Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1
Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1
Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1
Ebook178 pages1 hour

Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலங்கை பற்றியும் அங்குள்ள கோவில்களைப் பற்றியும் லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாயிலாகக் கேட்டவுடன் அந்த நாட்டிற்குப் போகவேண்டும் என்று பல ஆண்டுகளாக எண்ணி வந்தேன். ஆயினும் அங்கு நடந்த இனப்பூசல்கள் பற்றியும் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றியும் நண்பர்கள் எச்சரித்தனர். பின்னர் எல்லாம் ஆடி , அடிபட்டு விழுந்தவுடன், ஓரளவுக்கு அமைதி திரும்பியவுடன், 2023 செப்டம்பரில் தைரியமாக டிக்கெட் வாங்கினேன் ; கொழுப்பு நகருக்கு கிடைத்தது; யாழ்ப்பாணத்துக்கு கிடைக்கவில்லை ; முதலில் வந்ததை வரவில் வைப்போம் சென்றதைச் செலவில் வைப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் கொழும்பு நகரில் இறங்கினேன் ; முன்பின் அறியாத, டெலிபோனில் மட்டுமே கதைத்த, அடையபலம் விஸ்வநாதன் அவர்கள் நான் அங்கு தங்கிய ஐந்து நாட்களிலும் பேருதவி புரிந்தார். அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய லண்டன் நண்பர் வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

கொழும்பு நகரிலுள்ள முக்கியக் கோவில்களுக்கும் , திருகோணமலை , கதிர்காமம், அனுராதபுரம் , முன்னேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கும் புத்த விஹாரங்களுக்கும், மியூசியங்களுக்கும் மட்டுமே செல்ல முடிந்தது.

Languageதமிழ்
Release dateMar 11, 2024
ISBN6580153510734
Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1

Read more from London Swaminathan

Related to Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1

Related ebooks

Related categories

Reviews for Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1 - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் - பாகம் 1

    Ilangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. கொழும்பு நகர கோவில்கள்

    2. கொழும்பு நகர பெளத்த விகாரங்கள்

    3. முன்னேஸ்வரம் கோவில்

    4. முன்னேஸ்வர வட்டாரக் கோவில்கள்

    5. கதிர்காமம் முருகன் கோவில்

    6. திருகோண மலை & கன்னியா வெந்நீர் ஊற்றுகள்

    7. அனுராதபுரம் தூபியில் தங்கத் தகடுகளில் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள்!

    8. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்

    9. திருக்கேதீஸ்வரம்

    10. நகுலேஸ்வரம் கோவில்

    11 கண்டி புத்தர் பல் கோவில்

    12. மாவிட்டபுரம் கோவில்

    13. நல்லூர் கயிலாய நாத பிள்ளையார் கோவில்

    14. பிள்ளையார் கோவில்கள்

    15 கருணாகர பிள்ளையார் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்

    16 மருதடி பிள்ளையார்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்

    17. முறிகண்டி பிள்ளையார் கோவில்

    18. முழங்காவில், மாமாங்க ஈஸ்வர பிள்ளையார் ஆலயங்கள்

    19 சண்டிலிப்பாய் கல்வளை, உரும்பிராய், ஓமந்தை, அரியாலை பிள்ளையார் கோவில்கள்

    20. வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில்

    21. வட்டுக்கோட்டை கண்ணகி கோவில்

    22. பனங்காமம் சிவன் கோவில்

    23. மட்டக்களப்பில் அதிசய சிவன் கோவில்

    24. கிளிநொச்சி உருத்திரபுரி ஈஸ்வரன் கோவில்

    25. நுவரெலியா சிவன் கோவில்

    முன்னுரை

    இலங்கை பற்றியும் அங்குள்ள கோவில்களைப் பற்றியும் லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாயிலாகக் கேட்டவுடன் அந்த நாட்டிற்குப் போகவேண்டும் என்று பல ஆண்டுகளாக எண்ணி வந்தேன். ஆயினும் அங்கு நடந்த இனப்பூசல்கள் பற்றியும் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றியும் நண்பர்கள் எச்சரித்தனர். பின்னர் எல்லாம் ஆடி, அடிபட்டு விழுந்தவுடன், ஓரளவுக்கு அமைதி திரும்பியவுடன், 2023 செப்டம்பரில் தைரியமாக டிக்கெட் வாங்கினேன் ; கொழுப்பு நகருக்கு கிடைத்தது; யாழ்ப்பாணத்துக்கு கிடைக்கவில்லை ; முதலில் வந்ததை வரவில் வைப்போம் சென்றதைச் செலவில் வைப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் கொழும்பு நகரில் இறங்கினேன் ; முன்பின் அறியாத, டெலிபோனில் மட்டுமே கதைத்த, அடையபலம் விஸ்வநாதன் அவர்கள் நான் அங்கு தங்கிய ஐந்து நாட்களிலும் பேருதவி புரிந்தார். அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய லண்டன் நண்பர் வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    கொழும்பு நகரிலுள்ள முக்கியக் கோவில்களுக்கும், திருகோணமலை, கதிர்காமம், அனுராதபுரம், முன்னேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கும் புத்த விஹாரங்களுக்கும், மியூசியங்களுக்கும் மட்டுமே செல்ல முடிந்தது. ஏனைய விஷயங்களை யு ட்யூப் YOU TUBE மூலம் பார்த்து அறிந்த பின்னரே எழுதத் துவங்கினேன். எதையும் பார்க்காமல் எழுதக் கூடாது என்பது என்னுடைய கொள்கை.

