும், முல்லையும், செவந்தியும், ரோஜாவும், காதலுக்கு இசை கூட்டுகின்றன. அங்கே அழகான மலர்கள் மட்டுமே. இங்கேயோ மலர்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் மட்டுமல்ல மனதுக்கும் ரம்மியமானவை; மணம் மிக்கவை. ஆகவே, ஷெல்லியும் ஷாவும் இங்கே செல்லுபடியாகமாட்டார்கள்.

    இந்தியப் பண்பாட்டில் அழகுகள் அத்தனையுமே ஆண்டவனைச் சுற்றி! சீதையும் ராதையும் காவியங்களும், ஓவியங்களும், பாட்டும் பரதமும் இறைவனைச் சுற்றியே. மலர்களும் அப்படியே! மனிதனின் பயன் சமூகசேவை என்றால், மலர்களின் பயன் இறைவன் சேவை அல்லவா? இதில் மேலை நாகரிகம் எப்படி நுழைய முடியும்?

    அதுமட்டுமா? அழகுகள் அத்தனையுமே புகுந்த வீட்டில்தானே விகசிக்கின்றன. இயற்கையில் இசைக்குக் காது, இளமைக்குக் காதல், தேனுக்கு நாக்கு, தென்றலுக்குத் தோப்பு, மழைக்குப் பூமி என்றால், மலருக்கு சாமி அல்லவா? பெண்மைகூட புகுந்த வீட்டில்தானே பிரகாசிக்கிறது?

    ஆகவே பூக்களைப் பறியுங்கள்! கடவுளுக்குச் சமர்ப்பியுங்கள்; காதலிக்குச் சூட்டுங்கள்.

    கண்காட்சி

    குளிர்காலத்தில் வெயிலில் இருப்பது ஓர் இதமான பொழுதுபோக்கு. அதற்கு ஏதுவாக டெல்லியில் வாரம் ஒரு கண்காட்சி நடந்த வண்ணம் இருக்கும். ஐந்தாறு வாரங்களுக்கு முன் கார் கண்காட்சி நடந்தது. கார் உருவாக்கப்பட்டு நூறு வருடங்கள் ஆனதையொட்டி நடந்த விழா இது. உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் முதல் கார் எங்கு வந்திருக்கலாம்? ‘சென்னையில்தான்’ என்கிறார் லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் மூர். அவர் எழுதியுள்ள பத்தகத்தில் ஸெபோலே (Serpollei) என்ற வண்டியைச் சென்னைக்கு அருகே பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அது போன நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது.

    பெருமையாக இல்லையா?

    ***

    இராம ஸ்வரூப் உளவு விவகாரம் இப்போது பத்திரிகைகளில் சூடான செய்தி. நாஞ்சில் மனோகரனும், இராசாராமும்கூட அறிக்கை விட்டுவிட்டார்கள். இது பற்றி திரு. மஸானி என்ன சொல்கிறார்? அவர் 1963ல் தைவான் போயிருந்தாராம்... இராம ஸ்வரூப் தயவில் அல்ல. அங்கே சியாங்-கே-ஷேக்கைச் சந்தித்ததாகவும்; அந்த விவரங்களை நேர்முகமாக நேருஜியிடம் விவரித்ததாகவும் சொல்கிறார். மறுநாளே நேருஜி, மஸானி தந்த விவரங்களை அயல்நாட்டு விவகார அமைச்சக அதிகாரிகளுடன் நல்ல முறையில் விவாதித்தாராம். மஸானி சொல்கிறார்: தைவானுக்குப் போவதோ, தைவான் நல்லபெயர் உண்டாக்கிக் கொள்ளத் தனி நபர்கள் மூலமாக முயல்வதோ தவறில்லை. லிபியாவும், அமெரிக்காவும் நேசஉறவு வைத்துக் கொள்ளாவிட்டால் கூட லிபியாவுக்காக அமெரிக்காவில் தனி ‘லாபி’யே இருக்கிறது. அதற்காகத் தனி நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். உறவு வளர்ப்பது வேறு; உளவு பார்ப்பது வேறு!" என்கிறார் மஸானி.

    ***

    மீரா நாயர் என்பவர்

    Enjoying the preview?
    Page 1 of 1