Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2
Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2
Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2
Ebook190 pages1 hour

Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலங்கை பற்றியும் அங்குள்ள கோவில்களைப் பற்றியும் லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாயிலாகக் கேட்டவுடன் அந்த நாட்டிற்குப் போகவேண்டும் என்று பல ஆண்டுகளாக எண்ணி வந்தேன். ஆயினும் அங்கு நடந்த இனப்பூசல்கள் பற்றியும் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றியும் நண்பர்கள் எச்சரித்தனர். பின்னர் எல்லாம் ஆடி , அடிபட்டு விழுந்தவுடன், ஓரளவுக்கு அமைதி திரும்பியவுடன், 2023 செப்டம்பரில் தைரியமாக டிக்கெட் வாங்கினேன் ; கொழுப்பு நகருக்கு கிடைத்தது; யாழ்ப்பாணத்துக்கு கிடைக்கவில்லை ; முதலில் வந்ததை வரவில் வைப்போம் சென்றதைச் செலவில் வைப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் கொழும்பு நகரில் இறங்கினேன் ; முன்பின் அறியாத, டெலிபோனில் மட்டுமே கதைத்த, அடையபலம் விஸ்வநாதன் அவர்கள் நான் அங்கு தங்கிய ஐந்து நாட்களிலும் பேருதவி புரிந்தார். அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய லண்டன் நண்பர் வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

கொழும்பு நகரிலுள்ள முக்கியக் கோவில்களுக்கும் , திருகோணமலை , கதிர்காமம், அனுராதபுரம் , முன்னேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கும் புத்த விஹாரங்களுக்கும், மியூசியங்களுக்கும் மட்டுமே செல்ல முடிந்தது.

Languageதமிழ்
Release dateMar 11, 2024
ISBN6580153510735
Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2

Read more from London Swaminathan

Related to Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2

Related ebooks

Related categories

Reviews for Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2 - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் - பாகம் 2

    Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    26. மறைந்து போன சிவன் கோவில்கள்

    27. வரதராஜ பெருமாள் கோவில்கள்

    28. திமிலைத் தீவு விஷ்ணு, வல்லிபுர ஆழ்வார் கோவில்கள்

    29. தெஹிவளை விஷ்ணு விஷ்ணு ஆலயம், கொழும்பு

    30. சீரணி நாகபூஷணி கோவில்

    31. நயினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவில்

    32. பொலன்னறுவையில் 16 கோவில்கள்

    33. சித்திர வேலாயுத சுவாமி கோவில்

    34. திருக்கோவில்

    35. போர தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவில்

    36. பொலிகண்டி கந்தவன கடவை கந்தசாமி கோவில்

    37. சிவ சுப்பிரமணியசாமி கோவில்

    38. அற்புதம் நடத்திய சிவகாமி அம்மன்

    39. மீனாட்சி அம்மன் கோவில்கள்

    40. காளி கோவில்கள்

    41. முத்துமாரி அம்மன் ஆலயங்கள்

    42. கோப்பாய் முத்துமாரி

    43. திரவுபதி அம்மன் கோவில்

    44. கண்ணகி கோவில்கள்

    45. ஐயனார் கோவில்கள்

    46. இலங்கையில் 52 ராமாயண தலங்கள்; நாகர்கோவில் கப்பல் விழா

    47. சீதாதேவி கோவில்; அனுமார் மலை; ராமாயண தலங்கள்

    48. ராவணன் குகை:

    49. ராவணன் விமான நிலையம்:

    50. லட்சுமணன் கோவில்:இலங்கைத் தீவின்108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்-