    இலங்கையிலுள்ள 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள் என்று தலைப்பிட்டு எழுதத் துவங்கிய பின்னர்தான் தெரிந்தது இது 108-ல் முடியக்கூடிய காரியம் இல்லை என்பது. ஆயினும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டேன்.

    புகழ்பெற்ற தமிழ் அறிஞர் கம்ப வாரிதி ஜெயராஜ் அவர்களைச் சந்தித்து அளவளாவும் அரிய வாய்ப்பும் கிட்டியதில் பெரு மகிழ்ச்சி.

    இன்னும் எழுத எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. நேரம் கிடைக்கையில் அதையும் செய்து முடிக்க ஆசை; எல்லாம் கதிர்காமக் கந்தன், சுவாமிமலை சுவாமிநாதன் அருளைப் பொருத்தே உளது நன்றி; புத்தகத்தைப் படிக்கத் துவங்குங்கள்

    லண்டன் சுவாமிநாதன், February 2024

    Swami_48@yahoo.com

    Swaminathan.santanam@gmail.com

    1. கொழும்பு நகர கோவில்கள்

    Post No. 12,494

    Date uploaded in London – 17 September, 2023

    இலவச இலங்கைச் சுற்றுப்பயணம்

    மஹாராஷ்டிரா மாநிலத்தின் 108 புகழ் பெற்ற இந்துக் கோவில்கள் என்ற கட்டுரைத் தொகுப்பும், கர்நாடக மாநிலத்தின் 108 புகழ் பெற்ற இந்துக் கோவில்கள் என்ற கட்டுரைத் தொகுப்பும் இந்த பிளாக்கில் ஏற்கனவே வெளியாகின. அவை இரண்டும் புத்தகங்களாக வெளி வருகின்றன. அதே ஜோரில் ஆந்திரம், கேரளம் பற்றி எழுதுவதற்காக குறிப்புகளை எடுக்கும் தருணத்தில் செப்டம்பர் 2023-ல் இலங்கைத் தீவுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதனால் முதலில் இலங்கைத் தீவில் உள்ள 108 புகழ் பெற்ற இந்துக் கோவில்கள் பற்றி எழுதிவிட்டு, பின்னர் ஆந்திரம், கேரளம் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

    இதோ முதல் கட்டுரை

    கர்நாடகம் பற்றி எழுதியபோது அங்குள்ள முக்கிய சமணர் கோவில்களையும் சேர்த்துக்கொண்டேன். ஏனெனில் அவைகளுக்கு இந்துக்களும் செல்கின்றனர். அதே போல சமணர்களும் இந்துக் கோவில்களுக்கு வந்து பய பக்தியுடன் தரிசனம் செய்கின்றனர். அதே போல இலங்கையிலும் சிங்களர்கள், தமிழர்கள் என்ற வேறுபாடின்றி, இந்துக்கள், பெளத்தர்கள் என்ற வேறுபாடின்றி எல்லோரும் கோவில்களுக்கும் பெளத்த விஹாரங்களுக்கும் விஜயம் செய்கின்றனர். இதற்கு பெரிய உதாரணம் கதிர்காமம் முருகன் ஆலயம். கொழும்பிலுள்ள பிரபல பெளத்த வழிபாட்டுத்த தலங்களிலும் கூடப் பிள்ளையாரையும் முருகனையும் தரிசித்தேன். கதிர்காமத்தில் கிறிஸ்தவ, முஸ்லீம் வழிபாட்டு இடங்களும் அண்மைக்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன...

    கொழும்பு முருகன் கோவில்

    இனி வரும் நாட்களில்...

    கதிர்காம முருகன் கோவில்

    தெய்வந்துறை கோவில்

    முன்னேஸ்வரம் கோவில், சிலாவம்

    சீதை தொடர்புள்ள புனிதத் தலங்கள்:-

    அசோகவனம்

    ராவணன் மனைவியின் ஊர் மாந்தை

    திருக்கேதீஸ்வரம் கோவில்

    இலங்கையின் பழைய தலைநகர் அநுராதபுரம்

    மிஹிந்தலை

    தம்புல்ல குகைக் கோயில்

    சிகிரியா குகை ஓவியம்

    பொலன்னருவ

    கல்விகாரை

    மின்னேரி

    ஸ்ரீபாதமலை (சிவனொளி பாதம் )7353 அடி உயரம்-

    எல்லா மதத்தினரும் வணங்கும் மலை.

