Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharatha Ula!
Bharatha Ula!
Bharatha Ula!
Ebook153 pages58 minutes

Bharatha Ula!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பயணங்கள் முடிவில்லாத தொடர். விடை தராத காதலி ஒருமுறை பூத்துவிட்டால் வாழ்க்கை முழுக்க வாசம் வீசும் மலர். இதய வீணையை சுண்டிவிட்டு ரீங்காரம் இழைக்கும் சுருதி.

பயண நாயகி உடன்வரத் துடிப்பாள். உலக நாயகி உங்களைத் தேடுவாள். தித்திக்கும் நினைவுகளை, தில்லானாக்களை அள்ளித் தருவாள்.

இது பயணக் கட்டுரை தொகுப்பல்ல. பாசக் கயிறுகளின் இணைப்பு. நான் 'விசிட்' செய்த நாடுகளும், நகரங்களும் உதிர்ந்த பாசம் தொகுப்பாகிறது. பாசக்கயிறுகள் இரத்தினக் கம்பளமாக விரிகிறது. நடந்து பாருங்களேன், நெகிழ்ச்சி தரும் நினைவுகள். அவற்றைச் சுவைத்தும் பாருங்களேன். சலித்துப் போகாது.

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580145208253
Bharatha Ula!

Read more from S. Sathyamoorthy

Related to Bharatha Ula!

Related ebooks

Reviews for Bharatha Ula!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bharatha Ula! - S. Sathyamoorthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாரத உலா!

    Bharatha Ula!

    Author:

    S.சத்யமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பாரத உலா

    2. ஹைதராபாத்

    3. பண்டர்பூர்

    4. உஜ்ஜயின்

    5. சோம்நாத்

    6. துவாரகை

    7. அபு

    (MOUNT ABU)

    8. ஜோத்பூர்

    9. ஸ்ரீநகர்

    10. டெல்லி

    11. லக்னௌ

    12. கௌஹாதி

    13. ஜான்ஸி

    14. காஞ்சிபுரம்

    15. தஞ்சாவூர்

    16. இராமேஸ்வரம்

    17. மங்களூர்

    18. இலட்சத் தீவுகள்

    19. இலண்டனில் ருக்மணி

    20. ஜப்பானில் ருக்மணி

    21. சிங்கப்பூரில் ருக்மணி

    22. ஜெருசலம்...

    முன்னுரை

    பயணங்கள் பலவிதம்... உலகப் பயணம், உல்லாசப் பயணம், உள்ளூர்ப் பயணம், திடீர்ப் பயணம், திருத்தலப் பயணம், சைக்கிள் பயணம், சாகசப் பயணம், விமானப் பயணம், வெளியூர்ப் பயணம், கப்பல் பயணம், காசிப் பயணம், காசில்லாப் பயணம்... என்று பல பயணங்கள்.

    வினோபா நடைப் பயணம் செய்தார். சில இளைஞர்கள் ஒரு ஐந்து ரூபாய் நோட்டோடு உலகப் பயணம் தொடங்குவார்கள். ஐரோப்பிய நாட்டு இளவரசியை மணந்த ஒரு பஞ்சாபிய இளைஞர், மனைவியைக் காண இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு இருசக்கர வாகனத்திலேயே சென்றார். வந்தவருக்கு ஏக ராஜமரியாதை. அனுமான் இலங்கைக்குச் சென்றது காசில்லாப் பயணம். இராமரும், ஏசுவும், புத்தரும், காலடி சங்கரரும், காஞ்சிப் பெரியவாளும் செய்தது காசில்லாப் பயணங்களே. அவ்வையாரும் அப்படியே.

    பயணங்களில் நாடுகளைக் காணலாம். நாகரிகங்களைக் காணலாம். சரித்திரங்களைத் தரிசிக்கலாம். விசித்திரங்களை வியக்கலாம். வன விலங்குகள் நம்மை வரவேற்கும்.

    வரலாற்று நாயகர்கள் சிலைகளாகி நம்மோடு கைகுலுக்குவார்கள். கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும். கர்ப்பக் கிருகங்கள் ஆசீர்வதிக்கும். கல் தூண்கள் கிசுகிசுக்கும்.

    கலைஞர்கள் மேடைகளில் மின்னலடிப்பார்கள். காதுகளில் சங்கீதம் இழையும். கவலைகள் மறந்து போகும். சொர்க்க வாசல்கள் திறந்து விடும்.

    தோளில் தட்டிக் கொடுத்து, நம்முள் உற்சாக ஊற்றைக் கிளறிவிடும் தந்தையைப் போல, ஆசானைப் போல, நண்பனைப் போல நாடுகளும், நகரங்களும் சம்பவங்களும் சந்திப்புகளும், பயணங்களும் பரிமாறல்களும் நம்முடைய கற்பனைக்குக் கற்பூரம் ஏற்றும். மகிழ்ச்சிக்கு சாமரம் வீசும். ஆகவே உங்கள் பயணம் உங்களுக்குள்ள உற்சாக ஊற்றை சுனையாகி, நதியாகி, கடலாகிப் போகும். பயணங்கள் நமக்கு நாமே தந்துவிடும் வெகுமதி.

    காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். நாடுகள் மாறலாம். நகரங்கள் மாறலாம். ஆனால் பயணங்கள் தவழ்ந்து வரும் குழந்தையைப் போல, தழுவிக்கொள்ளும் மனைவியைப் போல.

    கருத்தை, கற்பனையை, நினைவுகளை வருடிக்கொண்டே இருக்கும். முதல் பயணம் மட்டுமே சுமையாகத் தெரியும். நாட்களை நிர்ணயிப்பது, நாடுகளை உறுதி செய்வது, பணத்தைப் புரட்டுவது, பயணச்சீட்டு பெறுவது, விசா எடுப்பது, விடுதி தேர்ந்தெடுப்பது, விடுப்பு கேட்பது என்று பல முன்னுரைகள். அவ்வளவு சுமைகளும் முதல் பயணத்திற்கு மட்டுமே, முதல் பிரசவம் போல. பிறகு பரவசங்கள்தான் பிரசவ வலியைக் கிரகணமாக மறைத்து விடும்.

    பயணங்கள் முடிவில்லாத தொடர். விடை தராத காதலி ஒருமுறை பூத்துவிட்டால் வாழ்க்கை முழுக்க வாசம் வீசும் மலர். இதய வீணையை சுண்டிவிட்டு ரீங்காரம் இழைக்கும் சுருதி.

    பயண நாயகி உடன்வரத் துடிப்பாள். உலக நாயகி உங்களைத் தேடுவாள். தித்திக்கும் நினைவுகளை, தில்லானாக்களை அள்ளித் தருவாள்.

    இது பயணக் கட்டுரை தொகுப்பல்ல. பாசக் கயிறுகளின் இணைப்பு. நான் 'விசிட்' செய்த நாடுகளும், நகரங்களும் உதிர்ந்த பாசம் தொகுப்பாகிறது. பாசக்கயிறுகள் இரத்தினக் கம்பளமாக விரிகிறது. நடந்து பாருங்களேன், நெகிழ்ச்சி தரும் நினைவுகள். அவற்றைச் சுவைத்தும் பாருங்களேன். சலித்துப் போகாது.

    வணக்கங்கள் பல.

    - சத்தியமூர்த்தி

    1. பாரத உலா

    அயோத்யை, மிதிலை, துவாரகை, கிஷ்கிந்தை அத்தனையும் புராணங்களில் புகழப்பட்ட புண்ணிய பூமிகள்.

    மொஹஞ்சதாரோ, ஹரப்பா, நாளந்தா, கலிங்கா, கபிலவஸ்து சரித்திரத்தில் மினுமினுக்கும் பரல்கள்.

    அமிர்தசரஸ், அலகாபாத், வேதாரண்யம்,

    தூத்துக்குடி, நாமக்கல், புதுச்சேரி,

    ஆக்ரா, மீரட், கான்பூர்,

    ஜான்ஸி, மைசூர், சூரத்,

    வார்தா, சபர்மதி, நவகாளி...

    அத்தனையும் சுதந்திரப் போராட்டத்தில் சுடர்விட்ட ஜோதிகள். ஆங்கிலேயரை விரட்டுவதில் ஆர்வம்காட்டிய நகரங்கள். அனல் மணக்கும் பூக்கள்.

    திப்பு சுல்தான் முதல் திலகர் வரை, ஜான்ஸி முதல் காந்தி வரை நேதாஜி முதல் நேரு வரை வெள்ளையனை வெளியேற்றுவதில் வீரம் காட்டிய நகரங்கள். திப்புவினால் மைசூர் பெயர் பெற்றது. அரவிந்தரால், பாரதியால் புதுச்சேரி பொலிவு பெற்றது. இருபதே வயது இளம் கன்னி இலக்குமிபாயின் வீர சாகசங்களால் ஜான்ஸி பெருமை பெற்றது. கப்பலோட்டிய தமிழன் சிதம்பரத்தினால் தூத்துக்குடி சிறப்புப் பெற்றது.

    கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று பாடிய கவிஞரால் நாமக்கல் புகழ் பெற்றது. உப்பு சத்தியாகிரகத்தால் வேதாரண்யம் உயிர் பெற்றது. கான்பூர், மீரட், ஆக்ரா, டெல்லி... 1857ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தில் தீக்குளித்தன. புடம்போட்ட பொன்னாய்ப் புகழ்பெற்றன. இப்படிப் புகழ்பெற்ற நகரங்களிடையே குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிப்பவை அமிர்தசரஸ், சபர்மதி, நவகாளி... அவற்றைச் சற்றே எட்டிப் பார்க்கலாமா?