    51. இலங்கையில் பிராமணர் ஆட்சி – PART 1

    52. இலங்கையில் பிராமணர் ஆட்சி – Part 2

    53. ஆரிய சக்கரவர்த்திகள்: இலங்கையில் பிராமணர் ஆட்சி-Part 3

    54. கொழும்பு மியூசியத்தில் இந்துசமயம்

    55. விண்வெளி, அயல் கிரகவாசிகள் பற்றி இலங்கைத் தமிழ் அறிஞருடன் விவாதம்

    56. இலங்கையில் செட்டியார்கள் கட்டிய கோவில்கள்

    முன்னுரை

    இலங்கை பற்றியும் அங்குள்ள கோவில்களைப் பற்றியும் லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாயிலாகக் கேட்டவுடன் அந்த நாட்டிற்குப் போகவேண்டும் என்று பல ஆண்டுகளாக எண்ணி வந்தேன். ஆயினும் அங்கு நடந்த இனப்பூசல்கள் பற்றியும் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றியும் நண்பர்கள் எச்சரித்தனர். பின்னர் எல்லாம் ஆடி, அடிபட்டு விழுந்தவுடன், ஓரளவுக்கு அமைதி திரும்பியவுடன், 2023 செப்டம்பரில் தைரியமாக டிக்கெட் வாங்கினேன்; கொழுப்பு நகருக்கு கிடைத்தது; யாழ்ப்பாணத்துக்கு கிடைக்கவில்லை; முதலில் வந்ததை வரவில் வைப்போம் சென்றதைச் செலவில் வைப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் கொழும்பு நகரில் இறங்கினேன்; முன்பின் அறியாத, டெலிபோனில் மட்டுமே கதைத்த, அடையபலம் விஸ்வநாதன் அவர்கள் நான் அங்கு தங்கிய ஐந்து நாட்களிலும் பேருதவி புரிந்தார். அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய லண்டன் நண்பர் வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    கொழும்பு நகரிலுள்ள முக்கியக் கோவில்களுக்கும், திருகோணமலை, கதிர்காமம், அனுராதபுரம், முன்னேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கும் புத்த விஹாரங்களுக்கும், மியூசியங்களுக்கும் மட்டுமே செல்ல முடிந்தது. ஏனைய விஷயங்களை யு ட்யூப் YOU TUBE மூலம் பார்த்து அறிந்த பின்னரே எழுதத் துவங்கினேன். எதையும் பார்க்காமல் எழுதக் கூடாது என்பது என்னுடைய கொள்கை.

    இலங்கையிலுள்ள 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள் என்று தலைப்பிட்டு எழுதத் துவங்கிய பின்னர்தான் தெரிந்தது இது 108-ல் முடியக்கூடிய காரியம் இல்லை என்பது. ஆயினும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டேன்.

    புகழ்பெற்ற தமிழ் அறிஞர் கம்ப வாரிதி ஜெயராஜ் அவர்களைச் சந்தித்து அளவளாவும் அரிய வாய்ப்பும் கிட்டியதில் பெரு மகிழ்ச்சி.

    இன்னும் எழுத எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. நேரம் கிடைக்கையில் அதையும் செய்து முடிக்க ஆசை; எல்லாம் கதிர்காமக் கந்தன், சுவாமிமலை சுவாமிநாதன் அருளைப் பொருத்தே உளது நன்றி; புத்தகத்தைப் படிக்கத் துவங்குங்கள்.

    லண்டன் சுவாமிநாதன், February 2024

    Swami_48@yahoo.com

    Swaminathan.santanam@gmail.com

    26. மறைந்து போன சிவன் கோவில்கள்

    Post No. 12,583

    Date uploaded in London – – – 13 October, 2023

    இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் - Part 26

    54.மறைந்து போன சிவன் கோவில்கள்

    இலங்கைத் தீவில் மறைந்துபோன, அழிந்துபோன, காணாமற் போன சிவன் கோவில்கள் பற்றிய விவரங்கள் பிள்ளையாய் கல்வெட்டுகளிலிருந்தும் நூல்களிலிருந்தும் கிடைக்கின்றன. மேலும் பல இடங்களில் சிவன் தொடர்பான சின்னங்கள் கிடைக்கின்றன. சிதைந்து போன ஆவுடையார், கோவில் தூண்கள் ஆகியன பற்றி பல இடங்களிலிருந்த்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    புத்த மதம், ஒரு மதம் மாற்றும் மதம். (proselytizing religion); அதாவது இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் முன்னரே தங்கள் மதத்திற்க்கு வாருங்கள் என்று இந்துக்களை அழைத்த மதம்... அது மட்டுமல்ல ராமாயண மஹாபாரத, பஞ்ச தந்திரக் கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதகக்கதைகளில் இணைத்து ஒவ்வொன்றிலும் போதிசத்துவர் என்னும் கதா பாத்திரத்தை நுழைத்த மதம்; அதாவது புத்தர், முன் ஜென்மத்தில், போதிசத்துவராக இருந்தார் என்று சொல்லி இந்து மதத்தைக் கபளீகரம் செய்ய புத்த சந்யாசிகள்/ பிட்சுக்கள் முயற்சி செய்தனர். புத்தருக்கும் இந்த வேலைகளுக்கும் சம்பந்த மில்லை. அவர் இறந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இதெல்லாம் நடந்தது.