    இரத்தினபுரி

    கண்டி திருவிழா

    தாலத மாளிகை/ புத்தர் பல் கோவில்

    அமிர்தகழி

    கொக்கட்டுச்சோலை

    திருக்கோயில்

    கல் ஓயா- கல் முனை

    கண்ணகி வழிபாடு

    திருகோணமலை கோவில்

    கன்னியாய் வெந்நீர் ஊற்று

    சிங்கை நகர்

    யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்

    புத்தூர் கோவில்

    வல்லிபுரம்

    மாவிட்டபுரம்

    வல்வெட்டித்துறை

    நகுலேஸ்வரம்

    கிழாலி

    நயினா தீவு

    கொழும்பு (தலைநகர்) கோவில்கள்

    விபீஷணன் ஆலயம், களனி கங்கை-- உள்பட நூற்றுக்கும் மேலான இந்துக் கோவில்களையும் புத்த விஹாரங்களையும் பற்றி எழுத ஆசை. முடிந்தவரை முயல்கிறேன்.

    ***

    பிள்ளையார் கோவில்கள்:

    கொழும்பு நகர பிள்ளையார் கோவில்கள்

    இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரில் ஆறு பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன. நான் அவற்றில் மூன்று கோவில்களுக்குச் சென்று வந்தேன். பம்பலபிட்டிய பகுதியில் வஜ்ரா ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு நிறைய பக்தர்கள் வந்து சென்றனர். அந்த வளாகத்திற்குள் சாய் பாபா கோவிலும் உள்ளது. வியாழக்கிழமைகளில் அபிஷேகம் செய்த பாலை எல்லோருக்கும் பாலிதீன் பைகளில் நிரப்பி விநியோகித்தனர். அத்துடன் அவல்- வெல்லப் பிரசாதமும், பாயசமும் கிடைத்தது.

    இதே வளாகத்தில் கோவிலின் பின்பகுதியில் உள்ள சந்நிதி, பழைய கதிரேசன் கோவில் எனப்படுகிறது. இந்தப் பிள்ளையார் கோவிலில் நல்ல சாந்நித்தியம் உள்ளது. பிரதான சந்நிதியில் பிள்ளையாரும் இடது, வலது புற சந்நிதிதிகளில் சிவன், அம்பாள், சுப்பிரமணியரும் இருக்கின்றனர்...

    இதற்கு சற்று தொலைவில் புதிய கதிரேசன் கோவிலும், அருகிலேயே மாணிக்க விநாயகர் கோவிலும் இருக்கின்றன. இங்கு குறிப்பிட்ட மூன்று கோவில்களும் கோபுரங்களுடன் காட்சி தருகின்றன.

    ***

    ஆறு கோவில்களின் பெயர்கள்

    1.Pillayar Kovil பிள்ளையார் கோவில் පිල්ලෙයාර් කෝවිල - Kotahena, Address: WVW4+QWC, Colombo 01300, Sri Lanka

    2.Visakha Pillaiyar Kovil | விசாக பிள்ளையார் கோவில், Address: VV95+PG6, International Buddhist Centre Rd, Colombo, Sri Lanka

    3.Kathiresan Pillayar kovil | கதிரேசன் பிள்ளையார் கோயில், Address: 333 Galle Rd, Colombo 00500, Sri Lanka

    4.Sri Manika Vinayagar Kovil | ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், Address: Sri Manika Vinayagar Kovil, Lorenz Rd, Colombo 00500, Sri Lanka

    5.பம்பலபிட்டிய பிள்ளையார் கோவில், வஜ்ரா ரோடு,Pillayar Kovil, Bambalapitiya, Address: 12 Vajira Rd, Colombo 00400, Sri Lanka

    6.ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் Sri Sithi Vinayagar Temple Annamalai

    ***

    தேர்த் திருவிழா

    கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள கதிர்வேலாயுத சுவாமி கோவிலிலிருந்து திருவிழா காலத்தில் தேர் புறப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள சம்மாங்கோடு மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கு கொழும்பு நகரின் முக்கிய வீதிகளினூடாக இழுத்துவரப்படுகின்றது. இது கொழும்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்துவரும் தேரோட்ட விழா ஆகும்.

    ***

    ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஒரு கூட்டத்தில் சொன்ன விஷயம்:--

    தகர்த்தெறியப்பட்ட எத்தனையோ அம்மன், சிவன், முருகன், விஷ்ணு, விநாயகன் ஆலயங்களின் பட்டியல் எங்களிடம் உண்டு. சமகாலத்தில் தம்புள்ளையிலும்,கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும், வடக்கில் மயிலிட்டியிலும் தகர்த்தெறியப்பட்டு காணாமல் போன ஆலய விபரங்களும் எம்மிடம் உண்டு. இவற்றை சிங்கள மக்கள் செய்வதில்லை. ஏனெனில் இந்த ஆலயங்களில் அவர்களும் வந்து வணங்குகிறார்கள். இவற்றை யார் செய்வது என்பது ஒரு பகிரங்க இரகசியம்--. என்று ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் பேசியுள்ளார். இது

    Enjoying the preview?
    Page 1 of 1