    அமிர்தசரஸ்... பஞ்சாபியரின் பாசறை, சீக்கியரின் குருத்தலம். பொற்கோயிலின் இருப்பிடம். சுதந்திரத் தீயின் பிறப்பிடம்.

    நவம்பர் 1918 முதல் உலகப் போர் முடிந்தது. நான்கே மாதங்களில் ரௌலட் சட்டம் ஜனித்தது. வெள்ளையர் ஆட்சி இந்தியருக்கு வாய்ப்பூட்டு இட்டது. தனிமனித சுதந்திரங்கள் பறிபோயின. சென்னையில் இருந்த காந்திக்கு மின்னலாக ஒரு யோசனை. அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை முறை. ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை. இது ஏழை நாட்டுக்கு ஏற்ற போராட்டத் தளவாடங்கள் என்று நினைத்தார்.

    ஏப்ரல் 1919 புது வருடம் பிறந்தது. காந்தி மூன்று நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். நாடு கொந்தளித்தது. சரித்திரம் கொப்பளித்தது. அமிர்தசரஸில் அதற்குள் இரண்டு ஹர்தால்கள். ஏப்ரல் 13ந் தேதி மாலை நாலரை மணி... 20,000 மக்கள் ஜாலியன்வாலாபாக் திடலில் திரண்டனர். சதுரமான திடல். நான்கு புறமும் வீடுகள், சுவர்கள். இரண்டு நுழைவாயில்கள். மேட்டுப்பாங்கான நிலம். அங்கே வேட்டுவனாக ஜெனரல் டயர். நூறு சிப்பாய்கள். இரண்டு இராணுவ வண்டிகள் கூட்டத்தைக் கலையச் சொல்லாமலே குண்டு மழை பொழிந்தான். 1650 தோட்டாக்கள். 1157 பேர்கள் காயமடைந்தனர். 359 நபர்கள் உயிர் இழந்தனர். அதாவது 1650 தோட்டாக்களுக்கு 1516 பேர்கள் இலக்கு. குண்டுகள் வீணடிக்காத திறமையான ஜெனரல்... அன்றைய தோட்டாத்தரணி. 'சட்டத்தைப் புட்டிப்பாலாகப் புகட்டவே தோட்டாக்களை வெடித்தேன்' என்றான் டயர். அமிர்தசரஸில் அன்று சிந்திய ரத்தம் இன்று இந்தியாவின் சுதந்திரம்.

    1929... கல்கத்தா காங்கிரஸ் சுதந்திரப் பிரகடனம் செய்யத் துடித்தது. உள்நாட்டுப் போர் வெடித்து விடுமோ என்று காந்தி பயந்தார். ஒரு வருடம் அவகாசம் கேட்டார். அதற்குள் வட்டமேசை மாநாட்டை பிரிட்டன் கூட்டியது. காந்தி, வைஸ்ராய் இர்வினுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார்.

    உங்களுடைய மாத சம்பளம் 21,000 ரூபாய். அதாவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 700 ரூபாய். ஏழை இந்தியனின் தினக்கூலி 2 அணா. அவனைவிட கிட்டதட்ட 6000 முறை அதிகம் சம்பாதிக்கிறீர்கள். பிரிட்டிஷ் பிரதமரோ பிரிட்டிஷ் பிரஜையைவிட 90 மடங்குதான் அதிகம் சம்பாதிக்கிறார். ஆக இந்தியாவைச் சுரண்டாதீர்கள். ஓடி விடுங்கள். உங்கள் மனது மாற பத்து நாள் அவகாசம். அதற்குப் பின் உப்பு சத்தியாக்கிரகம் என்றார். இந்தக் கடிதம் சபர்மதி ஆசிரமத்திலிருந்து சென்றது. சபர்மதி, அகமதாபாத்தில் உள்ளது.

    ஜனவரி 18ந் தேதி... கவியரசு டாகூர், காந்தியைக் காண சபர்மதிக்கு வந்தார். அடிமை ஆட்சியை அகற்றுவது எப்படி? என்று கேட்டார்.

    இருட்டறையில் ஒளி வீச்சுக்காகக் காத்திருக்கிறேன் என்றார் காந்தி.

    உப்பு சத்தியாக்கிரகம் முதல்முறையாக இந்தியாவை ஒருங்கிணைத்தது. சபர்மதியிலிருந்து தண்டி நடைப்பயணம். 61 வயது காந்தியுடன் 78 தொண்டர்கள். 24 நாட்களில் 400 கிலோ மீட்டர்கள் நடந்தார்கள். காந்தி அண்ணல் எடுத்த ஒரு பிடி உப்பு 1600 ரூபாய்க்கு ஏலம் போனது.

    மே மாதம் முதல் வாரம் சூரத்தில் தர்ஸானா உப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1