    அசோகரும் இந்த வேலையில் இறங்கி தன்னுடைய மகள் சங்க மித்திரையையும், மகன் மஹேந்திரனையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரிஸ்ஸா (கலிங்கம்) மாநிலத்தில் வசித்த ஜெயதேவர், புத்த பிட்சுக்கள் செய்ததையே செய்து பவுத்த மதத்தை சுவாஹா செய்தார். அதாவது புத்தரும் விஷ் ணுவின் அவதாரம் என்று சொல்லி கீத கோவிந்தம் என்னும் நூலில் பாடிவைத்தார். இன்றும் கூட தமிழ் நாட்டில் எல்லா பஜனைகளிலும் பாடும் அஷ்டபதியில் இதைக் கேட்கிறோம். அத்தோடு தென் இந்தியாவில் புத்த மதத்துக்கு முடிவு கட்டப்பட்டது.

    இப்போது கிறிஸ்த மதத்தினரும் கர்நாடக சங்கீதப் பாடகிக ளுக்கு காசு கொடுத்து மும்மூர்த்திகள் எழுதிய கிருதிகளில் ஏசுவின் பெயரை நுழைத்ததையும் அதை இந்துக்கள் கடுமையாக எதிர்த்ததையும் பத்திரிகைகளில் படிக்கிறோம். அந்த பாடகிகளுக்கும் தமிழர்கள் முடிவு கட்டிவிடனர். இந்த வேலையை முதலில் துவக்கியது, 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாதகக்கதைகளை எழுகிய புத்த பிட்சுக்கள்தான்.560 ஜாதகக்கதைகள் நமக்கு பாலி மொழியில் கிடைத்துள்ளன... இப்படிக் கதை எழுதியவர்கள், ஒரு பகுதியில் மதம் மாறியவர்கள் அதிகமானவுடன் பழைய இந்துக்கோவில்களில் புத்தர் சிலையை வைத்தனர். பெரும்பாலும் பக்தர்கள் இல்லாததால் தாமாகவே பாழடைந்து போயின. இதற்குப் பின்னர் போர்ச்சுகல், ஹாலந்து நாட்டிலிருந்து வந்த மத வெறியர்கள் கோவில்களைத் தரைமட்டமாக்கி சர்ச் CHURCH கட்டியதை அவர்களே எழுதி வைத்த நூல்களிலிருந்து அறிகிறோம்.

    இது தவிர தமிழர்களே கோவில்களை அழித்த வரலாறும் உண்டு. உலக சரித்திரத்தைப் படிப்போருக்கு ஒரு அதிசய உண்மை கிடைக்கும். தமிழினம்தான் உலகில் நீண்ட காலத்துக்கு ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டு செத்த இனம். அதாவது 1500 ஆண்டுகளுக்கு சேர சோழ பாண்டியர்கள் ஒருவனை ஒருவன் அடித்து, அழித்த செய்திகளை சங்க இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் காண்கிறோம். அந்தக் காலத்தில் கோவில்கள் என்பது இன்று காணப்படும் பிரம்மாண்ட கோபுரங்கள் உடையவை அல்ல. அப்பர் தேவாரத்தில் 7 வகைகைக் கோவில்களைக் குறிப்பிடுகிறார்... ஒரு தலை நகரை வென்று, அந்த ஊரை தீக்கிரையாக்கி கழுதையைக் கொண்டு உழுதனர் என்பதை புறநானூற்றுப் பாடலிலும் ஒரிஸ்ஸாவிலுள்ள ஹத்திக்கும்பா குகைக் கல்வெட்டுகளிலும் படிக்கிறோம். அது கி.மு 130ல் ஆண்ட காரவேலனின் கல்வெட்டு. அவன் பாண்டிய நாடு வரை படையெடுத்து வந்து பாண்டியனிடம் முத்துக்களைக் கப்பமாகப் பெற்றான். இவை எல்லாம் போக, பெரிய மழை, வெள்ளத்திலும் பல கோவில்கள் அழிந்தன.

    இதற்கும் மேலாக வறட்சி ஏற்பட்டால் ஊரே காலியாகி மக்கள் இடம்பெயர்ந்து போனார்கள். தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியம் முழுவதிலும் அடிக்கடி வரும் வாசகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி ஆகும். இதை 12 ஆண்டு நீண்ட வறட்சி என்றும் சொல்லலாம். அப்படி ஏற்படும்போது மக்கள் வெளியேறியதால் கோவில்கள் பாழடைந்து போயின.

    இன்ன பல காரண ங்களால் இலங்கைத் தீவில் அழிந்த கோவில்களின் பட்டியல் நமக்கு கிடைக்கிறது.

    மறைந்துபோன சிவன் கோவில்களில் மிக முக்கிய மானது பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரம் சிவன் கோவில் ஆகும்

    தொண்டீஸ்வரம்

    இலங்கைத் தீவில் வந்து குடியேறிய விஜயன் தீவிர சைவன். அவனுக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னரே புத்த மதம் இலங்கையில் காலெடுத்துவைத்தது. விஜயன் இலங்கைத் தீவின் நால் திசைகளையும் காக்க 4 சிவ கோவில்களை கட்டினான் ஆயினும் தொண்டீஸ்வரம் என்ற ஐந்தாவது இடத்தை யாழ்ப்பாண வைபவ மாலை மற்றும் இலங்கை வரலாற்றறை எழுதிய பால் பியரிஸ் குறிப்பிடுகின்றனர். இன்று வரை தொண்டீஸ்வரம் பற்றி ஊகங்களே உள்ளன. புகழ்பெற்ற அந்த சிவாலயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்துக்களில் ஒரு இன்டியானா ஜோன்ஸ் INDIANA JONES தோன்றினாதான் அதைக் கண்டு பிடிக்க முடியும்!

    ஜம்புகோளம், சம்புத்துறை,சம்பேஸ்வரம்

    தமிழில் கோவளம், கோவலம் என்று ஒரு சொல் உண்டு.இதற்கு 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி தரும் பொருள் கடலுக்குள் நீண்ட தரைப் பகுதி; கடலில் முனையில் இருக்கும் பட்டினம் என்பதாகும். தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகிலும், கேரளத்தில் திருவந்தபுரத்துக்கு அருகிலும் யாழ்ப்பாணத்தில் குறைந்தது மூன்று இடங்களிலும் கடற்கரைப் பகுதிகளில் கோவளம் இருப்பதை நாம் அறிவோம். பருத்தித்துறை அருகில் கல் கோவளம், கீரிமலைக்கு மேற்கே சம்பு கோவளம், காரை நகரில் ஒரு கோவளம் என்று பட்டியல் நீளும்.

    இலங்கையில் இப்போது ஜம்புகோளம் என்ற் இடம் உள்ளது; இதுவும் கோவளம் என்பதன் திரிபே. இந்தியாவுக்கு நாவலந்தீவு / ஜம்புத் வீபம் என்றும் பெயர். இதன் அருகில் இருந்ததால் ஜம்புகோளம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் அல்லது நாவல் மரம் நிறைந்த கடலில் நீண்டிருக்கும் முனை என்றும் பொருள் இருந்திருக்கலாம். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தில்தான் அசோக மாமன்னனின் மகள் சங்க மித்ரா, பெரிய, புனித அரச மரத்தின் கிளையுடன் வந்து இறங்கினாள்.

    இந்த இடத்துக்கு சிலர், வேறு விளக்கமும் தருவார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1